"லால் பகதூர் சாஸ்திரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
162 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
பாரத ரத்னா வார்ப்புரு using AWB
சி
சி (பாரத ரத்னா வார்ப்புரு using AWB)
லால் பகதூர் ஒன்றரை வயது குழந்தையாக இருந்த பொழுது இவரின் தந்தை இறந்து விட்டார். எனவே தாயார் ராம்துல்லாரி தேவி இவரையும் இவரின் இரண்டு சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு தன் தந்தை வீட்டிற்கு சென்று தங்கிவிட்டார் <ref name="pmindia_shastri">{{cite web
|url=http://pmindia.nic.in/pm_shastri.htm|title=Shri Lal Bahadur Shastri - A Profile|publisher=Government Of India|accessdate=2009-02-18}}</ref>. 10 வயது வரை தன் பாட்டனார் கசாரி லால் வீட்டிலேயே லால் பகதூர் வளர்ந்தார். அங்கு உயர் நிலைப்பள்ளி இல்லாததால் மேற்கொண்டு படிக்க [[வாரணாசி]]க்கு அனுப்பப்பட்டார். அங்கு தாய்வழி மாமா வீட்டில் தங்கி இருந்து அரிஸ்சந்தரா உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார். வாரணாசியில் உள்ள போது ஒரு முறை நண்பர்களுடன் கங்கை ஆற்றின் மறு கரையில் நடந்த சந்தையை பார்க்க போனார். திரும்பும் போது படகுக்கு கொடுக்க போதிய பணம் இல்லை, நண்பர்களிடம் கடன் பெறுவதற்கு பதிலாக ஆற்றை நீந்தி கடந்தார் <ref>{{cite web|url=http://www.freeindia.org/biographies/greatleaders/shastri/page6.htm|title=Lal Bahadur Shastri: Strong and Self-respecting|accessdate=2009-02-18}}</ref>.
 
 
மாணவனாக இருக்கும்போது இவருக்கு புத்தகங்கள் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். [[குரு நானக்]]கின் வரிகள் மீது பிரியமாக இருந்தார். இந்திய சுதந்திர போராட்ட வீ ரர் [[பால கங்காதர திலகர்]] அவர்களை போற்றினார், 1915 ம் ஆண்டு வாரணாசியில் மகாத்மா காந்தி அடிகளின் உரையை கேட்ட பிறகு தன் வாழ்க்கையை நாட்டிற்கு அர்பணித்தார் <ref>{{cite web|url=http://www.freeindia.org/biographies/greatleaders/shastri/page8.htm
 
1937 ல் உத்திர பிரதேச நாடாளுமன்ற குழுவின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணிக்கமர்ந்தார் <ref>{{cite web|url=http://pmindia.nic.in/speech/content.asp?id=30|title=Prime Minister's address at the inauguration of centenary year celebrations of late Shri Lal Bahadur Shastri|publisher=Prime Minister's Office, Government Of India|date=2005-10-02|accessdate=2009-02-18}}</ref>. 1940 ல் சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாக தனி நபர் சத்தியாகிரகம் இருந்ததால் ஓர் ஆண்டு சிறை தண்டனை பெற்றார் <ref name="freeindia_prison_again">{{cite web|url=http://www.freeindia.org/biographies/greatleaders/shastri/page13.htm
|title=Lal Bahadur Shastri: In Prison Again|accessdate=2009-02-18}}</ref>. 1942 ம் ஆண்டு காந்தி அடிகள் [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்| வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை]] ஆரம்பித்தார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த லால் பகதூர் சாஸ்திரி [[அலகாபாத்]]துக்கு பயணம் செய்து [[ஜவகர்லால் நேரு]]வின் [[ஆனந்த பவன்]] இல்லத்திலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக குறிப்புகளை\ஆணைகளை ஒரு வார காலத்திற்கு சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட லால் பகதூர் சாஸ்திரி 1946 ம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார்<ref name="freeindia_prison_again"/>. இவர் மொத்தமாக ஏறக்குறைய 9 ஆண்டுகள் சிறையில் கழித்தார்<ref>[http://www.liveindia.com/freedomfighters/LalBahadurShastri.html LiveIndia.com − Lal Bahadur Shastri]</ref>. சிறையில் இருந்த காலத்தில் பல புத்தகங்களை படித்தார். மேற்கத்திய தத்துவஞானிகள், புரச்சியாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் ஆகியோரைப்பற்றி நன்கு அறிந்து கொண்டார். [[மேரி கியூரி]]யின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழி பெயர்த்தார்<ref name="freeindia_freedom_soldier"/>.
 
==அமைச்சராக அரசில்==
{{cquote|நமது வரம்புக்குட்பட்ட வளங்களை பயன்படுத்துவதில் நாம் என்றைக்கும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை தருகிறோம். எனவே இதை உற்று நோக்கும் எவருக்கும் இந்தியாவுக்கு எல்லைப்பகுதி சச்சரவுகளில் விருப்பம் இல்லை என்பதுவும் நல்லுறவற்ற சூழலை இந்தியா விரும்பவில்லை என்பதும் விளங்கும்...... இச்சூழலில் அரசின் கடமை தெளிவானது. அதை அரசு முழுமையாக திறம்பட செயல்படுத்தும்....... நாங்கள் ஏழ்மையில் தேவைப்படும் காலத்தில் வாழ தயங்கமாட்டோம் ஆனால் எக்காரணம் கொண்டும் எங்கள் விடுதலையை அழிக்க விடமாட்டோம்...}}
 
ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் முன்மொழிந்த திட்டப்படி பாகிஸ்தானுக்கு கோரிய 50% க்கு பதிலாக 10% கட்ச் பகுதி வழங்கப்பட்டது. எனினும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு எண்ணம் காஷ்மீர் பகுதியிலும் குவிந்திருந்தது. பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் தாங்கியோர் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தில் ஊடுருவினர். அதைத்தொடர்ந்து சாஸ்திரி படை பலமானது படை பலம் கொண்டு சந்திக்கப்படும் என பாகிஸ்தானை எச்சரித்தார். <ref>{{cite web|url=http://www.freeindia.org/biographies/greatleaders/shastri/page24.htm|title=Lal Bahadur Shastri: Force will be met with force|accessdate=2009-02-18
}}</ref>. 1965 செப்டம்பர் மாதம் பெரிய அளவில் பாகிஸ்தான் போர் வீரர்களும் ஆயுததாரிகளும் இந்தியப்பகுதியில் ஊடுருவினர். அரசு கவிழும் என்பதுடன் அவர்களுக்கு ஆதரவாக கிளர்ச்சி நடைபெறும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இந்தியா தனது படைகளை எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பியது, மேலும் [[லாகூர்]] அருகே எல்லையை தாண்டி பாகிஸ்தானை மிரட்டியது. போர் மூண்டதும் பஞ்சாப் பகுதியில் பெருமளவில் பீரங்கி சண்டை நடைபெற்றது. இரு நாட்டு படைகளும் பல வெற்றிகளைப் பெற்றன. இந்திய படைகள் லாகூரை தங்கள் குண்டு வீச்சு எல்லைக்குள் கொணர்ந்தனர்.
 
இந்திய பாகிஸ்தான் போர் நடந்து கொண்டுள்ள போது செப்டம்பர் 17, 1965 அன்று [[சீனா]]விடமிருந்து இந்தியாவிற்கு கடிதம் கிடைத்தது. அதில் இந்திய இராணுவம் சீன பகுதியில் கருவிகளை நிறுவியுள்ளதாகவும், அதை விலக்கிக்கொள்ளாவிட்டால் சீனாவின் சீற்றத்திற்கு இந்தியா ஆளாகும் என்றும் கூறியது. சீனாவின் இப்பயமுறுத்தல் கண்டும் சாஸ்திரி சீனாவின் இக்குற்றச்சாட்டு தவறானது என கூறியதுடன் சீனா இந்தியாவை தாக்குமானால் இந்திய விடுதலையை காக்க உறுதியுடன் நாம் சண்டையிடுவோம் என்றார் <ref>{{cite web
|url=http://www.freeindia.org/biographies/greatleaders/shastri/page25.htm|title=Lal Bahadur Shastri: China Cannot Frighten Us|accessdate=2009-02-18}}</ref>. [[சீனா]] எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய பாகிஸ்தான் போர் இரு நாடுகளுக்கும் பலத்த ஆள் மற்றும் பொருளாதார சேதங்களை உண்டாக்கியது. இந்திய பாகிஸ்தான் போர் செப்டம்பர் 23 1965 அன்று [[ஐக்கிய நாடுகள்]] சபையினால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஆணை மூலம் முடிவுக்கு வந்தது.
 
==மரணம்==
*[http://www.indianpoliticians.com/prime-ministers.php இந்தியப் பிரதமர்]
 
[[Categoryபகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[Categoryபகுப்பு:இந்தியப் பிரதமர்கள்]]
[[பகுப்பு:பாரத ரத்னா விருது பெற்றவர்கள்]]
 
[[de:Lal Bahadur Shastri]]
[[en:Lal Bahadur Shastri]]
[[hi:लालबहादुर शास्त्री]]
[[kn:ಲಾಲ್ ಬಹಾದುರ್ ಶಾಸ್ತ್ರಿ]]
[[sv:Lal Bahadur Shastri]]
[[zh:拉尔·巴哈杜尔·夏斯特里]]
 
[[en:Lal Bahadur Shastri]]
 
{{பாரத ரத்னா}}
1,797

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/526424" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி