புகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 48°31′32″N 07°30′01″E / 48.52556°N 7.50028°E / 48.52556; 7.50028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sastri123 (பேச்சு | பங்களிப்புகள்)
Translated from http://en.wikipedia.org/wiki/Bugatti (revision: 349970912) using http://translate.google.com/toolkit with about 100% human translations.
 
சி {{கூகுள் தமிழாக்கக் கட்டுரை}}
வரிசை 1: வரிசை 1:
{{கூகுள் தமிழாக்கக் கட்டுரை}}
{{About|an original Bugatti car company, founded in 1909|the current Bugatti company|Bugatti Automobiles SAS}}
{{About|an original Bugatti car company, founded in 1909|the current Bugatti company|Bugatti Automobiles SAS}}
{{Otheruses}}
{{Otheruses}}

11:06, 13 மே 2010 இல் நிலவும் திருத்தம்

Bugatti
நிலைSold to Hispano-Suiza in 1963
நிறுவுகை1909
நிறுவனர்(கள்)Ettore Bugatti
தலைமையகம்Molsheim, France
முதன்மை நபர்கள்Ettore Bugatti (founder)
Jean Bugatti
தொழில்துறைAutomotive
உற்பத்திகள்Automobiles, airplane parts

இத்தாலியிலிருந்து குடியேறிய ஒரு விசித்திரமான மேதை என விவரிக்கப்பட்ட எட்டோர் புகாட்டி (Ettore Bugatti) என்பவரால் பிரான்ஸ் நாட்டில் மோல்ஷெய்ம் (Molsheim) நகரில் சிறந்த செயலாக்கத் திறன் கொண்ட விசைப்பொறி வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக புகாட்டி தொடங்கப்பட்டது.

இதன் மூல நிறுவனமானது உலகின் தனித்தன்மை வாய்ந்த வாகனங்களில் பெரும்பான்மையானவற்றையும், அதே சமயம் அதி வேகம் கொண்ட சிலவற்றையும் தயாரிப்பதில் தலை சிறந்து விளங்கியதாகப் புகழ் பெற்றது. இரண்டாவது உலகப்போர் மூண்ட நேரத்தில், அக்கால கட்டத்திய பல பெரும் சிறப்பு வணிகப் பொருட்களைப் போன்று, புகாட்டியின் மூல ரகமும் தோல்வியுற்றது. எட்டோரின் மகன் ஜீன் (Jean) மரணமுற்றதும் இதற்குப் பங்களித்த ஒரு காரணியானது.

நிதி நெருக்கடியில் தத்தளித்த இந்நிறுவனம், 1960ஆம் வருடங்களில் விமான பாகங்களின் வணிகத்திற்காகக் கையகப்படுவதற்கு முன்பாக, 1950ஆம் வருடங்களில் இறுதியான மாதிரி ஒன்றினை வெளியிட்டது.
இதனைத் தனித்தன்மை வாய்ந்த பந்தய வாகனங்கள் மிக குறைந்த அளவில் தயாரிக்கும் நிறுவனமாகப் புதுப்பித்திருக்கும் வோல்க்ஸ்வேகன் குழு இன்று அப்பெயருக்கு  உரிமை கொண்டுள்ளது; 

எட்டோர் புகாட்டியின் கீழாக

ஃப்ரான்ஸின் பந்தய வண்ணமான நீலம் பூசப்பட்ட வகை 35சி (1926).

இதன் நிறுவனரான எட்டோர் புகாட்டி இத்தாலி நாட்டில் மிலன் நகரில் பிறந்தார்; இவரது பெயர் கொண்ட விசைப்பொறி வண்டி நிறுவனம் அல்சேஸில் உள்ள மோல்ஷெய்ம் நகரத்தில் 1909ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனமானது தனது வாகனங்களின் சிறந்த பொறியியல் தரத்திற்கும், எட்டோர் குடும்பத்தாரின் கலையுணர்வுக்கு எடுத்துக்காட்டாக (அவர் தந்தை, கார்லோ புகாட்டி (1856-1940) என்பவர் ஒரு முக்கியமான புதுமையான கலைத் தளவாடங்கள் மற்றும் நகை வடிவமைப்பாளர் ஆவார்) அதன் வடிவங்கள் வெளிப்படுத்திய கலையுணர்ச்சிக்கும் சிறந்த பெயர் பெற்றிருந்தது.

முதன் முதலான மோனாகோ கிராண்ட் பிரிக்ஸ் பரிசைப் பெற்றதன் மூலம், துவக்க காலத்து கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்தில்  இந்நிறுவனம் பெரும் வெற்றியை ஈட்டியது. ஓட்டுநர் ஜீன்-பியரி விமைல்(Jean Pierre Wimille) (1937ஆம் ஆண்டு ராபர்ட் பெனாயிஸ்ட்(Robert Benoist) என்பவருடனும் மற்றும் 1939ஆம் ஆண்டு பியரி வேரான்(Pierre Veyron) என்பவருடனும்) 24 ஹவர்ஸ் ஆஃப் லெ மேன்ஸ் என்னும் போட்டியில் இரு முறை வெற்றி அடைந்தமையால் நிறுவனத்தின் வெற்றி சிகரத்தை அடையலானது.


வடிவமைப்பு

புகாட்டியின் வாகனங்கள் தமது இயந்திர உருவகத்திற்கு ஈடாகக் கலைப் பொருட்களாகவும் திகழ்ந்தன.

பொறிப்பகுதிகள் கைகளால் தேய்க்கப்பட்டன; இது மேற்பரப்புகள் தட்டையாக இருந்து அதனால் அடைப்பதற்கு அடைவளையங்களின் தேவை இல்லாமலிருப்பதை உறுதி செய்தது; வெளிப்புறம் தென்படுவதான பொறியின் பகுதிகள் பெரும்பாலும் கிலோச் (பொறியால் திருப்பப்பட்ட) பூச்சுகளைக் கொண்டு ஒவ்வொரு பற்றுக்கருவியிலும் பாதுகாப்புக் கம்பிகள் கடினமான வேலைப்பாடுகளுடன் நுழைக்கப்பட்டிருந்தன.  அநேக உற்பத்தியாளர்கள் இருசுடன் சுருள்விற்களை முடுக்குவதைப் போல அல்லாமல், புகாட்டியின் இருசுகள் அடித்து உருவேற்றப்பட்டன; இதனால் இருசில் மிகக் கவனத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு துளை மூலம் சுருள் வில் நுழைந்து செல்லுமாறு அமைக்கப்பட்டது. இது குறைவான பாகங்களைப் பயன்படுத்தும் ஒரு நேர்த்தியான தீர்வாக அமைந்தது.  நீடித்து உழைக்கக்கூடிய தன்மையைக் குவிமையப்படுத்துவதன் காரணமாக, தமது முதன்மை போட்டியாளரான பென்ட்லியின் வாகனங்களை "உலகின் அதி வேக பார விசைப்பொறி வண்டிகள்" என்று விவரித்தார்.
புகாட்டியைப் பொறுத்தவரை "எடையே எதிரி".

மாதிரிகள்

எட்டோர் புகாட்டி உருவாக்கிய வாகன ரகங்கள் ஒவ்வொன்றும் எடுத்துக் காட்டாக சிறு எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்பட்டன. அவற்றுள் அதிகப் புகழ் பெற்றவை 35ஆம் வகை கிராண்ட் பிரிக்ஸ் வாகனங்கள், ராயல், மற்றும் 57ஆம் வகை "அட்லாண்டிக்" மற்றும் 55ஆம் வகை பந்தய வாகனங்கள் ஆகும்.

2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி, இங்கிலாந்தில், மரணமடைந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரின் விசைப்பொறி வண்டிகள் நிறுத்துமிடத்தில் ஒரு அரிய வகை 1937 புகாட்டி வகை 57எஸ் அட்லாண்டிக் வாகனம் கண்டு பிடிக்கப்பட்டது தெரியவந்தது.

இம்மாதிரியில் மொத்தம் 17 வாகனங்களே, அனைத்தும் கைகளால், உருவாக்கப்பட்டன.[1]

ஏறத்தாழ 7900 வாகனங்கள் (இவற்றுள் 2000 இன்னும் உள்ளன) உருவாக்கப்பட்ட செயற்பாட்டுக் காலம் முழுவதும் அடிமனை மற்றும் ஓட்டும் தொடர் வரிசையின் வகையைக் குறிப்பிடும் வண்ணம் ஒவ்வொரு புகாட்டி வடிவமைப்பும் ஆங்கில எழுத்தான "டி" என்பதை முன்னிடைச் சொல்லாகக் கொண்டிருந்தன.


உருமாதிரிகள் பந்தய வாகனங்கள் சாலை வாகனங்கள்
valign=top valign=top valign=top

போரின் போது பாரிஸ் நகரத்தின் வடமேற்குப் புறநகர்ப் பகுதியில் உள்ள லெவலாய்ஸ் என்னுமிடத்தில், வகை 73 சாலை வாகனம், வகை 73சி ஓரிருக்கை பந்தய வாகனம் (5 கட்டுமானம்), மற்றும் வகை 75 வாகனங்கள் உள்ளிட்ட பல புதிய திட்டங்களில், புகாட்டி பணி புரிந்து கொண்டிருந்தார். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், எட்டோர் இறந்த பொழுது ஒரு 375சிசி உயர் சக்தியூட்டப்பட்ட வாகனம் ஒன்று தயாரிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

ரே வாகனங்கள், ஒரு சில பத்தாண்டுகளிலேயே பல்லாயிரம் வெற்றிகளைப் பெற்று பந்தயங்களில் மிகவும் வெற்றிகரமாகத் திகழ்ந்தன. சிறிய புகாட்டி 10ஆம் வகை வாகனம் தனது முதல் பந்தயத்திலேயே முதல் நான்கு இடங்களை பிடித்தது. 1924ஆம் ஆண்டின் புகாட்டி 35ஆம் வகை வாகனமே 2000த்திற்கும் மேற்பட்ட வெற்றி வாகை சூடி அனைத்துக் காலத்திலும் அதிக வெற்றியடைந்த பந்தய வாகனமாக இருக்கலாம்.

டார்கா ஃப்ளோரியோவில் 1925ஆம் ஆண்டு முதல் 1929ஆம் ஆண்டு வரை ஐந்து வருடங்களுக்கு புகாட்டி வாகனங்கள் வெற்றிக் கனியைப் பறித்து வந்தன. புகாட்டி வாகனங்களைப் பல உயர் நிலைகளில் வைத்தவர் லூயிஸ் சிரான்(Louis chiran). 21ஆம் நூற்றாண்டு புகாட்டி நிறுவனம் அவரை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் வண்ணம் தனது கருத்தாக்க உருமாதிரி வாகனம் ஒன்றிற்கு அவர் பெயரைச் சூட்டியது.
ஆயினும் அதிக அளவில் நினைவு கூறப்பட்ட பந்தயம் என்பது லெ மேன்ஸ்சில் கிடைத்த இறுதிப் பந்தய வெற்றியே ஆகும். ஒரே ஒரு வாகனம் மற்றும் மிகக் குறைந்த வாய்ப்பு வளங்கள் கொண்டு ஜீன்-பியரி விமைல் மற்றும் பியரி வேரான் ஆகிய இருவரும் 1939ஆம் ஆண்டு வாகனப் பந்தயத்தில் வெற்றி அடைந்தனர். 
ஆண்டு பந்தயங்கள் ஓட்டுநர் வாகனங்கள்


1921

வோய்ச்சுரெட்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் எர்னெஸ்ட் ஃப்ரைட்ரிச்

1925

டார்கா ஃப்ளோரியோ [[பார்டோலோமியோ கான்ஸ்டான்டினி

]]

35ஆம் வகை

1926

ஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ் [[ஜூல்ஸ் கூ

]]

39 ஏ வகை

1926

இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ் [[லூயிஸ் காரவெல்

]]

1926

ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் [[பார்டோலோமியோ கான்ஸ்டான்டினி

]]

1926

டார்கா ஃப்ளோரியோ [[பார்டோலோமியோ கான்ஸ்டான்டினி

]]

35 டி வகை

1927

டார்கா ஃப்ளோரியோ [[எமிலியோ மாடெரெஸ்ஸி

]]

35சி வகை

1928

ஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ் [[வில்லியம்ஸ்-குரோவர் வில்லியம்ஸ்

]]

35 சி வகை

1928

இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ் [[லூயிஸ் சிரான்

]]

1928

ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் [[லூயிஸ் சிரான்

]]

1928

டார்கா ஃப்ளோரியோ [[ஆல்பர்ட் டிவோ

]]

35 பி வகை

1929

ஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ் [[வில்லியம் க்ரோவர்-வில்லியம்ஸ்

]]

35 பி வகை

1929

ஜெர்மானிய கிராண்ட் பிரிக்ஸ் [[லூயிஸ் சிரான்

]]

1929

ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் [[லூயிஸ் சிரான்

]]

1929

மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் [[வில்லியம் க்ரோவர்-வில்லியம்ஸ்

]]

1929

டார்கா ஃப்ளோரியோ [[ஆல்பர்ட் டிவோ

]]

35 சி வகை

1930

பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் [[லூயிஸ் சிரான்

]]

1930

செக்கொஸ்லோவாக்கியன் கிராண்ட் பிரிக்ஸ் ஹெய்ன்ரிச்-ஜோசிம் வான் மார்கென் மற்றும் ஹெர்மான் ஜூ லெய்னிங்கென்

1930

ஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ் [[பிலிப் எடான்செலின்

]]

35 சி வகை

1930

மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் [[ரேன் ட்ரேஃபஸ்

]]

1931

பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் வில்லியம் க்ரோவர்-வில்லியம்ஸ் மற்றும் காபெர்டோ கானெலி

1931

செக்கோஸ்லொவாக்கியன் கிராண்ட் பிரிக்ஸ் [[லூயிஸ் சிரான்

]]

1931

ஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ் லூயிஸ் சிரான்மற்றும் அச்சில் வார்ஜி( 51ஆம் வகை

1931

மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் [[லூயிஸ் சிரான்

]]

1932

செக்கோஸ்லொவாக்கியன் கிராண்ட் பிரிக்ஸ் [[லூயிஸ் சிரான்

]]

1933

செக்கோஸ்லொவாக்கியன் கிராண்ட் பிரிக்ஸ் [[லூயிஸ் சிரான்

]]

1933

மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் [[அச்சில் வார்ஜி

]]

1934

பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் [[ரேனே ட்ரேஃபஸ்

]]

1936

ஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ் ஜீன்-பியரி விமைல் மற்றும் ரேமாண்ட் சாமர் 57 ஜி வகை

1937

24 ஹவர்ஸ் ஆஃப் லே மேன்ஸ் ஜீன்-பியரி விமைல்மற்றும் ராபர்ட் பெனாயிஸ்ட் 57 ஜி வகை

1939

24 ஹவர்ஸ் ஆஃப் லே மேன்ஸ் ஜீன்-பியரி விமைல்மற்றும் பியரி வேரான் 57 சி வகை

ஃபார்முலா ஒன் பந்தயத்தில் புகாட்டி

சாவி

ஆண்டு அடிமனை பொறி இயந்திர(ங்கள்) அணிகள் ஓட்டுநர்கள்

1

2

100%

4

5

6

7

8

புள்ளிகள்
டபிள்யுசிசி
1956 புகாட்டி வகை 251 புகாட்டி நேர்-8 D ஏஆர்ஜி மொன் [[

500]]

பெல் ஃப்ரா ஜிபிஆர் [[

ஜெர்]]

[[

இத்தா]]

[0]}

-*

மாரிஸ் டிரின்டிக்னான்ட் ரெட்

* 1958ஆம் ஆண்டுக்கு முன்னர் உலக உருவாக்குனர்கள் முதன்மை விருது வழங்கப்படவில்லை.

முடிவு

விசைப்பொறிப் புகை வண்டி, தானியங்கிப் புகை வண்டி மற்றும் ஒரு புகாட்டி 100பி, [3] என்னும் பறக்க விடப்படாத விமானம் ஆகியவற்றையும் எட்டோர் புகாட்டி வடிவமைத்தார்.

அவரது மகன், ஜீன் புகாட்டி, 1939ஆம் வருடம் ஆகஸ்ட் 11ஆம் தேதி தனது 30வது வயதில், மால்ஷெய்ம்  தொழிற்சாலைக்கு அருகில் ஒரு 57ஆம் வகை டாங்க்-கொண்ட பந்தய வாகனம் ஒன்றைச் சோதனை செய்து கொண்டிருந்த போது கொல்லப்பட்டார்.  இதையடுத்து இந்நிறுவனத்தின் வருவளம் குறையலானது.
மால்ஷெய்ம் தொழிற்சாலையை இரண்டாம் உலகப் போர் சிதைத்தது மற்றும் அந்தச் சொத்தின் உரிமத்தை நிறுவனம் இழந்தது. போரின்போது, பாரிஸ் நகரத்தில் உள்ள லெவலாய்ஸ் என்னுமிடத்தில் ஒரு புது தொழிற்சாலை நிறுவுவதற்கான திட்டங்கள் தீட்டியது மட்டும் அன்றி புதிய வகையான வாகனங்களின் ஒரு வரிசையையும் புகாட்டி வடிவமைத்திருந்தார்.  எட்டோர் புகாட்டி 1947ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி இறந்தார். 

1950ஆம் ஆண்டுகளின் இடையில் இந்நிறுவனம் ரோலாண்ட் புகாட்டியின் தலைமையில் மத்தியில்-பொறி இயந்திரம் கொண்ட 251ஆம் வகை பந்தய வாகனங்களை மீண்டும் கொண்டு வர முயன்றது.

ஆல்ஃபா ரோமியோ, ஃபெராரி, மற்றும் மாஸெராடி போன்ற புகழ் பெற்ற வாகனங்களை வடிவமைத்த கியோச்சினோ கொலம்போவின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம், எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயல்பட இயலாத காரணத்தால், இவற்றைத் தயாரிக்க இந்த நிறுவனம் எடுத்த முயற்சிகள் நிறைவேறாது போயின.


1960ஆம் ஆண்டுகளில், வெர்ஜில் எக்ஸ்னெர் தனது "மீட்டுயிர்க்கப்பட்ட வாகனங்கள்" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக புகாட்டி வாகனம் ஒன்றை வடிவமைத்தார். உண்மையில், இந்த வாகனத்தின் கண்காட்சிப் பதிப்புரு புகாட்டி 101ஆம் வகையின் அடிமனையை கொண்டு கியா என்பவரால் தயாரிக்கப்பட்டு 1965ஆம் வருடம் டுரின் விசைப்பொறி வாகனக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டது. நிதியுதவி கிட்டாத நிலையில், எக்ஸ்னர் ஸ்டட்ஸ் காருக்குப் புத்துயிர் அளிப்பதில் தமது கவனத்தை திருப்பலானார்.


புகாட்டி தனது விமான பாகங்கள் தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தது. பின்னர் 1965ஆம் வருடம் ஹிஸ்பனோ-சுயிஜா (வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக இருந்து விமான பாகங்கள் வழங்குவதில் இறங்கிய மற்றொரு நிறுவனம்) என்னும் நிறுவனத்திற்கு இது விற்கப்பட்டது. 1968ஆம் வருடம் ஸ்னெக்மா இதை கையகப்படுத்தியது. இந்நிறுவனமே பின்னர் மெஸ்ஸியர் என்னும் நிறுவனத்தையும் கையகப்படுத்தியது.

1977ஆம் வருடம் இவை இரண்டும் மெஸ்ஸியர்-புகாட்டி என்ற பெயரில் ஒன்றாக இணைக்கப்பட்டன. 

பின்னாளில் பயன்படுத்தப்பட்ட புகாட்டி வர்த்தகச் சின்னம்

புகாட்டி ஆட்டோமொபிலி ஸ்பா

புகாட்டி ஈபி110 (1996)

இத்தாலியத் தொழிலதிபரான ரோமானோ ஆர்டியோலி 1987ஆம் வருடம் புகழ் பெற்ற புகாட்டியின் பெயரை வாங்கி புகாட்டி ஆட்டோமொபிலி ஸ்பா என்னும் நிறுவனத்தைத் துவக்கினார்.இத்தாலியின் மற்ற செயல்படும்-வாகன தயாரிப்பாளர்களான டெ டோமாஸோ, ஃபெராரி, பகானி மற்றும் மாஸெரடி ஆகிய நிறுவனங்களின் தாய்வீடாக இருந்த மாடெனா என்னும் நகரத்திற்கு அருகில், காம்போகாலியானோ என்னும் இடத்தில் கியாம்பாவ்லோ பெனிடினி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழிற்சாலையை இப்புதிய நிறுவனம் உருவாக்கியது.

1989ஆம் ஆண்டில், புதிய புகாட்டியின் புத்துயிராக்கத்திற்கான திட்டம் லம்போர்கினி மியுரா மற்றும் குன்டாச் ஆகியவற்றை வடிவமைத்த புகழ் பெற்ற வடிவமைப்பாளர்களான பாவ்லோ ஸ்டாஞ்சனி மற்றும் மார்ஸெலோ காண்டினி ஆகியோரால் அளிக்கப்பட்டது. முதலில் தயாரிக்கப்பட்ட வாகனம் புகாட்டி ஈபி110 ஜிடி என்று பெயரிடப்பட்டது; அது வரை புகாட்டி தயாரித்த வாகனங்களில் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட பந்தய வாகனம் என இது விளம்பரப்படுத்தப்பட்டது.

புகழ் பெற்ற பந்தய வாகன வடிவமைப்பாளரான மாரோ ஃபோர்ஜியெரி (Mauro Forghieri), 1992ஆம் ஆண்டிலிருந்து 1994ஆம் ஆண்டு வரை இதன் தொழில்நுட்ப இயக்குனராகப் பணியாற்றினார்.

1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி, ரோமானோ ஆர்டியோலி, லக்ஸெம்பர்கில் உள்ள தனது சார்பு வைப்புக் குழுமமான ஏசிபிஎன் ஹோல்டிங்க்ஸ் எஸ்.ஏ என்பதன் மூலமாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து லோட்டஸ் மோட்டார் வாகன நிறுவனத்தை வாங்கினார். இவ்வாறான கையகப்படுத்தலின் விளைவாக, வாகனப் பந்தயங்களில் வரலாற்றுப் புகழ் வாய்ந்த இரு பெயர்கள் ஒன்றாக இணைந்தன. சர்வதேச பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்குகளைப் பட்டியலிடவும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1993ஆம் ஆண்டில் ஈபி112 என்னும் ஒரு பெரும் வாகனத்தின் உருமாதிரியையும் புகாட்டி அளித்தது. 

ஈபி110 வாகனங்கள் சந்தையை அடைந்தபோது, வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரம் பின்னடைவில் இருந்தது; இதனால் இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தன.

இந்நிறுவனம் மூடப்பட்டபோது, ஐக்கிய மாநில சந்தைக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட "புகாட்டி அமெரிக்கா" என்னும் மாதிரி அதன் தொடக்க நிலையினில் இருந்தது.  புகாட்டியின் பற்றுத் தீர்வாளர்கள் லோட்டஸ் நிறுவனத்தை மலேசியாவின் ப்ரோடான் என்னும் நிறுவனத்திற்கு விற்றனர்.

1997ஆம் ஆண்டு ஜெர்மானியத் தயாரிப்பாளரான டாவர் ரேஸிங்க், மேலும் ஐந்து ஈபி110 எஸ்எஸ் வாகனங்கள் தயாரிப்பதற்காக, ஈபி110 வாகனத்தின் உரிமம் மற்றும் அதன் பாகங்களின் எஞ்சிய இருப்பினை, அவற்றை தான் பெரிதும் நேர்த்தி செய்திருப்பினும், புகாட்டியிடம் கொண்டு வந்தார். பின்னர் இத்தொழிற்சாலை தளவாடங்கள் செய்யும் நிறுவனம் ஒன்றிற்கு விற்கப்பட்டது. ஆயினும், அந்நிறுவனமும் உள் நுழைவதற்கு முன்னரே நொடித்துப் போனது. இத்தொழிற்சாலை இன்றளவும் எவராலும் கைக்கொள்ளப்படாமலேயே உள்ளது.


மிகுந்த புகழ் பெற்ற புகாட்டி ஈபி110 வாகனத்தின் உரிமையாளர் மைக்கேல் சூமாச்சேர் என்பவராக இருக்கலாம்; இவர் ஃபார்முலா ஒன் வேர்ல்ட் சாம்பியன் பட்டத்தை ஏழு முறை வென்றவர். பின்னர் ஃபெராரிக்காக அவர் பந்தயங்களில் கலந்து கொண்டாலும், பெனட்டன் குழுவிற்காக அவர் பந்தயங்களில் கலந்து கொண்ட போது அடைந்த ஈபி110 வாகனத்தை இன்னமும் தன்னிடத்தே கொண்டிருந்தார்.

1994ஆம் ஆண்டில் வாங்கப்பட்டு அதே ஆண்டில் பெரும் அளவில் நொறுங்கிப் பின்னர் சீர் செய்யப்பட்ட அந்த வாகனத்தை ஜெர்மனியின் பெராரி வாகனங்களைப் பழுது பார்க்கும் மற்றும் பந்தயங்களுக்கு தயார்படுத்தும் கொட்டிலான மாடெனா மோட்டார் ஸ்போர்ட்டிற்கு சூமாச்சேர் விற்றுவிட்டார். 

புகாட்டி ஆட்டோமொபைல்ஸ் எஸ்ஏஎஸ்

வேய்ரான் 16.4
புகாட்டி ஆட்டோமைபைல்ஸ் எஸ்ஏஎஸ் என்னும் முதன்மை கட்டுரையையும் காணவும்.

1998ஆம் ஆண்டில் வோல்க்ஸ்வேகன் குழு (வோல்க்ஸ்வேகன் ஏஜி) புகாட்டி என்னும் பெயரின் கீழ் வாகனங்களைத் தயாரிக்கும் உரிமத்தை வாங்கியது. புகாட்டி ஈபி118 என்பதன் வடிவமைப்பைத் தயாரித்து பாரிஸ் வாகன கண்காட்சியில் வைப்பதற்காக இத்தால்டிசைன் என்னும் நிறுவனத்தை அவர்கள் நியமித்தனர். இது பயணிகள் வண்டியில் முதன் முதலில் டபிள்யு-கூட்டமைப்பு, 18-உருளை பொறி கொண்டதாகும்; மேலும் 408 கிலோwatts (555 PS; 547 bhp)ன் டிஐஎன் தரமுள்ள இயந்திர விசை உற்பத்தி கொண்ட சுற்றுலா ஊர்தியும் (மூடு விசைப்பொறி வாகனம்) இதுவேயாகும்.

1999ஆம் ஆண்டில், ஜெனிவா வாகன கண்காட்சியில் புகாட்டி ஈபி218 தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது; பின்னர், அதே ஆண்டில் ஃப்ராங்க்ஃபர்ட் விசைப்பொறி வாகனக் கண்காட்சியில்(ஐஏஏ) புகாட்டி 18/3 சிரான் அறிமுகமானது.

டோக்கியோவின் விசைப்பொறி வாகனக் கண்காட்சியில் ஈபி 218 மீண்டும் தோன்றியது; மேலும் சாலை விசைப்பொறி வாகனத் தயாரிப்பின் முதல் வடிவ மாதிரியாக புகாட்டி ஈபி 16.4 வேய்ரான் காட்சிக்கு வைக்கப்பட்டது. 

வேய்ரான் 16.4

2000ஆம் ஆண்டில் வோல்க்ஸ்வேகன் ஏஜி, புகாட்டி ஆட்டோமொபைல்ஸ் எஸ்ஏஎஸ் என்பதை வோல்க்ஸ்வேகன் பிரான்ஸின் ஒரு துணை குழுமமாகத் துவக்கியது; இது பாரிஸ், ஜெனிவா மற்றும் டெட்ராய்ட் வாகனக் கண்காட்சிகளில் 407 kilometres per hour (252.9 mph) அளவு வேகம் கொண்ட, 2.5 விநாடிகளில் 0 முதல் 100 kilometres per hour (0.0 முதல் 62.1 mph) 0 முதல் 100 kilometres per hour (0.0 முதல் 62.1 mph)கொண்ட 16-உருளை நான்கு-சுழலி ஊட்டப்பட்ட 736 கிலோwatts (1,001 PS; 987 bhp) டிஐஎன் தரம் வாய்ந்த ஈபி16.4 வேய்ரான் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. 2004ஆம் ஆண்டு வரை இந்த முன்னேற்றம் தொடர்ந்தது மற்றும் ஈபி16.4 வேய்ரான் “அதி நவீன தொழில்நுட்பம்” என்னும் நிலைக்கு உயர்ந்தது.

2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த வாகனம் புகாட்டி வேய்ரான் 16.4என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் என்று புகாட்டி ஆட்டோமொபைல்ஸ் எஸ்ஏஎஸ் அறிவித்தது. டோர்லிஷெய்மில் (48°31′32″N 07°30′01″E / 48.52556°N 7.50028°E / 48.52556; 7.50028 இடத்தில் உள்ள) உள்ள புத்தம் புதிய புகாட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அந்த வாகனம்  வாடிக்கையாளர்களுக்கு 2005ஆம் ஆண்டு அக்டோபரில் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. உண்மையில் 2005ஆம் ஆண்டின் முடிவில்தான் வேய்ரான் இறுதியாக இதன் உற்பத்தியைத் துவக்கியது. முதலில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் 2006ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து வழங்கப்பட்டன. பல்வேறு அதி வேக சோதனைகளில் அதிகபட்ச வேகங்களை இந்த வாகனம் விஞ்சியது; இதில் இந்த வாகனம் தனது இலக்கையும் சிறிதளவு தாண்டி408.47 kilometres per hour (253.81 mph)ச் சென்றது.[4] வாகனம் மற்றும் ஓட்டுனரை ப் பொறுத்தவரை, வேய்ரானின் எரி பொருள் பயனீட்டளவு என்பது 253 எம்பிஹெச்சில் 3.0 எம்பிஜியாகும் (78எல்/100கிமீ). முழு வேகத்தில், இதன் 100 லிட்டர்கள் (22.0 imp gal; 26.4 US gal) எரி பொருள் கொள்கலனானது 12 நிமிடங்கள் 46 விநாடிகளிலேயே தீர்ந்துவிடுவதாகும்.   தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு 253 எம்பிஹெச்சில் இருப்பின், சக்கரக் கட்டுக்கள் உருகி விடும்.[சான்று தேவை]

தனிப்பட்ட பத்திரிகை ஆய்வுகள் பல தோல்விகளை அறிவித்துள்ளன. (நவம்பர் 2005ல் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட ஐந்து வாகனங்களில் மூன்று பழுது பார்க்க இயலாத நிலையை அடைந்து விட்டன). ஆயினும், ஏனைய வோல்க்ஸ்வேகன் குழு மாதிரிகளைப் போலவே வேய்ரான் முன்மாதிரிகளும் கடுமையான விதிமுறைகள் கொண்ட சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டன. தயாரிப்புக்கு முந்தைய வாகனம் ஒவ்வொன்றும் 50,000 மைல்களுக்கும் அதிகமாகப் பயணித்தன. இந்த வாகனம் சிவப்பு மற்றும் கருப்பு, நீலம் மற்றும் அடர்ந்த நீலம், சாம்பல் மற்றும் கருப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணக் கலவைகளில் உருவாக்கப்படுகிறது.

புகாட்டி வேய்ரான் எஃப்பிஜி பார் ஹெர்ம்ஸ் என்பது புகாட்டி வேய்ரான் 16.4 வாகனத்தின் தற்சமயம் குறைவான எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் பதிப்பாகும்.

இதன் விலை (வரிகள் தவிர்த்து)  $2.3 மில்லியன். இதன் உள் வடிவமைப்பினை ஃப்ரெஞ்சு நாட்டு தோல் மற்றும் பட்டுத்துணி நிபுணர் ஹெர்ம்ஸ் அமைத்துள்ளார்.
இதன் பெயரிலுள்ள எஃப்பிஜி என்பதானது ஹெர்ம்ஸின் தலைமைச் செயலக முகவரியான ரூ டு ஃபாபோர்க் செயின்ட்-ஹானார் என்பதைக் குறிக்கிறது.
இந்த புகாட்டி வேய்ரான் எஃப்பிஜி பார் ஹெர்ம்ஸ் வாகனம் எந்த இயந்திர மாற்றங்களையும் கொண்டதில்லை; அது இன்னமும் புகாட்டி வேய்ரான் 16.4 வாகனமாகவே உள்ளது; இதன் உள்ளமைப்பில் உள்ள கன்றின் தோல் மட்டுமே இதில் உருவாக்கப்பட்ட மாற்றமாகும்.

புகாட்டி வேய்ரான் வாகனத்தை, வோல்க்ஸ்வேகன் குழும ஸ்கோடா வாகன வடிவமைப்புப் பிரிவின் தலைவர் ஜோஸெப் கபான் வடிவமைத்துள்ளார்.[5]

புகாட்டி வேய்ரான் ப்ளூ சென்டினேர் பதிப்பு
வேய்ரான் ப்ளூ சென்டினேர்.

ப்ளூ சென்டினேர் வாகனம் ஒரு நூற்றாண்டின் வரலாற்றைப் பிரதிபலிக்கிறது.

இது, வழமையான வேய்ரான் இரகத்தைப் போலவே 8.0 லிட்டர் 16 உருளை நான்கு-சுழலி ஊட்டல் பொறி இயந்திரத்தைக் கொண்டுள்ளது. புகாட்டியின் பெயரின் கீழ் தயாரிக்கப்படும் இரண்டு-பூச்சு “ஃபிரெஞ்சு ப்ளூ” மற்றும் “ஸ்பின்ட்ப்ளூ பளபளப்பு” பூச்சு கொண்ட ஒரே ஒரு இரகம் இது மட்டுமே. 1.35 மில்லியன் யூரோ விலை பெறும் இவ்வாகனம் ஜெனிவா ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற 79வது சர்வதேச வாகன கண்காட்சியில் அறிமுகமானது.[6] 
புகாட்டி 16சி காலிபியர்

2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், முதல் நவீன நான்கு-கதவு கொண்ட புகாட்டியான 16சி காலிபியர் கருத்தாக்க உருமாதிரி வாகனத்தை புகாட்டி அறிமுகப்படுத்தியது. வகை 57ன் நான்கு-கதவு கொண்ட பெரிய ஊர்தியின் மூலப் பெயரிலிருந்து காலிபியர் என்னும் பெயர் எடுத்தாளப்பட்டது. அனைத்து கருத்தாக்க உருமாதிரி வாகனங்களைப் போன்று, முதல் மாதிரியிலிருந்து இறுதி வடிவம் மாறுபடக்கூடும்; ஆனால் வேய்ரானைப் போலவே வேகமும் (விலையும்) கொண்டு அதைப் போன்றே 16 உருளை பலதர-எரிபொருள் பொறி இயந்திரத்தால் இது சக்தியூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேய்ரானில் உள்ளதைப் போன்று நான்கு சுழலி ஊட்டல்கள் இல்லாமல் இரண்டு சிறந்த சக்தியூட்டிகளை டபிள்யு16 பொறி பயன்படுத்தும்.

மேலும் காண்க

== குறிப்புகள்==

  1. அரிதான, 1937ஆம் ஆண்டு புகாட்டி சிறப்பு வாகனம் ஆங்கிலேயக் கொட்டிலில் கண்டுபிடிக்கப்பட்டது, அசோசியேடட் ப்ரெஸ், ஜனவரி 2, 2009
  2. ஜியார்கனோ, ஜி. என். வாகனங்கள்: முந்தைய மற்றும் 1886-1930 காலத்தவை . (லண்டன்: க்ராஞ்ச்-யூனிவர்செல், 1985)
  3. "Bugatti Model 100 at the EAA Museum". பார்க்கப்பட்ட நாள் 2009-01-28.
  4. புகாட்டி.காம்: 400 மற்றும் அதற்கு அப்பால்
  5. "Jozef Kaban appointed Head of Škoda Auto Design". Car Design News. பார்க்கப்பட்ட நாள் 2009-07-10.
  6. "Bugatti Bleu Centenaire official details and photos released". WorldCarFans.com. பார்க்கப்பட்ட நாள் 2009-07-10.

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bugatti vehicles
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

[[Category: விசைப்பொறி வாகன உற்பத்தியாளர்கள்]] [[Category: ஜெர்மனியின் விசைப்பொறி வாகன உற்பத்தியாளர்கள்]] [[Category:ஃபார்முலா ஒன் உருவாக்குனர்கள் ]] [[Category:ஃப்ரென்ச் பந்தய வாகன உருவாக்குனர்கள் ]] [[Category:ஃப்ரான்ஸ் நாட்டு விமானப் பொறி இயந்திர உற்பத்தியாளர்கள் ]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புகாட்டி&oldid=523713" இலிருந்து மீள்விக்கப்பட்டது