"கலேவலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
==கலேவலா தொகுப்பு==
சிறந்த [[மொழிநூல்]] வல்லுநரான எலியாஸ் லொண்ரொத் (''Elias Lonnrot'', 1802 - 1884) என்பாரே இக் காவியத்தைத் தொகுத்தவராவார். இவராலும் மற்றும் பின்லாந்தின் நாட்டார் இலக்கியத்தின் முன்னோடிகளாலும் பின்லாந்தின் கரேலியாவின் நாட்டுப் புறங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட, சிறந்த ஆனால் பெரும் எண்ணிக்கையில் பாடபேதங்களைக் கொண்டிருந்த தொன்மையான [[நாட்டுப் பாடல்|நாட்டுப் பாடல்களே]] இத் தொகுப்பின் மூலங்களாகும்.
 
==வரலாறு==
[[படிமம்:Gallen Kallela The Aino Triptych.jpg|thumb|left|400px|ஐனோவின் கதை, கலேவலாவின் ஒரு பகுதி், படம் வரைந்தவர்: அக்செலி கலென்-கலெலா(கலேலா (''Akseli Gallen-Kallela''), 1891]]
''கரேலியா'' என்னும் பிரதேசத்தின் பெரும் பகுதி பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு அப்பால் [[ரஷ்யா]]வில் இருக்கிறது. கரேலியா என்னும் இப்பகுதி பின்னிஷ் - கரேலியா கலாச்சாரம் என்றொரு எல்லைக் கோட்டை அமைத்துக் கொண்டு தூரதேச நாகரீக மையங்களிலிருந்தும் அரிதாய்க் குடியேறப்பட்ட காட்டுப் பிரதேசங்களிலிருந்தும் துண்டிக்கப்பட்டிருந்தது;. இதனால் இந்த நாட்டுப் பாடல்கள் 19 ஆம் நூற்றாண்டு வரை, பரம்பரை பரம்பரையாக வாய்மொழி மரபில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. [[சமய சீர்திருத்த வாதம்|புனரமைத்தல்]] (''Protestants''), [[லுத்தரன் கிறிஸ்தவ இயக்கம்]] (''Lutheran Christianity'') ஆகியன ஏற்படும் வரையில், ரஷ்யாவில் மேலோங்கியிருந்த [[ஆர்தடக்ஸ்பழமைவாத தேவாலயம்கிறிஸ்தவர்கள்]] (''Orthodox Church'') பின்லாந்தின் ஏனைய பகுதிகளில் இருந்த [[கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்க]] இயக்கத்திலும் பார்க்க மிகவும் பொறுதியுடன் இருந்ததே இதற்குக் காரணமாகும். கலேவலா மொத்தத்தில் பின்னிஷ் மொழி பேசும் மக்களின் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்து மதத்தையும் வீரப்பண்புகளுடைய புனை கதைகளையும் பிரதிபலித்தது, எனினும் இந்நாட்டை வெற்றிக்கொண்ட [[சுவீடன்|சுவீடிஷ்க்காரர்]] கி.பி. 1155-இல் பலவந்தமாகக் கொண்டுவந்த [[கிறிஸ்தவம்|கிறிஸ்துவத்தின்]] வெற்றியே கடைசிப் பாடலின் கருவாயிற்று.
 
==கலேவலா பெயர்க்காரணம்==
''கலேவலா'' என்னும் பெயர் பின்னிஷ் மொழியில் 'இடம்' என்பதைக் குறிப்பிடும் -லா என்னும் பெயர் விகுதியில் முடிவடைகிறது. 'கலேவா' என்னும் முதல் அடி பின்லாந்தியரின் சந்ததியின் ஆதிமுதல்வரின் பெயராகக் கருதப்படுகிறது. இவருக்கு பன்னிரண்டு ஆண் மக்கள் இருந்தனர். கலேவலாவின் நாயகர்களான வைனாமொயினனும் இல்மரினனும் இவர்களில் அடங்குவர். பின்னிஷ் மொழியில் 'கலேவா' என்பது விண்மீன்களின் பல பெயர்களாக வருகிறது.
 
==தமிழில் மொழிபெயர்ப்பு==
கலேவலா பாடல்கள் இற்றைவரை [[தமிழ்]] உட்பட 50க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் 1994இல் [[ஆர். சிவலிங்கம்]] (உதயணன்) அவர்களால் 1994இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உத்தியோகபூர்வமாக பின்லாந்து அரசினரால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
 
==உசாத்துணை==
1,12,887

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/51797" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி