"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
விக்கிப்பீடியா குமுகம் உங்களது பயனர்வெளியில் ஏதாவது பக்கத்தையோ துணைப்பக்கத்தையோ நீக்கக் கோரினால், விக்கிப்பீடியாவில் குமுக இணக்க முடிவின் தீர்வே இறுதியானது என்றநிலையில் நீங்கள் அதனை நீக்கி விடுவது சிறப்பாகும். நீங்கள் ஓராண்டுக்கும் மேலாக பங்களித்திருந்தாலோ பல பயனுள்ள கட்டுரைகளை அளித்திருந்தாலோ குமுகம் உங்களிடம் கனிவாக நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. வேண்டுமானால் உங்கள் உள்ளடக்கத்தை வேறு இணைய வசதிக்கு நகர்த்தி அதற்கு இணைப்புக் கொடுக்கலாம்.
 
நீங்கள் ஒத்துழைக்காவிடில் குறிப்பிட்ட பக்கத்தில் சர்ச்சைக்குள்ளானப் பகுதியை தொகுத்தோ அல்லது முழு துணைப்பக்கமும் பொருந்தாதிருந்தால் உங்கள் முதன்மை பயனர் பக்கத்திற்கு வழிமாற்று கொடுத்தோ பொருந்தாத உள்ளடக்கம் நீக்கப்படும். சில தீவிரமான நேரங்களில், [[விக்கிப்பீடியா:நீக்குதல் கொள்கை|நீக்குதல் கொள்கை]]யின்படி [[விக்கிப்பீடியா:இதர நீக்கல்கள்|இதர நீக்கல்கள்]] பக்கத்தில் பட்டியலிடப்பட்டு உங்கள் துணைப்பக்கமே நீக்கப்படலாம்.
 
இவ்வாறு நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை மீண்டும் உள்ளிட முயற்சிக்காதீர்கள்: அவ்வாறு செய்தால் அவை [[விக்கிப்பீடியா:விரைவாக நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்|விரைவாக நீக்கப்பட வேண்டிய பக்கமாக]] உடனே நீக்கப்படும். மாறாக, விக்கிக் குமுகத்தின் தீர்ப்பை மதிக்கவும்.
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/504727" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி