தங்கனீக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fa:تانگانیکا; cosmetic changes
சி தானியங்கிஇணைப்பு: yo:Tanganyika
வரிசை 51: வரிசை 51:
[[uk:Танганьїка (держава)]]
[[uk:Танганьїка (держава)]]
[[wa:Tanganyika]]
[[wa:Tanganyika]]
[[yo:Tanganyika]]
[[zh:坦噶尼喀]]
[[zh:坦噶尼喀]]

13:56, 13 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Deutsch-ostafrika-fahne.JPG
ஜெர்மனிய கிழக்கு ஆபிரிக்காவின் கொடி (1885-1919)
தங்கனீக்காவின் கொடி (1919-1961)
தங்க்கனீக்கா குடியரசின் கொடி 1962–64

தங்கனீக்கா (Tanganyika) என்பது கிழக்கு ஆபிரிக்காவில் தான்சானியா நாட்டின் பெருநிலப்பரப்பாகும். இது கிழக்காபிரிக்காவில் பாயும் முக்கிய பெரும் ஏரிகளான விக்டோரியா ஏரி, மலாவி ஏரி, மற்றும் தங்கனீக்கா ஏரி ஆகியவற்றின் கரைகளில் அமைந்திருக்கிறது. முன்னர் ஜெர்மனிய கிழக்கு ஆபிரிக்காவின் (Deutsch-Ostafrika) ஒரு குடியேற்ற நாடாக இருந்தது. முதலாம் உலகப் போரின் போது பிரித்தானியாவின் இராணுவ ஆட்சியின் கீழ் வந்த தங்கனீக்கா 1919 இல் வேர்சாய் ஒப்பந்தப்படி இது பிரித்தானிய ஆட்சியின் கீழ் "தங்கனீக்கா பிரதேசம்" என்ற பெயரில் இருந்தது. பின்னர் இது ஐநாவின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

டிசம்பர் 9, 1961 இல் இது தங்கனீக்கா என்ற பெயரில் தனிநாடாகியது. ஜூன் 9, 1962 இல் இது பொதுநலவாயத்தின் கீழ் "தங்கனீக்கா குடியரசு" என்ற பெயரில் குடியரசாகியது. 1964 இல் இது சன்சிபார் தீவுகளுடன் இணைந்து "தங்கனீக்கா மற்றும் சன்சிபார் ஐக்கிய குடியரசு" என்ற பெயரில் ஒன்றுபட்டன. இதன் பெயர் ஏப்ரல் 26, 1964 இல் தான்சானியா ஐக்கிய குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.

தங்கனீக்கா, மற்றும் சன்சிபார் தீவுகளை உள்ளடக்கிய தான்சானியா

'தங்கனீக்கா' என்ற பெயர் சுவாஹிலி மொழியில் தங்கா என்பது 'கப்பல் பயணம்' மற்றும் நீக்கா என்பது 'பாழ்வெளி' என்ற்ற் பொருள்படும். அதாவது பாழ்வெளியில் கப்பல் பயணம் செய்தல்" எனப்பொருள்படும்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கனீக்கா&oldid=494549" இலிருந்து மீள்விக்கப்பட்டது