ராம. அழகப்பச் செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
6,301 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
 
இருப்பினும் கல்விப்பணியில் நாட்டம் கொண்டு தமது குவியத்தை மாற்றிக் கொண்டார்.
 
==கல்வி புரவலர்==
இவரது கல்விப்பணி [[திருவாங்கூர் பல்கலைக்கழகம்|திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில்]] [[தமிழ்|தமிழ் மொழிக்கான]] துறையை ஏற்படுத்த 1943ஆம் ஆண்டு ஒரு இலக்கம் ரூபாய்கள் நன்கொடை வழங்கியதுடன் துவங்கியது.
 
1947ஆம் ஆண்டு நடந்த [[அன்னி பெசண்ட்]] நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இந்தியாவில் கல்வியை வளர்க்க தொழிலதிபர்களுக்கு விடுத்த அழைப்பினை ஏற்று [[காரைக்குடி]]யில் காந்திமாளிகையில் அழகப்பா கலைக்கல்லூரியை மூன்று நாட்களுக்குள் நிறுவினார்.
 
அப்போதைய [[இந்தியப் பிரதமர்]] [[ஜவகர்லால் நேரு]]வை காரைக்குடியில் அழகப்பா வளாகத்தில் 15 இலக்கம் ரூபாய் மதிப்புள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பினை நன்கொடை அளித்து நடுவண் அரசின் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவ இணங்கச் செய்தார்.இவரது இந்த நன்கொடையைப் பாராட்டி நேரு இவரை ''சோசலிச முதலாளி'' என்று புகழ்ந்தார்.1953ஆம் ஆண்டுசனவரி 14 அன்று இந்நிலப்பரப்பில் [[மத்திய மின் வேதியியல் ஆய்வுக் கழகம்|மத்திய மின் வேதியியல் ஆய்வுக் கழகத்தை]] (CECRI) [[ இந்தியக் குடியரசுத் தலைவர்]] சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
 
தமது அரண்மனை போன்ற கோட்டையூர் இல்லத்தையே ஓர் பெண்கள் கல்லூரி நிறுவ வழங்கியது இவரது வள்ளல்தன்மைக்கு சிகரமாக அமைந்தது.
 
இவரது பிற நன்கொடைகள் மற்றும் நிறுவனங்கள்:
 
* அவரது பிறந்த ஊரான கோட்டையூரில் ஓர் உயர்நிலைப் பள்ளி
* சென்னை வேப்பேரியில் ஓர் பெண்கள் தங்கும் விடுதி
* கோட்டையூர் நகரமைப்பிற்காக வளர்ச்சி நிதி
* கந்தனூர் மீனாட்சி மன்றத்திற்காக நன்கொடை
* சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழகம் வளாகத்தில் பொறியியல் கல்லூரி துவக்கம்
* [[கிண்டி]]யில் [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]], பின்னர் அழகப்பா செட்டியார் தொழில்நுட்பகல்லூரி என பெயர்பெற்ற,தொழில்நுட்பக் கல்லூரி துவக்கம்
*[[மலேசியா]]வில் உயர்கல்வி துவங்க நன்கொடை
* 1948ஆம் ஆண்டு புது தில்லியில் தென்னிந்தியா கல்வி சொசைட்டி அமைக்க நன்கொடை
* [[மதுரை]] லேடி டோக் கல்லூரிக்கு நன்கொடை
* 1946ஆம் ஆண்டு ''தக்கர் பாபா வித்யாலயா''வில் அழகப்பா மண்டபம் கட்ட நன்கொடை
* ''தமிழ் களஞ்சியம்'' பதிப்பித்திட நன்கொடை
* புவியியல் ஆய்விற்காக திருவாங்கூர் அரசிற்கு நன்கொடை
* [[கொச்சி]]யில் குழந்தைப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பு மையம் ஒன்றை நிறுவ நன்கொடை
* எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் நாட்டு மருத்துவ ஆய்வினுக்காக நன்கொடை
 
==விருதுகள்==
1943ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தாலும் 1944ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தாலும் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
 
1945ஆம் ஆண்டு [[ஐக்கிய இராச்சியம்]] அவருக்கு ''சர்'' விருது வழங்கி கௌரவித்தது.இந்திய விடுதலையை அடுத்து இவ்விருதினை அவர் புறக்கணித்தார்.இந்திய அரசு 1957ஆம் ஆண்டு [[பத்ம பூசன்|பத்ம பூசண்]] விருது வழங்கியது.
 
 
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/466786" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி