விக்கிப்பீடியா:பயிற்சி (வெளி இணைப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்:பயிற்சி(வெளியிணைப்புகள்)
 
வரிசை 51: வரிசை 51:


[[பகுப்பு:விக்கிப்பீடியா பயிற்சி|*4]]
[[பகுப்பு:விக்கிப்பீடியா பயிற்சி|*4]]


[[en:Wikipedia:Tutorial (External links)]]
[[ar:ويكيبيديا:دروس (روابط خارجية)]]
[[es:Wikipedia:Tutorial (Enlaces externos)]]
[[fa:ویکی‌پدیا:خودآموز (پیوندهای وبگاه‌های مربوطه)]]
[[pt:Wikipedia:Tutorial/Objectos relacionados]]
[[sk:Wikipédia:Príručka/Odkazy na podobné stránky]]
[[hr:Wikipedija:Tečaj (Vanjske poveznice)]]
[[sl:Wikipedija:Vadnica (Zunanje povezave)]]
[[lv:Vikipēdija:Pamācība (Saites uz saistītiem projektiem)]]
[[zh:Wikipedia:使用指南 (谨记)]]

07:14, 3 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

வரவேற்பு   தொகுத்தல்   வடிவமைப்பு   உள்ளிணைப்புகள்   வெளியிணைப்புகள்   பேச்சுப்பக்கம்   கவனம் கொள்க   பதிகை   மீள்தொகுப்பு    

விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும் பக்கத்தில் குறிப்பிட்டபடி, கட்டுரைகளின் மெய்யறிதன்மை மிகவும் ஆதாரமான கொள்கையாகும். ஓர் கட்டுரையில் எந்த தகவலை உள்ளிட்டாலும் அவற்றின் உசாத்துணைகளை அளிக்க வேண்டும். எழுதும் வரியடுத்தே இத்தகைய உசாத்துணைகளை இணைப்பது படிப்பவர்கள் உடனேயே சரிபார்த்து கொள்ள உதவியாயிருக்கும். தவிர உசாத்துணைகள் நம்பிக்கை மிக்க மூலங்களிலிருந்து தரப்பட வேண்டும்.

மேற்கோள்கள்

நீங்கள் உள்ளிடும் தகவலுக்கு அடுத்து அதற்கான ஆதாரத்தை இணைக்க மேற்கோள்கள் அல்லது அடிக்குறிப்புகள் பயனாகின்றன. நீங்கள் தொகுக்கும் பெட்டியின் கீழே விக்கி நிரல்கள் என சில விக்கி மார்க் அப் சோடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • அவற்றில் உசாத்துணை குறிகள் கொண்டு இப்போது காட்டும் வண்ணம் <ref>உசாத்துணை</ref> உங்கள் உசாத்துணையை சுற்றியிட்டு,பின்னர்
  • {{Reflist}} அல்லது <references/> என ==மேற்கோள்கள்== என்ற பத்தியில் பக்கத்தின் இறுதியில் இட வேண்டும்.

உங்கள் மூலம் ஓர் இணையதளமாக இருந்தால், நீங்கள் அந்த இணைய தளத்திற்கு ஓர் வெளியிணைப்பை உருவாக்க வேண்டும்.விக்கிப்பீடியா கட்டுரைகளை உசாத்துணைகளாகக் கொடுக்காதீர்கள்.

இவ்வாறு ஓர் இணையதளத்திற்கு இணைப்பு கொடுக்க, முழுமையான இணைய முகவரியை இரு சதுர அடைப்புக்குறிகளுக்குள்,கீழே காட்டியுள்ளபடி, இடவும். To create

  • <ref>[http://www.google.com கூகுள் தேடல் பொறி]</ref>

வெளி இணைய முகவரிக்கு அடுத்து ஓர் சிறிய விளக்க உரை இடுதல், தேவையில்லை என்றபோதிலும், நல்ல நடைமுறையாகும். மேற்கோள்கள் பட்டியலில் இணையமுகவரிக்குப் பதிலாக இவ்விளக்க உரை வெளியிணைப்பின் தலைப்பாக காட்டப்படும். ஆங்கில இணைய முகவரிகளை காட்டுவதை விட தமிழில் இத்தலைப்புகளைக் காட்டுவது கட்டுரையின் வனப்பை கூட்டும்.

இத்தகைய விளக்கவுரை இன்றி காட்டவேண்டுமெனில், உசாத்துணை குறிகள் இடையே இணைய முகவரியை மட்டும் இட்டால் போதும். காட்டாக:

  • <ref>http://www.google.com</ref>

வெளியிணைப்புகள் பத்தி

பல விக்கிப்பீடியா கட்டுரைகள் தனியான வெளியிணைப்புகள் என்று தலைப்பிட்ட பத்தியை கொண்டிருக்கும். இந்த பத்தியில் எழுதப் பட்டுள்ள கட்டுரை தொடர்பான கூடுதல் தகவல்கள் அளிக்கக்கூடிய நம்பகமான இணையதளங்களுக்கு இணைப்பு கொடுக்கப்படுகிறது. பொதுவாக எந்த வெளியிணைப்பையும் இந்த பத்தியில் கொடுக்கும் முன்னர் அதன் தேவையை அக்கட்டுரையின் பேச்சப்பக்கத்தில் பரிந்துரைப்பது நன்னெறியாக கருதப்படும்.

இணைக்க வேண்டிய முழு இணைய முகவரியை மட்டும் தட்டச்சினீர்கள் என்றால்:

http://www.google.com

விக்கி இணைப்பை உரையாக, மேலே கூறியவாறு, கருதி நேரடியாக முகவரியை ("http://" உள்ளிட்டு) காட்டும். இது காட்சிக்கு உறுத்தலாகவும் தளத்தின் உள்ளடக்கம் குறித்த எந்தவொரு குறிப்பையும் வழங்காதிருப்பதாலும் இம்முறையை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

சதுர அடைப்புக்குறிகளுக்குள் முகவரியை அடுத்து ஓர் வெற்றிடத்தை விட்டு காணவேண்டிய விளக்கவுரையை தீர்மானித்துக்கொள்ளுங்கள்.எ.கா:

[http://www.google.com கூகுள் தேடல்பொறி]

வெற்றிடத்தை அடுத்து இட்ட உரை மட்டுமே தெரியும், ஆனால் சொடுக்கினால் வேண்டிய இணையதளத்திற்கு செல்லும்:

கூகுள் தேடல்பொறி

நீங்கள் பயின்றவற்றை மணல்தொட்டியில் முயலவும்
பயிற்சியை தொடர்க: பேச்சுப் பக்கம்