விக்கிப்பீடியா:ஒழுங்குப் பிறழ்வுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 17: வரிசை 17:
== இவற்றையும் பார்க்கவும் ==
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[Wikipedia:தமிழ் விக்கிபீடியா இவை அன்று]]
* [[Wikipedia:தமிழ் விக்கிபீடியா இவை அன்று]]
* [[Wikipedia:விக்கி நற்பழக்கவழக்கங்கள்]]
* [[Wikipedia:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி|சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி?]]
* [[Wikipedia:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி|சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி?]]
* [[Wikipedia:நடைக் கையேடு|நடைக் கையேடு]]
* [[Wikipedia:நடைக் கையேடு|நடைக் கையேடு]]

00:05, 17 சூன் 2006 இல் நிலவும் திருத்தம்

விக்கிபீடியாவின் புது வருனர்கள் விதி மீறல்கள் (faux pas) புரிந்துவிட வாய்ப்புகள் அதிகம் என உணரக்கூடும்.தவறொன்றுமில்லை - தவறு செய்யாதார் யாருளர்? பின்வரும் சில பொதுவான பிறழ்வுகளைத் தவிர்க்க முயலவும்:

  • அகராதி போன்ற கட்டுரைகளைத் தவிர்க்க. விக்கிபீடியா ஒரு அகராதி இல்லை. ஒவ்வொரு கட்டுரையும் வெறும் வரையறைகளைத் தருவதோடு நின்றுவிடாமல் அவை பேச வந்த பொருள் பற்றிய கூடுதல் தகவல்கள் அடங்கியதாகவும் இருக்க வேண்டும்.அகராதி வடிவிலான வரையறைகளுக்காக இன்னொரு விக்கி திட்டமான விக்சனரிஉள்ளது.
  • ஒரே பொருளில் பல கட்டுரைகள்.ஒரு புதிய கட்டுரையைத் தொடங்கும்முன் அந்த தலைப்பில் ஏற்கனவே கட்டுரை உள்ளதா எனத் தேடிப்பாருங்கள்.புதிதாக ஆரம்பிப்பதைவிட ஏற்கனவே உள்ளதை செழுமைப்படுத்த முடியுமா எனப் பாருங்கள். தலைப்புகள் பொதுவாக ஒருமையில் அமையும் என்பதை நினைவில் கொள்ளவும் (எ-கா:மரம், மரங்கள் இல்லை).விக்கிபீடியாவில் தேடுவதோடு கூகிள்-இலும் "site:ta.wikipedia.org <தலைப்பு>" என்று கொடுத்துத் தேடவும். விக்கிபீடியா தேடலில் விடுபட்டுப்போனவை கூகிள் தேடலில் கிடைக்க வாய்ப்புண்டு (குறிப்பாக நீங்கள் தேடும் சொற்கள் கட்டுரைத் தலைப்புகளில் இடம்பெறாமல் இருக்கும்போது).
  • பயனுள்ள உள்ளடக்கத்தை அழித்துவிடுதல். உள்ளடக்கத்தின் ஏதேனும் ஒரு பகுதி பயனுடையதாக இருந்தபோதும் சரியாக எழுதப்படாதிருக்கலாம்.அதை நீக்கிவிடுவதைவிட சரிசெய்ய, தெளிவாக மாற்ற முயலுங்கள்.அப்பகுதி பொருந்தாமல் நிற்பதாகவோ, சரியான பாகுபாடு செய்யப்படாததாகவோ கருதினால் உரிய பக்கத்திற்கோ தேவைப்பட்டால் புதிய பக்கத்திற்கோ மாற்றுங்கள்.
  • பக்கச்சார்புடைய உள்ளடக்கத்தை அழித்துவிடுதல். பக்கச்சார்புடைய உள்ளடக்கம் பயனுள்ளதாகவும் இருக்கலாம் (மேற்கூறியவாறு). பக்கச் சார்பை நீக்குதல் பார்க்கவும்.
  • அறிவிக்காமலே அழித்துவிடுவது. சுருக்கம் பெட்டியில் குறிப்பு விட்டுச்செல்லுங்கள். இல்லையெனில் அக்கட்டுரையின் வளர்ச்சி குறித்து ஆர்வமுடையவர்கள் கவனத்திற்கு வராமல் நீங்கள் வேண்டுமென்றே மறைத்திருப்பதாகக் கருத இடமுண்டு.
  • காரணங்களைக் கூறாமல் அழித்துவிடுதல். பொருட்படுத்தத்தக்க எதையும் அழிக்குமுன் அதற்குரிய நியாயங்களை "சுருக்கம்" பெட்டியில் அல்லது பேச்சுப் பக்கத்தில் விட்டுச்செல்லவும்.பேச்சு பக்கத்தில் உரிய விளக்கம் தந்திருந்தால் "பார்க்க:பேச்சு" என்று மட்டும் சுருக்கத்தில் குறிப்பிடலாம்.
  • விக்கிபீடியா பக்கங்களை அரட்டைக்குப் பயன்படுத்தல். பேச்சுப் பக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எப்படி? பார்க்கவும்.
  • "இயற்றிவருக்கு" அதீத மரியாதை அளித்தல்
    • தொகுப்பதற்குப் பதில் விமர்சித்தல். கட்டுரைகளுக்கு தனிப்பட்ட ஆசிரியர் (single author) என்று எவருமில்லை.ஆலோசனையோ, விமர்சனமோ பேச்சுப் பக்கத்தில் விட்டுச்செல்வது உதவிகரமானதே என்றாலும் நீங்களே தொகுத்துவிடுவது இன்னும் விரைவானது.
    • துணிந்து செயல்படத் தவறுதல். ஏதேனும் குழப்பம் விளைவித்துவிடுவோம் என்று தயங்காதீர்கள்.அடுத்து வருபவர்கள் சரிசெய்து விடுவார்கள். எனவே, துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!.
  • மல்லுக்கு நிற்றல். விக்கிபீடியா என்பது பொதுநலம் விழைகின்ற, மனச்சான்றின்வழி நிற்கிறவர்கள் அடங்கிய தனித்துவம் மிக்க ஒரு சமூகம்.சண்டை பிடிக்க அது ஒன்றும் பயனர்வலை(usenet) இல்லை, சொல்லம்பு தொடுத்தலுக்கு (flaming) இங்கு இடமில்லை.விக்கிபீடியா நடத்தைகள் பற்றிய மேல்விவரங்களுக்கு பார்க்க:விக்கி நெறி.
  • விக்கிமயமாக்கல்- சற்று அதிகமாகவே. விக்கிபீடியா உள் இணைப்பு மூலம் செழுமை பெறுவது உண்மை . அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே?
  • சரியாகத் தொகுக்கப்படாத கட்டுரைகள் கண்டு தெறித்தோடுவது. விக்கிபீடியா தொடர்ந்து நடைபெறும் ஒரு பணி. (தற்காலிகமான) குறைகளைப் பொறுத்துக்கொண்டு மேம்பாட்டுக்கு உதவுங்கள் . இங்கு திறமையானவர்கள் நிறையவே உண்டு.ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.உங்கள் ஐயம் நீங்கவில்லையென்றால் பார்க்க:பொது ஆட்சேபங்களுக்கான பதில்கள்.
  • தங்கள் பயனர் பேச்சு பக்கத்தை அழித்துவிடுதல் அல்லது அதிலிருந்து சிலவற்றை நீக்கிவிடுதல். பேச்சுப் பக்கங்கள் விக்கிபீடியாவின் வரலாற்று ஆவணங்களில் ஒரு அங்கம்.தங்கள் பயனர் பேச்சு பக்கமே பிறர் தங்களுடன் உரையாடும் வழி.பழையவற்றைப் பரணுக்குத் தள்ளுவது சரியே என்றாலும் பயனர் பேச்சிலிருந்து எதையும் நீக்குமுன் கவனமாக இருங்கள்: நீங்கள் விமர்சனத்தை மறைக்க முயலுவதாகக் கருத வாய்ப்பு ஏற்படும்.

இவற்றையும் பார்க்கவும்