இந்தியச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி தானியங்கி இணைப்பு: fr:Droit en Inde
வரிசை 38: வரிசை 38:


{{இந்திய சட்டம்}}
{{இந்திய சட்டம்}}

[[cs:Indické právo]]
[[cs:Indické právo]]
[[en:Law of India]]
[[en:Law of India]]
[[es:Derecho de la India]]
[[es:Derecho de la India]]
[[fr:Droit en Inde]]

18:22, 3 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்

இந்தியச் சட்டம்- இந்தியாவின் நீதிமுறைமையை செயல்படுத்துகின்ற ஒன்றாகும். இது ஆங்கிலேய பொது சட்டத்தைச் சார்ந்தே இங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆங்கிலேயர் வெகுகாலமாக இங்கு ஆட்சிபுரிந்தமையால் அதன் நீதிமுறைமையை இந்தியர்களும் சார்ந்துள்ளனர்.இதனோடு ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சட்டத் தாக்கங்களும் இந்திய நீதி முறைமையில் இடம் பெற்றிருக்கின்றது.


சார்ந்துள்ளவை

இந்திய அரசியலமைப்பு வரையும் பொழுது அயர்லாந்து சட்டம், அமெரிக்கச் சட்டம், பிரித்தானிய சட்டம் மற்றும் பிரான்ஸ் சட்டம் இவற்றின் கலவையில் வடித்தெடுக்கப்பட்ட சட்டமாக இந்திய அரசியலமைப்பில் இந்திய சட்டம் வரையப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்திய சட்டம் ஐக்கிய நாடுகள் வழிகாட்டுதலின்படி அதன் வரையரைப்படி அமைந்துள்ள மனித உரிமைச் சட்டம் மற்றும் சூழ்நிலையியல் சட்டம் போன்றச் சட்டங்களை ஒற்றமைந்துள்ளன.

உரிமையியல் சிக்கல்கள்

இந்திய உரிமையியல் சட்டம் சிக்கல் நிறைந்தவையாக அமைந்துள்ளன. இந்தியா பல சமயத்தினரை உள்ளடக்கியதால் ஒவ்வொரு மதத்தினரும் அதற்குறியத் தனித்தன்மையை வலியுறித்துவதால் இச்சிக்கல் நிறைந்த சட்டமாக உள்ளது.

பல மாநிலங்களில் திருமணங்களை பதிவு செய்வது, மற்றும் மணமுறிவை பதிவு செய்வது போன்றவைகள் கட்டாயமாக்கப்படவில்லை. ஆகையால் ஒவ்வொரு சமயத்தினருக்கும் தனித்தனியான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்து, இசுலாமியர், கிருத்தவர், சீக்கியர் மற்றும் இதர சமயத்தினர் என்று தனித்தனியாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பொதுச் சட்டம்

கோவாவில் மட்டும் போர்ச்சுகீசியர் ஒரே சீர் உரிமையியல் சட்டத்தின படி அனைவருக்கும் , அனைத்து சமயத்தினருக்கும் ஒரே மாதிரியாக வகுக்கப்பட்டப் பொதுச் சட்டம் பின்பற்றப்படுகின்றது.


செப்டம்பர் 2007, ன்படி 1160 சட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

  • இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில சட்டங்கள்
      1. இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சியியல் சட்டம்
      2. குற்றவியல் சட்டம்
      3. ஒப்பந்தச் சட்டம்
      4. தொழிலாளர்ச் சட்டம்
      5. பொல்லாங்கு குற்றவியல் சட்டம் (டோர்ட் லா)
      6. குடும்பச் சட்டம்
      7. இந்துச் சட்டம்
      8. இசுலாமியச் சட்டம்
      9. கிருத்துவச் சட்டம்
      10. பொதுச் சட்டம்
      11. தேசியச் சட்டம்
      12. அமலாக்கச் சட்டம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியச்_சட்டம்&oldid=386386" இலிருந்து மீள்விக்கப்பட்டது