தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''தாராளமயம்''' (Liberalism) என்பது, தனிப்பட்டவர்களின் சுதந்திரத்தை மிகவும் முக்கியமான அரசியல் இலக்காகக் கொண்ட அடிப்படையான [[கொள்கை]]யாகும். இக் கொள்கை பரந்த [[எண்ணக்கரு]]க்களையும், [[கோட்பாடு]]களையும் தன்னுள் அடக்கியுள்ளது. தனிப்பட்டவர்களது சுதந்திரம் தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையாக இருப்பினும், [[பொருளியல்]] நல்ல நிலையில் உள்ளவர்கள் தமது [[வருமானம்|வருமானத்தின்]] ஒரு பகுதியை அரசுக்குக் கொடுக்க வேண்டியது [[கடமை]]யாகக் கருதப்படுகிறது. தாராளமயத்தின் மூலம் [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்தில்]] இருந்து வருகிறது. அரசர்களின் கடவுளுக்கு ஈடான உரிமை, [[தலைமுறை உரிமை]], [[அரசு மதம்]], [[காப்பாண்மையியம்]] (protectionism) போன்ற முன்னைய அரசுக் கோட்பாடுகளின் அடிப்படை [[எடுகோள்]]கள் பலவற்றைத் தாராளமயம் ஏற்க மறுத்தது.
 
[[ஆடம் சிமித்|எடம் ஸ்மித்]] என்பவராலும் பிறராலும் உருவாக்கப்பட்ட [[பொருளியல் தாராளமயம்]], அமைதிக்கும், வளத்துக்குமான சிறந்த வழியாக [[கட்டற்ற சந்தை]], [[கட்டற்ற வணிகம்]] என்பவற்றை ஏற்றுக்கொண்டது. [[தனியார் சொத்துரிமை]]யும், தனிப்பட்ட [[ஒப்பந்தம்|ஒப்பந்தங்களுமே]] பொருளியல் தாராளமயத்தின் அடிப்படைகள்.
 
[[பண்பாட்டுத் தாராளமயம்]] என்பது, [[பாலியல் சுதந்திரம்]], [[மத சுதந்திரம்]], [[சிந்தனைச் சுதந்திரம்]], தனிப்பட்ட வாழ்வில் அரசின் தலையீட்டிலிருந்து பாதுகாப்பு என்பவை உள்ளிட்ட தனியார் சுதந்திரங்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3398049" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி