சுவர்ணலதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Added content
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17: வரிசை 17:
'''சுவர்ணலதா''' (''Swarnalatha'', [[ஏப்ரல் 29]],
'''சுவர்ணலதா''' (''Swarnalatha'', [[ஏப்ரல் 29]],
[[1973]] - [[செப்டம்பர் 12]], [[2010]]) [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். [[1987]] ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார்.
[[1973]] - [[செப்டம்பர் 12]], [[2010]]) [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். [[1987]] ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார்.
இவர் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[இந்தி]], [[உருது]], [[மலையாளம்]], [[பெங்காலி]], [[ஒரியா]], [[படுக மொழி|படுகா]] உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் "ஸ்வரங்களின் அரசி"<ref>{{Cite news|title= The Queen of Tones in india : My first break - Swarnalatha|work= The Hindu Cinema plus|url= https://web.archive.org/web/20090510085158/http://www.hindu.com/cp/2009/05/08/stories/2009050850351600.htm}}</ref><ref>{{Cite news|title=Swarangalin Arasi in india : Swarnalatha goes for ever|work= The New Indian Express|url = https://www.newindianexpress.com/cities/chennai/2010/sep/13/poralae-ponnuthayi-swarnalatha-goes-forever-186392.html }}</ref> எனவும் "இந்தியாவின் ஹம்மிங் குயின்"<ref>{{Cite news|last=Ramanujam|first=Srinivasa|date=2018-04-30|title=The Humming Queen of India. : a tribute to singer Swarnalatha|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/entertainment/the-humming-queen-a-tribute-to-singer-Mswarnalatha/article23727129.ece|access-date=2021-05-11|issn=0971-751X}}</ref> என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[இந்தி]], [[உருது]], [[மலையாளம்]], [[பெங்காலி]], [[ஒரியா]], [[படுக மொழி|படுகா]] உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் "ஸ்வரங்களின் அரசி"<ref>{{Cite news|title=ஸ்வரங்களின் அரசி:ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்|work=சினிமா விகடன்|url=https://cinema.vikatan.com/tamil-cinema/136681-swarnalathas-voice-just-reciprocates-our-pain}}</ref> எனவும் "இந்தியாவின் ஹம்மிங் குயின்"<ref>{{Cite news|last=Ramanujam|first=Srinivasa|date=2018-04-30|title=The Humming Queen of India. : a tribute to singer Swarnalatha|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/entertainment/the-humming-queen-a-tribute-to-singer-Mswarnalatha/article23727129.ece|access-date=2021-05-11|issn=0971-751X}}</ref> என்றும் அழைக்கப்படுகிறார்.


[[கருத்தம்மா]] திரைப்படத்தில் இடம்பெற்ற ''போறாளே பொன்னுத்தாயி'' என்ற பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இப்பாடலை [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்திருந்தார்.
[[கருத்தம்மா]] திரைப்படத்தில் இடம்பெற்ற ''போறாளே பொன்னுத்தாயி'' என்ற பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இப்பாடலை [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்திருந்தார்.

02:39, 2 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

சொர்ணலதா
ஸ்வர்ணலதா
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சுவர்ணலதா
பிற பெயர்கள்ஹம்மிங் குயின் ஸ்வரங்களின் அரசி
பிறப்பு29 ஏப்ரல் 1973 பாலக்காடு, கேரளா, இந்தியா
இறப்புசெப்டம்பர் 12, 2010 (அகவை 37)சென்னை, தமிழ்நாடு
இசை வடிவங்கள்பின்னணிப்பாடகி, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)பாடகி
இசைத்துறையில்1987–2010

சுவர்ணலதா (Swarnalatha, ஏப்ரல் 29, 1973 - செப்டம்பர் 12, 2010) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். 1987 ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம், பெங்காலி, ஒரியா, படுகா உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் "ஸ்வரங்களின் அரசி"[1] எனவும் "இந்தியாவின் ஹம்மிங் குயின்"[2] என்றும் அழைக்கப்படுகிறார்.

கருத்தம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற போறாளே பொன்னுத்தாயி என்ற பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

கேரளாவின் பாலக்காட்டில் கே.சி.சேருக்குட்டி, கல்யாணி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற ஆர்மோனியக் கலைஞரும், சிறந்த பாடகரும் ஆவார். ஆர்மோனியம், விசைப்பலகை ஆகியவற்றில் சுவர்ணலதா சிறந்து விளங்கினார்.[3][4] சுவர்ணலதாவின் குடும்பத்தினர் பின்னர் கர்நாடகாவில் உள்ள சிமோகா நகருக்குக் குடி பெயர்ந்தனர். அங்கேயே அவர் தனது உயர் கல்வியையும் கற்றார்.

பின்னணிப் பாடகியாக

சொர்ணலதா 1987 ஆம் ஆண்டில் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து உயர்ந்த மண் படத்தில் பி. சுசீலா பாடிய பால் போலவே என்கிற பாடலைப் பாடிக்காண்பித்தார். சொர்ணலதாவின் குரலில் தனித்துவம் தெரிய அதே ஆண்டில் மு. கருணாநிதி கதை வசனத்தில் வெளியான நீதிக்குத்தண்டனை படத்தில் பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' என்னும் பாடலை யேசுதாசுடன் விசுவநாதன் பாடவைத்தார். அப்பொழுது சொர்ணலதாவிற்கு 14வயது மட்டுமே. பின் இவர் 1988இல் வெளியான குருசிஷ்யன் படத்தில் உத்தம புத்திரி நானு என்னும் பாடலை இளையராஜாவின் இசையமைப்பில் பாடினார்.

பின் தளபதி படத்தில் ’ராக்கம்மா கையத் தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, சின்னத்தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ போன்ற பாடல்கள் புகழ்பெற்றன.

சிறப்புக் குறிப்பு

புகழ்பெற்ற இந்திப்படமான "மொகலே ஆசம்" படம் தமிழில் "அனார்கலி" என்ற பெயரில் வெளியானது. இந்திப்படத்தில் நவ்ஷாத் அலியின் இசையில் புகழ்பெற்றிருந்த கவாலி என்ற போட்டிப் பாடலை ஷம்ஷாத் பேகமும் லதாமங்கேஷ்கரும் பாடியிருந்தார்கள். இப்போட்டிப் பாடலை இரு வெவ்வேறு குரல்களிலும் சொர்ணலதா, சங்கர் கணேசின் இசையமைப்பில் பாடினார். சொர்ணலதாவின் திறமையை நவ்ஷாத் அலி பாராட்டினார். அத்துடன், தன்னுடைய மோதிரத்தையும் சொர்ணலதாவுக்கு விருதுபோல வழங்கினார்.

விருதுகள்

தேசிய விருது

  • 1994 - இந்தியாவின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான வெள்ளித்தாமரை விருது - படம் : கருத்தம்மா , பாடல் : போறாளே பொன்னுத்தாயி

தமிழக அரசு விருது

  • 1991 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருது - படம் : சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்வோலம்
  • 1994 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருது - படம் : கருத்தம்மா , பாடல் : போறாளே பொன்னுத்தாயி

தமிழக அரசு சிறப்பு விருது

சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்

  • 1991 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்வோலம்
  • 1995 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : காதலன் , பாடல் : முக்காலா முக்காபலா
  • 1996 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : இந்தியன் , பாடல் : அக்கடானு நாங்க , மாயா மச்சிந்ரா
  • 1999 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : முதல்வன் , பாடல் : உழுந்து விதைக்கையில
  • 2000 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : அலைபாயுதே , பாடல் : எனனோ ஒருவன் வாசிக்கிறான்

ஃபிலிம்பேர் விருதுகள்

இசைப்பயணம்

இளையராஜா

இளையராஜாவுக்காக 300 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் , 90 களில் குறிப்பிடப்பட்ட சேர்க்கைகளில் ஒன்றாக குறிக்கப்பட்டார். சின்னதம்பி படத்தின் 'போவோமா ஊர்கோலம்' மற்றும் 'நீ எங்கே என் அன்பே' ஆகியவை வெற்றி பெற்றன. 'போவோமா ஊர்கோலம்' பாடலுக்கு சிறந்த பாடகர் விருதை தமிழக அரசு வழங்கி கௌரவித்தது.

இவர் பாடிய தளபதி படத்தில் இருந்து 'ராக்கம்மா கையத்தட்டு' பிபிசி களில் உலக பாடல்களால் ஆன வெற்றிப்பாடலாக பட்டியலில் வந்தது.

இளையராஜாவுக்காக "சொல்லிவிடு வெள்ளிநிலவே", "கண்ணே இந்த கல்யாண கதை" மற்றும் "என்னைத் தொட்டு அள்ளிகொண்ட" போன்ற பல சோதனை பாடல்களை அவர் பாடியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஸ்வர்ணலதா கூட்டணி 1993 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. அவற்றின் சேர்க்கை "முக்கலா முக்கபாலா", "ஹை ராமா யே க்யா ஹுவா" போன்ற மந்திர பாடல்களுக்காக அறியப்படுகிறது, அவை 90 களின் வெற்றி பாடல்கள். 1994 ஆம் ஆண்டில் வெளியான கருத்தம்மாவின் "போராளே பொன்னுதாயி" பாடலுக்காக ரகுமானின் இசையின் கீழ் தேசிய விருதைப் பெற்ற முதல் பெண் பாடகி இவர். ரகுமானுக்காக கிட்டத்தட்ட 80 பாடல்களைப் பாடியுள்ளார் .

மறைவு

நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுவர்ணலதா 2010, செப்டம்பர் 12 தனது 37வது அகவையில் காலமானார்.[5][6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவர்ணலதா&oldid=3291387" இலிருந்து மீள்விக்கப்பட்டது