Jump to content

செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
[[சுவீடன்]] இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியும், [[இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு]]வின் தலைவருமான உல்ஃப் என்றிக்சன் தனது அறிக்கையில், தனது ஊழியர்கள் இறந்தவர்களை எண்ணி முடிக்கவில்லை என்றும், சம்பவ இடத்தில் போராளிகளின் முகாம்கள் அல்லது ஆயுதங்களின் எந்த அடையாளத்தையும் அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினார்.<ref>{{cite news| url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/4794827.stm | work=BBC News | title=Dispute over Sri Lanka air raids | date=2006-08-15 | accessdate=2010-04-28}}</ref>
 
=== கொல்லப்பட்டவர்கள் ===
கிளிநொச்சி மாவட்டக் கல்விப் பணிப்பாளர் ரி. குருகுலராஜா, முல்லைத்தீவு மாவட்டக் கல்விப் பணிப்பாளர் பி. அரியரத்தினம் ஆகியோர் இறந்த பாடசாலை மாணவிகளின் பெயர்களை உறுதிப்படுத்தி, அவர்கள் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயம், [[விசுவமடு மகா வித்தியாலயம்]], உடையார்கட்டு மகா வித்தியாலயம், [[முல்லைத்தீவு மகா வித்தியாலயம்]], குமுழமுனை மகா வித்தியாலயம், [[முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி]], செம்மலை மகா வித்தியாலயம், ஒட்டிசுட்டான் மகா வித்தியாலயம், முருகானந்தா மகா வித்தியாலயம், தர்மபுரம் மகா வித்தியாலயம், பிரமந்தனாறு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பயிலும் மாணவிகள் என் உறுதிப்படுத்தினர்.<ref>{{cite web | url=https://www.tamilnet.com/art.html?catid=13&artid=19281 | title=Sencholai air-strike killed 55, details released | publisher=Tamilnet | date=18 August 2006 | accessdate=3 July 2021}}</ref><ref>{{cite web | url=https://www.tamilguardian.com/content/14-aug-2006-53-tamil-school-girls-killed-sri-lankan-air-strike-childrens-home | title=14 Aug 2006: 53 Tamil school girls killed by Sri Lankan air strike on children's home | publisher=Tamil Guardian | date=13 August 2015 | accessdate=3 July 2021}}</ref>
 
== இலங்கை அரசாங்கம் ==
இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர்கள் [[கெஹெலிய ரம்புக்வெல]], பிரிகேடியர் அத்துல ஜயவர்தன ஆகியோர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இந்த அனாதை இல்லம் உண்மையில் புலிகளின் இராணுவ வீரர்களுக்கான பயிற்சி முகாம் என்றும், இது ஒரு அனாதை இல்லமாகவோ அல்லது எந்தவொரு சிவில் கட்டமைப்பாகவோ தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்களாகவும், சிறுமிகளாக இருந்தாலும், அவர்கள் இராணுவப் பயிற்சியில் இருக்கும் வீரர்கள் என வலியுறுத்தினர். இந்த சம்பவத்தைக் கண்டிக்கவோ அல்லது எந்த விசாரணைக்கும் உத்தரவிடவோ இலங்கை அரசு மறுத்துவிட்டது. கிஃபீர் ஜெட் குண்டுவீச்சு வானூர்திகள் குண்டு வீசிய சிறிது நேரத்திலேயே புலிகள் பயிற்சி முகாமிலிருந்து தப்பி ஓடியது போன்ற செயற்கைக்கோள் காட்சிகளை இலங்கை அரசி பத்திரிகையாலர்களிடம் காட்டியதாக [[ராய்ட்டர்ஸ்|ராய்ட்டர்சு]] செய்தி நிறுவனம் தெரிவித்தது.<ref>{{cite news|url=http://today.reuters.co.uk/news/articlenews.aspx?type=worldNews&storyID=2006-08-15T095840Z_01_SP305866_RTRUKOC_0_UK-SRILANKA-ENEMY.xml|title=Sri Lanka says age of enemy no concern|publisher=[[ராய்ட்டர்ஸ்]]|date=August 15, 2006|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20070506120322/http://today.reuters.co.uk/news/articlenews.aspx?type=worldNews|archive-date=May 6, 2007}}</ref>
 
இருப்பினும், அந்த ஒளிநாடாக்களைப் பார்த்த ஒரு பத்திரிகையாளர், {{Cquote|அந்த இடம் ஒதுக்குப்புறத்தில் இருந்தது, சுற்றுப்புறத்தில் பசுமையான மரங்கள் இருந்ததைத் தவிர எந்த இராணுவ நடவடிக்கையையும் பரிந்துரைப்பதற்கு செய்தியாளர்கள் பார்க்கக்கூடிய காட்சிகளில் எதுவும் இல்லை.<ref>{{cite news|url=https://mg.co.za/article/2006-08-15-unicef-bombed-orphans-were-not-tamil-tigers|title=Unicef: Bombed orphans were not Tamil Tigers|publisher=Mail and Guardian Online|date=August 15, 2006}}</ref>}} எனத் தெரிவித்தார்.
 
2006 செப்டம்பர் 1 ஆம் நாள், 18, 19 மற்றும் 20 அகவையுடைய மூன்று இளம் பெண்களைக் கைது செய்ததாக இலங்கை காவல்துறை கூறியது. அவர்கள் விமானத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் என்றும், இவர்கள் மத்திய இலங்கையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்தனர். காவல்துறை உயர் அதிகாரி சந்திர பெர்னாண்டோ இது குறித்துக் கூறுகையில், மூன்று இளம் பெண்களும் தங்களை விடுதலைப் புலிகளின் உறுப்பினர் முதலுதவி பயிற்சிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறினர் எனவும், ஆனால் அங்கு அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியே வழங்கப்பட்டதாகத் தெரிவித்ததாகவும் கூறினார்.<ref>{{cite news|url=http://www.iht.com/articles/ap/2006/09/01/asia/AS_GEN_Sri_Lanka_Rebels_Arrested.php|title=Police in Sri Lanka arrest 3 suspected female rebels at hospital|publisher=International Herald Tribune|date=September 1, 2006}}</ref>
 
16 உயர்மட்ட மனித உரிமை வழக்குகளை விசாரிக்க நீதிபதி உடலகம தலைமையிலான ஆணைக்குழு ஒன்றை இலங்கை அரசு நியமித்திருந்தது, ஆனாலும் அவற்றில் 7 வழக்குகள் முடிவடைந்தவுடன் அவ்வாணைக்குழு கலைக்கப்பட்டது.<ref name="Peebles2015">{{cite book|author=Patrick Peebles|title=Historical Dictionary of Sri Lanka|url=https://books.google.com/books?id=50igCgAAQBAJ&pg=PA89|accessdate=3 July 2021|date=22 October 2015|publisher=Rowman & Littlefield Publishers|isbn=978-1-4422-5585-2|pages=89–}}</ref> கைது செய்யப்பட்ட மூன்று சிறுமிகளில் ஒருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். மற்றவர் மருத்துவமனையில் இருந்து சாட்சியமளித்தார், மூன்றாமவர் இறந்து விட்டார்.<ref>{{cite web | url=https://www.sundaytimes.lk/090621/News/sundaytimesnews_16.html | title=The Commission acted as a deterrent: Justice Udalagama | publisher=Sunday Times | date=21 June 2009 | accessdate=3 July 2021}}</ref>
 
== க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி ==
1,23,328

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3238281" இருந்து மீள்விக்கப்பட்டது