பயனர் பேச்சு:செல்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 487: வரிசை 487:


May I know why only Hindi interpretation is provided? Will it be available in Tamil?
May I know why only Hindi interpretation is provided? Will it be available in Tamil?
I think Wikimedia should refrain from such language imposition to such a large and diverse community!
I think Wikimedia should refrain from such language imposition to such a large and diverse community!--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 14:00, 23 சூலை 2021 (UTC)

14:00, 23 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்




IAST க்கான என் பரிந்துரை

IAST க்கான என் பரிந்துரை


பதக்கம்

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்

திரு செல்வா அவர்களுக்கு, உங்கள் உடைய விக்கிபீடியா பங்களிப்புக்கள் அனைத்துக்கும் மிகவும் நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உங்களின் தளர்வில்லா 21,500 தொகுப்புகள் சிறப்பைச் சேர்க்கின்றன. உங்களின் விக்கிப்பீடியா சேவைகள் அனைத்துக்கும் வாழ்த்துக்கள். அன்புடன் பயனர் --2know4power (பேச்சு) 06:07, 8 பெப்ரவரி 2017 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:10, 8 பெப்ரவரி 2017 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:13, 8 பெப்ரவரி 2017 (UTC)
👍 விருப்பம்--மயூரநாதன் (பேச்சு) 12:54, 8 பெப்ரவரி 2017 (UTC)
  • ஊக்கத்திற்கு மிகவும் நன்றி நண்பர்களே. பதக்கத்துக்கு மிகவும் நன்றி @2know4power: --செல்வா (பேச்சு) 18:04, 8 பெப்ரவரி 2017 (UTC)

உதவி- தமிழ் உச்சரிப்பு

திரு செல்வா அவர்களுக்கு, தமிழ் உச்சரிப்பு கட்டுரையில் உதவி தேவைப்படுகிறது. வேண்டுகோள், பக்கம் w:en:User_talk:C.R.Selvakumar#Article-Help-IPA for Tamil- இல் (உங்களின் ஆங்கில விக்கிபீடியா பயனர் பக்கம்) உள்ளது . தயவு செய்து, உங்களுக்கு நேரம் உள்ளபோது பக்கம் w:en:Help:IPA_for_Tamil- இல் சொல்லுங்கள் . இப்படிக்கு பயனர் 2know4power (பேச்சு) 23:45, 20 பெப்ரவரி 2017 (UTC).

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:28, 15 மார்ச் 2017 (UTC)

Db-f10

A tag has been placed on படிமம்:INFITT Logo.jpg requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section F10 of the criteria for speedy deletion, because it is a file that is not an image, sound file or video clip (e.g. a Word document or PDF file) that has no encyclopedic use.

If you think this page should not be deleted for this reason, you may contest the nomination by visiting the page and clicking the button labelled "Contest this speedy deletion". This will give you the opportunity to explain why you believe the page should not be deleted. However, be aware that once a page is tagged for speedy deletion, it may be removed without delay. Please do not remove the speedy deletion tag from the page yourself, but do not hesitate to add information in line with Wikipedia's policies and guidelines. ~AntanO4task (பேச்சு) 03:32, 6 ஏப்ரல் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:33, 10 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:09, 30 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:06, 21 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:50, 31 மே 2017 (UTC)[பதிலளி]

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

Titanosaur

வணக்கம் செல்வா, ஓர் உதவி. Titanosaur, sauropod, sauropoda என்ற சொல்லுக்கு தமிழில் என்ன தொன்மா என்று கூறுவது? சிங்கோபானா என்ற கட்டுரையில் இச்சொற்கள் இடம்பெருகின்றன. --ப. இராச்குமார் (பேச்சு) 17:47, 28 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

@Inbamkumar86: சொற்பிறப்பியலின்படி modern Latin Sauropoda (plural), from Greek sauros ‘lizard’ + pous, pod- ‘foot.’ என்கின்றார்கள். இவற்றின் தலை சிறியதாகவும் கழுத்து நீளமானதாகவும், வாலுள்ள ஐந்து விரல்கள் உள்ள தொன்மா என்கின்றார்கள். பல்லியிடுப்பு நெடுங்கழுத்துத் தொன்மா என்பது விளக்கமாக இருக்கும் Titanosaur என்பதும் இதே நெடுங்கழுத்துத் தொன்மா இனத்தைச் சேர்ந்ததே. ஆனால் இன்னும் பெரிய விலங்கு. எனவே sauropod என்பதை நெடுங்கழுத்துத் தொன்மா என்றும் Titanosaur என்பதை நெடுங்கழுத்துப் பெருந்தொன்மா என்றும் அழைக்கலாம். -poda என்பது பன்மை. வேறுவிதமாகச் சொல்வதானால், பல்லியிடுப்பன், பெரும் பல்லியிடுப்பன் எனலாம். தொன்மா என்பதை எல்லா விலங்குகளுக்கும் சேர்த்துச்சொல்லவேண்டியதில்லை. நெடுங்கழுத்தன் என்றும் சொல்லலாம். Titanosaur என்பதை நெடுங்கழுத்துப் பெருமா என்றும் சொல்லலாம். --செல்வா (பேச்சு) 17:55, 1 செப்டம்பர் 2017 (UTC)
    நன்றி. செல்வா. உங்கள் பரிந்துரை அருமை. --ப. இராச்குமார் (பேச்சு) 18:28, 10 செப்டம்பர் 2017 (UTC)

தமிழ்ச் சொற்கள்

வணக்கம் செல்வா, கீழுள்ள சொற்களுக்கு அவற்றின் பொருள் வேறுபாட்டை உணர்த்தும் வகையான தமிழ்ச் சொற்கள் தேவைப்படுகிறது. இவை அனைத்தையும் பெரும்பாலும் ’வரைபடம்’ என்று குறிப்பது குழப்பத்தை ஏற்படுகிறது. உங்களது பரிந்துரையைப் பதிவு செய்யக் கேட்டுக்கொள்கிறேன்.@உலோ.செந்தமிழ்க்கோதை:

  • Diagram
  • Chart
  • Graph
  • Map

ஆசிய மாதம், 2017

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்டு கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
  • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
  • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
  • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
  • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:26, 14 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி.--சிவகோசரன் (பேச்சு) 14:45, 18 பெப்ரவரி 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அன்புள்ள செல்வா,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது தான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படு்ம் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாக்கச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேச்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில் நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன் மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியில் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழ வாய்ப்பாகவும் அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமைய போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி. --இரவி (பேச்சு) 09:41, 10 மார்ச் 2018 (UTC)

அன்புள்ள இரவி, மிக்க நன்றி. நான் கட்டாயம் என்னாலான அளவு இப்போட்டியில் பங்குபற்றுகின்றேன். என் பங்களிப்புகளும் மிகவும் தமிழ் விக்கிபீடியாவில் தொய்வடந்திருக்கும் இந்நிலையில், இது எனக்கும் மிகத் தேவையான உந்துதல் என எண்ணுகின்றேன். தமிழ் விக்கிப்பீடியா போன்ற பயன்நிறைந்த சிறந்த திட்டங்களை யான் கண்டிலேன். இதில் பங்களிக்கக் கிடைக்கும் வாய்ப்பை என் பெரும் நற்பேறாகக் கருதுகின்றேன். தொடர்ந்து பங்களிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் வணக்கம். --செல்வா (பேச்சு) 16:40, 10 மார்ச் 2018 (UTC)

தலைப்புகளைப் பார்த்தேன். மிகப்பலவும் தேவையற்ற அல்லது முன்னுரிமைத் தரத்தேவையே இல்லாதவையாக இருக்கின்றன. எனினும் தக்க சில தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து கட்டுரைகள் எழுத முனைவேன். கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும். இத்தலைப்புகள் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் இணையத்தில் உள்ள இடைவெளியை நிரப்பும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவை. உங்களுக்கு ஆர்வமான துறைகளில் இருந்து கூடுதல் தலைப்புகள் வேண்டும் எனில் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். இயன்ற அளவு இன்னும் கூடுதல் தலைப்புகளைத் தர முனைவோம். என்பதனையும் பார்த்தேன். இதில் உடன்படுவதும் கடினமாக உள்ளது. --செல்வா (பேச்சு) 17:07, 10 மார்ச் 2018 (UTC)
வணக்கம், செல்வா. தமிழ் விக்கிப்பீடியா பற்றி நீங்கள் வெளிப்படுத்தும் பிணைப்பை நானும் உணர்கிறேன். அதனாலேயே தக்க ஓய்வுக்குப் பிறகு மீண்டும் மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் திரும்புகிறேன். கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைப் பற்றிய உங்கள் கருத்து முற்றிலும் சரியே. இது போன்ற திட்டங்களைச் செயற்படுத்துவதில் உள்ள சிக்கலாக நான் குறிப்பிட்டதில் தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பது குறித்த சிக்கலும் அடங்கும். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியின் கீழ், ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:44, 13 மார்ச் 2018 (UTC)
நன்றி இரவி. கட்டாயம் பங்குகொள்கின்றேன். --செல்வா (பேச்சு) 14:50, 13 மார்ச் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்

வணக்கம்.

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.

இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.

நன்றி.

இரவி 11:59, 1 மே 2018 (UTC)[பதிலளி]


தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:41, 2 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடையீர், வணக்கம். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:30, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துகள்! காலந்தாழ்ந்து பார்க்க நேர்ந்ததற்கு வருந்துகின்றேன்.--செல்வா (பேச்சு) 08:46, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]

செர்மானியத் தமிழியல்

செர்மானியத் தமிழியல் என்ற கட்டுரையைச் சற்று கவனியுங்கள். கட்டுரையில் குறிப்பிடும்படியான தகவல் எதுவும் இல்லை. செர்மானியத்திற்கும் (மொழி, கலாச்சாரம்) தமிழுக்கும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தொடர்புள்ளதா? @Fahimrazick: --AntanO (பேச்சு) 06:31, 13 ஏப்ரல் 2019 (UTC)

உதவி

வணக்கம் ஐயா. Fani புயலை தமிழில் எப்படி எழுதுவது என்பது குறித்து உங்களின் உதவியை நாடுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:02, 3 மே 2019 (UTC)[பதிலளி]

நன்றி. கீழ்க்காணும் விளக்கதத்தின் படி, அரவத்தலை என்றோ, பை (பை என்பது பாம்பின் படம்) என்றோ தமிழில் வழங்கலாம். Fani என்னும் பெயரின் விளக்கம்: "The name of the Cyclone 'Fani', pronounced as 'Foni' was suggested by Bangladesh. It means 'Snake' or 'hood of snake'. (Businss Insider). தமிழ்ப்பேரகராதி பை என்பதற்குத் தரும் பொருள்களில் ஒன்று: "பை4 pai, n. perh. பெய்-. 2. Hood of a cobra; பாம்புப்படம். அரவம் . . . பைவிரித்தென (மணி. 20, 105). "--செல்வா (பேச்சு) 23:54, 4 மே 2019 (UTC)[பதிலளி]

உதவி

வணக்கம் ஐயா Shevaroy Hills earth snake என்ற பெயரை சேர்வராயன் மலை நிலப் பாம்பு என மொழிபெயர்துது எழுதினேன் இது சரிதானா என்ற ஐயம் உள்ளது. தங்கள் ஆலோசனைத் தேவை.--அருளரசன் (பேச்சு) 13:38, 17 மே 2019 (UTC)[பதிலளி]

@Arularasan. G:, இப்பொழுதிருக்கும் சேர்வராயன் மலை மண்பாம்பு என்பது பொருத்தமானதாகத் தெரிகின்றது. Earth worm என்பதை மண்புழு என்று சொல்வது போல இதனை மண்பாம்பு என்பது பொருத்தமானதாகத் தெரிகின்றது.--செல்வா (பேச்சு) 18:16, 18 மே 2019 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--அருளரசன் (பேச்சு) 01:25, 19 மே 2019 (UTC)[பதிலளி]


Meme/சுட்டன் உதவி

வணக்கம் செல்வா! நான் Meme என்பதற்குச் சுட்டன் என்ற பெயரில் ஒரு தமிழ்க்கட்டுரையைத் தொடங்கினேன். ஆனால் உடனே AntanO என்பவர் அதனை நீக்கிவிட்டார். என் பேச்சுப் பக்கத்திலே இட்டுள்ள காரணம் புரியவில்லை. மேற்படி விளக்கமும் காணோம்.

தாங்கள் ஆளுநர் என்பதால் இங்கே உதவமுடியுமா? -- July 2019 Information icon வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவில் யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், தக்க காரணமின்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக்கூடாது. விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையின் தலைப்பு சரியானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும், அனைவரும் எளிதில் அறிந்து கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நடப்பு பெயர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் பொதுவாக, ஒரு பக்கம் ஒரு புதிய தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக மற்ற பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 17:32, 8 சூலை 2019 (UTC) --

--On my Tamil page for Meme= Hi Antano You seem to have removed my newly create page for Meme apaprently citing the reason it had moved an exiting page or some such reason which is not clear. I could not find any existing Tamil page for Meme and could not find one for சுட்டன் either. So it is nor clear why you did do. Neither do I find any response from you to the previous query on the same issue. Please respond ASAP to resolve this. --

வணக்கம் முனைவர் பெரியண்ணன் சந்திரசேகரன் (@Perichandra:, பயனர் அன்ரன் மிகுந்த பட்டறிவுள்ள நிருவாகி. அவர் ஏன் நீக்கினார் என்று நான் கண்டுபிடிக்கவில்லை. அப்பதிவுகளைப் பார்க்கின்றேன். மேலும் அருள்கூர்ந்து இங்கே தமிழில் உரையாட வேண்டுகின்றேன். நன்றி. உங்களின் பங்களிப்புகள் உயர்தரமாக அமையும் என்பதில் எனக்கு மிகவும் நம்பிக்கை யுள்ளது. விக்கியின் முறைமைகள் முதலில் சற்று விளங்காததாக இருக்கலாம், ஆனால் விரைவில் அத்துப்படியாகிவிடும். --செல்வா (பேச்சு) 19:03, 9 சூலை 2019 (UTC)[பதிலளி]

@AntanO, Perichandra, and செல்வா: நீக்கப்பட்ட கட்டுரையின் முன்தோற்றத்தைப் பார்க்க முடியவில்லை. ஒரேயொரு தொகுப்பு மட்டும் இருந்தால் நீக்கப்பட்ட கட்டுரையை மீள்விக்காமல் பார்க்க முடியாது போலிருக்கிறது. இதனால் கட்டுரையை மீள்வித்திருக்கிறேன். கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் இது குறித்து உரையாடலாம். நன்றி.--Kanags \உரையாடுக 00:53, 10 சூலை 2019 (UTC).[பதிலளி]


மீட்டமைக்கு நன்றி கனகு அவர்களே! நான் அது ஆங்கிலக் கட்டுரையோடு இணைக்காமலிருந்ததைக் கண்டறிந்தேன். இப்பொழுது Meme என்பதன் 50க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புக்களுள் ஒன்றாக ஆக்கிவிட்டேன், எனவே அது தொடர இப்பொழுது எந்தத் தடையும் இருக்கக்கூடாது. இதை முதலிலேயே சுட்டிக்காட்டிக் கட்டுரையை அதிரடியாக நீக்காமல் இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். மீண்டும் நன்றி. {{subst:db-test-notice|யூக்ளிட்|nowelcome=|{{{key1}}}={{{value1}}}}} ஸ்ரீ (talk) 14:41, 12 சூலை 2019 (UTC)[பதிலளி]

Project Tiger 2.0

Sorry for writing this message in English - feel free to help us translating it

Community Insights Survey

RMaung (WMF) 15:54, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey

RMaung (WMF) 19:34, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey

RMaung (WMF) 17:29, 4 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:47, 17 சனவரி 2020 (UTC)[பதிலளி]

உதவி-தமிழ் கலைச்சொல் தேவை

en:Claw (graph theory), en:Claw-free graph இந்த ஆ.வி கட்டுரைகள் குறிப்பிடும் "Claw" என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமாக, கோட்டுருவியலுக்கு (graph theory) ஏற்ற தமிழ்ச் சொல் தேவைப்படுகிறது. பரிந்துரைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:26, 8 சூன் 2020 (UTC)[பதிலளி]

இங்கே claw என்பதை ஆங்கிலச்சொல்லின் விலங்குகளின் உகிர் என்பதை ஒட்டி செய்யப்பட்டது போலவே தெரிகின்றது (நான் ஆழமாகப் படிக்கவில்லை). எனவே உகிர்க்கோட்டுரு எனலாமா? --செல்வா (பேச்சு) 16:32, 8 சூன் 2020 (UTC)[பதிலளி]
மும்முனைக் கோட்டுரு - சரியாக இருக்குமா?--கி.மூர்த்தி (பேச்சு) 01:22, 9 சூன் 2020 (UTC)[பதிலளி]

பரிந்துரைக்கு நன்றி செல்வா. உகிர்க்கோட்டுரு இங்கு ஒற்று இரட்டிக்குமா? பள்ளி பாடப்புத்தகங்களில் "நேர்கோணம்" என்றுள்ளதாக நினைவு.--Booradleyp1 (பேச்சு) 05:16, 9 சூன் 2020 (UTC)[பதிலளி]

செப்புக்குடம், தாமரைக்குளம், சாரைப்பாம்பு என்பது போல கோட்டுருவில் ஒரு வகை என்பதால் (வேறுபடுத்திக்காட்டுவதால்) உகிர்க்கோட்டுரு என வரும் (தாமரைக்குளம், செப்புக்குடம் என்பதை வேறுவிதமாகவும் விளக்கலாம். செப்பால் ஆன குடம் என்பதுபோல). நேர்கோடு குறைகடத்தி என்பனவற்றில் நேரான கோடு, குறைவாகக் கடத்தும் பொருள் என்னும்படி பின்னொட்டுகள் தொக்கி வருவதால் ஒற்று மிகவில்லை. --செல்வா (பேச்சு) 13:30, 9 சூன் 2020 (UTC)[பதிலளி]

நன்றி. உங்கள் விளக்கம் வரும் நாட்களில் எனக்குப் பயனுள்ளதாக இருக்கும்.--Booradleyp1 (பேச்சு) 15:46, 9 சூன் 2020 (UTC)[பதிலளி]

- பரிந்துரைக்கு நன்றி கி.மூர்த்தி. en:Claw (graph theory)- இக்கோட்டுருக்கள் மூன்றுக்கும் மேற்பட்ட முனைகளையும் கொண்டவையென்பதால் "மும்முனைக் கோட்டுரு" எனப் பெயரிடல் பொருந்தாது.--Booradleyp1 (பேச்சு) 05:16, 9 சூன் 2020 (UTC)[பதிலளி]

நன்றி

உங்கள் விளக்கம் எனக்குப் பயனுள்ளதாக இருந்தது. இது நான் எழுதிய முதல் கட்டுரை அய்யா.

மகிழ்ச்சி! --செல்வா (பேச்சு) 18:27, 19 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

விக்கித்தரவு?

வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடன் உரையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு ஐயம். Datum=தரவு, data=தரவுகள். எனவே விக்கி தரவுகள் என்றுதானே நாம் கூற வேண்டும்?--உழவன் (உரை) 04:49, 23 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

தமிழில் ஒருமையே வினையைப்பொருத்து பன்மையாகவும் ஒருமையாக்வும் கொள்ளும் மரபும் உள்ளது. தரவு என்றாலே அது தரவுகளையும் உள்ளடக்கும். எல்லா இடங்களிலும் -கள் என்னும் விகுதி சேர்க்கத்தேவையில்லை. மரம் வளர்ந்தன என்று சொல்லுதல் தமிழில் சரி என்கின்றார்கள். மரம் வளர்ந்தது, மரம் வளர்ந்தன என்பனவற்றில் வினைவடிவத்தைக்கொண்டு ஒருமையா பன்மையா என உணரலாம். ஆங்கிலத்தில் data என்பதே பன்மை என்றிருந்தாலும் இப்பொழுது ஒருமைக்கும் data என்பதைப் பயன்படுத்துகின்றார்கள். சிலர் datas என்றும் (formulas என்றும்) எழுதுகின்றார்கள். கொடை என்றால் போதும் கொடைகள் என்று சொல்லத்தேவையில்லை. நீங்கள் தந்த பல கொடை பெரிதும் உதவியது என்றெழுதலாம். பல என்று வருகின்றாதே என்று கவலுறத்தேவையில்லை. --செல்வா (பேச்சு) 13:37, 23 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி. மனநிறைவு கொண்டேன். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள் அதுபோல, பல நேரங்களில், உங்களின் தேவையை எண்ணிக் கொள்கிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 00:43, 25 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

We sent you an e-mail

Hello செல்வா,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

Hi, I completed one survey which was sent when I made a donation. I'm not sure if this is a different one. Anyways, I have opted in. Thanks for the not here.--செல்வா (பேச்சு) 19:15, 25 செப்டம்பர் 2020 (UTC)

விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020

வணக்கம், விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 எனும் பயிற்சி திட்டத்தில் விக்கிப்பீடியா பற்றிய பயிற்சியில் மொழிநடை/கலைச்சொல்லாக்கம் பற்றிய அமர்வில் கலந்து கொள்ள இயலுமா? தங்களைப் போன்றவர்கள் பயிற்சி கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றிஸ்ரீ (✉) 11:22, 16 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

நன்றி. கட்டாயம் அமர்வு-6 இல் பங்குகொள்ள இயலும். //விக்கிப்பீடியா 1-அமர்வு 6 (இரண்டாம் வாரம்)-மொழிநடை/கலைச்சொல்லாக்கம்.//--செல்வா (பேச்சு) 12:13, 16 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
மனமார்ந்த நன்றிகள்- தங்களது விருப்பத்தினை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி ஸ்ரீ (✉) 12:38, 16 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

உள்ளகப் பயிற்சி-2020

வணக்கம்,செல்வா தமிழ் விக்கிப்பீடியாவில் நடைபெற்ற விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 இல் கலந்துகொண்ட மதுரை பாத்திமா கல்லூரி மாணவர்களுக்கு விக்கிப்பீடியா:மொழிப்பயிற்சி மற்றும் மொழிநடை/கலைச்சொல்லாக்கம் தொடர்பாக பயிற்சி அளித்தமைக்காக ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஸ்ரீ (✉) 13:11, 29 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. --செல்வா (பேச்சு) 15:09, 1 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

GFDL

Hi!

Wikimedia Foundation Board decided in 2009 to stop using GFDL as a sole license per this resolution.

GFDL is not a good license because it makes it hard to reuse the images (and the articles where the image is used).

You have uploaded one or more files with GFDL. You can see the files in Category:Wikipedia license migration candidates. You can also click this link and scroll down to see your name.

If you are the photographer/creator you can help to relicense the file(s). You can do so by changing {{GFDL}} to {{self|GFDL|cc-by-sa-4.0}}.

If you are not the photographer/creator please check if you have added a source and author. --MGA73 (பேச்சு) 11:33, 6 சூன் 2021 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)[பதிலளி]

May I know why only Hindi interpretation is provided? Will it be available in Tamil? I think Wikimedia should refrain from such language imposition to such a large and diverse community!--செல்வா (பேச்சு) 14:00, 23 சூலை 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:செல்வா&oldid=3202524" இலிருந்து மீள்விக்கப்பட்டது