எடப்பாடி க. பழனிசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 67: வரிசை 67:
| nickname = ''இ. பி. எஸ்''<br> ''எடப்பாடியார்''
| nickname = ''இ. பி. எஸ்''<br> ''எடப்பாடியார்''
}}
}}
'''எடப்பாடி.க.பழனிசாமி''' (''Edappadi K. Palaniswami'', பிறப்பு: மே 12, 1954)<ref>http://www.veethi.com/india-people/edappadi_k._palaniswamy-profile-10174-19.htm</ref> ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] 7ஆவது [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சராக]] பொறுப்பில் இருந்தவரும் ஆவார்.<ref>{{cite news | url=http://www.bbc.com/tamil/india-38992470 | title=தமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிசாமி பதவி ஏற்றார் | work=பிபிசி | date=16 பெப்ரவரி 2017| accessdate=16 பெப்ரவரி 2017}}</ref><ref>http://thinakaran.lk/2017/02/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/16509</ref> இவர் [[அதிமுக|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக]] கட்சியைச் சேர்ந்தவர். [[பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றம்|பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றத்தின்]] [[எதிர்க்கட்சித் தலைவர்]] ஆவார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/edappadi-k-palaniswami-to-be-leader-of-opposition-in-tamil-nadu-assembly/articleshow/82518216.cms|title=Edappadi K Palaniswami to be leader of opposition in Tamil Nadu assembly {{!}} Chennai News - Times of India|last=May 10|first=Julie Mariappan / TNN / Updated:|last2=2021|website=The Times of India|language=en|access-date=2021-05-10|last3=Ist|first3=13:55}}</ref>
'''எடப்பாடி.க.பழனிசாமி''' (''Edappadi K. Palaniswami'', பிறப்பு: மே 12, 1954)<ref>http://www.veethi.com/india-people/edappadi_k._palaniswamy-profile-10174-19.htm</ref>ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] 7ஆவது [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சராக]] பொறுப்பில் இருந்தவரும் ஆவார்.<ref>{{cite news | url=http://www.bbc.com/tamil/india-38992470 | title=தமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிசாமி பதவி ஏற்றார் | work=பிபிசி | date=16 பெப்ரவரி 2017| accessdate=16 பெப்ரவரி 2017}}</ref><ref>http://thinakaran.lk/2017/02/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/16509</ref> இவர் [[அதிமுக|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக]] கட்சியைச் சேர்ந்தவர். [[பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றம்|பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றத்தின்]] [[எதிர்க்கட்சித் தலைவர்]] ஆவார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/edappadi-k-palaniswami-to-be-leader-of-opposition-in-tamil-nadu-assembly/articleshow/82518216.cms|title=Edappadi K Palaniswami to be leader of opposition in Tamil Nadu assembly {{!}} Chennai News - Times of India|last=May 10|first=Julie Mariappan / TNN / Updated:|last2=2021|website=The Times of India|language=en|access-date=2021-05-10|last3=Ist|first3=13:55}}</ref>


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==

16:54, 19 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

எடப்பாடி.க.பழனிசாமி
தமிழக சட்டப்பேரவையின்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 மே 2021
முதல்வர்மு. க. ஸ்டாலின்
முன்னையவர்மு. க. ஸ்டாலின்
தொகுதிஎடப்பாடி
7வது தமிழக முதலமைச்சர்
பதவியில்
16 பிப்ரவரி 2017 – 6 மே 2021
ஆளுநர்சி. வித்தியாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு)
பன்வாரிலால் புரோகித்
Deputyஓ. பன்னீர்செல்வம்
முன்னையவர்ஓ. பன்னீர்செல்வம்
பின்னவர்மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2011
முன்னையவர்வி. காவேரி
தொகுதிஎடப்பாடி
பதவியில்
6 பிப்ரவரி 1989 – 12 மே 1996
முன்னையவர்கோவிந்தசாமி
பின்னவர்இ. கணேசன்
தொகுதிஎடப்பாடி
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுக அமைச்சர்
பதவியில்
16 மே 2011 – 6 மே 2021
பொதுப்பணித்துறை அமைச்சர்
பதவியில்
23 மே 2016 – 6 மே 2021
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
10 மார்ச் 1998 – 26 ஏப்ரல் 1999
முன்னையவர்கே. பி. ராமலிங்கம்
பின்னவர்மு. கண்ணப்பன்
தொகுதிதிருச்செங்கோடு
அதிமுகவின்
இணை ஒருங்கிணைப்பாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 ஆகத்து 2017
Deputy
தலைமை ஒருங்கிணைப்பாளர்ஓ. பன்னீர்செல்வம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கருப்ப கவுண்டர் பழனிசாமி

12 மே 1954 (1954-05-12) (அகவை 69)
சிலுவம்பாளையம், எடப்பாடி, சேலம் மாவட்டம், மதராசு மாநிலம், இந்தியா
(தற்போது தமிழ்நாடு, இந்தியா)[1]
அரசியல் கட்சி அதிமுக
துணைவர்இராதா
பிள்ளைகள்மிதுன் (மகன்)
வாழிடம்(s)பசுமைவழிச் சாலை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்
விருதுகள்
புனைப்பெயர்(s)இ. பி. எஸ்
எடப்பாடியார்

எடப்பாடி.க.பழனிசாமி (Edappadi K. Palaniswami, பிறப்பு: மே 12, 1954)[2]ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் 7ஆவது முதலமைச்சராக பொறுப்பில் இருந்தவரும் ஆவார்.[3][4] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியைச் சேர்ந்தவர். பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.[5]

வாழ்க்கைக் குறிப்பு

இவர் சேலம் மாவட்டம், எடப்பாடி நெடுங்குளம் என்ற சிற்றூரை அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் கருப்ப கவுண்டர் மற்றும் தவசியம்மாள் ஆகியோர்கள் ஆவர்.[6] இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வெல்ல வியாபாரம் செய்தார்.[7] இவர் இராதா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு மிதுன் என்னும் ஒரு மகன் உள்ளார்.

தமிழக முதல்வராக

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் திகதி அன்று உச்சநீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில், வி. கே. சசிகலா உட்பட்ட நால்வருக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்புக்கூறிய நிலையில், அதன் பின்னர் முதல்வராக பதவியேற்றார்.[8] அஇஅதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[9] தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் நூறாவது நாளான மே 22, 2018 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் மீதும், முதலமைச்சர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர், 2021

மே 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பழனிசாமி தமிழக சட்டப் பேரவையின், எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10][11]

தமிழக சட்டமன்றத்தில் வகித்த பிற பதவிகள்

  • 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து அ.திமு.க. ஜெ பிரிவில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[12] 1991இல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[13]
  • 2011 ஆண்டு எடப்பாடி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,[14] தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பணியாற்றினார்.[15]
  • 2016 ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இடம்பெற்றார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்

  • இவர் 1998 ஆம் ஆண்டு நடந்த, இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார்.[16]
  • 1999, 2004 ஆம் ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல்களில் தோல்வியுற்றார்.[17]
  • 1999இல் மதிமுகவின் கண்ணப்பனிடம் திருச்செங்கோடு மக்களவை தொகுதியில் தோல்வியுற்றார்.
  • 2004இல் திமுகவின் சுப்புலட்சுமி செகதீசனிடம் திருச்செங்கோடு மக்களவை தொகுதியில் தோல்வியுற்றார்.

போட்டியிட்ட தேர்தல்களும் மற்றும் வகித்த பதவிகளும்

மக்களவைத் தேர்தல்

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு சதவீதம் % எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம் %
இந்தியப் பொதுத் தேர்தல், 1998 திருச்செங்கோடு அதிமுக வெற்றி 54.70% கே. பி. ராமலிங்கம் திமுக 40.89%
இந்தியப் பொதுத் தேர்தல், 1999 திருச்செங்கோடு அதிமுக தோல்வி 48.53% மு. கண்ணப்பன் மதிமுக 49.08%
இந்தியப் பொதுத் தேர்தல், 2004 திருச்செங்கோடு அதிமுக தோல்வி 37.27% சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுக 58.02%
வெற்றி தோல்வி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு சதவீதம் % எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம் %
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989 எடப்பாடி அதிமுக வெற்றி 33.08% எல்.பழனிசாமி திமுக 31.62%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991 எடப்பாடி அதிமுக வெற்றி 58.24% பி. குழந்தை கவுண்டர் பாமக 25.03%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 எடப்பாடி அதிமுக தோல்வி 28.21% இ. கணேசன் பாமக 37.68%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 எடப்பாடி அதிமுக தோல்வி 41.06% வி. காவேரி பாமக 44.80%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 எடப்பாடி அதிமுக வெற்றி 56.38% எம். கார்த்தி பாமக 37.66%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 எடப்பாடி அதிமுக வெற்றி 43.74% என். அண்ணாதுரை பாமக 25.12%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 எடப்பாடி அதிமுக வெற்றி 65.97% சம்பத் குமார் திமுக 28.04%
வெற்றி தோல்வி

இந்திய நாடாளுமன்றத்தில் வகித்த பதவிகள்

ஆண்டு தொகுதி பதவி ஆரம்பம் முடிவு
1998 திருச்செங்கோடு மக்களவை உறுப்பினர் 10 மார்ச் 1998 26 ஏப்ரல் 1999

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வகித்த பதவிகள்

ஆண்டு தொகுதி பதவி ஆரம்பம் முடிவு
1989 எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் 6 பிப்ரவரி 1989 12 மே 1996
1991 எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் 23 மே 2011 தற்போது வரை
2011 எடப்பாடி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் 16 மே 2011 22 மே 2016
2016 எடப்பாடி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் & பொதுப்பணித்துறை அமைச்சர் 23 மே 2016 15 பிப்ரவரி 2017
2016 எடப்பாடி முதல்வர் 16 பிப்ரவரி 2017 3 மே 2021

படங்கள்

மேற்கோள்கள்

  1. "Biographical Sketch of Member of 12th Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
  2. http://www.veethi.com/india-people/edappadi_k._palaniswamy-profile-10174-19.htm
  3. "தமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிசாமி பதவி ஏற்றார்". பிபிசி. 16 பெப்ரவரி 2017. http://www.bbc.com/tamil/india-38992470. பார்த்த நாள்: 16 பெப்ரவரி 2017. 
  4. http://thinakaran.lk/2017/02/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/16509
  5. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  6. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 2016 மே 29. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  7. "மந்திரி தந்திரி - 26 !". விகடன். பார்க்கப்பட்ட நாள் மார்ச் 3, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. [1]
  9. அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு! - விகடன்
  10. "Edappadi Palaniswami elected as Leader of Opposition in Tamil Nadu Assembly" (in en-IN). The Hindu. 10 May 2021. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/10/edappadi-palaniswami-elected-as-leader-of-opposition-in-tamil-nadu-assembly-2300755.html. 
  11. "Edappadi K. Palaniswami elected AIADMK legislature party leader" (in en-IN). The Hindu. 10 May 2021. https://www.thehindu.com/news/national/tamil-nadu/edappadi-k-palaniswami-elected-aiadmk-legislature-party-leader/article34525668.ece. 
  12. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1989 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU, ELECTION COMMISSION OF INDIA, NEW DELHI
  13. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1991 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU, ELECTION COMMISSION OF INDIA
  14. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). Election Commission of India. {{cite web}}: line feed character in |publisher= at position 9 (help)
  15. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.
  16. STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS, 1998 TO THE 12th LOK SABHA VOLUME I
  17. "அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி கடந்து வந்த பாதை". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 15, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
ஓ. பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டு முதலமைச்சர்
பிப்ரவரி 2017- 3 மே 2021
பின்னர்
மு. க. ஸ்டாலின்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடப்பாடி_க._பழனிசாமி&oldid=3199519" இலிருந்து மீள்விக்கப்பட்டது