ஹம்சத்வனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹம்சத்வனி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்
சி தானியங்கி இணைப்பு: en:Hamsadhwani
வரிசை 33: வரிசை 33:
# திறக்காதக் காட்டுக்குள்ளே :- என் சுவாசக் காற்றே ?
# திறக்காதக் காட்டுக்குள்ளே :- என் சுவாசக் காற்றே ?
[[பகுப்பு:ஜன்னிய இராகங்கள்]]
[[பகுப்பு:ஜன்னிய இராகங்கள்]]

[[en:Hamsadhwani]]

17:46, 4 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

ஹம்சத்வனி 29 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ இராகம் ஆகும்.

ஆரோகணம்: ஸ ரி23 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப க3 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள்

  • மூர்ச்சனாகாரக இராகம். இதன் பஞ்சம மூர்ச்சனையே நாகஸ்வராளி இராகம் ஆகும்.
  • ஜண்டை சுரக்கோர்வைகளும், தாட்டு சுரக்கோர்வைகளும் இவ்விராகத்திற்கு இனிமையைக் கொடுக்கின்றன.
  • அரங்கிசை நிகழ்ச்சிகளிலும், பிற நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் பாடுவதற்கு மிகப் பொருத்தமான இராகம். வீரச்சுவை நிரம்பியது.

உருப்படிகள்

  1. வர்ணம் : "ஜலஜாக்ஷா" - ஆதி - மானம்புசாவடி வெங்கடசுப்பைய்யர்.
  2. கிருதி : "வாதாபி கணபதீம்" - ஆதி - முத்துஸ்வாமி தீட்சிதர்.
  3. கிருதி : "ரகு நாயகா" - ரூபகம் - தியாகராஜர்.
  4. கிருதி : "கந்தனைக் காணாமல்" - ஜம்பை - பெரியசாமி தூரன்.
  5. திருவருட்பா : "தயாகி தந்தையும்" - கண்ட சாபு - இராமலிங்க அடிகள்.


ஹம்சத்வனி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

  1. சிறீரங்க ரங்கநாயகி :- மகாநதி
  2. வா வா வா கண்ணா வா :- வேலைக்காரன்
  3. திறக்காதக் காட்டுக்குள்ளே :- என் சுவாசக் காற்றே ?
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்சத்வனி&oldid=315096" இலிருந்து மீள்விக்கப்பட்டது