வெளி வட்டச் சாலை, ஈரோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Restored revision 3010901 by Helppublic (talk): சோதனை
அடையாளங்கள்: மின்னல் Undo Reverted
வரிசை 21: வரிசை 21:
=== பகுதி-1 : கொக்கராயன்பேட்டை-ஆனைக்கல்பாளையம்-நஞ்சனாபுரம் ===
=== பகுதி-1 : கொக்கராயன்பேட்டை-ஆனைக்கல்பாளையம்-நஞ்சனாபுரம் ===
முதல் பகுதியில் [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டத்தின்]] கொக்கராயன்பேட்டையிலிருந்து திண்டல்-மேட்டுக்கடை இடையிலான நஞ்சனாபுரம் வரை 14.8 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. இதன் தற்போதைய அகலம் 7 மீட்டராக இருப்பினும் எதிர்கால விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு 30மீ அளவுக்கு நிலம் கையக்கப்படுத்தப்பட்டுள்ளது. <ref>http://www.hindu.com/2009/09/17/stories/2009091755470100.htm</ref><ref>http://www.projectstoday.com/Potpourri/IndianNews/Land%20acquisition%20begins%20for%20Erode%20ring%20road%20project.asp</ref><ref>http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Erode&artid=129173&SectionID=102&MainSectionID=102&SEO=&Title=</ref>.
முதல் பகுதியில் [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டத்தின்]] கொக்கராயன்பேட்டையிலிருந்து திண்டல்-மேட்டுக்கடை இடையிலான நஞ்சனாபுரம் வரை 14.8 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. இதன் தற்போதைய அகலம் 7 மீட்டராக இருப்பினும் எதிர்கால விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு 30மீ அளவுக்கு நிலம் கையக்கப்படுத்தப்பட்டுள்ளது. <ref>http://www.hindu.com/2009/09/17/stories/2009091755470100.htm</ref><ref>http://www.projectstoday.com/Potpourri/IndianNews/Land%20acquisition%20begins%20for%20Erode%20ring%20road%20project.asp</ref><ref>http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Erode&artid=129173&SectionID=102&MainSectionID=102&SEO=&Title=</ref>.
தற்போது பவளத்தான்பாளையம் அருகே பெருந்துறை சாலையில் இணைப்புப் பகுதி நஞ்சனாபுரம் வரை சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டது.
தற்போது பவளத்தான்பாளையம் அருகே பெருந்துறை சாலையில் இணைப்புப் பகுதியைத் தவிர பிற கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து நஞ்சனாபுரம் வரை சாலை அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.


இணைக்கப்படும் முக்கிய ஆரச் சாலைகள்
இணைக்கப்படும் முக்கிய ஆரச் சாலைகள்
வரிசை 28: வரிசை 28:
* வெள்ளக்கோவில் சாலை (NH-381A) - முத்துக்கவுண்டன்பாளையம்
* வெள்ளக்கோவில் சாலை (NH-381A) - முத்துக்கவுண்டன்பாளையம்
* தாராபுரம்-பழனி சாலை (SH-83A) -ஆணைக்கல்பாளையம்
* தாராபுரம்-பழனி சாலை (SH-83A) -ஆணைக்கல்பாளையம்
* சென்னிமலை சாலை (MDR-108) - ரங்கம்பாளையம்
* சென்னிமலை சாலை (MDR-108) - ரங்கம்பாளையம் அருகில்
* பெருந்துறை சாலை (SH-96) - நஞ்சனாபுரம்
* பெருந்துறை சாலை (SH-96) - நஞ்சனாபுரம் அருகில்


=== பகுதி-2 : நஞ்சனாபுரம்-நசியனூர்-சித்தோடு-பவானி ===
=== பகுதி-2 : நஞ்சனாபுரம்-நசியனூர்-சித்தோடு-பவானி ===

13:22, 18 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

வெளி வட்டச்சாலை, ஈரோடு
வழித்தட தகவல்கள்
நீளம்:30 km (19 mi)
பயன்பாட்டில்
இருந்த காலம்:
2004 – present
வரலாறு:2020இல் நிறைவுறும் எனத் திட்டம்
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கொக்கராயன்பேட்டை
To:சித்தோடு
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:ஈரோடு
நெடுஞ்சாலை அமைப்பு

ஈரோடு வெளி வட்டச்சாலையானது (Outer Ring Road) தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு மாநகரைச் சுற்றிச்செல்லும் புறவழிச்சாலைத் திட்டமாகும். இத்திட்டமானது, ஈரோடு மாநகரில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. ஈரோட்டிலிருந்து துவங்கவும், முடியவும் செய்யும் பல்வேறு நெடுஞ்சாலைகளை ஈரோடு மாநகருக்கு வெளியில் இணைக்கும் விதத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

இது, நகரின் மையப்பகுதியிலிருந்து 8 முதல் 10 கி.மீ. ஆரத் தொலைவிலும், உள்வட்டச்சாலையிலிருந்து 3 முதல் 4 கி.மீ. ஆரத் தொலைவிலும் இச்சாலை அமைகிறது.

ஈரோடு மாநகரின் விரிவான சாலை கட்டமைப்பு

பகுதி-1 : கொக்கராயன்பேட்டை-ஆனைக்கல்பாளையம்-நஞ்சனாபுரம்

முதல் பகுதியில் நாமக்கல் மாவட்டத்தின் கொக்கராயன்பேட்டையிலிருந்து திண்டல்-மேட்டுக்கடை இடையிலான நஞ்சனாபுரம் வரை 14.8 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. இதன் தற்போதைய அகலம் 7 மீட்டராக இருப்பினும் எதிர்கால விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு 30மீ அளவுக்கு நிலம் கையக்கப்படுத்தப்பட்டுள்ளது. [1][2][3]. தற்போது பவளத்தான்பாளையம் அருகே பெருந்துறை சாலையில் இணைப்புப் பகுதியைத் தவிர பிற கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து நஞ்சனாபுரம் வரை சாலை அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இணைக்கப்படும் முக்கிய ஆரச் சாலைகள்

  • பரமத்திவேலூர் சாலை (SH-198) - கொக்கராயன்பேட்டை
  • கரூர் சாலை (SH-84) - லக்காபுரம் பரிசல்துறை
  • வெள்ளக்கோவில் சாலை (NH-381A) - முத்துக்கவுண்டன்பாளையம்
  • தாராபுரம்-பழனி சாலை (SH-83A) -ஆணைக்கல்பாளையம்
  • சென்னிமலை சாலை (MDR-108) - ரங்கம்பாளையம் அருகில்
  • பெருந்துறை சாலை (SH-96) - நஞ்சனாபுரம் அருகில்

பகுதி-2 : நஞ்சனாபுரம்-நசியனூர்-சித்தோடு-பவானி

ஈரோடு வெளி வட்டச்சாலை திட்டத்தின் இரண்டாவது பகுதியில் பவளத்தான்பாளையத்திலிருந்து நசியனூர் அருகே சென்று தேசிய நெடுஞ்சாலை - 544 உடன் இணையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் NH-544, நான்கு-வழி புறவழிச்சாலையாக நசியனூரிலிருந்து சத்தி சாலையில் உள்ள சித்தோட்டையும், பவானி சாலையையும் 10 கி.மீ. பயணத்தில் இணைக்கிறது. இதில் திண்டல்மேடு- நசியனூர் இணைப்பு சாலை மட்டுமே கட்டுமானம் செய்ய வேண்டி உள்ளது. இதன் உத்தேச நீளம் 5 கி.மீ. ஆகும்.

எனவே இந்த சாலையானது, NH-544 தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் ஈரோடு மாநகருக்குள் நுழையாமலேயே தெற்குப் பகுதிகளுக்குச்செல்லும் மற்ற நெடுஞ்சாலைகளை அடைய ஏதுவாக அமையும். வெளி வட்டச்சாலையின் இந்தப் பகுதியினை கட்டமைப்பதற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதற்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகை மிகவும் அதிகம் என்பதால், இதற்கான அடிப்படை பணிகளுக்கான அரசு ஒப்புதல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

இணைக்கப்படும் முக்கிய ஆரச் சாலைகள்

  • பெருந்துறை சாலை (SH-96) - நஞ்சனாபுரம்
  • நசியனூர் சாலை (SH-173) - நசியனூர்
  • சத்தியமங்கலம் சாலை (SH-15) - சித்தோடு
  • பவானி சாலை (NH-544H) - கோணவாய்க்கால்

போக்குவரத்து நெரிசலுக்கு தற்காலிகத் தீர்வாக, தற்போது பயன்பாட்டிலிருக்கும் திண்டல்-வில்லரசம்பட்டி-பெரியசேமுர் இணைப்புச் சாலையில் போக்குவரத்தைத் திருப்பிவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக நகர்ப்பகுதியினூடாகச் செல்லும் திண்டல்-பெரியசேமூர் இணைப்புச்சாலையை 11 மீட்டர் அகலத்தில் மையத் தடுப்புடன் கூடிய பல்வழித்தடத்திலான உள்வட்டச் சாலையாக விரிவுபடுத்துவதற்கான அடிப்படை பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. http://www.hindu.com/2009/09/17/stories/2009091755470100.htm
  2. http://www.projectstoday.com/Potpourri/IndianNews/Land%20acquisition%20begins%20for%20Erode%20ring%20road%20project.asp
  3. http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Erode&artid=129173&SectionID=102&MainSectionID=102&SEO=&Title=
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளி_வட்டச்_சாலை,_ஈரோடு&oldid=3108627" இலிருந்து மீள்விக்கப்பட்டது