அண்ணாமலையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
181 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
No edit summary
| caption =
| pushpin_map = India
| map_caption = Locationதமிழ்நாட்டிற்குள் within Tamil Naduஇடம்
| map_size = 250
| latd = 12 | latm = 13 | lats = 53.76 | latNS = N
}}
[[File:"Thiruvannamalai ".jpg|thumb|திருவண்ணாமலை கோபுரங்கள் தூரப் பார்வையில்]]
'''திருஅண்ணாமலையார் கோயில்''' என்றும் '''''திருவண்ணாமலை''' அருணாசலேஸ்வரர் கோயில்'' என்றும் அறியப்படும் தலம் [[சிவபெருமான்|சிவபெருமானின்]] [[பஞ்சபூதத் தலங்கள்|பஞ்சபூத தலங்களில்]] அக்னித் தலமாகும். இது தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்|நடுநாட்டு தலங்களில்]] ஒன்றாகும்.<ref name="bmj">பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009</ref> [[திருவாசகத் திருத்தலங்கள்|திருவாசகத் திருத்தலங்களில்]] ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.<ref>வீ. ஜெயபால், சைவ குரவர் நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், திருவாசகத் தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28, அம்மையப்பா இல்லம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014, ப.10</ref> இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
 
[[பிரம்மா|பிரம்மாவிற்கும்]], [[திருமால்|திருமாலுக்கும்]] தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் எழ, இடையில் நெருப்பு பிழம்பு தோன்ற நம்மில் யார் இதன் அடியையும், முடியையும் கண்டறிபவரே நம்மில் பெரியவரென உரைத்தனர். அதன் அடியை காண திருமால் வராக (பன்றி) வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்று பல ஆண்டுகள் பயணம் செய்தும் அடியை காண இயலாமல் திருமால் திரும்ப, அன்னவடிவமெடுத்து முடியை காணச்சென்ற பிரம்மர், வானிலிருந்து கீழே வரும் தாழம்பூவிடம் இது யாதென வினவ அதற்கு இது சிவபெருமானெனவும், நான் சிவனாரின் தலையிலிருந்து பல ஆண்டுகளாக விழுந்துக் கொண்டிருக்கிறேன் என உரைத்த தாழம்பூவிடம் நீ திருமாலிடம், நான் இந்த நெருப்புபிழம்பாக நின்ற சிவனின் முடியை கண்டுவிட்டேன் எனக்கூறும்படி கேட்டார் பிரம்மர். தன்னால் அடியை கண்டறிந்தளக்க முடியாததை ஒப்புக் கொண்ட திருமாலிடம், பிரம்மன் நான் பகிரதனுக்காக ஆகாயகங்கையை தனது செஞ்சடையில்தாங்கி சிவகங்கை என பெயர்மாற்றிய சிவபெருமானின் முடியை கண்டுவிட்டதாகவும், அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என உரைத்தும் நீ எனக்கு ஒரு குழந்தைக்கு ஒப்பானவனெனக் கூறி எள்ளிநகையாடியதால், ருத்திரமுற்ற சிவன், பத்மகற்பத்தில் பிரம்மன் திருமாலின் உந்தி கமலத்தில் தோன்றுவாரெனவும், தாழம்பூ சிவபூசையில் இனி பயன்படாயெனவும் உரைத்தார். தாழம்பூ தன்னிடம் மன்னிப்பு கேட்டதற்கிணங்கிய [[சிவன்]] நான் புவியில் எனது பக்தைக்காக குழந்தையாக அவதரித்த உத்திர கோசமங்கையெனும் திருத்தலத்தில் மட்டும் பயன்படுவாயெனவும் அருளினார். திருமாலால் தன்னை அளக்க இயலாததால் திருமாலை சிறியவரென உரைப்பார்களெனவும், [[பிரம்மா]] கேட்ட மன்னிப்பினால் அவருக்கு வழிபாடு நிகழவேண்டி சிவபெருமான் சிவலிங்கத்தின் அடிப்பாகத்தில் பிரம்மர், நடுப்பாகத்தில் திருமால், மேல்பாகத்தில் சிவனும் நின்று சிவலிங்கமாக தோன்றினர். தன்னை நோக்கி தவமியற்றிய பார்வதியை தன்னுடைய இடப்பாகத்தினிலமர்த்தி அர்த்தநாரீஸ்வரராய் (கருவறையின் பின் புறம் ஐம்பொன் சிலை உள்ளது) நின்ற பெருமைக்கு உரிய தலம் இத்தலம் ஆகும். '''"திருஅண்ணாமலையை நினைக்க முக்தி"''' அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம்.
 
இத்தலத்தினை [[நால்வர் நான்மணிமாலை|நால்வர்]] என்று அழைக்கப்படும் [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பர்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரர்]], [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|சம்பந்தர்]], [[மாணிக்கவாசகர்]] ஆகியோர் [[தேவாரம்]] பதிகங்களை பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள [[முருகன்]] மீது [[அருணகிரி நாதர்]] பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் [[சைவர்|சைவர்கள்]] நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலை கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் [[கிரிவலம்]] என்று அழைக்கப்படுகிறது.
 
===இலிங்கோத்பவர்===
படைக்கும் கடவுளாகிய [[பிரம்மா]]வும் காக்கும் கடவுளாகிய [[திருமால்|திருமாலும்]], தங்களில் யார் பெரியவரென பூசலெழ, நடுவில் ஔிப்பிழம்பு தோன்ற, அந்த ஔிப்பிழம்பின் அடியையும், முடியையும் யார் கண்டு முதலில்வருகின்றனரோ, அவரே நம்மில் பெரியவர் எனக் கூறினர். இதனால் திருமால், வராக ( பன்றி) அவதாரம் எடுத்து, அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றும், அடியைக் கண்டறிய இயலவில்லை. அன்னவடிவமெடுத்து முடியைக் காணப் புறப்பட்ட பிரம்மா, தாழம்பூ கீழே வருவதைக் கண்டு, அதனிடம் இந்த நெருப்புப் பிழம்பு யாதென வினவ, அதற்கு இது சிவனாரெனவும், நான் அவரின் சடையிலிருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்றும் கூற, பிரம்மன் முடியைக் காணும் முயற்சியை விடுத்து, தாழம்பூவிடம், நெருப்புப்பிழம்பான இந்த சிவனின் முடியை நான் கண்டேனென, திருமாலிடம் பொய் சொல்லும்படி கேட்க, அதன்படியே தாழம்பூவும் கூறியது. தன்னால் கண்டறிய இயலவில்லையென பிரம்மரிடம் கூறிய திருமாலிடம், நீ எனக்கு ஒரு குழந்தைக்கு ஒப்பானவனெனக் கூறி எள்ளி நகையாட, இதனால் ருத்திரமுற்ற சிவன், பிரம்மரிடம், பத்மகற்பத்தில் நீ திருமாலின் உந்திகமலத்தில் பிறப்பாயெனவும், உனக்கு புவியில் தனிஆலயம் அமையாது எனவும், பொய்சாட்சி கூறிய தாழம்பூவிடம், நீ இனி எனது வழிபாட்டில் பயன்படமாட்டாயெனவும் உரைத்தார். தன் தவறினை உணர்ந்து மன்னிப்பு கேட்ட தாழம்பூவிடம், நான் எனது பக்தைக்காக புவியில் குழந்தையாக அவதரித்த உத்திர கோசமங்கை எனும் திருத்தலத்தில் மட்டுமே பயன்படுவாயெனவும் உரைத்தார். பிரம்மர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதால், அவருக்கு வழிபாடு நிகழ்வதற்காகவும், திருமாலால் தனது அடியை கண்டறிய இயலாததால், திருமாலை சிறியவரென உரைப்பார்களென்பதால், கருணாமூர்த்தியான சிவன், உடனே நாம் மூவரும் ஒருங்கிணைந்து, சிவலிங்கமாகலாமென உரைத்தார். அதன்படியே அடிப்பாகம் பிரம்மராகவும், நடுப்பாகம் திருமாலாகவும், மேல்பாகம் சிவனாகவும் மாறி வேதங்கள் புகழும் [[சிவலிங்கம்]] தோன்றிய நாளே [[மகா சிவராத்திரி]] நாளாகும்.
 
===மலை வலம்===
மலையைச் சுற்றியுள்ள பாதை ஜடாவர்ம விக்கிரம பாண்டியனால் கி.பி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது.
 
பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், வருண லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி, [[சேசாத்திரி சுவாமிகள்|சேசாத்திரி சுவாமிகள்]], [[விசிறி சாமியார்|விசிறி சாமியார்]] போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன.
 
எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3081203" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி