அளவெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 47: வரிசை 47:
*[[சிதம்பரநாதன்]], நாதசுவரக் கலைஞர்
*[[சிதம்பரநாதன்]], நாதசுவரக் கலைஞர்
*[[பாலகிருஸ்ணன்]], நாதசுவரக் கலைஞர்
*[[பாலகிருஸ்ணன்]], நாதசுவரக் கலைஞர்
*மல்லிகா தேவி,கமலா தேவி.இசைக் கலைஞர்கள்
*[[வீ. கே. நடராஜா]], இசைக் கலைஞர்


[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]

00:33, 30 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

அளவெட்டியில் நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள பெண்கள்

அளவெட்டி (Alaveddy) கிராமம் இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடக்கே வலிகாமம் பகுதியில் உள்ளது. நிர்வாகப் பிரிவில் வலிவடக்கு பிரதேச சபையின் கீழும், தெல்லிப்பளை உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழும், காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் கீழும் அடங்குகின்றது. இயற்கை எழிலும் பச்சைப் பசேலெனப் பரந்து கிடக்கும் வயல் வெளிகளும் அளவெட்டியின் சிறப்பாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாய்ந்தோடும் ஒரேயெரு நதியான வழுக்கை ஆறு அளவெட்டியூடாகச் செல்கிறது. இசை வழிபாட்டுக்குப் பிரசித்திபெற்ற இடம். உலகம் போற்றும் நாதசுவர, மற்றும் தவில் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் பிறந்த இடம்.

கோயில்கள்

விநாயகர் வழிபாட்டுக்கு சிறப்பு பெற்ற இடம் அளவெட்டி ஆகும். மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ நாட்டு இளவரசி மாவிட்டபுரம் முருகனைத் தரிசனம் செய்தபின் தன்னுடைய ஊழ்வினைகளைக் கழைய ஏழு விநாயகர் ஆலயங்களை அமைத்தாள். அவற்றுள் மூன்று ஆலயங்கள் அளவெட்டியில் அமைந்துள்ளன.

  • கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயம்
  • அழகொல்லை விநாயகர் ஆலயம்
  • பெருமாக்கடவை பிள்ளையார் ஆலயம்

இவற்றை விட அளவெட்டி கிழக்கில் குருக்கள் கிணற்றடியிலும் ஒரு பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.

கொடியேறித் திருவிழா நடக்கும் ஆலயங்கள்

  • கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயம்
  • அழகொல்லை விநாயகர் ஆலயம்
  • பெருமாக்கடவை பிள்ளையார் ஆலயம்
  • குருக்கள் கிணற்றடிப் பிள்ளையார் ஆலயம்
  • தவளக்கிரி முத்துமாரி அம்மன் ஆலயம்
  • வயல்வெளி முத்துமாரி அம்மன் ஆலயம்
  • அளவெட்டி நாகவரத நாராயணர் ஆலயம்

ஏனைய ஆலயங்கள்

  • அரசடி ஞான வைரவர் ஆலயம்
  • முதலியவேள் ஆலயம்
  • தாமர்வளவு வைரவர் ஆலயம்
  • இராவத்தை வைரவர் ஆலயம்
  • கேணிக்கரை வைரவர் ஆலயம்
  • கரவச்சை வைரவர் ஆலயம்
  • ஐயனார் கோவில்
  • பசுபதீசுவரர் கோவில்

அளவெட்டியில் புகழ் பூத்தவர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அளவெட்டி&oldid=3054773" இலிருந்து மீள்விக்கப்பட்டது