"விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
(→‎இற்றை: புதிய பகுதி)
 
கல்லூரித் தரப்பில் வழங்கப்படும் கூகிள் மீட் பயன்படுத்தலாம். இதுவரை 60 மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இலக்காகக் கொடுத்த பங்களிப்புகள் செய்யும்பட்சத்தில் மட்டுமே பங்களிப்புச் சான்றிதழ் வழங்கப்படும். மற்றவர்கள் கலந்து கொண்டு கற்றுக் கொள்ளலாம். அதில் எந்தத் தடையும் இல்லை. பல பயனர்கள் பயிற்சியளிக்க இசைவு தெரிவித்ததனடிப்படையில் நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்ப நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்கலாம். இன்னும் பலர் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டால், ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனிப் பொறுப்பாளர்கள் என்று பிரிக்கும் வகையில் செய்யலாம். இன்னும் சில தினங்கள் காத்திருந்து தேதியை இறுதி செய்யலாம் எனப் பரிந்துரைக்கிறேன். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 11:55, 19 அக்டோபர் 2020 (UTC)
 
== கல்வியியல் நோக்கில் கேள்விகள் ==
 
இந்த உள்ளகப் பயிற்சி சான்றிதழின் கல்விப்புல பெறுமதி என்ன? அந்த மாணவர்கள் கட்டாயம் முடிக்க வேண்டிய பயிற்சி, மதிப்பெண், creditக்கு ஈடாக இது ஏற்றுக் கொள்ளப்படுமா? ஆம் எனில், இதற்கு அக்கல்லூரியின் முதல்வர், பல்கலை முறையான ஏற்பு அளித்துள்ளதா? Wikipedia in Education திட்டம் Christ பல்கலையில் இப்படி முறையான ஏற்பு பெற்று நடத்தப்படுகிறது.
 
முறையான ஏற்பு எனில், முதுகலை தமிழ் மாணவர்கள் இந்த உள்ளகப் பயிற்சியில் பெற வேண்டிய பயிற்சி, learning outcome என்னவென்று அவர்கள் பாடத்திட்டம் வரையறுக்கிறது? அதனைக் கருத்தில் கொண்டு நமது பயிற்சி எப்படி அமைக்கப்பட்டுள்ளது?
 
விக்கியின் அனைத்துத் திட்டங்களிலும் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று இல்லாமல், விக்கிப்பீடியாவில் பெருமளவும் பிற துணைத் திட்டம் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் அவர்கள் கவனம் செலுத்துமாறும் வடிவமைக்கலாம்.
 
பாடத்திட்டம் படி, ஒரு மாதத்தில் அவர்கள் பயிற்சியில் எத்தனை மணி நேரம் செலவழிக்க வேண்டும் என்று உள்ளது? அதற்கு ஏற்ப deliverables இருக்க வேண்டும். விக்கியில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட சிறப்பாகப் பங்களித்திருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, முதுகலை தமிழ் மாணவர்களிடம் இருந்து தரம், எண்ணிக்கை ஆகியவற்றின் படி நிறைய எதிர்பார்ப்பு உண்டு.
 
இது பல்கலை ஏற்பு பெற்ற பயிற்சி இல்லை ஏதோ நாம் விருப்பத்தின் அடிப்படையில் செய்கிறோம் என்றால் மேலே உள்ள கருத்துகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 13:40, 19 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3049798" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி