விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 19: வரிசை 19:
==சஞ்சீவி சிவகுமார்==
==சஞ்சீவி சிவகுமார்==
# நல்ல திட்டம். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
# நல்ல திட்டம். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
# விதிமுறைகளில் இப்படி எழுதினால் தெளிவாயிருக்கும் // 30 நாட்களுக்குள் மேற்கண்ட இலக்குகளை அடைபவர்களுக்கு உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக வழங்கப்படும்.(அவ்வாறு முடிக்க இயலாவிட்டாலும் கூடுதலான நாட்களை எடுத்துக் கொண்டு முடிக்கும்பட்சத்தில் உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் தமிழ் வழங்கப்படும்).[[பயனர்:Sancheevis|சஞ்சீவி சிவகுமார்]] ([[பயனர் பேச்சு:Sancheevis|பேச்சு]]) 10:17, 16 அக்டோபர் 2020 (UTC)
#

10:17, 16 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

வரைவு

உள்ளகப்பயிற்சித் திட்டத்திற்கான வரைவை உருவாக்கியுள்ளேன். விக்கித் திட்டமாகவும் இல்லாமல் வெறும் பயிற்சிப்பட்டறையாக மட்டுமில்லாமல் இலக்குடன் கூடிய நெடிய பயிற்சியாக இருக்கும். இதற்கும் முன் நிகழ்ந்த பரப்புரைகளின் படிப்பினையைக் கொண்டு தான்தோன்றித் தனமாகக் கட்டுரைகள் உருவாகாத வண்ணம் கவனம் செலுத்துவோம். ஒவ்வொரு இலக்கிற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர்களை அமைக்கலாம். விக்கித் துப்புரவு தேவைப்படும் பக்கங்களை இதன் இலக்காகக் கொள்ளலாமா? வேறு மாற்றங்களையோ திருத்தங்களோ வரைவில் செய்யலாம். மாணவர்களுக்கும் விக்கிச் சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் இந்தப் பயிற்சியினைத் திட்டமிடலாம். கல்லூரியின் பருவத்தேர்வின் அடிப்படையில் நவம்பர்க்குள் பயிற்சியினை முடிக்க வேண்டும். எனவே அதற்குள் பயிற்சிக்கான நாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைவரின் வழிகாட்டலை எதிர்பார்க்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 05:08, 15 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

சி.ஐ.எஸ். அமைப்பிடம் சான்றிதழுக்கும் இணையச் செலவிற்கும் கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் நடத்தவுள்ள சுமார் பத்து அமர்வுகளில் தொடர்ந்து பங்கெடுக்க யாருக்கேனும் இணையச் செலவிற்கு உதவி வேண்டினால் இங்கே குறிப்பிடலாம். மேலும் ஆதரவையும் கருத்தையும் அங்கேயும் இடலாம்-நீச்சல்காரன் (பேச்சு) 06:46, 15 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  1. கூடுதலாக பொறுப்பாளர்களை நியமிக்கலாம். அல்லது, ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒவ்வொரு குழுவாக நியமிக்கலாம். உதாரணமாக விக்கிமூலத்திற்க்கு ஒரு குழு, விக்கிப்பீடியாவிற்கு ஒரு குழு இதே போல மற்றதற்கும். காரணம் பணிகள் பிரித்துக் கொடுக்கும் போது வேலை சுலபமாகும் என்பது என் கருத்து.
  2. //விக்கித் துப்புரவு தேவைப்படும் பக்கங்களை இதன் இலக்காகக் கொள்ளலாமா?// இது சரியாக எனக்குப் புரியவில்லை. துப்புரவுப் பணிகளை மானவர்களுக்குக் கொடுக்கலாமா? எனக் கேட்டுள்ளீர்கள் எனப் புரிந்துகொள்கிறேன். பொதுவாகத் துப்புரவு என்பது சற்று விக்கிப்பீடியாவினைப் புரிந்து கொண்ட பின்னர் செய்யப்படுவது என்பது என் கருத்து. எனவே துப்புரவுப் பணிகளை மானவர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்பது என் கருத்து.
ஸ்ரீ (✉) 16:01, 15 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
ஆமாம் முந்தைய நிகழ்வு போல திட்டங்களுக்கான பொறுப்பாளர்களிடம் பொறுப்பை கொடுக்க வேண்டும். விரும்பும் பொறுப்பைப் பயனர்கள் இங்கே கருத்திட்டு முன்னெடுக்கலாம். விதிமுறைகளில் எத்தகைய மாற்றங்களையும் அவர்கள் சொல்லலாம். வழமை போல மற்றவர்களும் பங்கெடுக்கலாம். விக்கிமூலம், விக்சனரி, பொதுவகம், விக்கிப்பீடியா, விக்கித் தரவு, விக்கிசெய்திகள், விக்கிநூல், விக்கி மேற்கோள், இதர என்று விரும்பும் திட்டங்களில் பொறுப்பை எடுக்கலாம். பயிற்சியளித்தல், இலக்கு நோக்கிப் பங்களிக்க வைத்தல், பங்களிப்பைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்தல் ஆகியவை முக்கியப் பணியாக இருக்கும். -நீச்சல்காரன் (பேச்சு) 07:38, 16 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

கருத்துகள் - ஞா. ஸ்ரீதர்

மிகச் சிறப்பான முயற்சி இதனை முன்னெடுத்த மகாலிங்கம் மற்றும் நீச்சல்காரனுக்கு வாழ்த்துகள்.

  1. மாணவர்கள் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை என்பதனை உறுதிபடுத்த வேண்டும். பொதுவாக நிறுவனங்களில் நடக்கும் நிகழ்விற்கு சிறு தொகை பெறப்படுவது வழக்கம். எனவே கட்டணம் செலுத்தவில்லை என அவர்களிடம் சான்று பெற்றால் அது இந்தத் திட்டத்திற்கும் விக்கிப்பீடியாவிற்கும் நல்லது எனக் கருதுகிறேன்.
  1. மாணவர்களுக்கு இறுதித் தேர்வு முடிந்து விட்டதா? அல்லது இந்தப் பயிற்சியினால் மாணவர்களது மற்ற தேர்விற்கு பாதிப்பு ஏற்படாதவாறு பயிற்சி நாட்களை அமைக்க வேண்டும்.
  2. ஒரு மாணவரை விக்கிமீடியாவின் அனைத்துத் திட்டங்களிலும் பங்களிக்கச் செய்ய வேண்டுமா?
  3. விக்கி மேற்கோள்களையும் சேர்க்கலாம்.
  4. பிற மொழி விக்கித் திட்டங்களில் விரும்பினால் பங்களிக்கச் செய்யலாம் என்பது இந்த முதல் முயற்சிக்கு குழப்பத்தினை ஏற்படுத்தலாம். ஸ்ரீ (✉) 16:29, 15 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
இந்தத் திட்டத்தின் முன்னுரையில் கட்டணமில்லை என்று குறிப்பிட்டுள்ளோம். அதைக் கல்லூரித் தரப்பிலும் தெரிவித்துள்ளோம். அது கட்டாயக் கொள்கை. மாணவர்களுக்குத் தேர்வு எதுவும் இக்காலகட்டத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். அதற்கேற்ப முன்பின் நமது பயிற்சியை அமைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் விருப்ப நேரத்தில் பங்களிக்கலாம். ஏழாவது விதியில் அனைத்து இதர திட்டங்களும் சேர்த்து 50 தொகுப்பு என்றுள்ளது. விக்கிமேற்கோள் என்று தனியாக இலக்கு கொடுக்க வேண்டுமா?. எட்டாவது விதியாக உள்ளது விருப்பத்தேர்வுதான். ஆங்கில விக்கியில்/விக்சனரியில் தமிழ்ப் பக்கங்களை மொழிபெயர்க்க, மேம்படுத்த என்று அவர்களுக்குக் கூடுதல் அனுபவங்கள் கிடைக்கலாம் என நினைக்கிறேன். மாணவர்களின் பங்களிப்பைத் தரவரிசைப்படுத்த இவை கூடுதல் காரணங்களாகக் கொள்ளாமுடியும். அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை திட்டமிடலாம். இலக்குகளை முடிப்பவர்களுக்கு உள்ளகப்பயிற்சிக்கான சான்றிதழ் வழங்குவோம். கல்லூரித் தரப்பில் இந்தப் பங்களிப்பின் அடிப்படையில் மதிப்பெண்கள் இட்டுக் கொள்ள உதவும். -நீச்சல்காரன் (பேச்சு)

சஞ்சீவி சிவகுமார்

# நல்ல திட்டம். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
# விதிமுறைகளில் இப்படி எழுதினால் தெளிவாயிருக்கும் // 30 நாட்களுக்குள் மேற்கண்ட இலக்குகளை அடைபவர்களுக்கு உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக வழங்கப்படும்.(அவ்வாறு முடிக்க இயலாவிட்டாலும் கூடுதலான நாட்களை எடுத்துக் கொண்டு முடிக்கும்பட்சத்தில் உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் தமிழ்  வழங்கப்படும்).சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:17, 16 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]