கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "மின்சுற்று" (using HotCat)
வரிசை 27: வரிசை 27:
[[பகுப்பு:இலத்திரனியல்]]
[[பகுப்பு:இலத்திரனியல்]]
[[பகுப்பு:மின்னியல்]]
[[பகுப்பு:மின்னியல்]]
[[பகுப்பு:மின்சுற்று]]


[[cs:Kirchhoffovy zákony]]
[[cs:Kirchhoffovy zákony]]

15:24, 1 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

கிர்ச்சாஃபின் விதிகள் மின்சுற்றுக்களில் மின்னோட்டம், மின்னழுத்தம் ஆகியவற்றைக் கணிக்க உதவுகின்றன. இவ்விதிகள் இரண்டு:

  • கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதி
  • கிர்ச்சாஃபின் மின்னழுத்த விதி

இவ்விதிகளை கிர்ச்சாஃப் (Gustav Kirchhoff) என்ற ஜெர்மானிய அறிஞர் 1845 இல் முதலில் எடுத்துக் கூறினார்.

கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதி

i1 + i4 = i2 + i3

கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதி பின்வருமாறு:

எந்த ஒரு புள்ளியிலும், அதன் உள் நுழையும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகை, 
வெளியேறும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகைக்குச் சமமானதாகும்.

உற்று நோக்கினால் இது மின்னணுக்களின் அழிவிலாப் பண்பின் விளைவு எனக் காணலாம்.

இவ்விதி மின்சுற்றில் மின்னணுக்கள் ஒரு இடத்தில் குவியாமல் சீரான மின்னணு அடர்த்தியுடன் நகர்ந்தால் மட்டுமே செல்லுபடியாகும். குறிப்பாக, கொண்மியின் தகடுகளின் வழியாக மின்னோட்டம் பாய இயலாது; தகட்டில் மின்னணுக்கள் குவிகின்றன. எனினும், கொண்மியின் நகர் மின்னோட்டத்தைக் கணக்கில் கொண்டால் இவ்விதி செல்லுபடியாகும்.

மேலும் நுட்பமாக, இவ்விதியை கீழ்க்கண்ட சமன்பாட்டிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இது மின்னணுக்களின் அழிவிலாப் பண்பையே கூறுகிறது. அதாவது, ஒரு மூடப்பட்ட பரப்பிலிருந்து வெளியேறும் மொத்த மின்னோட்டத்தின் கூட்டுத்தொகை, அப்பரப்பால் சூழப்பட்ட பருமனுக்குள் உள்ள மின்னணுக்களின் எண்ணிக்கையின் மாறுவீதத்திற்குச் சமமாகும்.

கிர்ச்சாஃபின் மின்னழுத்த விதி

v1 + v2 + v3 + v4 = 0
ஒரு மூடப்பட்ட தடத்தைச் சுற்றி விழும் மின்னழுத்த வேறுபாடுகளின் கூட்டுத்தொகை சுழியாகும்.

இது ஆற்றலின் அழிவிலாப் பண்பின் விளைவாகும்.

இவற்றையும் பார்க்க

விக்சனரி இயற்பியல் கலைச்சொற்கள்