யொரூபா மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bn:ইয়োরুবা ভাষা
சி தானியங்கி மாற்றல்: yo:Èdè Yorùbá
வரிசை 46: வரிசை 46:
[[sv:Yoruba (språk)]]
[[sv:Yoruba (språk)]]
[[wa:Yorouba]]
[[wa:Yorouba]]
[[yo:Èdèe Yorùbá]]
[[yo:Èdè Yorùbá]]

04:27, 25 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

யொரூபா மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1yo
ISO 639-2yor
ISO 639-3yor


யொரூபா மொழி என்பது மேற்கு ஆபிரிக்காவில் பேசப்படுகின்ற கிளைமொழித் தொடர்ச்சியைக் (dialect continuum) குறிக்கும். 22 மில்லியன் மக்கள் இம் மொழியைப் பேசுகிறார்கள். இது யொரூபா மக்களுடைய மொழி. இது நைஜீரியா, பெனின், டோகோ ஆகிய நாடுகளில் பேசப்பட்டுவருவதுடன், ஓகு என்ற பெயரில், பிரேசில், சியராலியொன் ஆகிய நாடுகளிலும், நாகோ (Nago) என்ற பெயரில் கியூபாவிலும் வாழும் சில சமுதாயத்தினரிடையிலும் சிறிதளவில் வழங்குகின்றது.

யொரூபா மொழி SVO தொடரமைப்புடன் கூடிய ஒரு பிரிநிலைத் (isolating) தொனி மொழியாகும் (tonal language).

மரபுவழியான யொரூபா நிலப்பகுதி, தற்போதைய, நைஜீரியாவின் தென்மேற்கு மூலை, பெனின் குடியரசு, டோகோ மற்றும் கானாவின் மையக்கிழக்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. இப்பகுதி பொதுவாக யொரூபாலாந்து என அழைக்கப்படுகின்றது. இதில் அடங்கும் நைஜீரியப் பகுதி, தற்கால ஓயோ, ஓசுன், ஓகுன், ஒண்டோ, எக்கிட்டி, க்வாரா, லாகோஸ் ஆகிய மாநிலங்களையும், கோகி மாநிலத்தின் மேற்குப் பகுதியையும் உள்ளடக்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யொரூபா_மொழி&oldid=302899" இலிருந்து மீள்விக்கப்பட்டது