பள்ளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பள்ளர் மறு பெயர் தேவேந்திர குல வேளாளர்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பள்ளர் மறுபெயர் தேவேந்திர குல வேளாளர்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9: வரிசை 9:
|religions = [[இந்து]], [[கிறிஸ்துவம்]]<ref>{{cite book | title=The Saint in the Banyan Tree: Christianity and Caste Society in India | publisher=University of California Press | author=Mosse, David | year=2012 | pages=385 | isbn=0520273494}}</ref>
|religions = [[இந்து]], [[கிறிஸ்துவம்]]<ref>{{cite book | title=The Saint in the Banyan Tree: Christianity and Caste Society in India | publisher=University of California Press | author=Mosse, David | year=2012 | pages=385 | isbn=0520273494}}</ref>
}}
}}
'''பள்ளர்''' (''Pallar'') அல்லது '''மள்ளர்''' (தேவேந்திர குல வேளாளர்) எனப்படுவோர் [[தென்னிந்தியா]]வில், தென் தமிழகத்தில் வாழுகின்ற ஒரு [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல்]] சமூகத்தினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு, [[கர்நாடகா]], [[கேரளா]] மற்றும் [[இலங்கை]] ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
'''பள்ளர்''' (''Pallar'') அல்லது '''மள்ளர்''' (தேவேந்திர குல வேளாளர்) எனப்படுவோர் [[தென்னிந்தியா]]வில், தென் தமிழகத்தில் வாழுகின்ற ஒரு [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல்]] சமூகத்தினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு, [[கர்நாடகா]], [[கேரளா]] மற்றும் [[இலங்கை]] ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.


[[தமிழகம்|தமிழகத்தில்]] பள்ளர், வாய்காரர், காலாடி, மூப்பன், குடும்பன், [[பண்ணாடி]], தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=664616</ref> இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள். எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.<ref>[http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=817&rid=43|மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!]</ref><ref>[http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=844&rid=45|குடும்பம் உருவான வரலாறு!]</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/panel-to-consider-plea-to-rename-pallar-as-mallar/article2922344.ece</ref> பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற இந்த சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.<ref>புதிய தமிழகம் 05/12/2015, பேரணி அறிவிப்பு</ref>
[[தமிழகம்|தமிழகத்தில்]] பள்ளர், வாய்காரர், காலாடி, மூப்பன், குடும்பன், [[பண்ணாடி]], தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=664616</ref> இவர்கள் தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்பதால் தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.<ref>[http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=817&rid=43|மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!]</ref><ref>[http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=844&rid=45|குடும்பம் உருவான வரலாறு!]</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/panel-to-consider-plea-to-rename-pallar-as-mallar/article2922344.ece</ref> பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற இந்த சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.<ref>புதிய தமிழகம் 05/12/2015, பேரணி அறிவிப்பு</ref>


# தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
# தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)

05:41, 16 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

பள்ளர்
மொத்த மக்கள்தொகை
2,272,265[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு,கர்நாடகா, கேரளா, இலங்கை
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து, கிறிஸ்துவம்[2]

பள்ளர் (Pallar) அல்லது மள்ளர் (தேவேந்திர குல வேளாளர்) எனப்படுவோர் தென்னிந்தியாவில், தென் தமிழகத்தில் வாழுகின்ற ஒரு பட்டியல் சமூகத்தினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.

தமிழகத்தில் பள்ளர், வாய்காரர், காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி, தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.[3] இவர்கள் தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்பதால் தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.[4][5][6] பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற இந்த சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.[7]

  1. தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
  2. குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)
  3. பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)
  4. [=பண்ணாடி]], பட்டியல் சாதிகள் (எண் 54)
  5. மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)
  6. காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)
  7. காலாடி, சீர்மரபினர் (எண் 28)[8]

இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்களும் உள்ளன. இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர்.

தேவேந்திர குல வேளாளர் எனப்படுவோர் மருதநில மக்கள் என்பது உலகம் அறிந்த உண்மை.


மள்ளர் என்பதன் பொருள்

மள்ளர் என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.[சான்று தேவை]

‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கல நிகண்டு.[சான்று தேவை] சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. பிற்கால பள்ளு சிற்றிலக்கியங்கள் பள்ளர் பற்றியும் அவர்களின் வேளாண் குடிபற்றியும் பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ளன.இவ்விலக்கியங்களில் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி, பண்ணாடி என பல பெயர்களில் பள்ளர்கள் அழைக்கப்படுகின்றனர்.[9] மேலும் பள்ளர்கள் இன்றுவரையிலும் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி எனும் பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.[சான்று தேவை]

நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு

நெல், கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த தெய்வேந்திரக் குடும்பன் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.

மள்ளர் பற்றிய குறிப்புகள்

மள்ளர் காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். உழவர், வீரர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இவ்விருவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக

மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.

இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.

என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.[10][11]

வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21). கி.பி. 1528ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் காலத்திய செப்பேடான இது தற்சமயம் மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து திருட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது.[12]

தெய்வேந்திரர் வரலாறு

தெய்வேந்திரன் அன்னம் படைத்தல் :

தெய்வேந்திரன் விருதுகள் :

சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட தமிழ் இலக்கியங்களில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிறப்பையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும்.

பள்ளு இலக்கியம்

பள்ளர் என்ற பெயர் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் பள்ளு இலக்கியத்தில் தான் வருகின்றது. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் முக்கூடற் பள்ளு. பள்ளு இலக்கியம் சிற்றிலக்கிய வகையை சேர்ந்தது, சிற்றிலக்கிய வகையில் மிகுதியான நூல்களை கொண்டது. இது வடுகர் ( நாயக்கர் ) ஆட்சி காலத்தில் தோன்றியது. இந்த பள்ளு நூல்கள் இவர்களை பள்ளர் என்று அழைத்தாலும் இவையே 'மள்ளர் தான் பள்ளர்' என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன.[13]

இவ்வாறு பல பள்ளு நூல்கள் இவர்களை மள்ளர் என்று கூறுகின்றன.[14]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு தேதியின் முக்கிய அம்சங்கள்: இந்தியாவின் 2001 ஆம் ஆண்டுக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு (pdf)
  2. Mosse, David (2012). The Saint in the Banyan Tree: Christianity and Caste Society in India. University of California Press. பக். 385. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0520273494. 
  3. http://www.dinamalar.com/news_detail.asp?id=664616
  4. உருவான ‘மள்ளர்’ வரலாறு!
  5. உருவான வரலாறு!
  6. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/panel-to-consider-plea-to-rename-pallar-as-mallar/article2922344.ece
  7. புதிய தமிழகம் 05/12/2015, பேரணி அறிவிப்பு
  8. http://www.tnpsc.gov.in/communities-list.html
  9. http://dinamani.com/edition_madurai/article843827.ece
  10. http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=76&pno=237
  11. http://www.tamilvu.org/slet/l3763/l3763ine.jsp?x=9605&txt=%AA%EF
  12. மக்களின் வரலாற்றை சொல்லும் செப்பேடு எங்கே? : மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போனதா?
  13. பட்டியலின மக்களின் வரலாற்றை சொல்லும் செப்பேடு எங்கே? : மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போனதா?
  14. http://www.tamilvu.org/courses/degree/p103/p1033/html/p103325.htm

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளர்&oldid=3021439" இலிருந்து மீள்விக்கப்பட்டது