இலங்கை நாடாளுமன்றக் கட்டடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி இலங்கைப் பாராளுமன்றக் கட்டிடம், கோட்டே, இலங்கை நாடாளுமன்றக் கட்டிடம், கோட்டே என்ற தலைப்புக்கு
(வேறுபாடு ஏதுமில்லை)

20:10, 16 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

இலங்கைப் பாராளுமன்றக் கட்டிடம் 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கோட்டே நிர்வாகத் தலை நகரமாக ஆக்கப்பட்ட பின்னர் அங்கே அமைக்கப்பட்டது. சதுப்பு நிலமாக இருந்த பகுதி தோண்டப்பட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியின் மத்தியில் அமைக்கப்பட்ட தீவு ஒன்றில் இக் கட்டிடம் கட்டப்பட்டது. இலங்கைக் கட்டிடக்கலை மரபை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட இக் கட்டிடம், இலங்கையின் புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரான ஜெப்ரி பாவா அவர்களினால் வடிவமைக்கப்பட்டது.