கடலூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 158: வரிசை 158:


== எல்லைகள் ==
== எல்லைகள் ==
மேற்கே [[கள்ளக்குறிச்சி மாவட்டம்|கள்ளக்குறிச்சி]] மற்றும் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டமும்]], தெற்கே [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டமும்]], தென்மேற்கே [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]], [[அரியலூர் மாவட்டம்|அரியலூர்]] மற்றும் [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர் மாவட்டமும்]], கிழக்கே [[வங்காள விரிகுடா]] கடலும், வடமேற்கே [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டமும்]], வடக்கே [[புதுச்சேரி]] மாநிலமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
மேற்கே [[கள்ளக்குறிச்சி மாவட்டம்|கள்ளக்குறிச்சி மாவட்டமும்]],
[[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டமும்]], தெற்கே [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டமும்]], தென்மேற்கே [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டமும்]], [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டமும்]], [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர் மாவட்டமும்]] கிழக்கே [[வங்காள விரிகுடா]]கடலாகவும், வடமேற்கே [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டமும்]], வடக்கே [[புதுச்சேரி]] மாநிலமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.


== புவியியல் ==
== புவியியல் ==

14:47, 12 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

கடலூர்
மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய நிலம்

கடலூர் மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் கடலூர்
பகுதி வடமாவட்டம்
ஆட்சியர்
திரு. வி. அன்புச்செல்வன்
இ.ஆ.ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

திரு. பி. சரவணன்
இ.கா.ப
நகராட்சிகள் 5
வருவாய் கோட்டங்கள் 3
வட்டங்கள் 10
பேரூராட்சிகள் 16
ஊராட்சி ஒன்றியங்கள் 13
ஊராட்சிகள் 683
வருவாய் கிராமங்கள் 905
பரப்பளவு 3,678 ச.கி.மீ
மக்கள் தொகை
2,605,914 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இசீநே
(ஒசநே+5:30)
வாகனப் பதிவு
TN-31, TN-91
இணையதளம் https://cuddalore.nic.in

கடலூர் மாவட்டம் (Cuddalore district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கடலூர் ஆகும். இந்த மாவட்டம் 3,678 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

சோழர் கால வரலாற்று புதினத்தின் (பொன்னியின்செல்வன்) படி அக்காலத்தில் இவ்வூரின் பெயர் கடம்பூர் என்று அழைக்கப்பட்டது. அந்த பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது. இம்மாவட்டத்திற்கு திருப்பாதிரிப்புலியூர் என்ற பெயரும் உள்ளது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த பெயரை உச்சரிக்க அவர்களுக்கு கடினமாக இருந்ததால் இவ்வூருக்கு 'கடலூர்' என பெயரிட்டனர்.

வரலாறு

முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் பெயர் தென்னாற்காடு மாவட்டம் என இருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டமும் இம்மாவட்டத்திலேயே அடங்கி இருந்தது. இந்நிலையில் 1993 செப்டம்பர் 30 அன்று தென் ஆற்காடு மாவட்டமானது, தென் ஆற்காடு வள்ளளார் மற்றும் விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என இரு மாவட்டங்களா உருவாக்கப்பட்டன. மற்ற மாவட்டங்கள் அப்போது பெரும்பாலும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு மாவட்டங்களுக்குப் பெரியோரின் பெயர்களைச்சூட்டி அழைக்கும் முறையால், சில சிக்கல்கள் ஏற்பட்டதால் மீண்டும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்படும் மாற்றம் வந்ததையடுத்துத் தற்போது கடலூர் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.

சுமத்ரா அருகே 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலை, இந்தியாவின் கிழக்கு கடற்கரையை 2004, டிசம்பர் 26 அன்று தாக்கியது, இதன் விளைவாக 572 பேர் உயிரிழந்தனர். பல மீன்பிடி குக்கிராமங்கள் காணாமல் போயின, அதே நேரத்தில் வெள்ளி கடற்கரை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடலூர் துறைமுகம் பெரியளவில் பாதிக்கப்பட்டது. செயின்ட் டேவிட் கோட்டை சேதமின்றி உயிர் தப்பியது. 2012 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தானே புயல் பயிர்கள் மற்றும் கட்டிடங்களுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தியது.

மாவட்ட நிர்வாகம்

கடலூர் மாவட்ட வட்டங்கள்

கடலூர் மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களையும், 10 வருவாய் வட்டங்களையும், 905 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[1]

கடலூர் வருவாய் வட்டங்கள்

  1. கடலூர்
  2. பண்ருட்டி
  3. விருத்தாச்சலம்
  4. சிதம்பரம்
  5. காட்டுமன்னார்கோயில்
  6. திட்டக்குடி
  7. குறிஞ்சிப்பாடி
  8. வேப்பூர்
  9. புவனகிரி
  10. ஸ்ரீமுஷ்ணம்
கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்

உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்

கடலூர் மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களும், 683 கிராம ஊராட்சிகளையும், 16 பேரூராட்சிகளையும் கொண்டது.[2]

ஊராட்சி ஒன்றியங்கள்

கடலூர் மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.[3]

நகரங்கள்

  1. கடலூர்
  2. பண்ருட்டி
  3. நெய்வேலி
  4. குறிஞ்சிப்பாடி
  5. சிதம்பரம்
  6. விருத்தாச்சலம்
  7. நெல்லிக்குப்பம்

மக்கள்தொகை பரம்பல்

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.ஆ. ±%
19018,68,748—    
19119,74,673+1.16%
19219,57,148−0.18%
193110,12,603+0.56%
194110,76,237+0.61%
195111,45,551+0.63%
196113,00,513+1.28%
197115,69,323+1.90%
198118,27,917+1.54%
199121,22,759+1.51%
200122,85,395+0.74%
201126,05,914+1.32%
சான்று:[4]

2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 2,605,914 ஆகும். அதில் ஆண்கள் 1,311,697 ஆகவும்; பெண்கள் 1,294,217 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 14.02% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 704 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 86.16% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 279,950 ஆகவுள்ளனர். [5]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 91.78% ஆகவும், கிறித்தவர்கள் 3.20 % ஆகவும், இசுலாமியர்கள் 4.75% ஆகவும், மற்றவர்கள் 0.29% ஆகவும் உள்ளனர்.

அரசியல்

இம்மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளையும், இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.[6]

சட்டமன்றத் தொகுதிகள்

  1. திட்டக்குடி (தனி)
  2. விருத்தாச்சலம்
  3. நெய்வேலி
  4. பண்ருட்டி
  5. கடலூர்
  6. குறிஞ்சிப்பாடி
  7. புவனகிரி
  8. சிதம்பரம்
  9. காட்டுமன்னார்கோயில் (தனி)

நாடாளுமன்றத் தொகுதிகள்

  1. கடலூர் மக்களவைத் தொகுதி
  2. சிதம்பரம் மக்களவைத் தொகுதி

தொழில்வளம்

மேலும் நெய்வேலி நகரியமும் இம்மாவட்டத்தில் உள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்தியாவிற்கான மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதில் முதன்மையானது. மாவட்டத்திற்கு தேவையான உணவு பொருட்கள் பெரும்பாலும் விவசாயத்தின் மூலம் இங்கேயே, உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு, நெல் இங்கு முக்கிய பயிராக நடவு செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தின் நெல்லிக்குப்பம், திட்டக்குடி, நல்லூர் மற்றும் சேத்தியாத்தோப்பு ஆகிய இடங்களில் 3 தனியார் சர்க்கரை ஆலைகளும், ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலையும் உள்ளது. பெண்ணாடத்தில் ராம்கோ சிமெண்ட் ஆலை உள்ளது. பண்ருட்டி மற்றும் நெய்வேலி பகுதியில் முந்திரி, பலா அதிகளவில் விளைகிறது மற்றும் கொய்யா, சப்போட்டா பழ வகைகளும் பயிர் செய்யப்படுகிறது.

எல்லைகள்

மேற்கே கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டமும், தெற்கே மயிலாடுதுறை மாவட்டமும், தென்மேற்கே தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடா கடலும், வடமேற்கே விழுப்புரம் மாவட்டமும், வடக்கே புதுச்சேரி மாநிலமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

புவியியல்

ஆறுகள்

கெடிலம் ஆறு, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு,வெள்ளாறு (வடக்கு) ஆகிய ஆறுகள் பாய்கின்றன.

அணைக்கட்டுகள்

திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை சேத்தியாதோப்பு அணை பெலாந்துறை ஆகிய அணை கள் அமைந்துள்ளன.

அலையாத்திக் காடுகள்

பிச்சாவரம், கெடிலம் ஆகிய கடலோரப்பகுதிகளில் அலையாத்திக் காடுகள் (Mangrove) உள்ளன.

சிதம்பரம் நடராசர் கோயில்

நடராசர் கோயிலின் வடக்கு பக்க கோபுரம் மற்றும் குளத்தின் காட்சி

நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் முதன்மை தலமாகும். இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும். இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

போக்குவரத்து

கடலூர் மாவட்டம் தொடருந்து மற்றும் சாலைகள் மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்து

புதுச்சேரி, சிதம்பரம், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர் மற்றும் விழுப்புரம் போன்ற அருகிலுள்ள நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, சேலம் போன்ற முக்கிய நகரங்கள் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன.

சாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் முக்கிய சாலைகள்:

தொடருந்துப் போக்குவரத்து

கடலூர் துறைமுகம் சந்திப்பு

கடலூரில் இரண்டு தொடருந்து நிலையங்கள் உள்ளன.

தென்னக இரயில்வேயின் மெயின் லைன் எனப்படும் சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி தொடருந்து பாதையில் கடலூர் உள்ளது . இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1877 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடலூர் துறைமுகம் சந்திப்பில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலத்திற்கு ஒரு தொடருந்து பாதை உள்ளது.

சுற்றுலாத் தலங்கள்

பிச்சாவரம்

மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் (கி.பி.1110ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது), பிச்சாவரம், கெடிலம் ஆற்றின் கழிமுகம், கடலூர் தீவு, வெள்ளி கடற்கரை, புனித டேவிட் கோட்டை, கடலூர் துறைமுகம், சிதம்பரம் நடராசர் கோயில், வடலூரில் வள்ளலார் அமைத்த சத்ய ஞான சபை, விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயில், திருமுட்டம் ஆதிவராக சுவாமி கோயில், மேல்பட்டாம்பாக்கம் 400 வருட சிவன் கோவில் சரபேசுவரர், திருக்கண்டேஸ்வரம் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் நடனபாதேஸ்வரர் மற்றும் தமிழ்நாட்டில் ஆறு கரம் கொண்ட பைரவர் திருக்கோயில், பள்ளிவாசல் மசூதி போன்றவை கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் ஆகும். மேலும் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள மேலக்கடம்பூர் சிவன் கோயில் மிக பிரசித்தி பெற்ற தலம், கரக்கோயில் எனப்படும் தேர் வடிவ கோயில் இங்கு மட்டுமே உள்ளது. மா. ஆதணூர் கிராமத்தில் திருநாளை பாேவார் திருத்தலம் உள்ளது, திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.

மத்திய சிறைச்சாலை

கடலூரில், 1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மத்திய சிறைச்சாலை உள்ளது. செப்டம்பர் 1918 முதல் திசம்பர் 14, 1918 வரை விடுதலைப் போராட்டத்தின் போது கவிஞரான சுப்பிரமணிய பாரதி இச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்_மாவட்டம்&oldid=2998483" இலிருந்து மீள்விக்கப்பட்டது