தலைமைச் செயலகம் (தமிழ்நாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Deepak konguஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
பல செயல்களை மேற்கொள்ளும் எந்த ஒரு (அரசு/ அரசு சாரா) அமைப்பும் தன் செயல்களை அல்லது செயலகங்களை ஒருங்கிணைக்கும் ஒரு தலைமைச் செயலகத்தைக் கொண்டிருக்கும். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைப்]] பொறுத்தளவில் ”தலைமைச் செயலகம்” என்பது அது '''[[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] தலைமைச் செயலக'''த்தையே குறிக்கும்.
பல செயல்களை மேற்கொள்ளும் எந்த ஒரு (அரசு/ அரசு சாரா) அமைப்பும் தன் செயல்களை அல்லது செயலகங்களை ஒருங்கிணைக்கும் ஒரு தலைமைச் செயலகத்தைக் கொண்டிருக்கும். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைப்]] பொறுத்தளவில் ”தலைமைச் செயலகம்” என்பது அது '''[[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] தலைமைச் செயலக'''த்தையே குறிக்கும்.


தமிழக அரசின் தலைமைச் செயலகம் [[சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ]]செயல்படுகிறது. [[தமிழ்நாடு சட்டமன்ற வளாகமூம்].இச்செயலகத்தில் தான் தமிழக அரசின் செயல்பாடுகள் தொடங்குகின்றன.
தமிழக அரசின் தலைமைச் செயலகம் [[சென்னை|சென்னையில்]] [[நாமக்கல் கவிஞர் மாளிகை]] என்னும் பத்து மாடிக் கட்டிடத்தில் செயல்படுகிறது. தமிழ்நாடு அரசின் புதிய [[தமிழ்நாடு சட்டமன்ற வளாகம்|சட்டமன்ற வளாகம்]] முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு தலைமைச் செயலகத்தின் பல துறைகள் அங்கு மாற்றப்பட்டது.பதிய கட்டிடம் தற்போது அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக உள்ளது.இச்செயலகத்தில் தான் தமிழக அரசின் செயல்பாடுகள் தொடங்குகின்றன.


==தலைமைச் செயலர்==
==தலைமைச் செயலர்==

07:47, 2 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

பல செயல்களை மேற்கொள்ளும் எந்த ஒரு (அரசு/ அரசு சாரா) அமைப்பும் தன் செயல்களை அல்லது செயலகங்களை ஒருங்கிணைக்கும் ஒரு தலைமைச் செயலகத்தைக் கொண்டிருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் ”தலைமைச் செயலகம்” என்பது அது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தையே குறிக்கும்.

தமிழக அரசின் தலைமைச் செயலகம் சென்னையில் நாமக்கல் கவிஞர் மாளிகை என்னும் பத்து மாடிக் கட்டிடத்தில் செயல்படுகிறது. தமிழ்நாடு அரசின் புதிய சட்டமன்ற வளாகம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு தலைமைச் செயலகத்தின் பல துறைகள் அங்கு மாற்றப்பட்டது.பதிய கட்டிடம் தற்போது அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக உள்ளது.இச்செயலகத்தில் தான் தமிழக அரசின் செயல்பாடுகள் தொடங்குகின்றன.

தலைமைச் செயலர்

தமிழக அரசின் தலைமைச் செயலர் அல்லது தலைமைச் செயலாளர் என்பவர் தமிழகத்தில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஒரு மூத்த 'இந்திய ஆட்சிப் பணி' அலுவலர் ஆவார். இவர் தமிழக அரசின் அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பு ஆவார்.

பல்வேறு துறைச் செயலர்கள்

தமிழக அரசு நிருவாகத்தில் பல்வேறு துறைகள் உள்ளன. இத் துறைகளுக்குத் தனித்தனியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளுக்கு ஒன்று சேர்ந்தோ தனித் தனிச் செயலர்கள் இருப்பர். இச்செயலர்கள் நேரடியாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும், தத்தம் துறை அலுவலர்களிடமும் தொடர்பிலிருப்பர்.

தமிழக அரசு நிருவாகத்தின் துறைகளில் சில

  • 1. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.
  • 2. விவசாயத்துறை.
  • 3. கால்நடை, பால்வளம், மாறும் மீன் வளத்துறை.
  • 4. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறை.
  • 5. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை.
  • 6. வணிக வரி மற்றும் பதிவுத்துறை.
  • 7. சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை.
  • 8. நிதித் துறை.
  • 9. சட்டத் துறை.
  • 10. நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை.
  • 11. பொதுப் பணித் துறை.
  • 12. உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறை.
  • 13. மின் ஆற்றல் துறை.
  • 14. உயர் கல்வித் துறை.
  • 15. உள்துறை.
  • 16. தொழில் துறை.
  • 17. வருவாய்த் துறை.
  • 18. போக்குவரத்துத் துறை.

செயலர்களின் நிலைகள்

துறைச் செயலர்களில் முதன்மைச் செயலர்கள் அத் துறைக்கு முழுப் பொறுப்பு ஆவர்; நேரடியாக அத் துறையின் அமைச்சரின் கீழ் செயல்படுவர். இவர்கள் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு பெற்றுப் பின் சார் ஆட்சியாளர்களாகவோ, கூடுதல் மாவட்ட ஆட்சியாளர்களாகவோ அல்லது அதற்கு இணையான பணிகளிலோ நன்கு அனுபவம் பெற்ற பின் மாவட்ட ஆட்சியாளர்களாக அல்லது அதற்கு இணையான பணிகளில் நன்கு அனுபவம் பெற்றவர்களாக இருப்பர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக கூடுதல் செயலாளர்கள் அல்லது இணைச் செயலாளர்கள் இருப்பர். இவர்களும் இந்திய ஆட்சியியல் மற்றும் நிருவாகவியலில் மிகுந்த திறமை மிக்கவர்களாக இருப்பர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக துணைச் செயலர்கள் இருப்பர். இவர்கள் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளில் தேர்வு பெற்ற பின் சில பயிற்சிகளுக்குப் பின்னர் பணியமர்த்தப்படுவர்.