தாலமி வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59: வரிசை 59:
File:Ptolemaeus V.jpg|ஐந்தாம் தாலமி
File:Ptolemaeus V.jpg|ஐந்தாம் தாலமி
File:Ring with engraved portrait of Ptolemy VI Philometor (3rd–2nd century BCE) - 2009.jpg|ஆறாம் தாலமி
File:Ring with engraved portrait of Ptolemy VI Philometor (3rd–2nd century BCE) - 2009.jpg|ஆறாம் தாலமி
File:Cleopatra II and III Kom Ombo Temple.jpg|Cleopatra II (right)
File:Cleopatra II and III Kom Ombo Temple.jpg| இரண்டாம் கிளியோபாட்ரா (வலது புறம்)
File:Relief of Ptolemy VIII in Kom Ombo Temple.jpg|எட்டாம் தாலமி
File:Relief of Ptolemy VIII in Kom Ombo Temple.jpg|எட்டாம் தாலமி
File:Edfu29.JPG|ஒன்பதாம் தாலமி
File:Edfu29.JPG|ஒன்பதாம் தாலமி
வரிசை 66: வரிசை 66:
File:Kom Ombo 0312.JPG|பனிரெண்டாம் தாலமி
File:Kom Ombo 0312.JPG|பனிரெண்டாம் தாலமி
File:Kom Ombo 0333.JPG|பதிமூன்றம் தாலமி & இசிஸ் எனும் பெண் கடவுள்
File:Kom Ombo 0333.JPG|பதிமூன்றம் தாலமி & இசிஸ் எனும் பெண் கடவுள்
File:Ptolemy XIV.jpg|Ptolemy XIV
File:Ptolemy XIV.jpg|பதினான்காம் தாலமி
File:Cleopatra VII statue fragment, 69-30 BC - Royal Ontario Museum - DSC09761.JPG|[[ஏழாம் கிளியோபாற்றா]]
File:Cleopatra VII statue fragment, 69-30 BC - Royal Ontario Museum - DSC09761.JPG|[[ஏழாம் கிளியோபாற்றா]]
File:Denderah4 Cesarion.jpg|[[சிசேரியன்]]எனும் பதினைந்தாம் தாலமி
File:Denderah4 Cesarion.jpg|[[சிசேரியன்]]எனும் பதினைந்தாம் தாலமி

16:50, 27 மே 2020 இல் நிலவும் திருத்தம்

தாலமி வம்சம்
<
p
t
wAl
M
iis
>
நாடுபண்டைய எகிப்து
விருதுப்
பெயர்கள்
பார்வோன்
நிறுவிய
ஆண்டு
கிமு 305
நிறுவனர்தாலமி சோத்தர்
இறுதி ஆட்சியர்பதினைந்தாம் தாலமி (எகிப்து),
ஏழாம் கிளியோபாட்ரா (எகிப்து) கிமு 30
இனம்கிரேக்கர்கள்

தாலமி வம்சம் (Ptolemaic dynasty) (ஆட்சிக் காலம்:கிமு 305 - கிமு 30) பேரரசர் அலெக்சாந்தர் கிமு 323-இல் மறைவின் போது அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபடியால் நடைபெற்ற வாரிசுரிமைப் போட்டியின் காரண்மாக கிரேக்க மாசிடோனியப் பேரரசை, அவரது நண்பர்களும், தலைமைப் படைத்தலைவர்களும் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அலெக்சாந்தரின் உறவினரும், கிரேக்க தலைமைப் படைத்தலைவுருமான தாலமி சோத்தர் பண்டைய எகிப்து மற்றும் கானான் மற்றும் சைப்பிரஸ் பகுதிகளுக்கு கிமு 305 முதல் பேரரசர் ஆனார்.[1][2][3][4][5] இவரது பெயரால் தாலமி வம்சம் துவங்கியது. இவ்வம்சத்தின் இறுதியில் பண்டைய எகிப்தை ஆண்ட இறுதி பதினைந்தாம் தாலமியின் அன்னை ஏழாம் கிளியோபாட்ராவுடன் கிமு 30-இல் தாலமி வம்சத்தவர்களின் ஆட்சி முடிவுற்றது. எகிபதிய நாடு உரோமைப் பேரரசின் கீழ் ஒரு மாகாணமாக மாறியது. தாலமி வம்சத்தினர் எகிப்தை கிமு

பண்டைய எகிப்தை, கிரேக்கர்களான தாலமி வம்சத்தினர் ஆண்டாலும், பண்டைய எகிப்திய அரசமரபுகள் கடைபிடித்த பண்பாட்ட்டின் அடிப்படையில் ஆட்சி செய்து, எகிப்தியக் கடவுள்களை வழிப்பட்டனர். பண்டையெ எகிப்திய பார்வோன்]]களைப் போன்று, இந்த கிரேக்க இன தாலமி வம்சத்தினரும், ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் தங்கள் கல்லறைக்களுக்கான பிரமிடுகளை மிகச்சிறிய அளவில் கட்டுக் கொண்டனர்.

பண்டைய எகிப்திய அரசமரபுகள் போன்றே தாலமி வம்சத்தவர்களும், ஆட்சி நலனுக்காக சொந்த சகோதரி அல்லது மகளைத் திருமணம் செய்து வழக்கம் கொண்டிருந்தனர்[6]. பெண்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தகுதியற்று இருப்பினும், குழந்தைப் பருவ மகன் அல்லது சகோதர அரசினின் காப்பாட்சியராக எகிப்தை ஆண்டனர். இம்முறையில் எகிப்தை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஏழாம் கிளியோபாட்ரா ஆவார். கிளியோபாட்ரா தன்னைவிட இளவயதுடைய தனது சிறுவயதினரான இரண்டு சகோதரர்களை மணந்து, இரண்டு முறை அவர்களின் காப்பாட்சியாரக எகிப்தை ஆண்டார். முன்னர் கிளியோபாட்ரா உரோமைப் படைத்தலைவர் ஜூலியஸ் சீசர் மூலம் சிசேரியன் எனும் குழந்தையைப் பெற்றார். பின்னர் தனது சகோதரர்களைக் கொன்ற கிளியோபாட்ரா, தனது மகன் சிசேரியனை அரியனையில் அமர்த்தி, அவரின் சார்பாக எகிப்தை ஆண்டார்.

உரோமைப் படைத்தலவர் மார்க் ஆண்டனி-ஏழாம் கிளியோபாற்றா காதல் வாழ்க்கையால், கொதித்தெழுந்த உரோமைப் படைத்தலைவர் அகஸ்ட்டஸ் கிமு 30-இல் எகிப்தைக் கைப்பற்றி, எகிப்தை உரோமைப் பேரரசின் ஒரு மாகாணமாகச் செய்தார். கிமு 30-இல் தாலமி வம்சம் முடிவுற்றது. தாலமி வம்சத்தினர் எகிப்தை கிமு 305 முதல் கிமு 30 வரை தொடர்ச்சியாக 275 ஆண்டுகள் ஆண்டனர்.

தாலமி வம்ச ஆட்சியாளர்கள்

தாலமி வம்சத்தை நிறுவி தாலமி பேரரசை ஆண்ட தாலமி சோத்தர்
ஏழாம் கிளியோபாற்றாவின் சித்திரம், கிபி முதல் நூற்றான்டு

[7][8]]]

தாலமி வம்ச ஆட்சியாளர்கள்

  1. தாலமி சோத்தர் -ஆட்சிக் காலம் கிமு 303 – 282
  2. இரண்டாம் தாலமி - கிமு 285 – 246
  3. மூன்றாம் தாலமி - கிமு 246 – 221
  4. நான்காம் தாலமி - கிமு 221 – 203 - (சகோதரி & மனைவி முதலாம் கிளியோபாட்ரா)
  5. ஐந்தாம் தாலமி - கிமு 203 – 181
  6. ஆறாம் தாலமி - கிமு 181–164 மற்றும் 163 – 145 (சகோதரி & மனைவி இரண்டாம் கிளியோபாட்ரா)
  7. ஏழாம் தாலமி - ஆட்சி செய்யவில்லை
  8. எட்டாம் தாலமி - கிமு 170 – 163 மற்றும் 145 – 116)
  9. ஒன்பதாம் தாலமி - கிமு 116 –107 மற்றும் கிமு 88 – 81
  10. பத்தாம் தாலமி - கிமு 107 – 88 (சகோதரி & மனைவி நான்காம் கிளியோபாட்ரா)
  11. பதினொன்றாம் தாலமி - கிமு 80
  12. பனிரெண்டாம் தாலமி - கிமு 80–58 மற்றும் கிமு 55–51 (சகோதரி மற்றும் மனைவி ஐந்தாம் கிளியோபாட்ரா)
  13. பதிமூன்றாம் தாலமி - கிமு 51 - 47 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
  14. பதினான்காம் தாலமி - கிமு 47 – 44 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
  15. சிசேரியன் - கிமு 44 – 30 (ஏழாம் கிளியோபாட்ரா-ஜூலியஸ் சீசரின் மகன்)

கிளியோபாட்ராக்கள்

  1. முதலாம் கிளியோபாட்ரா
  2. இரண்டாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 145 – 116
  3. மூன்றாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 81 – 80
  4. நான்காம் கிளியோபாட்ரா
  5. ஐந்தாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58 – 57 மற்றும் 58 – 55
  6. ஆறாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58
  7. ஏழாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 51 – 30

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Jones, Prudence J. (2006). Cleopatra: A Sourcebook. University of Oklahoma Press. பக். 14. https://archive.org/details/cleopatrasourceb0000jone. "They were members of the Ptolemaic dynasty of Macedonians, who ruled Egypt after the death of its conqueror, Alexander the Great." 
  2. Pomeroy, Sarah B. (1990). Women in Hellenistic Egypt. Wayne State University Press. பக். 16. "while Ptolemaic Egypt was a monarchy with a Greek ruling class." 
  3. Redford, Donald B., தொகுப்பாசிரியர் (2000). The Oxford Encyclopedia of Ancient Egypt. Oxford University Press. "Cleopatra VII was born to Ptolemy XII Auletes (80–57 BCE, ruled 55–51 BCE) and Cleopatra, both parents being Macedonian Greeks." 
  4. Bard, Kathryn A., தொகுப்பாசிரியர் (1999). Encyclopedia of the Archaeology of Ancient Egypt. Routledge. பக். 488. "Ptolemaic kings were still crowned at Memphis and the city was popularly regarded as the Egyptian rival to Alexandria, founded by the Macedonians." 
  5. Bard, Kathryn A., தொகுப்பாசிரியர் (1999). Encyclopedia of the Archaeology of Ancient Egypt. Routledge. பக். 687. "During the Ptolemaic period, when Egypt was governed by rulers of Greek descent..." 
  6. Move over, Lannisters: No one did incest and murder like the last pharaohs on The A.V. Club
  7. Walker, Susan; Higgs, Peter (2001), "Painting with a portrait of a woman in profile", in Walker, Susan; Higgs, Peter (eds.), Cleopatra of Egypt: from History to Myth, Princeton, N.J.: Princeton University Press (British Museum Press), pp. 314–315, ISBN 9780691088358.
  8. Fletcher, Joann (2008). Cleopatra the Great: The Woman Behind the Legend. New York: Harper. ISBN 978-0-06-058558-7, image plates and captions between pp. 246-247.

மேலும் படிக்க

  • Susan Stephens, Seeing Double. Intercultural Poetics in Ptolemaic Alexandria (Berkeley, 2002).
  • A. Lampela, Rome and the Ptolemies of Egypt. The development of their political relations 273-80 B.C. (Helsinki, 1998).
  • J. G. Manning, The Last Pharaohs: Egypt Under the Ptolemies, 305-30 BC (Princeton, 2009).

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ptolemaic dynasty
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலமி_வம்சம்&oldid=2977909" இலிருந்து மீள்விக்கப்பட்டது