முத்தரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26: வரிசை 26:


== கல்வெட்டுக் குறிப்புகள் ==
== கல்வெட்டுக் குறிப்புகள் ==
முத்தரையர் குறித்த கல்வெட்டுச் செய்திகள்:<ref>[[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 39, முனைவர் ந ஆனந்தி உரை, பக்கம் 46, 47, 48</ref> <ref>[http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=43 முத்தரசர்]</ref>==
முத்தரையர் குறித்த கல்வெட்டுச் செய்திகள்:<ref>[[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 39, முனைவர் ந ஆனந்தி உரை, பக்கம் 46, 47, 48</ref> <ref>[http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=43 முத்தரசர்]</ref>
* [[நார்த்தாமலை]]க் கல்வெட்டு - விடேல் விடுகு முத்தரையன் மகனான சாந்தன் பழியிலியானவனின் மகள் பழியிலி சிறிய-நங்கை என்பவள், மீனவன் தமிழதிரையன் ஆயின மல்லன்அனந்தனை மணந்தாள் – என்று நார்த்தாமலை கல்வெட்டு கூறுகிறது. இதனால் மீனவனாகிய தென்னவனும், முத்தரையரும் சமகாலத்தில் புதுக்கோட்டை நிலப்பகுதியை ஆண்டனர் எனத் தெரிகிறது.
* [[நார்த்தாமலை]]க் கல்வெட்டு - விடேல் விடுகு முத்தரையன் மகனான சாந்தன் பழியிலியானவனின் மகள் பழியிலி சிறிய-நங்கை என்பவள், மீனவன் தமிழதிரையன் ஆயின மல்லன்அனந்தனை மணந்தாள் – என்று நார்த்தாமலை கல்வெட்டு கூறுகிறது. இதனால் மீனவனாகிய தென்னவனும், முத்தரையரும் சமகாலத்தில் புதுக்கோட்டை நிலப்பகுதியை ஆண்டனர் எனத் தெரிகிறது.
* குடுமியான் மலை கோயில் கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது.
* குடுமியான் மலை கோயில் கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது.

05:48, 24 மே 2020 இல் நிலவும் திருத்தம்

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சிலை, திருச்சி

முத்தரையர் என்பது, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்த அரச வம்சத்தில் ஒன்றாகும். முத்தரையர்கள் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களை கி.பி 600 முதல் கி.பி 900 வரை ஆட்சி செய்தனர். முத்தரைய குடியினர் இரண்டாம் நூற்றாண்டில் எருமைநாட்டில் இருந்துவந்து தமிழ் ராச்சியங்களை ஆக்கிரமித்தவர்களெனத் தமிழ் அறிஞர்கள் கருதுகின்றன. இந்த எருமைநாடு என்பது தற்கால கர்நாடகாவின் நவீன மைசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.[1] தமிழ் நூலான முத்தொள்ளாயிரத்தில் முத்தரையர் குடித்தலைவர்களைப் பற்றிய பாராட்டுத் தகவல்கள் காணப்படுகின்றன.[1] முத்தரையர்களுள் மிகப் பிரபலமான ஆட்சியாளர்களான பெரும்பிடுகு முத்தரையர் (கவுவன் மாறன்), மாறன் பரமேஸ்வரன் (இளங்கோவதிரையர்), இரண்டாம் பெரும்பிருகு முத்தரையர் ஆகியோராவர் என்றழைக்கப்படுகிறார்.[2][3]

7 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளில், முத்தரையர் பல்லவ வம்சத்தின் நிலப்பிரபுக்களாக, காவேரி ஆற்றின் வளமான சமவெளிகளைக் கட்டுப்படுத்தினர். காஞ்சிபுரத்தில் வைகுந்த பெருமாள் கோவிலில் ஒரு கல்வெட்டு ஒரு முத்தரைய அரசன் பற்றி கூறுகிறது. வரலாற்றாசிரியர் டி. ஏ. கோபினாதா ராவ் படி, இந்த அரசன் சுவரன் மாறன். இந்தக் கல்வெட்டில் "கள்வர் கள்வன்" என்று அழைக்கப்படுகிறார். சரித்திராசிரியர் மகாகலிங்கத்தின் கூற்றுப்படி, சுவரன் மாறன், பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனின் படைத் தலைவரான உதயச்சந்திராவுடன் சேர்ந்து சேரர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு எதிராக குறைந்தது பன்னிரண்டு போர்களில் ஈடுபட்டார்.[4] தஞ்சாவூர் மற்றும் வல்லம் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாக சுவரன் மாறன் செந்தலை கல்வெட்டு குறிப்பிடுகிறது. கிபி 850 களில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது விசயாலயச் சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றினான்.[5]

முத்தரையரின் தோற்றம்

முத்தரையரின் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. முத்தரையர் = மூன்று + தரையர் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென்ற களப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று மயிலை வேங்கடசாமி[6], டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் எஸ்.கே. அய்யங்கார் சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் களப்பிரர்களின் வழியில் வந்தவர்களே முத்தரையர் எனக் கொள்ள வேண்டும் என்கிறார்.

முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.[சான்று தேவை]

நாலடியார் பாடல் குறிப்பு

நாலடியார் பாடல்கள் முத்தரையரைப் பெருமுத்தரையர் எனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் சிறந்த கொடையாளிகளாக விளங்கினர்.[7] [8]

ஏரிகள்

மதுரம் ஏரி

ஆதித்ய சோழர் காலத்தி கீழ்செங்கிளிநாட்டை ஆண்ட ரணசிங்க முத்தரையரால் நீர்ப்பாசனம் குமிழ் (குமிழி) நிறுவப்பட்டது, இது மருதன் ஏரி நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்த புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டையில் கட்டப்பட்டுள்ளது.

கல்வெட்டுக் குறிப்புகள்

முத்தரையர் குறித்த கல்வெட்டுச் செய்திகள்:[9] [10]

  • நார்த்தாமலைக் கல்வெட்டு - விடேல் விடுகு முத்தரையன் மகனான சாந்தன் பழியிலியானவனின் மகள் பழியிலி சிறிய-நங்கை என்பவள், மீனவன் தமிழதிரையன் ஆயின மல்லன்அனந்தனை மணந்தாள் – என்று நார்த்தாமலை கல்வெட்டு கூறுகிறது. இதனால் மீனவனாகிய தென்னவனும், முத்தரையரும் சமகாலத்தில் புதுக்கோட்டை நிலப்பகுதியை ஆண்டனர் எனத் தெரிகிறது.
  • குடுமியான் மலை கோயில் கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது.
  • குவான் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி அரையன் மகனுமாகிய கவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் – என்பது தஞ்சாவூரை அடுத்துள்ள செந்தலை (சந்திரலேகை சதுர்வேதி மங்கலம்) கல்வெட்டு.
  • முத்தரைநல்லூர் – திருச்சியை அடுத்துள்ள ஊர்.
  • அங்காடி கொள்ளப்போம் யானை கண்டேன். கொங்காளும் முத்தரையர் தமைக் கண்டேன் – தமிழறியும் பெருமான் கதை.

கோவில்கள்

முத்தரையர்கள் ஆட்சிகாலத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுள் அறியப்பட்ட சில கோவில்கள்:

முத்தரையர் மன்னர்கள்

  1. தனஞ்சய முத்தரையர்
  2. பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (கி.பி.655-கி.பி.680)
  3. இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேஷ்வரன் (கி.பி.680-கி.பி.705)
  4. பெரும்பிடுகு முத்தரையர் II என்கிற சுவரன் மாறன் (கி.பி.705-கி.பி.745)
  5. விடேல்விடுகு சாத்தன் மாறன் (கி.பி.745-கி.பி.770)
  6. மார்பிடுகு என்கிற பேரடியரையன் (கி.பி.770-கி.பி.791)
  7. விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (கி.பி.791-கி.பி.826)
  8. சாந்தன் பழியிலி (கி.பி.826-கி.பி.851)

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Anthropological Survey of India. Bulletin, Volume 3, Issue 2. India. Dept. of Anthropology. பக். 8. 
  2. Ve Pālāmpāḷ (1978). Feudatories of South India, 800-1070 A.D.. Chugh Publications. பக். 135. 
  3. Naṭan̲a Kācinātan̲ (1978). Hero-stones in Tamilnadu. Arun Publications. பக். 20. 
  4. "9th century temple gets facelift" (in en). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/9th-century-temple-gets-facelift/article15211350.ece. 
  5. Indian History. Tata McGraw-Hill Education. பக். B55. 
  6. களப்பிரர் ஆட்சியில் தமிழகம், நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
  7. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
    கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்
    பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
    நீரும் அமிழ்தாய் விடும். 200

  8.  மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
    செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
    நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
    செல்வரைச் சென்றிரவா தார். 296

  9. கொங்கு மண்டல சதகம், பாடல் 39, முனைவர் ந ஆனந்தி உரை, பக்கம் 46, 47, 48
  10. முத்தரசர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தரையர்&oldid=2976092" இலிருந்து மீள்விக்கப்பட்டது