பயனர் பேச்சு:Neechalkaran: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நிருவாக அணுக்கம்: மின்னல் கருவி
அடையாளம்: 2017 source edit
வரிசை 451: வரிசை 451:
== மின்னல் கருவி- உதவி தேவை ==
== மின்னல் கருவி- உதவி தேவை ==
மின்னல் கருவியில் உள்ள வார்ப்புருவினைப் பயன்படுத்தும் போது அது ஆங்கிலத்தில் வந்தது. உதவிப் பக்கம் சென்று பார்த்த போது மின்னல் கருவியினை தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்த [Wikipedia:Twinkle/Localisation இங்கு] உங்கள் உதவி தேவை. நிர்வாக அனுக்கம் உள்ளவர்கள் செய்வது நலம் என அந்தப் பக்கத்தில் கூறியுள்ளனர். நன்றி [[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 14:23, 15 ஏப்ரல் 2020 (UTC)
மின்னல் கருவியில் உள்ள வார்ப்புருவினைப் பயன்படுத்தும் போது அது ஆங்கிலத்தில் வந்தது. உதவிப் பக்கம் சென்று பார்த்த போது மின்னல் கருவியினை தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்த [Wikipedia:Twinkle/Localisation இங்கு] உங்கள் உதவி தேவை. நிர்வாக அனுக்கம் உள்ளவர்கள் செய்வது நலம் என அந்தப் பக்கத்தில் கூறியுள்ளனர். நன்றி [[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 14:23, 15 ஏப்ரல் 2020 (UTC)
:{{ping|ஞா. ஸ்ரீதர்}} [[:en:Wikipedia:Twinkle/Localisation]] இங்கே உள்ளவை பெரும்பாலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எந்த வார்ப்புரு, எந்த ஆங்கிலச் சொல் என்று சுட்டுக்காட்டினால் அங்கே சென்று மொழி மாற்ற முயல்கிறேன். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:17, 15 ஏப்ரல் 2020 (UTC)

16:18, 15 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4
மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் இடும் பதில் எதிர்பார்க்கும் செய்திகளின் முக்கியத்துவம் கருதி உங்களுக்கு மின்னஞ்சலாகவோ, உங்கள் பேச்சுப் பக்கத்திலோ, இப்பக்கத்திலோ வந்து பதிலளிப்பேன். பிற செய்திகளுக்கு சம்பிரதாயப் பதிலுரையை அன்புடன் எதிர்பார்க்க வேண்டாம். நேரச் சேமிப்பே இக்கொள்கைக்கான காரணம்.

உதவி

வணக்கம் நீச்சல்காரன். தமிழ்க் கட்டுரையை விக்கித்தரவில் இணைக்கும்போது ஆ.வி கட்டுரையில் தமிழ்மொழி இணைப்பு மூன்று நாட்களாகத் தெரியவில்லை. சரிசெய்யவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 03:07, 22 சூலை 2017 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

வணக்கம் நீச்சல்காரன், தமிழகத்து இந்துக் கோயில்களின் பட்டியல் என்ற பெயரில் தனிக் கட்டுரை ஒன்று தானியக்கமாக உருவாக்க இயலுமா? நன்றி.--இரா. பாலாபேச்சு 03:31, 18 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

@Balurbala: உருவாக்கலாம் ஆனால் பகுப்பு:தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள் இங்குள்ளவற்றை எடுத்துப்பார்த்தால் அதிகமாகப் பக்கங்கள் உள்ளதால் அதிக பைட்டில் தனிப்பக்கம் உருவாக்க நேரும். மேலும் அவை சரியான பகுப்பில் இல்லாத கட்டுரைகளும் இடம்பெறக்கூடும் எனக் கணிக்கிறேன். இருந்தாலும் அப்பட்டியல் உதவுமென்றால் ஒரு பட்டியல் கட்டுரையை உருவாக்குகிறேன்-நீச்சல்காரன் (பேச்சு) 08:34, 22 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]
நன்றி. நேரம் கிடைக்கும்போது உருவாக்குங்கள். அவ்வாறான ஒரு பட்டியல் அவசியம் என்றே கருதுகிறேன்.--இரா. பாலாபேச்சு 06:59, 24 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

உதவி - ஊராட்சிக்கட்டுரைகள்

@Neechalkaran, Ravidreams, and Balurbala: பின்வரும் கேள்விகளுக்கு விடைகாண உதவுங்கள்

  1. //இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.// தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஊராட்சிகள் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளனவா இல்லை இது ஏதேனும் வழுவா?
  2. மங்கலம் - மங்களம் போன்ற மயங்கொலிப்பெயர்கள் எவ்வாறு இறுதி/உறுதி செய்யப்பட்டன?
  3. ஊராட்சி மன்றம், ஊராட்சி, ஊர், சிற்றூர் முதலியவற்றின் வரையறை/விளக்கம் ஏதேனும் உள்ளதா?
  4. டி. கல்லுப்பட்டி, டி. கல்விக்குடி போன்ற பெயர்கள் தமிழக அரசின் அலுவல்முறைப்பெயரா?
  5. சில ஊராட்சிகளின் பெயர்களுக்கு முன்னுள்ள எண் எதைக்குறிக்கின்றது (காட்டாக: 57 குலமாணிக்கம் ஊராட்சி)
  6. த. இ. க. ஊராட்சித் திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் மூலப்பட்டியல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெற்றது) தமிழிலுள்ளதா?

- ʋɐɾɯɳபேச்சு 18:09, 25 செப்டம்பர் 2017 (UTC)

புதுப்பயனர்கள் பங்கு

போட்டியில் விக்கிப்பீடியாவில் 50 தொகுப்புகள் செய்யாமல் போட்டியில் கலந்துக்கொண்ட பயனர்:மணி.கணேசன் போன்றவர்கள் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பது விதிமீறல் அல்லவா ---ஹிபாயத்துல்லா

பகுப்பு

திரைப்படங்கள் பற்றி ஆங்கில விக்கியில் கட்டுரை எழுதும்போது, ஆண்டையும் சேர்த்து தமிழ்த் திரைப்படம் எனத் தானாகவே பகுப்பு இட்டுவிடும். மேலதிகமாக பகுப்பு சேர்க்க விரும்பினால் மட்டுமே manual ஆக சேர்க்க வேண்டும். தமிழிலும் அப்படித் தானாக பகுப்பு சேர்க்க வழி செய்தால் நல்லது.--UKSharma3 உரையாடல் 02:24, 16 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

தானாகச் சேர்ப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. முயல்கிறேன் வாய்ப்பிருந்தால் சேர்த்துக் கொள்கிறேன்-நீச்சல்காரன் (பேச்சு) 11:03, 19 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

தானியங்கித் தொகுப்பு

வணக்கம், இவ்வாறான தானியங்கித் தொகுப்புகளை எவ்வாறு தவிர்ப்பது?--Kanags (பேச்சு) 23:16, 17 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

@Kanags: அறுபட்ட படங்களைத் தொடர்ந்து கண்காணித்து நீக்குகிறது. இதில் வழு இருந்தால் குறிப்பிடவும். சீர் செய்கிறேன் அல்லது இவ்வகை தானியக்கத்தை நிறுத்துகிறேன் -நீச்சல்காரன் (பேச்சு) 11:02, 19 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]
@Neechalkaran: நிறுத்தத் தேவையில்லை. ஆனால், மேற்குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள வரலாற்றைக் கவனியுங்கள். பயனர் ஒருவர் படிமத்தின் பெயரை விசமத்தனமாக மாற்றியிருந்தார். ஆனால், தங்கள் தானியங்கி அதனை விசமம் என அறியாமல் முழுவதையும் நீக்கியிருந்தது. இதனாலேயே குழப்பம். தொடர்ந்து கண்காணிக்காமல் வாரத்துக்கு ஒரு தடவை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் இயக்க முடியுமா?--Kanags (பேச்சு) 11:21, 19 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]
@Kanags:சிக்கல் தற்போது புரிகிறது. ஆனால் இயங்கும் கால இடைவெளியை அதிகரிப்பதால் இச்சிக்கல் நீங்கும் என்று கருதமுடியாது. அப்படி இயக்கினாலும் அந்த விசமத்தொகுப்பை யாரேனும் கண்காணித்து மாற்றாவிட்டால் தானியங்கி நீக்கியே விடும். இவ்வாறு பெரும்பாலான விசமத்தொகுப்புகளை விக்கிப்பீடியர்கள் கண்காணிக்க வாய்ப்ப்பில்லை எனும் போது நாம் எதுவும் செய்ய இயலாது. அவ்வாறு கண்காணிக்க வாய்ப்பிருக்கும் கட்டுரைகளை நீங்கள் மாற்றியது போல தானியங்கித் திருத்தத்தை மீளமைத்து மாற்றிக் கொள்ளலாம் என நினைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 12:36, 19 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டு ஊராட்சிகளின் பட்டியல் கொண்ட கோப்பு குறித்து

வணக்கம். விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழக ஊராட்சிகள் எனும் திட்டத்தின் மூலம் ஊராட்சிகளின் விக்கிபீடியா பக்கங்கள் உருவாக்கப்பட்டன. அதற்கு பயன்படுத்தப்பட்ட கோப்பாக [1] இந்த இணைப்பில் உள்ள கோப்பு விக்கிபீடியா பக்கங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. இந்த கோப்பில் உள்ளவற்றை Copy-Paste செய்தால் பிழையாக வருகிறது. இந்த கோப்பை எப்படி தரவேற்றினீர்கள். இந்த கோப்பின் XLS வடிவமோ, TXT வடிவமோ கிடைக்குமா?. நன்றி.

--பிரபாகரன் 12:09, 4 சனவரி 2018 (UTC)

https://github.com/neechalkaran/Panchayat இங்கே கோப்புள்ளது -நீச்சல்காரன் (பேச்சு) 13:33, 4 சனவரி 2018 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி! --பிரபாகரன் 13:48, 4 சனவரி 2018 (UTC)
மூல PDF கோப்பில் மக்கட்தொகை, ஊராட்சியில் உள்ள சிற்றூர்கள் பட்டியல், குடிநீர் இணைப்புகள் எண்ணிக்கை, ஊரணிகள் அல்லது குளங்கள் எண்ணிக்கை போன்ற அடிப்படை வசதிகளின் தகவல்கள் உள்ளன. இந்த தகவல்களும் ஊராட்சிகளின் விக்கிபீடியா பக்கங்களில் தரவேற்றப்பட்டுள்ளன. தாங்கள் பகிர்ந்த Google Sheetல் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மக்களவைத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி, மாவட்டம் ஆகிய தகவல்கள் மட்டும் உள்ளன. மக்கட்தொகை, ஊராட்சியில் உள்ள சிற்றூர்கள் பட்டியல், அடிப்படை வசதிகள் போன்ற தகவல்களும் XLS அல்லது TXT வடிவில் கிடைத்தால் உதவியாக இருக்கும். அவையும் XLS அல்லது TXT வடிவில் கிடைக்குமா?. --பிரபாகரன் 14:20, 4 சனவரி 2018 (UTC)
மன்னிக்கவும். அந்த தகவல்கள் கொண்ட வரிசைகள் மறைப்பாக(Hide) இருந்தன. சரியாக கவனிக்கவில்லை. --பிரபாகரன் 14:36, 4 சனவரி 2018 (UTC)

உதவி

யுரேனியம் பெண்டா அயோடைடு என்ற கட்டுரையை நீக்கிவிடவும். யுரேனியம் ஐயோடைடு என்ற பெயரில் ஒரு கட்டுரை ஏற்கன்வே உள்ளது.--கி.மூர்த்தி (பேச்சு) 07:08, 11 பெப்ரவரி 2018 (UTC)

Y ஆயிற்று--உழவன் (உரை) 07:53, 11 பெப்ரவரி 2018 (UTC)
@Info-farmer: ஏற்கனவே வழிமாற்றியாக அமைந்த பக்கத்தை நீக்கிவிட்டீர்கள். அதை மீளமைக்கவும்.-நீச்சல்காரன் (பேச்சு)
Y ஆயிற்று--கலை (பேச்சு) 11:55, 18 பெப்ரவரி 2018 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:46, 18 பெப்ரவரி 2018 (UTC)

வார்ப்புருவாக்கம் உருவாக்குதல்

வேங்கைத்திட்டம் போட்டி 2018 க்கான கட்டுரைகளை முன்பதிவு செய்வதற்கான வார்ப்புரு எவ்வாறு சேர்ப்பது என்பது பற்றிய விளக்கம் தரவேண்டுகிறேன். நன்றிDsesringp (பேச்சு) 10:43, 28 பெப்ரவரி 2018 (UTC)

வேங்கைத் திட்டம் கட்டுரைகளை பதிவேற்றம் செய்தல்

சிலந்தி மனிதன் கட்டுரையினை பதிவேற்றம் செய்ய இயலவில்லை. உதவி தேவை. நன்றிDsesringp (பேச்சு) 02:38, 2 மார்ச் 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அன்புள்ள நீச்சல்காரன்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 09:38, 10 மார்ச் 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 17:52, 18 மார்ச் 2018 (UTC)

Share your experience and feedback as a Wikimedian in this global survey

WMF Surveys, 18:19, 29 மார்ச் 2018 (UTC)

Reminder: Share your feedback in this Wikimedia survey

WMF Surveys, 01:17, 13 ஏப்ரல் 2018 (UTC)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

WMF Surveys, 00:27, 20 ஏப்ரல் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்

வணக்கம்.

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.

இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.

நன்றி.

இரவி 11:59, 1 மே 2018 (UTC)[பதிலளி]


தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

AppsWiki

Hi Neechalkaran, thank you for your tools. They are very usefull especialy Wikiconverter. But, I can't access to AppsWiki. Can you help me.--SADIQUI (பேச்சு) 18:28, 30 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

Please use link https://sites.google.com/site/tamilpointlab/appswiki . But it needs access for using as BOT with your gmail account. I can give access, please drop your emailid to neechalkaran at gmail dot com --நீச்சல்காரன் (பேச்சு) 07:13, 31 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
I sent a message to neechalkaran@gmail.com. My email is: abdellahsdiqui@gmail.com. Is this everything?.--SADIQUI (பேச்சு) 15:52, 1 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு

வணக்கம்.

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:20, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?

வணக்கம் நீச்சல்காரன். உங்கள் நுட்பப் பணிகள், துப்புரவுப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்னும் நோக்கில், நிர்வாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். உங்களுக்குச் சம்மதமா? --இரவி (பேச்சு) 15:13, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஏற்கிறேன். நிர்வாக அணுக்கம் உதவியாக இருக்கும்-நீச்சல்காரன் (பேச்சு) 15:36, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]
மிக்க மகிழ்ச்சி. முன்மொழிவை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி --இரவி (பேச்சு) 17:27, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

கோரிக்கை

வணக்கம், இப்புதுப்பயனர் கட்டுரை போட்டியைக் குறித்து அவரது பேச்சுப் பக்கத்தில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதைப் பற்றி அவரிடம் விளக்கமாக கூறவும். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:02, 12 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடையீர், வணக்கம். தங்களுக்கு, தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:11, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிருவாகியாகத் தேர்வானமைக்கு வாழ்த்துகள்

வணக்கம், நீச்சல்காரன். தை முதல் நாளாம் இன்று, தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் வேட்பு மனு செய்த ஆறு பேருக்கு முன்னுரிமை கொடுக்கும் காரணத்தால், உங்கள் நிருவாகப் பணிக் காலம் ஏப்ரல் 1, 2019 முதல் தொடங்கும். அது வரை விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி வழிகாட்டுதல்களைக் கவனித்து வருவதும் பயனுள்ளதாக இருக்கும், நன்றி. --இரவி (பேச்சு) 06:32, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தமிழர் திருநாள், நிருவாக அணுக்கம் இரண்டுக்கும் சேர்த்து மனம் நிறைந்த வாழ்த்துகள்--Kanags (பேச்சு) 08:15, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தமிழர் திருநாளில் புதிய நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். ஹிபாயத்துல்லா 10:02, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

சீனாவிலிருந்து மனம் நிறைந்த வாழ்த்துகள்!--நந்தகுமார் (பேச்சு) 11:55, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

(UTC)

உங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள். --கலை (பேச்சு) 17:04, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தங்கள் பயனர் கணக்குக்கு நிருவாகப் பணி மற்றும் இடைமுகப்புத் தொகுப்பாளர் பணிக்கான அணுக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. --இரவி (பேச்சு) 17:08, 5 ஏப்ரல் 2019 (UTC)

உதவி தேவை

கடந்த சில நாட்களாக விக்கிப்பீடியா:விக்கிதானுலவி கருவியில் புகுபதிகை செய்ய முடியவில்லை. என்ன காரணம்?--Kanags (பேச்சு) 04:42, 17 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Kanags: போதிய தகவல்களுடன் en:Wikipedia_talk:AutoWikiBrowser/Bugs#error_connecting இங்கே வழு பதியுங்கள்.-நீச்சல்காரன் (பேச்சு) 10:36, 17 சனவரி 2019 (UTC)[பதிலளி]
இப்போது வேலை செய்கிறது. கடவுச்சொல் குறைந்தது 10 எழுத்துகளில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மாற்றிய பின்னர் இப்போது வேலை செய்கிறது. நன்றி.--Kanags (பேச்சு) 22:00, 17 சனவரி 2019 (UTC)[பதிலளி]

சந்தேகம்

வணக்கம் நீச்சல்காரன், தானியங்கியால் உருவாக்கப்பட்ட ஊராட்சி கட்டுரைகளில், _____ வட்டாரத்தில் அமைந்துள்ளது என்னும் இடத்தில் பலக்கட்டுரையில் சிகப்பு இணைப்புகளே காணப்படுகிறது. அந்த இடத்தில் [2] இந்த மாதிரி மாற்ற தானியங்கியால் முடியுமா?? உதாரணமாக:அந்த இடத்தில் (பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம்|பொங்கலூர்) என மாற்ற வேண்டும். இந்த மாதிரி ஒவ்வொரு கட்டுரைகளிலும், அந்த வட்டாரத்திற்கு ஏற்ப தானியங்கியால் மாற்ற முடியுமா?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:41, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஆமாம், கட்டுரை உருவான காலத்தில் ஒன்றியக் கட்டுரை இல்லை ஆனால் தற்போதுள்ளதால் செய்ய முடியும். ஆய்வு செய்து பார்க்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 10:31, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:43, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]

உதவி

வணக்கம்! 1918 - 1975 காலகட்டத்தில் வெளியான தமிழ்த் திரைப்படங்களுக்கான கட்டுரைகளில் சான்று சேர்க்கும் திட்டத்தை ஆரம்பித்து ஏற்கனவே பங்களித்து வருகிறேன். இக்கட்டுரைகளில் சான்றில்லை வார்ப்புரு இடப்பட்டுள்ள கட்டுரைகளின் பட்டியலை தானியங்கி முறையில் தயாரித்துத் தர இயலுமா? (உதவிக் குறிப்பு: ஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள் எனும் தாய்ப் பகுப்பு இருக்கிறது. அதனுள் ஒவ்வொரு ஆண்டிற்குமென சேய் பகுப்புகள் உள்ளன)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:44, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மேற்கோள் இல்லாத 1975 வரையிலான தமிழ்த்திரைப்படங்களின் பட்டியலை இட்டுள்ளேன். இதில் மாறுதல்கள் வேண்டினாலும் தயங்காமல் கேளுங்கள் -நீச்சல்காரன் (பேச்சு) 11:27, 21 சனவரி 2019 (UTC).[பதிலளி]

அருமை; நன்றிகள்! அகர வரிசையில் அமைந்துள்ள இந்தப் பட்டியலை மூலமாகக் கொண்டு செயலைத் தொடர்கிறேன்.

  • ஒரு சில கட்டுரைகளில் மேற்கோள் சேர்த்தபிறகு, வார்ப்புருவை நீக்கவில்லை. அவற்றைப் பார்வையிட்டு, உரிய மேற்கோள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்த பிறகு வார்ப்புருவை நீக்குகிறேன்.
  • அடுத்த கட்டமாக, வார்ப்புரு இடப்படாமலும் 'மேற்கோள் இல்லாத கட்டுரைகள்' இருக்கலாம். இந்தப் பட்டியலை தயாரிக்க இயலுமா எனப் பாருங்கள். பொறுமையாகச் செய்யலாம்; அவசரமில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:58, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]

உங்களின் சோதனைப் பக்கத்தை வேறொரு கண்ணோட்டத்தில் தவறுதலாக இன்னொரு தலைப்பிற்கு நகர்த்தினேன். அதன்பிறகு மீளமை செய்ய முயற்சி செய்தேன். ஆனால் மறுக்கிறது. உரியன செய்து கொள்ளுங்கள்; சிரமத்திற்கு வருந்துகிறேன். இப்போது... எனது பயன்பாட்டிற்காக copy & paste செய்துகொண்டுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:26, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பரவாயில்லை. பயனர் வெளியில் உள்ள பக்கத்தை அதிகாரி அணுக்கம் இருந்தால்தான் மாற்ற இயலும் என அறிகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு)

வணக்கம் நீச்சல்காரன். விக்கிப்பீடியா:Statistics/weekly இற்றையாகாமல் உள்ளது. கவனிக்கவும்--கி.மூர்த்தி (பேச்சு) 11:22, 13 பெப்ரவரி 2019 (UTC)

Y ஆயிற்று நன்றி-நீச்சல்காரன் (பேச்சு) 13:40, 13 பெப்ரவரி 2019 (UTC)

விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/பங்கேற்பாளர்கள் பட்டியல்

புதிதாகப் போட்டியில் இணையும் சிலர், தமது பெயரைப் பதிவு செய்யும்போது, ஏற்கனவே உள்ள பட்டியலை நீக்கிவிடுகின்றார்கள். புதியவர்களாதலால், சரியாகத் தெரியவில்லையென நினைக்கின்றேன். அவ்வாறு சில தவறான தொகுப்புக்கள் தொடர்ந்து நிகழும்போது, சரியான தொகுப்புக்கு (அதாவது 3, 4 படிநிலைகள் முன்னால் சென்று) மீளமைப்பது எப்படி? இங்கே பார்த்தீர்கள் என்றால் தெரியும். முதலில் யாரோ ஒருவர் தவறான தொகுப்பைச் செய்துவிட்டார் என்று எண்ணி, நான் தொகுப்பை முன்னிலையாக்கம் செய்தேன். ஆனால், அது மீண்டும் தவறான ஒரு தொகுப்புக்கே மீள வந்தது. பின்னர் சரியான பக்கத்திற்குச் சென்று வெட்டி ஒட்டினேன். அப்போது இடைவெளிகளை வெட்டி அகற்ற நீண்ட நேரம் செலவு செய்யவேண்டி இருந்தது. நான் அதைச் செய்து முடிப்பதற்குள் மீண்டும் ஒருவர், தவறான தொக்குப்பைச் செய்திருந்தார். எனவே நீண்ட நேரத்தின் பின்னர் எல்லாவற்றையும் சரிசெய்து, பழைய நிலைக்குக் கொண்டு வந்தேன். புதிதாக பதிவு செய்தவர்களையும் தற்போது பட்டியலில் இணைத்துவிட்டேன். ஆனால், இவ்வாறு நீண்ட நேரம் செலவளிக்காமல், பழைய ஒரு தொகுப்புக்கு நேரடியாகக் கொண்டு செல்ல வழியுண்டா? அதாவது இரணு மூன்று பேர், தவறுக்கு மேல் தவறாகத் தொகுப்புக்களைச் செய்யும்போது, சரியான பழைய தொகுப்புக்கு மீளமைப்பது எப்படி? பழைய சரியான தொகுப்பில் மீளமை என்பதை அழுத்திப் பார்த்தேன். அதுவும் சரிவரவில்லை.

மேலும், இந்தப் பக்கத்தின் மேல் பகுதியில், கீழ்வருமாறு உள்ளது. இது என்ன என்பதும் எனக்குப் புரியவில்லை. புதியவர்களாலும் புரிந்து கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. தயவுசெய்து விளக்க முடியுமா?

அல்லது
{{{{SAFESUBST:REVISIONUSER}}}}
என்ற இந்த குறியீட்டை கீழுள்ள பட்டியலில் இட்டுச் சேமிக்கவும். --கலை (பேச்சு)
@Kalaiarasy: பயனர் பெயரில் நுழையாமல் ஐபியில் வந்து பெயரைப் பதிந்தால் அவற்றை நீக்கலாம். தற்போது சீராக்கியுள்ளேன். எந்த உள்ளீடும் இல்லாமல் வெறுமன வரும் பக்கத்தைச் சேமித்தாலே கையெழுத்து வரும்வகையில் வார்ப்புரு மூலம் செய்யமுடியும் அதற்காக இந்தத் திருத்தம் செய்தேன் ஆனால் புதியவர்களுக்குக் குழப்பும் என மாற்றப்பட்டது. எனவே குறைந்தபட்சம் இந்த SAFESUBST:REVISIONUSER என்ற நிரலை இட்டுச் சேமித்தால் தானாகப் பயனர்பெயராக மாறிவிடும். எந்தப்பெயர் எந்த எழுத்து என்ற குழப்பம் இல்லாமல் இருக்கும். சிலர் இதனைப் பயன்படுத்திப் பதிகிறார்கள் அதனால் அவற்றை மேற்குறிப்பில் இட்டுள்ளேன். நேரடியாக 3,4 படிநிலையில் சேமிக்கமுடியும் என்று நினைக்கிறேன் ஆனால் அதற்கான அணுக்கம் எனக்கில்லை என்பதால் சரியாகத் தெரியவில்லை. நிர்வாக அணுக்கம் கொண்டவர்கள் உதவலாம்-நீச்சல்காரன் (பேச்சு) 13:47, 23 பெப்ரவரி 2019 (UTC)
நன்றி! உங்களுக்கு அணுக்கம் கிடைத்துவிட்டதென நினைத்தேன். Kangs இடம் கேட்கின்றேன். --கலை (பேச்சு) 14:52, 23 பெப்ரவரி 2019 (UTC)

"பிட்காயின் வரலாறு" படம் நீக்கம்

வணக்கம். "பிட்காயின் வரலாறு" என்ற கட்டுரையில் இணைக்கப் பட்டிருந்த படம் "பிட்காயின்பரிமாற்றம்.png"

படிமம்:பிட்காயின்பரிமாற்றம்.png

நீக்கப் பட்டுள்ளது.

கீழ்க் கண்ட குறிப்பு கொடுக்கப் பட்டுள்ளது:

22:26, 6 மார்ச் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை) NeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்) (அறுபட்ட கோப்பை நீக்குதல்)

படத்தில் ஏதேனும் கோளாறு இருந்ததா? நன்றி. Paramesh1231 (பேச்சு)

@Paramesh1231: ஆம், பதிப்புரிமை மீறப்பட்டதால் அப்படிமம் நீக்கப்பட்டுள்ளது.--Kanags (பேச்சு) 08:00, 7 மார்ச் 2019 (UTC)


வார்ப்புருக்கள் தொடர்பாக உதவி தேவை

வார்ப்புரு:மனித உடற்தொகுதிகளும் உறுப்புகளும், தொகுப்பு வார்ப்புரு:உடற்கூற்றியல் ஆகிய இரு வார்ப்புருக்களும் ஒரே விடயத்தைக் கொண்டிருக்கின்றன. எனவே விரிவாக உள்ள இரண்டாம் வார்ப்புருவை வைத்துக் கொண்டு முதலாவதை நீக்கலாம் என நினைக்கின்றேன். அவ்வாறு நீக்கும்போது, அந்த வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளில் எல்லாம் சிவப்பிணைப்புத் தோன்றும்தானே, இந்தப் பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம்?--கலை (பேச்சு) 14:12, 23 மார்ச் 2019 (UTC)

நிருவாக அணுக்கம் பெற்றுக் கொண்டமைக்கு முதலில் வாழ்த்துகள். இந்த விடயம் பற்றிப் பார்த்தீர்களா?--கலை (பேச்சு) 14:41, 7 ஏப்ரல் 2019 (UTC)
@Kalaiarasy:, மன்னிக்கவும் கவனிக்கவில்லை. முதல் வார்ப்புருவை நீக்காமல் வழிமாற்றி இரண்டாம் வார்ப்புருவிற்குமாற்றி விடுங்கள். அல்லது முதல் வார்ப்புரு உள்ள கட்டுரைகளில் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும். -நீச்சல்காரன் (பேச்சு) 15:42, 7 ஏப்ரல் 2019 (UTC)

உதவி

நான் துடுப்பாட்டம் தொடர்பான சான்றுகள் இல்லாத கட்டுரைகளில் சான்றுகள் சேர்க்க என்னுகிறேன். எனக்கு இரண்டு பகுப்புகளில் உள்ள ஒரே கட்டுரைகளின் பெயரைப் பார்ப்பதற்கு ஏதேனும் வழிகள் உள்ளதா என்பதைக் கூறவும். (உதாரணமாக சச்சின் டெண்டுல்கர் எனும் கட்டுரை துடுப்பாட்டம் மற்றும் சான்றில்லை ஆகிய இரு பகுப்புகளில் இருந்தால் ) எளிதாக இருக்குமல்லவா. நன்றி ஸ்ரீ (talk) 05:05, 13 மே 2019 (UTC)[பதிலளி]

இதற்கு https://petscan.wmflabs.org/ கருவி உள்ளது. ஒப்பிட்டுப் பார்க்கும் இரு பகுப்பைக் கொண்டு அதனுள்ளே உள்ள கட்டுரைகளைப் பட்டியலிடும். Language என்பதை ta எனக் கொடுத்து, Categories என்பதில் தேவைப்படும் பகுப்புகளை வரிக்கு ஒன்றாகக் கொடுக்கவும், உதா) துடுப்பாட்டம் மற்றும் மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள். Combination என்பது இங்கே Subset. Depth என்பது எத்தனை உட்பகுப்புகளைக் கணக்கில் கொள்ளும் எண் என்பதால் 2 எனக் கொடுக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:05, 13 மே 2019 (UTC)[பதிலளி]

தகவல்களுக்கு நன்றி. இது உபயோகமாக உள்ளது. தற்போது சான்றுகள் சேர்த்து வருகிறேன். நன்றி ஸ்ரீ (talk) 06:31, 14 மே 2019 (UTC)[பதிலளி]

'பேசி' வகைகள்

தொலைக்காட்சி (தொலை + காட்சி) என்ற சொல்லில் ஒற்று மிகவேண்டும் ஏனென்றால் 'தொலை' என்ற சொல்லும் 'காட்சி' என்ற சொல்லும் இரண்டுமே பெயர்ச்சொற்கள் தான். ஆனால் 'பேசி' என்று முடியும் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது. ஏன்? 'பேசி' என்ற சொல் 'பேசு' என்ற வினைச்சொல்லை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும். அதே போன்று 'வழிகாட்டி' (வழி + காட்டி) என்ற பெயர்ச்சொல்லில், 'வழி' என்ற சொல் பெயர்ச்சொல்லாக இருப்பினும், 'காட்டி' என்ற சொல் 'காட்டு' என்ற வினைச்சொல்லை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும். இதனால், வல்லினம் மிகாது. இன்னொரு உதாரணம், 'மொழிபெயர்ப்பு' (மொழி + பெயர்ப்பு) என்ற சொல்லில், 'மொழி' என்ற சொல்லுக்கும் 'பெயர்ப்பு' என்ற சொல்லுக்கும் இடையில் வல்லினம் மிகாது. ஏனெனில், 'மொழி' என்ற சொல் பெயர்ச்சொல்லாக இருப்பினும், 'பெயர்ப்பு' என்ற சொல் 'பெயர்' என்ற வினைச்சொல்லை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும். 'பெயர்' என்பது மாறும் நிகழ்வைக் குறிக்கும் சொல்லாகும்.

நீங்கள் மேற்கூறிய சொற்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்றால் https://ta.oxforddictionaries.com/ என்ற இணையத்தளத்தில் இவ்வாறான சொற்களைத் தேடிப் பார்க்கலாம். நன்றி!

உடைந்த மேற்கோள்கள்

பகுப்பு:உடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள் எனும் பகுப்பில் உள்ள கட்டுரைகளில் அனைத்திலும்

வார்ப்புரு:Cite web|cite web வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."".

இந்த பிழைச்சொல் வருகிறது. இதற்கு அந்த சான்றில் title = , url = ஆகிய இரு பகுதிகளை தற்போது manual ஆக செய்து வருகிறேன். இதற்கு தங்களால் ஏதேனும் bot உருவாக்க இயலுமா? நன்றி ஸ்ரீ (talk) 14:57, 10 சூலை 2019 (UTC)[பதிலளி]

பெரும்பாலான கட்டுரைகளில் Refill கருவி மூலம் இதனைத் தானியங்கியாக சேர்க்க முடியும்.--Kanags \உரையாடுக 23:38, 10 சூலை 2019 (UTC)[பதிலளி]
நன்றி @Kanags:அதனை எவ்வாறு பயன்படுத்துவது எனக் கூற இயலுமா? ஸ்ரீ (talk) 01:48, 11 சூலை 2019 (UTC)[பதிலளி]
[3] இந்த இணைப்பின் மூலம் நீங்கள் பயன்படுத்தலாம். அல்லது கட்டுரையைத் திறந்து, இடப்பக்கத்தில் தெரியும் Refill ஐ அழுத்தித் தெரிவு செய்யலாம். உதவி: [4].--Kanags \உரையாடுக 01:55, 11 சூலை 2019 (UTC)[பதிலளி]
@ஞா. ஸ்ரீதர்: சில மாதிரிக் கட்டுரைகளைச் சோதித்ததில் ரீபில் கருவி இத்தகைய வழுக்களை நீக்குமா என ஐயமுள்ளது. முயன்றுபாருங்கள். தீர்வு கிடைக்காவிட்டால் NeechalBOT வழியாகத் தானியக்கத்தில் இதைச் செய்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:16, 11 சூலை 2019 (UTC)[பதிலளி]

இன்று ஆறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை முயன்று பார்த்தேன். no difference என வந்தது நான்கு தேர்வுகளைப் பயன்படுத்துய பிறகும் இதே பிழை வருகிறது. தங்களால் இயன்றால் கருவி உருவாக்கவும். அது எதிர்காலத்தில் இவ்வாறான கட்டுரைகள் உருவாகாமல் தடுக்கும்.அதுவரை நான் manual ஆக நீக்குகிறறேன். நன்றி ஸ்ரீ (talk) 13:25, 11 சூலை 2019 (UTC)[பதிலளி]

Project Tiger 2.0

Sorry for writing this message in English - feel free to help us translating it


mass message

வணக்கம் நீச்சல்காரன் ,கீழ்கண்டவற்றை அனைத்து விக்கிப் பயனர்களுக்கும் அனுப்பி உதவவும் நன்றி. இதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் திருத்தவும் நன்றி ________________________________________________

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

விதிகள்

சுருக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். ஒவ்வொரு போட்டிக் கட்டுரையும், (வார்ப்புரு, தகவற் பெட்டி, உசாத்துணை, மேற்கோள் போன்ற பகுதிகள் நீங்கலாக.) குறைந்தது300 சொற்களையும், 9000 பைட்டுகள் அளவு கொண்டதாகவும் அமைய வேண்டும். வார்த்தைகள், பைட்டுகளைச் சரிபார்க்க நீச்சல்காரனின் சுளகு கருவியினைப் பயன்படுத்தலாம்.

பரிசுகள்

  • ஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும்/விரிவாக்கும் முதல் மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும். இவை 3,000 INR, 2000 INR, மற்றும் 1,000 INR மதிப்புடையனவாக அமையும்.
  • மூன்று மாதங்களின் முடிவில், கூடுதலாக கட்டுரைகளை உருவாக்கியுள்ள விக்கிப்பீடியா சமூகத்துக்குப் மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

உதவி

நர்வா என்ற புதிய கட்டுரையை எழுதினேன். Fountain கருவியில் எழுத்துகளின் எண்ணிக்கை 0 ஆக உள்ளது. கட்டுரையை திறக்கும் போது வெற்றிடமாக உள்ளது. உதவவும்— Fathima (பேச்சு) 14:03, 14 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

@Fathima rinosa: அங்கே உள்ள Weather box வார்ப்புருவில் சிக்கல் இருக்கிறது என நினைக்கிறேன். அதை நீக்கியபிறகு எண்ணிக்கை(219 சொற்கள்) காட்டுகிறது, இதனை மேம்படுத்தி சமர்ப்பிக்கலாம். தற்போதைக்கு வார்ப்புருவை விட்டுவிடுங்கள்-நீச்சல்காரன் (பேச்சு) 14:33, 14 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி.. Fathima (பேச்சு) 14:51, 14 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

தங்கள் கவனத்திற்கு

தங்கள் கவனத்திற்கு , பார்க்க - https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(தொழினுட்பம்)#விக்கிதானுலவி_பயன்படுத்தி_மாற்றங்கள்_செய்ய_கோரிக்கை_/_Changes_using_Auto_Wiki_Browser --Commons sibi (பேச்சு) 11:43, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:04, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி

வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:52, 4 சனவரி 2020 (UTC)[பதிலளி]

பதக்கம்

மெய்வாழ்வுப் பதக்கம்
கருவிகளின் மூலமாக நமது தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியச் சமூகத்திற்கே வேங்கைத் திட்டம் 2.0 வில் உதவியதற்காககவும் பல நிகழ்வுகள் மூலமாக பல புதிய பயனர்களை போட்டி காலத்தில் ஈடுபடச் செய்தமைக்காகவும் இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி --ஸ்ரீ (✉) 17:38, 15 சனவரி 2020 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--அருளரசன் (பேச்சு) 02:01, 16 சனவரி 2020 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:34, 17 சனவரி 2020 (UTC)[பதிலளி]

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:34, 17 சனவரி 2020 (UTC)[பதிலளி]

நிருவாக அணுக்கம்

நிருவாக அணுக்கம் ஒரு ஆண்டு நீட்டித்துள்ளேன். தொடர்ந்து சிறப்புடன் செயற்பட வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 17:43, 19 சனவரி 2020 (UTC)[பதிலளி]

மின்னல் கருவி- உதவி தேவை

மின்னல் கருவியில் உள்ள வார்ப்புருவினைப் பயன்படுத்தும் போது அது ஆங்கிலத்தில் வந்தது. உதவிப் பக்கம் சென்று பார்த்த போது மின்னல் கருவியினை தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்த [Wikipedia:Twinkle/Localisation இங்கு] உங்கள் உதவி தேவை. நிர்வாக அனுக்கம் உள்ளவர்கள் செய்வது நலம் என அந்தப் பக்கத்தில் கூறியுள்ளனர். நன்றி ஸ்ரீ (✉) 14:23, 15 ஏப்ரல் 2020 (UTC)

@ஞா. ஸ்ரீதர்: en:Wikipedia:Twinkle/Localisation இங்கே உள்ளவை பெரும்பாலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எந்த வார்ப்புரு, எந்த ஆங்கிலச் சொல் என்று சுட்டுக்காட்டினால் அங்கே சென்று மொழி மாற்ற முயல்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 16:17, 15 ஏப்ரல் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Neechalkaran&oldid=2952488" இலிருந்து மீள்விக்கப்பட்டது