எல்லா பேக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-, அமெரிக்கா +, ஐக்கிய அமெரிக்கா)
வரிசை 2: வரிசை 2:
|birth_name = எல்லா பேக்கர்
|birth_name = எல்லா பேக்கர்
|birth_date = 13, 1903
|birth_date = 13, 1903
|birth_place = [[நார்போரக்]], [[அமெரிக்கா]]
|birth_place = [[நார்போரக்]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|ஐக்கிய அமெரிக்கா]]
|death_date = 13, 1986
|death_date = 13, 1986
|death_place = [[நியூயார்க்]], [[அமெரிக்கா]]
|death_place = [[நியூயார்க்]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|ஐக்கிய அமெரிக்கா]]
|alma mater = [[ஷா பல்கலைக்கழகம்]]
|alma mater = [[ஷா பல்கலைக்கழகம்]]
|image =
|image =

16:31, 25 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

எல்லா பேக்கர்
பிறப்புஎல்லா பேக்கர்
13, 1903
நார்போரக், ஐக்கிய அமெரிக்கா
இறப்பு13, 1986
நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்ஷா பல்கலைக்கழகம்

எல்லா பேக்கர் (Ella Josephine Baker, டிசம்பர் 13, 1903 - டிசம்பர் 13, 1986) கறுப்பின மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். இவர் நார்போரக் நகரில் பிறந்தார். இளம் வயதிலேயே கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறை தகர்க்கப்பட வேண்டும், வெள்ளையர்க்கு நிகராகக் கறுப்பின மக்களும் பார்க்கப்பட வேண்டும் என்று நினைத்தார்.

1927ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தவுடன் நியூயார்க் நகரில் குடி பெயர்ந்தார். 1940ல் எல்லா 'இளம் நீக்ரோக்களுக்கான கூட்டுறவுக் கழகத்தில்' சேர்ந்து கறுப்பின மக்களின் பொருளாதார முன்னேற்றம், அரசியல், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கான முக்கிய திட்டங்களைக் கொண்டு வந்தார். 1904ல் கறுப்பின மக்களுக்கான தேசிய முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, அதன் செயலாளராகவும் பல்வேறு கிளைகளின் இயக்குனராகவும் பணியாற்றினார். 1946ல் நியூயார்க் நகரப் பள்ளிகளில் கறுப்பினக் குழந்தைகளும் வெள்ளையர் குழந்தைகளுக்கு நிகரான கல்வி கற்பதற்காகப் போராடினார். 1957ல் அட்லாண்டா நகருக்குச் சென்று மார்டின் லூதர் கிங்யின் 'தென் கிறித்துவர்களின் தலைமை மாநாட்டை' முன்னின்று நடத்தினார். 1960ல் 'மாணவ சத்யாகிரக ஒருங்கிணைப்பு சபை' என்ற அமைப்பை உருவாக்கி வெள்ளையர்க்கு எதிராகச் செயல்படும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். தன் வாழ்நாள் முழுவதும் கறுப்பின மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார். 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் நாள், தன் 83 ஆவது பிறந்த நாளில் இறந்தார். 2009 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு அவர் நினைவாகத் தபால் தலை வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லா_பேக்கர்&oldid=2918729" இலிருந்து மீள்விக்கப்பட்டது