"முடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
608 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→‎விவரிப்பு: விரிவாக்கம்)
 
==விவரிப்பு==
ஒவ்வொரு மயிரிழையும் அகணி, புறணி, புறத்தோல் பகுதிகளைக் கொண்டதாகும்<ref name="Hair Structure and Hair Life Cycle">[http://www.follicle.com/hair-structure-life-cycle.html Hair Structure and Hair Life Cycle]</ref>. உள்ளார்ந்தப் பகுதியான ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை<ref name="How Does Hair Grow?">[http://www.hairlosshelp.com/hair_loss_research/hair.cfm "How Does Hair Grow?"] Web. 09 Feb. 2010</ref><ref name="Topic 2: The Layers of the Hair">[http://www.texascollaborative.org/hildasustaita/module%20files/topic2.htm Topic 2: The Layers of the Hair]</ref>. உயர் வடிவமும், ஒருங்கமைவுமுள்ள புறணி (அல்லது முடியின் மைய அடுக்கானது) வலுவிற்கும், நீர் உறிஞ்சுவதற்கும் மூலமாக உள்ளது. புறணியில் மெலனின் என்னும் நிறமிப் பொருள் உள்ளது. இதன் எண்ணிக்கை, பரவல், மெலனின் குருணைகளின் வகைகளின் அடிப்படையில் முடி இழைகளின் வண்ணம் வேறுபடுகிறது. அதாவது யூமெலனின் என்ற நிறமி மூலம் பழுப்பு, கறுப்பு போன்ற நிறங்களில் நிறங்களில் முடி அமைகிறது. பியோமெலனின் என்ற நிறமி மூலம் சிவப்பு போன்ற நிறங்கள் கொண்ட அமைகிறது. நிறமியே இல்லா நிலை ஏற்படும்போது முடி வெள்ளையாக மாறிவிடுகிறது.<ref>[https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/540292-tinkuvidam-kelungal-2.html முடி ஏன் கறுப்பாக இருக்கிறது, டிங்கு?, இந்து தமிழ், 2020 பெப்ரவரி 19 ]</ref> மயிர்க்குமிழ்களின் வடிவம் புறணியின் வடிவத்தை வரையறுக்கிறது. நீளமான அல்லது சுருண்ட முடியைப் பொருத்து மயிரிழைகளின் வடிவம் மாறுபடுகிறது. நீளமான முடியை உடையவர்களின் மயிரிழைகள் வட்டவடிவமாக உள்ளது. நீள் வட்டம் அல்லது பிற வடிவங்களில் மயிரிழைகளைக் கொண்டவர்களின் முடிக்கற்றைகள் அலைஅலையாகவோ, சுருண்டதாகவோக் காணப்படுகிறது. புறத்தோல் வெளிப்புறத்தை மூடிக்கொண்டுள்ளது.
புறத்தோலின் சிக்கலான வடிவமைப்பு கொழுமிய ஒற்றை மூலக்கூறுகளாலானதால் முடி வீங்கும்போது நழுவும் தன்மையை ஏற்படுத்துகிறது. மேலும், இதனால் முடிக்கு நீரை விலக்கும் தன்மை உருவாகிறது<ref name="Hair Structure and Hair Life Cycle"/>. மனித முடியின் குறுக்களவு 0.017-0.18 மில்லிமீட்டர் (0.00067 - 0.00709 அங்குலம்) அளவில் வேறுபட்டு காணப்படுகிறது<ref>{{cite web |last=Ley |first=Brian |title=Diameter of a Human Hair |year=1999 |url=http://hypertextbook.com/facts/1999/BrianLey.shtml |accessdate=28 June 2010 |archiveurl=https://www.webcitation.org/5qpTnR6HP?url=http://hypertextbook.com/facts/1999/BrianLey.shtml |archivedate=28 June 2010 |deadurl=yes |df=dmy-all }}</ref>. இரண்டு மில்லியன் நுண்குழலியச் சுரப்பிகளும், வியர்வைச் சுரப்பிகளும் நீர்மத் திரவங்களை சுரப்பதனால் ஆவியாதல் முறையில் உடல் குளிர்ச்சியாகிறது. மயிரிழைத் தொடங்கும் பகுதியில் உள்ள சுரப்பிகள் சுரக்கும் கொழுப்புப் பொருள்கள் முடிக்கு உயவூட்டுகின்றன<ref>{{cite book |title=Disease and Its Causes |year=1913 |publisher=New York Henry Holt and Company London Williams and Norgate The University Press, Cambridge, USA |location=United States |author=Councilman, W. T. |chapter=Ch. 1}}</ref>.
 
==இயற்கை வண்ணம்==
[[File:Brown hair.jpg|thumb|கருமையான பொன்னிற முடியுடையப் பெண். முடியின் அடிப்பகுதியில் அதிகளவு யூமெலனின் பழுப்பு நிற நிறமிகள் உள்ளதால் பழுப்பு நிறமாக காட்சியளிக்கிறது.]]
முடியின் எல்லா வண்ணங்களும் இரண்டு வகையான முடி நிறமிப் பொருள்களைப் பொருத்தே அமைகிறது. இந்த இருவிதமான மெலனின் நிறமிகளும் மயிர்க்கால்களில் உருவாக்கப்பட்டு மயிரிழைகளில் காணப்படும் குருணைகளில் உள்ளன. பழுப்பு நிற, கருப்பு முடிகளில் யூமெலனின் என்னும் நிறமி முதன்மையாக உள்ளது. சிவப்பு முடிகளில் பியோமெலனின் என்னும் நிறமி முதன்மையாக உள்ளது. வெண்பொன்னிற மயிர் நிறமிப் பொருள்கள் இல்லாததால் உருவாகிறது.<ref>[https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/540292-tinkuvidam-kelungal-2.html முடி ஏன் கறுப்பாக இருக்கிறது, டிங்கு?, இந்து தமிழ், 2020 பெப்ரவரி 19 ]</ref> சாம்பல் நிற மயிர் மெலனின் தயாரிப்பு குறைவதாலோ அல்லது முற்றிலும் நின்றுவிடுவதாலோ உண்டாகிறது.
 
==மனித முடி வளர்தல்==
6,331

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2916798" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி