தாஜ் மகால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,011 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
[[படிமம்:Mumtaz Mahal.jpg|thumb|left|150px|மும்தாஜைக் காட்டும் படம்]]
1631 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசின் உயர்நிலையில் அப்பேரரசை ஆண்ட ஷா ஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஜ், அவர்களது 14 ஆவது பிள்ளையான [[குகாரா பேகம்]] பிறந்தபோது இறந்துவிட்டாள். பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவே அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஜ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின. முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், [[பூங்கா]] ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின. பேரரசன் ஷாஜகானே இக் கட்டிடத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகின்றது: {{citation needed}}
 
: ''<small>"குற்றம் செய்தவன் இதனைத் தஞ்சம் அடைந்தால், மன்னிக்கப்பட்டவனைப் போல் அவன் தனது பாவங்களிலிருந்து விடுதலை பெறுவான். ஒரு பாவி இந்த மாளிகைக்கு வருவானேயானால், அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இதனைக் காணும்போது துயரத்துடன் கூடிய பெருமூச்சு உண்டாகும். சூரியனும், சந்திரனும் கண்ணீர் வடிப்பர். படைத்தவனைப் பெருமைப் படுத்தவே இக்கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது".</small>''{{irrel}}
 
தாஜ்மகால், [[பாரசீகக் கட்டிடக்கலை]] மரபுகளையும், முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும், அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது. சிறப்பாக, தைமூரிய, முகலாயக் கட்டிடங்களான ஸ்ள்ள [[தைமூரின் சமாதி]], [[ஹுமாயூன் சமாதி]], ஷா ஜகான் கட்டுவித்த, டெல்லியில் உள்ள [[ஜமா மஸ்ஜித் (டெல்லி)|ஜமா மஸ்ஜித்]] ஆகிய கட்டிடங்கள் இதன் வடிவமைப்புக்கு அடிப்படையாக அமைந்தன. முன்னைய கட்டிடங்கள் சிவப்பு நிற [[மணற்கல்|மணற்கற்களால்]] கட்டப்பட்டிருந்தன. ஷா ஜகான் வெண்ணிறச் [[சலவைக்கல்|சலவைக்கற்களைப்]] பயன்படுத்தியுள்ளான். இவன் காலத்தில் கட்டிடங்கள் மிகவும் திருந்திய நிலையை அடைந்தன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2910917" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி