மேரி வாட்சன் வைட்னே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 52: வரிசை 52:
[[பகுப்பு:1847 பிறப்புகள்]]
[[பகுப்பு:1847 பிறப்புகள்]]
[[பகுப்பு:1921 இறப்புகள்]]
[[பகுப்பு:1921 இறப்புகள்]]
[[பகுப்பு:ஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்]]

14:19, 17 சனவரி 2020 இல் கடைசித் திருத்தம்

மேரி வாட்சன் வைட்னே
Mary Watson Whitney
மேரி வாட்சன் வைட்னே
பிறப்புசெப்டம்பர் 11, 1847
வால்தாம், மசாசூசட்
இறப்புசனவரி 21, 1921(1921-01-21) (அகவை 73)
வால்தாம், மசாசூசட்
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்வாசர் வான்காணகம்

மேரி வாட்சன் வைட்னே (Mary Watson Whitney) (செப்டம்பர் 11, 1847 – ஜனவரி 20, 1921) ஓர் அமெரிக்க வானியலாளர் அவார். இவர் வாசர் வான்காணகத் தலைவராக 22 ஆண்டுகள் இருந்தார். இங்கு இவர் 102 அறிவியல் கட்டுரைகள் தன் வழிகாட்டுதலின்கீழ் வெளியிட்டுள்ளார்.

இளமையும் கல்வியும்[தொகு]

வைட்னே மசாசூசட்டில் உள்ள வால்தாமில் 1847 இல் பிறந்தார். இவரது தாயார் மேரிவாட்சன் கிரெகோர் ஆவார். இவரது தந்தையார் சாமுவேல் பட்ரிக் வைட்னே ஆவார்.[1] இவரது தந்தையார் வெற்றிகரமாக நில வணிகமும் கட்டிடம் கட்டும் பணியும் செய்து நல்ல செல்வந்தராக விளங்கியதால் தன் மகளை எளிதாக நல்ல கல்வியைத் தரமுடிந்தது. இவர் வால்தாம் பள்ளியில் படித்தார். கணிதத்தில் நல்ல திறமை பெற்றிருந்தார். இவர் பள்ளிக்கல்வியை 1863 இல் முடித்தார். இவர் 1865 இல் வாசர் கல்லூரியில் சேர்வதற்கு முன்பு ஓராண்டு தனிப்பயிற்சி பெற்றார். இங்கு இவர் வானியலாளராகிய மரியா மிட்செல்லைச் சந்தித்தார். இவர் வாசர் கல்லூரியில் உள்ளபோதே இவரது தந்தையார் இரந்துவிட்டுள்ளார். அண்ன்னும் கடலில் காணாமல் போயுள்ளான். இவர் தன் பட்ட்த்தை 1868 இல் பெற்றுள்ளார்.[1]

இவர் 1869 முதல் 1870 வரை ஆர்வார்டில் பெஞ்சமின் பியர்சுவிடம் வானியக்க்கவியலிலும் பாடம் கற்றுள்ளார். அப்போது ஆர்வார்டில் பெண்கள் சேர்க்கப்படுவதில்லை என்பதால் விருந்தினராகப் பாடம் படித்தார்.[1] இவர் 1872 இல் வாசர் கல்லூரியில் முதுவர் பட்ட்த்தைப் பெற்றார். பின்னர் இவர் சூரிச் சென்று மூன்று ஆண்டுகள் கணிதவியலும் வானியக்கவியலும் கற்றார்.[1]

தொழில்முறைப்பணி[தொகு]

வாசர் வான்காணகத்தில் மரியா மிட்செல்லிடம் உதவியாளராகச் சேர்வதற்கு முன் அமெரிக்காவில் தன் சொந்த நகருக்குத் திரும்பிவந்து உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியாகப் பணியாற்றினார். மரியா மிட்செல் 1888 இல் ஓய்வு பெற்றதும் இவர் வாசர் வான்காணகப் பேராசிரியராகவும் இயக்குநராகவும் பதவி ஏற்றுள்ளார். அங்கு இவர் உடல்நல்க் குறைவு காரணமாக 1915 ஓய்வு பெறும்வரை பணிபுரிந்தார்.[1]

இவர் பணியில் இருந்தபோது இரட்டை விண்மீன்கள், மாறும் விண்மீன்கள் சிறுகோள்கள், வால்வெள்ளிகள் பற்ரி பயிற்றுவித்து ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். ஒளிப்பட்த்தட்டுகளின் அளவீடுகளிலும் ஈடுபட்டார். இவரது வழிகாட்டுதலில் வாசர் வான்காணகம் 102 கட்டுரைகளை வெளியிட்டது. இவர் தன் தாயும் தங்கையும் 1889 இல் நோய்வாய்பட்ட்தால் அவர்களைக் கவனிக்க வான்காணகத்துக்கு அழைத்துக் கொண்டார். தன் பணியை பகுதிநேரமாகச் செய்தார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இறந்ததும், முழுநேரப் பணியில் ஈடுபட்டார்.[1] இவர் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் ஆய்வுறுப்பினரும் வானியல், வானியற்பியல் கழகத்தின் பட்டய உறுப்பினரும் ஆவார்.[2]

இறப்பு[தொகு]

இவர் நிமோனியா காய்ச்சலால் 1921 ஜனவரி 20 இல் வால்தாமில் இறந்தார்.]].[2]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Mary Watson Whitney". Vassar Encyclopedia. Vassar College. பார்க்கப்பட்ட நாள் 4 October 2012.
  2. 2.0 2.1 "Mary W. Whitney". Annual Report of the Maria Mitchell Association 19: 10. 1921. Bibcode: 1921MMAAR..19...10.. http://adsabs.harvard.edu/full/1921MMAAR..19...10.. பார்த்த நாள்: 4 October 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_வாட்சன்_வைட்னே&oldid=2896252" இலிருந்து மீள்விக்கப்பட்டது