ஒடியா மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி கவிதை
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎பழைய கவிதை: ==== காவியங்கள்====
வரிசை 52: வரிசை 52:


==== பழைய கவிதை ====
==== பழைய கவிதை ====

==== காவியங்கள் ====


==== புதிய கவிதை ====
==== புதிய கவிதை ====

05:36, 26 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஒடியா மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1or
ISO 639-2ori
ISO 639-3ori

ஒடியா மொழி (பழைய பெயர் ஒரியா மொழி) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பேசப்படும் ஒரு மொழியாகும். இதன் பெயரான ஒரியா என்பது ஒடியா என குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது[1][2] . இம்மொழி பேசுவோர் ஒடிசாவில் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களான மேற்கு வங்காள மாநிலத்தின் மிட்னாப்பூர் மாவட்டத்திலும், சார்க்கண்ட் மாநிலத்தின் சாரைக்கேலா கார்சாவான் மாவட்டத்திலும், ஆந்திரப் பிரதேசத்தின் இச்சாபுரம் மாநகரசபைப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்ந்து வருகிறார்கள். ஒடிசாவிலிருந்து பெருமளவு தொழிலாளர்களின் இடப்பெயர்வு காரணமாக இந்தியாவின் மேற்குப்பகுதி மாநிலமான குசராத்திலும் ஒடியர்கள் வாழுகிறார்கள். இம்மாநிலத்தில் உள்ள சூரத் நகர் இந்தியாவில் இரண்டாவது பெரிய ஒடியா பேசும் நகரமாகக் கருதப்படுகிறது. ஒடியா, இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளுள் ஒன்று ஆதி என்னும் பிராகிருத மொழியின் நேரடி வழித்தோன்றல் எனக் கருதப்படுகின்றது. இம்மொழி, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய-ஈரானிய மொழிகள் பிரிவின், இந்திய-ஆரிய மொழிகள் குழுவைச் சேர்ந்தது.

இம்மொழி, சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்டுவந்த, பூர்வ மொழிகளான வங்காள மொழி, மைதிலி மொழி, அசாமிய மொழி ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. இந்தியாவில் பேசப்படும் பிற இந்தோ-ஆரிய மொழிகளுடன் ஒப்பிடும்போது இதுவே மிகக் குறைவான பாரசீக மொழித் தாக்கத்துக்கு உட்பட்டது எனலாம். இத்தகைய வளமான இலக்கிய நடைகளைக் கொண்டிருப்பதால் ஒடியா மொழி செம்மொழி என இந்திய அரசால் 2014 ஆவது ஆண்டில் அறிவிக்கப்பட்டது.[3]


ஒடிய இலக்கியம்

ஒரியா மொழிக்கு சுமார் 13 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய நல்ல வளமான இலக்கிய வரலாறு உண்டு. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சரள தாசர் மகாபாரதத்தை ஒரியாவில் மொழி பெயர்த்தார். இதனால் இவர் ஒடிசாவின் வியாசர் என்று போற்றப்படுகிறார். உண்மையில், சமஸ்கிருத நூல்களான மகாபாரதம், இராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றை மொழிபெயர்த்ததின் மூலமே ஒரிய மொழி பொதுமைப்படுத்தப்பட்டது. ஜகனாத தாஸ் என்பவர் பாகவதத்தை ஒரியாவில் மொழிபெயர்த்தார். இதுவே ஒரியாவின் எழுத்து மொழியைப் பொதுமைப்படுத்த உதவியது. ஒரியாவுக்கு சிறப்பாகப் பக்தி அடிப்படையிலான வலுவான கவிதை மரபும் உண்டு.

இம்மொழியில் உரைநடை ஒரு பிற்கால வளர்ச்சியாகும். பக்கீர் மோகன் சேனாபதி, மனோஜ் தாஸ், பிபுத்தி பட்நாயக், பிரதிபா ராய், சுரேந்திர மொகந்தி, மதுசூதன் தாஸ், கிஷோரி சரண் தாஸ், காலினி சரண் பாணிக்கிரகி, ஹரி ஹர தாஸ், கோபிநாத் மொகந்தி என்போர் குறிப்பிடத்தக்க உரைநடை எழுத்தாளர்கள் ஆவர். எனினும் உரைநடையை விடக் கவிதையே தற்கால ஒரிய இலக்கியத்தின் பலமாக விளங்குகிறது. ஒரியக் கவிஞர்களான சச்சிதானந்த ரௌத்ரே, குருப்பிரசாத் மொகந்தி, சௌபாக்ய மிஸ்ரா, ராமகாந்த ராத், சிதாகாந்த மொகபத்ரா என்போர் இந்தியக் கவிதைத் துறைக்குக் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியுள்ளனர்.

வரலாறு

ஒடியா மொழி வரலாற்றை ஐந்து காலப் பகுதிகளாகப் பிரிப்பது வழக்கம். இவை:

  • பழைய ஒடியா - (10 ஆம் நூற்றாண்டு - 1300)
  • முந்திய இடைக்கால ஒடியா - (1300 - 1500)
  • இடைக் கால ஒடியா - (1500 - 1700)
  • பிந்திய இடைக்கால ஒடியா - (1700 -1850)
  • தற்கால ஒடியா (1850 முதல் இப்பொழுது வரை)

மதம்

  1. பண்டைக்காலம் (12ஆம் நூற்றாண்டுக்கு முன்)
  2. கங்க வமிச காலம் (12-15 நூ. வரை)
  3. சூரிய வமிச காலம்
  4. இசுலாமிய - மகராஷ்டிர ஆட்சிக் காலம்
  5. பிரித்தானிய ஆட்சிக் காலம்.

மேற்கூறிய காலங்களில் எல்லாம் மதங்களே இலக்கிய வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தன.[4][5] லுயிபாதர், கான்ஹூ பாதர், பூசுகு ஆகியோர் எழுதிய பௌத்தமதப் பாடல்கள் ஆதிகாலத்தில் எழுந்தவைகள் ஆகும். அவையே பழைய ஒரியா இலக்கியங்களாகும். கங்க வமிசக் காலத்தில் சைவமதமே உச்சநிலை அடைந்தது. இக்காலத்தில் எழுந்த இலக்கியங்களுள் போற்றத்தக்கனவாகக் கருதப்படுகின்றன. 13-ஆம் நூற்றாண்டில் எழுந்தருத்திர சுதாநிதி என்னும் கதையும், களசா சவுதிஷம் என்னும் கவிதையுமேயாம். மூன்றாம் காலப் பகுதியில் சாக்த மதம் உச்சநிலை அடைந்தது. 14ஆம் நூற்றாண்டில் சரளதாசர் எழுதிய மகாபாரதமும், விலங்கா ராமாயணமும், சண்டிபுராணமும் பெயர் பெற்றன. நான்காம் காலப்பகுதியில், வைணவ மதம் உச்சநிலை அடைந்தது. தொடக்கத்தில் கிருஷ்ணன், இராமன் இருவரும் போற்றப்பட்ட போதிலும் இறுதியில் கிருஷ்ணனுடைய கீர்த்தி நிலைப்பதாயிற்று.ஐந்தாம் காலப்பகுதியில் பிரமசமாஜம் பரவிற்று. பாலா என்னும் பெயருடைய இலக்கியம் தோன்றிற்று. அது சத்தியநாராயண தோத்திரமாகும். அதை இந்துக்களும் இசுலாமியர்களும் ஒருங்கே எவ்வித வேறுபாடுமின்றிப் பயின்று வந்தனர். இராஜா ராம்மோகன் ராய் நிறுவிய பிரமசமாஜ மதம் தோற்றுவித்த இலக்கியம் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால் கிறித்தவர்கள் இயற்றிய நூல்கள் பல உள்ளன.இந்த ஐந்து காலங்களிலும், எழுந்த ஒரியா இலக்கியத்தைப் பழைய வசனமும் கவிதையும் என்றும், புதிய வசனமும் கவிதையும் என்றும் இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம்.

பழைய கவிதை

காவியங்கள்

புதிய கவிதை

ஒலியன்கள்

ஒடியா 28 மெய் ஒலியன்களையும், 6 உயிர் ஒலியன்களையும் கொண்டது.

உயிர்கள்
  முன் பின்
மேல் i u
இடை e o
கீழ் a ɔ
மெய்கள்
  இதழ் பல் நுனி அண்ணம் வளைநா இடை அண்ணம் பின் அண்ணம் குரல்வளை
ஒலிப்பிலா வெடிப்பொலிகள் p

t̪ʰ
  ʈ
ʈʰ
ʧ
ʧʰ
k
 
ஒலிப்புடை வெடிப்பொலிகள் b

d̪ʰ
  ɖ
ɖʰ
ʤ
ʤʰ
ɡ
ɡʰ
 
ஒலிப்பிலா உரசொலிகள்     s       h
மூக்கொலிகள் m   n ɳ      
இடையொலிகள்     l, r ɭ      

மேற்கோள்கள்

  1. ஒரியா ஒடியாவாக மாற்றம் - ஐபிஎன் லைவ்
  2. ஒரியா ஒடியாவாக மாற்றம்- தட்சு தமிழ்
  3. "ஒடியா மொழி செம்மொழித் தகுதி பெற்றது". jugranjosh.com. பார்க்கப்பட்ட நாள் 2015 சனவரி 13. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. http://nriol.com/indian-languages/oriya-page.asp
  5. http://odialanguage.com/page/history/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடியா_மொழி&oldid=2881601" இலிருந்து மீள்விக்கப்பட்டது