"உணவுப் பாதுகாப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
மேம்படுத்தல் using AWB
சி ('''உணவுப் பாதுகாப்பு'''/உணவுச்சுகாதாரம் (Food safety))
சி (மேம்படுத்தல் using AWB)
 
 
== தோற்றம் ==
நாடோடி வாழ்க்கையை விடுத்து, [[உழவுத் தொழில்|உழவுத் தொழிலில்]] ஈடுபட்டு ஓரிடத்தில் தங்க வசிக்கலானான். அதன் விளைவாக மக்கள் தொகை பெருகிக் கிராமங்களும் நகரங்களும் உண்டாயின. மக்களுக்குப் போதிய உணவு கிடைப்பது அரிதாயிற்று. அதனால் ஒரு பருவத்தில் தேவைக்கு மேல் கிடைத்த உணவை அது கிடைக்காத மற்றப் பருவங்களில் பயன்படும்படி பாதுகாக்க வேண்டிய தேவை பிறந்தது. உணவு, தனது இயற்கை நிலையில் கெடாமல் நீண்டகாலம் இருக்கமுடியாது என்பதைத் தெரிந்து கொண்ட மனிதன், [[பால் (பானம்)|பாலைத்]] தயிராகவும், [[வெண்ணெய்|வெண்ணெயாகவும்]] பாற்கட்டி (Cheese) ஆகவும் மாற்றிச் சாப்பிட்டான். மீனைக் [[கருவாடு|கருவாடாகவும்]], இறைச்சியை உப்புக்கண்டமாகவும் உலரவைத்து உண்டான். நாளடைவில் உப்பிடுதல், புகையிடுதல் ஆகிய உணவுப் பாதுகாப்பு முறைகளையும் கண்டுபிடித்தான். இறைச்சியைப் பனிக்கட்டியின் அடியிலும், குளிர்ச்சியான குகைகளிலும், குழிகளிலும் வைத்துப் பாதுகாத்தான்.
 
== பாதுகாப்பு ஆராய்ச்சி ==
 
== உணவுப் பாதுகாப்பின்மைக்கான காரணிகள் ==
உணவுப் பொருட்களும், உணவுகளும் இயல்பாகவும், பிற காரணங்களாலும் கெடக்கூடிய இயல்பைக் கொண்டிருக்கின்றன. கெடுதல், விரைவாகவும், தாமதப்பட்டும், சிறிய அளவிலும், பெரிய அளவிலும் ஏற்படலாம்.
 
[[காற்று|காற்றும்]] அதன் [[ஈரப்பதம்|ஈரப்பதமும்]] : உணவுகள் திறந்து அல்லது நறுக்கி வைக்கப்படும்போது, அவற்றின் மணம், நிறம், தோற்றம் முதலியன மாறுவதைக் காண்கின்றோம். அந்த மாறுதல்களுக்குக் காரணம், ஆகாயத்திலுள்ள ஆக்சிஜனின் ஆக்சிகரணம் என்ற தொழிலாகும். எண்ணெய், நெய், எண்ணெய்ப் பலகாரங்கள் சிக்கலடித்துப் போவது, அரிந்த காய் நிறமாறிக் கருமையாவது ஆகியவை ஆக்சிகரணத்தின் விளைவுகள். ஆகாயத்திலுள்ள ஈரம் அதிகரிக்கும் பொழுது, முறுக்கு, வற்றல், ரொட்டி, பிஸ்கோத்து முதலியன தம் மொறுமொறுப்பை இழந்து விடுகின்றன. ஈரம் குறையும்போது, கனிகள், முட்டைகள், ரொட்டி, [[தோசை]], [[இட்லி]] முதலியவை காய்ந்து, நீர் கண்டிச் சுவைகெட்டுப் போகின்றன.
 
உணவு கெடுவதற்கு [[நீர்]] ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. உணவுப் பொருள்களில் நீர் புகும்போது அவை மெதுவாகி எளிதில் பூஞ்சாணம் பூக்கின்றது. விதைகள் முளைவிட்டுக் கெடுவதும், உப்பு, சர்க்கரை முதலியவற்றில் நீர் கசிவதும், நீரினால் ஏற்படும் மாறுதல்களாகும்.
 
[[எலி]], [[பறவை]], [[வண்டு]], [[எறும்பு]], பூச்சி, புழு ஆகிய பல பிராணிகள் உணவைக் கெடுக்கின்றன. தனது தீய்க்கும் சக்தியால் [[நெருப்பு]] உணவுக்குக் கெடுதல் செய்கிறது. அழுக்கு, [[தூசி]] முதலியன தானாகக் கேடு விளைவிப்பதில்லையெனினும் அழுக்கடைந்த உணவு நோய்க்கிருமிகளுக்குச் சிறந்த உறைவிடமாகிறது. தூசி படிந்த உணவை அருந்துவதற்கும் விருப்பம் வராது. சுரப்பிகள் வெளிவிடும் [[நொதி|என்சைம்கள்]] தாம் மாறாமல் உடலில் பல மாறுதல்களை ஆற்றவல்லன. உணவிலிருக்கும் என்சைம்கள், மீன், இறைச்சி, காய், கனி போன்ற உணவுகளைச் சிதைத்துச் சேதப் படுத்துகின்றன.
== ஆதாரங்கள் ==
*{{கலைக்களஞ்சியம்-வெளி|02|246}}
 
 
 
 
[[பகுப்பு:சுகாதாரம்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2867553" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி