ஒப்பீட்டு மொழியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Robot: interwiki standardization
வரிசை 24: வரிசை 24:
[[id:Ilmu perbandingan bahasa]]
[[id:Ilmu perbandingan bahasa]]
[[it:Linguistica comparativa]]
[[it:Linguistica comparativa]]
[[nl:Vergelijkende taalkunde]]
[[ja:比較言語学]]
[[ja:比較言語学]]
[[nl:Vergelijkende taalkunde]]
[[pl:Metoda porównawcza]]
[[pl:Metoda porównawcza]]
[[zh:歷史比較語言學]]
[[zh:歷史比較語言學]]

09:31, 6 செப்டெம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

மொழியியல்
கோட்பாட்டு மொழியியல்
ஒலியியல்
ஒலியனியல்
உருபனியல்
சொற்றொடரியல்
சொற்பொருளியல்
மொழிநடை
விதிமுறை
சூழ்பொருளியல்
பயன்பாட்டு மொழியியல்
சமூக மொழியியல்
அறிதிற மொழியியல்
வரலாற்று மொழியியல்
சொற்பிறப்பியல்
ஒப்பீட்டு மொழியியல்

ஒப்பீட்டு மொழியியல் என்பது, வரலாற்று மொழியியலின் ஒரு கிளைத் துறையாகும். இது, மொழிகளின் வரலாற்றுத் தொடர்புகளை அறிந்துகொள்வதற்காக அவற்றை ஒப்பிட்டு ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது. மொழிகள் பெருமளவில் கடன்வாங்குவதன் மூலம் அல்லது மரபுவழி மூலம் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம்.


மரபுவழித் தொடர்பு அம்மொழிகளுக்கு ஒரு பொது மூலம் அல்லது ஒரு முதல்-மொழி இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. ஒப்பீட்டு மொழியியல் மொழிக் குடும்பங்களை உருவாக்குவதையும், முதல்-மொழிகளை மீட்டுருவாக்கம் செய்து ஆவணப்படுத்தப்பட்ட மொழிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டது. சான்றுள்ள மற்றும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட சொற்களிடையேயான வேறுபாட்டைக் காட்டுவதற்காக, தப்பியிருக்கக் கூடிய சான்றுகளில் காணப்படாத சொற்களுக்கு முன்னொட்டாக நட்சத்திரக் குறி இடப்படுகின்றது.


வழிமுறைகள்

ஒப்பீட்டு முறை என்னும் உத்தி மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளின் ஒலியியல் முறைமைகள், உருபனியல் முறைமைகள், தொடரியல், சொற் தொகுதி ஆகியவற்றை ஒப்பிட்டு ஆராய்வதே ஒப்பீட்டு மொழியியலின் அடிப்படை உத்தியாகும். கோட்பாட்டளவில் தொடர்புள்ள இரண்டு மொழிகளுக்கு இடையேயான வேறுபாடுகள் தர்க்கரீதியான முறையில் விளக்கம் தரக்கூடிய வகையில் அமைந்திருத்தல் அவசியம். எடுத்துக்காட்டாக, ஒலியியல் மற்றும் உருபனியல் முறைமைகள் கூடிய ஒழுங்கமைவு கொண்டவையாக இருத்தல் வேண்டும்.


நடைமுறையில் ஒப்பீடு வரையறுக்கப்பட்ட அளவில் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக சொற் தொகுதிகளை மட்டும் ஒப்பிடக்கூடும். சில வழிமுறைகளில் முந்திய முதல்-மொழியொன்றை மீட்டுருவாக்கம் செய்ய முடியலாம். ஒப்பீட்டு முறை மூலம் உருவாக்கப்பட்ட முதல்-மொழிகள் எடுகோள்கள் மட்டுமேயானாலும், மீட்டுருவாக்கம் மூலம் எதிர்வு கூறுதல் கூடும். இது தொடர்பில் குறிப்பிடத்தக்க ஒரு எடுத்துக்காட்டு, இன்று எந்த இந்திய-ஐரோப்பிய மொழிகளிலுமே காணப்படாத குரல்வளையொலிகள் இந்திய-ஐரோப்பிய மெய்யொலிகளுள் அடங்கியிருந்தது என்ற சோசுரே (Saussure) என்பவரின் முன்மொழிவு ஆகும். இந்த எடுகோள் பின்னர் ஹிட்டைட் மொழியின் கண்டுபிடிப்புடன் சரியென நிறுவப்பட்டது. இதன்படி சோசுரே எதிர்வு கூறிய அதே மெய்யொலி எதிர்பார்க்கப்பட்ட அதே சூழலிலேயே இருக்கக் காணப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்பீட்டு_மொழியியல்&oldid=286458" இலிருந்து மீள்விக்கப்பட்டது