"பாரிசின் விடுவிப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
==விடுவிப்பு==
இட்லரின் உத்தரவின் பேரில் பாரிசினைத் தகர்க்க அதன் ஜெர்மானிய தளபதி வோன் சோல்டிட்சு முயற்சிகளைத் தொடங்கினார். இதனால் எச்சரிக்கையடைந்த பிரெஞ்சு எதிர்ப்புப் படை, பாரிசினை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியது.
ஆகஸ்ட் 15ம் தேதி பாரிசில் எதிர்ப்பு படைகள் ஒரு முழு வேலை நிறுத்ததைத் தொடங்கின. மூன்று நாட்களுக்குப் பின் இது ஒரு முழுப் புரட்சியாக மாறியது. ஆகஸ்ட் 19ம் தேதி பிரெஞ்சு எதிர்ப்புப் படைகள் பாரிசு நகர் முழுவதும் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளைத் தாக்கின. பாரிசு நகர வீதிகளில் சாலைத் தடைகள் உருவாக்கபப்ட்டனஉருவாக்கப்பட்டன, மரங்கள் வெட்டப்பட்டு சாலைகளின் குறுக்கே இடப்பட்டன. சாலையோர நடைபாதைகள் தோண்டப்பட்டு அக்கற்களைக் கொண்டு சாலைத் தடைகளைப் பலப்படுத்தப் பட்டன. பாரிசில் எதிர்ப்புப் படையினரின் இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டு, ஜெர்மானியர்களை எதிர்க்க ஆயுதங்களை ஏந்துமாறு பொதுமக்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 19ம் தேதி [[சுவீடன்|சுவீடியத் தூதரின்]] உதவியுடன் இரு தரப்பினரும் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். பாரிசின் முக்கிய கட்டிடங்களும் அரண்நிலைகளும் ஜெர்மானியர் வசமும், எஞ்சிய நகரப் பகுதிகள் எதிர்ப்புப் படைகளின் வசமும் இருந்தன.
 
பாரிசு நகரத்தில் மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போது நேச நாட்டுப் படைகள் பாரிசை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தன. நிதானமாகத் திட்டமிட்டு முன்னேற வேண்டும் என்று அமெரிக்கத் தளபதிகள் கருதினாலும், பிரெஞ்சுத் தளபதிகள் அவர்களது பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக பாரிசு மீதான தாக்குதலைத் தொடங்கின. சுதந்திர பிரெஞ்சுப் படைகளின் 2வது கவச [[டிவிசன்]] ஆகஸ்ட் 24ம் தேதி பாரிசு நகரின் எல்லையினை அடைந்தது. மறுநாள் பாரிசின் ஜெர்மானியப் பாதுகாவல் படைகள் சரணடைந்தன. பாரிசிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த இட்லர் இட்டிருந்த ஆணையை வோ சோல்டிட்சு நிறைவேற்ற மறுத்துவிட்டதால், நகரம் சேதமடையாமல் தப்பியது. நகரினுள் நுழைந்த நேச நாட்டுப் படைகளை பாரிசு மக்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பாரிசின் விடுவிப்பு நேச நாடுகளுக்கு ஒரு பெரும் பரப்புரை வெற்றியாக அமைந்தது. சார்லஸ் டி கோலின் கட்சியினரின் செல்வாக்கை உயர்த்தியதால், போருக்குப் பின்னான அரசினை அமைக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டியது.
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2829630" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி