"சம்மு (நகர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,610 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
தைமூரின் காலவரிசையில் சம்மு நகரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ({{reign|1370|1406}}). இவர் 1398 ஆம் ஆண்டில் தில்லி நகருக்குள் ஊடுறுவி சம்மு வழியாக சாமர்கண்டிற்கு திரும்பிச் சென்றவராவார். 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் [[பாபர்|பாபரின்] முகலாய காலத்தில் சம்மு ஒரு சக்திவாய்ந்த மாநிலம் என்று பஞ்சாப் மலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனாசு இராசபுத்திரர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர். பேரரசர் [[அக்பர்]] இப்பகுதியின் மலை இராச்சியங்களை முகலாய அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார், ஆனால் மன்னர்கள் கணிசமான அரசியல் சுயாட்சியை அனுபவித்தனர்.
சம்முவைத் தவிர கூடுதலாக பிராந்தியத்தின் பிற இராச்சியங்களான கிசுத்வார் மற்றும் ராயோரி ஆகியவை முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளன. முகலாய சாம்ராச்சியம் இந்த மலைத் தலைவர்களை பேரரசின் கூட்டாளிகளாகவும் பங்காளிகளாகவும் கருதியது என்பது தெளிவாகிறது {{sfn|Jigar Mohammad, Raja Ranjit Dev's Inclusive Policies|2010|pp=40–42}}
 
== நவீன வரலாறு ==
 
[[File:Maharaja Gulab Singh of Jammu and Kashmir.jpg|thumb|left|சம்மு காசுமீரின் மகாராசா குலாப் சிங்]]
[[File:Maharaja of Kashmir, Hari Singh (1895 - 1961).jpg|thumb|left|காசுமீரின் மகாராசா அரி சிங் (1895 - 1961)]]
 
18 ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேர்ரசு வீழ்ச்சியடைந்த பின்னர் யமுவால் குடும்பத்தைச் சேர்ந்த ராசா துருவ் தேவின் கீழ் சம்மு அரசு அனைத்து துக்கர் மாநிலங்களிடையேயும் தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியது. மலையக மாநிலங்களிடையே பரவலாக மதிக்கப்படும் அவரது வாரிசான ராசா ரஞ்சித் தேவ் (1728-1780) ஆட்சியின் கீழ் அதன் ஏற்றம் உச்சத்தை எட்டியது. ரஞ்சித் தேவ் மத சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் ஊக்குவித்தார் {{sfn|Jeratha, Dogra Legends of Art & Culture|1998|p=187}}{{sfn|Panikkar, Gulab Singh|1930|p=10}}. இது சம்முவில் குடியேற பல கைவினைஞர்களையும் வணிகர்களையும் ஈர்த்தது, மேலும் இதனால் சம்முவின் பொருளாதார செழிப்புக்கும் வழியேற்பட்டது.
 
ரஞ்சித் தேவ் ஆட்சியின் இறுதிப் பகுதியில் சீக்கிய சிற்றரசுகளின் கூட்டமைப்பு சம்முவை கைப்பற்றினர். பாங்கி, கண்கையா, சுகெர்சாக்கியா சிற்றரசுக்களிடையில் சம்முவை கைப்பற்ற போட்டி நடைபெற்றது. 1770 ஆம் ஆண்டில் பாங்கி சிற்றரசு சம்முவைத் தாக்கி, ரஞ்சித் தேவை ஒரு துணை நாடாக மாறும்படி கட்டாயப்படுத்தினார். ரஞ்சித் தேவின் வாரிசாக தொடர்ந்த பிரிச் லால் தேவை சிகெர்சாக்கியாவின் மகான்சிங் என்ற சிற்றரசர் தோற்கடித்தார். இதனால் சுற்றுபுற நாடுகளிடம் இருந்த சம்முவின் அதிகாரம் கைவிட்டுப் போனது{{sfn|Panikkar, Gulab Singh|1930|p=10–12}} சம்மு 1808 ஆம் ஆண்டில் சீக்கிய பேரரசுடன் இணைக்கப்பட்டது. மகான் சிங்கின் மகன் மகா ராசா ரஞ்சித் சிங் ஆட்சியுடன் இணைக்கப்பட்டது{{sfn|Panikkar, Gulab Singh|1930|p=15–16}}
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2824624" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி