நருமதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:

'''நருமதை ஆறு''' அல்லது '''நர்மதா ஆறு''' (Narmada River) இந்திய துணைக்கண்டத்து [[ஆறு]]களில் ஒன்றாகும். இது ஏறத்தாழ 1290 கி.மீ நீளமானது. மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் பாய்ந்து [[நர்மதா மாவட்டம்]] வழியாக [[அரபுக் கடல்|அரபிக் கடலிலுள்ள]] [[கம்பாத் வளைகுடா|கம்பாத் வளைகுடாவில்]] கலக்கின்றது. [[குசராத்து|குசராத்துக்கும்]] [[மத்திய பிரதேசம்|மத்திய பிரதேசத்திற்கும்]] உயிர் நாடியாக விளங்குகிறது. மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளில் இது பெரியது ஆகும். மற்றொரு பெரிய ஆறு [[தபதி ஆறு|தபதி]] ஆகும். [[கோதாவரி]] மற்றும் [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா நதி]]களை அடுத்து நருமதை ஆறே இந்தியாவின் மிக நீளமான நதிகளுள் மூன்றாவது இடத்தைப்பெறுகிறது. வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் பிரிக்கும் மரபுவழி எல்லையாக இது உள்ளது.
{{ under construction }}
'''நருமதை ஆறு'''அல்லது '''நர்மதா ஆறு''' (Narmada River) இந்திய துணைக்கண்டத்து [[ஆறு]]களில் ஒன்றாகும். இது ஏறத்தாழ 1290 கி.மீ நீளமானது. மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் பாய்ந்து [[நர்மதா மாவட்டம்]] வழியாக [[அரபுக் கடல்|அரபிக் கடலிலுள்ள]] [[கம்பாத் வளைகுடா|கம்பாத் வளைகுடாவில்]] கலக்கின்றது. [[குசராத்து|குசராத்துக்கும்]] [[மத்திய பிரதேசம்|மத்திய பிரதேசத்திற்கும்]] உயிர் நாடியாக விளங்குகிறது. மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளில் இது பெரியது ஆகும். மற்றொரு பெரிய ஆறு [[தபதி ஆறு|தபதி]] ஆகும். [[கோதாவரி]] மற்றும் [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா நதி]]களை அடுத்து நருமதை ஆறே இந்தியாவின் மிக நீளமான நதிகளுள் மூன்றாவது இடத்தைப்பெறுகிறது. வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் பிரிக்கும் மரபுவழி எல்லையாக இது உள்ளது.
இரண்டு நில அடுக்குகள் மோதுவதால் உருவாகும் நிலபிளவு வழியாக பாயும் ஆறுகளில் இது ஒன்று.
இரண்டு நில அடுக்குகள் மோதுவதால் உருவாகும் நிலபிளவு வழியாக பாயும் ஆறுகளில் இது ஒன்று.

==தோற்றம்==


==நர்மதா பரிக்ரமா==
==நர்மதா பரிக்ரமா==

04:23, 20 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

நருமதை ஆறுஅல்லது நர்மதா ஆறு (Narmada River) இந்திய துணைக்கண்டத்து ஆறுகளில் ஒன்றாகும். இது ஏறத்தாழ 1290 கி.மீ நீளமானது. மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் பாய்ந்து நர்மதா மாவட்டம் வழியாக அரபிக் கடலிலுள்ள கம்பாத் வளைகுடாவில் கலக்கின்றது. குசராத்துக்கும் மத்திய பிரதேசத்திற்கும் உயிர் நாடியாக விளங்குகிறது. மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளில் இது பெரியது ஆகும். மற்றொரு பெரிய ஆறு தபதி ஆகும். கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை அடுத்து நருமதை ஆறே இந்தியாவின் மிக நீளமான நதிகளுள் மூன்றாவது இடத்தைப்பெறுகிறது. வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் பிரிக்கும் மரபுவழி எல்லையாக இது உள்ளது. இரண்டு நில அடுக்குகள் மோதுவதால் உருவாகும் நிலபிளவு வழியாக பாயும் ஆறுகளில் இது ஒன்று.

தோற்றம்

நர்மதா பரிக்ரமா

தென்னாட்டில் கிரி வலம் (பரிக்ரமா) பிரபலமாக இருப்பதைப் போன்றே, வட இந்தியாவில் நர்மதை நதிவலம் பிரபலம். நர்மதை மிகவும் புனிதமான நதியாதலால், நதியைக் காலணி அணியாமல் வலம் வர வேண்டும். பரிக்ரமாவின் போது பணம் வைத்துக் கொள்ளக் கூடாது,பிச்சையேற்றே உணவு உண்ண வேண்டும்.[1]

புராணத்தின்படி நர்மதை சிவபெருமானின் உடலிலிருந்து தோன்றியதால் நர்மதை ஜடாசங்கரி என்றும் அழைக்கப்படுகிறது.

நர்மதா பரிக்ரமாவை முதலில் ஆரம்பித்தவர் ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷி. சிரஞ்சீவிகளான அஸ்வத்தாமர், பரசுராமர், ஆஞ்சநேயர், விபீஷணர், மஹாபலி, கிருபர், வியாசர் ஆகியோர் நர்மதை நதியைச் சுற்றி வந்து பரிக்ரமா செய்பவர்களை பாதுகாக்கிறார்கள் என்பது ஐதீகம். சபரிமலை யாத்திரையைப் போன்றே, இந்தப் புனித யாத்திரை காலங்காலமாக முனிவர்களாலும், சாதுக்களாலும், ஆன்மீகச் சாதகர்களாலும், நர்மதைக் கரையில் வாழும் கிராம மக்களாலும் தொன்றுதொட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஒன்று. பொதுவாகப் பரிக்ரமாவை 3 வருடம், 3 மாதம், 13 நாட்களில் நிறைவு செய்வது மரபு.[2]

புண்ணிய தலங்கள்

நர்மதை நதியின் கரையில் இந்து மதத்தினரின் ஓம்காரேஷ்வர், மண்டலேஷ்வர், மஹேஷ்வர், கருடேஷ்வர், விமலேஷ்வர் மற்றும் பல தலங்களும், சமணர்களுக்கு பர்வானியும், இஸ்லாமியருக்கு மாண்டவும் உள்ளன.[3]


மேற்கோள்கள்

  1. நர்மதை நதி வலம் : நர்மதா பரிக்ரமா; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 2
  2. நர்மதை நதி வலம் : நர்மதா பரிக்ரமா; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 2
  3. நர்மதை நதி வலம் : நர்மதா பரிக்ரமா; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 5,8

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
நருமதை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நருமதை&oldid=2818317" இலிருந்து மீள்விக்கப்பட்டது