புலிட்சர் பரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: nl:Pulitzerprijs
சி தானியங்கி இணைப்பு: sr:Пулицерова награда
வரிசை 46: வரிசை 46:
[[sk:Pulitzerova cena]]
[[sk:Pulitzerova cena]]
[[sl:Pulitzerjeva nagrada]]
[[sl:Pulitzerjeva nagrada]]
[[sr:Пулицерова награда]]
[[sv:Pulitzerpriset]]
[[sv:Pulitzerpriset]]
[[sw:Tuzo ya Pulitzer]]
[[sw:Tuzo ya Pulitzer]]

20:30, 26 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

பத்திரிகைத்துறையில் பொதுச் சேவைக்காக வழங்கப்படும் தங்கப் பதக்கம்

புலிட்சர் பரிசு என்பது, பத்திரிகைத்துறை, இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இது மேற்படி துறைகளுக்கான மிக உயர்ந்த தேசிய கௌரவமாகக் கருதப்படுகின்றது. இது நியூ யார்க் நகரத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

மேற்படி துறைகளைச் சேர்ந்த இருபத்தொரு பிரிவுகளில் ஆண்டுதோறும் இப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் இருபது பிரிவுகளுக்கான பரிசாக ஒவ்வொன்றும் 10,000 அமெரிக்க டாலர்கள் பெறுமதியான பணமும், சான்றிதழும் வழங்கப்படுகின்றது. பத்திரிகைத்துறை சார்ந்த பொதுச் சேவைப் பிரிவில், பரிசாக ஒரு தங்கப் பதக்கம் வழங்கப்படுகின்றது. இப்பரிசு, ஒரு செய்திப் பத்திரிகை ஒன்றுக்கே வழங்கப்படுவதாயினும், ஒரு தனி மனிதருடைய பெயரும் குறிப்பிடப்படக்கூடும்.

இது, ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய ஜோசேப் புலிட்சர் என்பவரால் நிறுவப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் இவர் இறக்கும்போது இதற்காக ஒரு தொகைப் பணத்தைக் கொலம்பியாப் பல்கலைக்கழகத்துக்கு விட்டுச் சென்றார். இத் தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு 1912 ஆம் ஆண்டில் அப் பல்கலைக்கழகத்தின் பத்திரிகைத்துறைக் கல்விக்கழகம் (School of Journalism) தொடங்கப்பட்டது. முதலாவது புலிட்சர் பரிசு 1917 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நான்காம் திகதி வழங்கப்பட்டது. இப்பொழுது இது ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிட்சர்_பரிசு&oldid=281529" இலிருந்து மீள்விக்கப்பட்டது