கறுப்புக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2: வரிசை 2:
'''கறுப்புக் கல்''' (''Black Stone'', ''Hajarul Aswad'', {{lang-ar|الحجر الأسود}}) என்பது [[சவூதி அரேபியா]]வின் [[மக்கா]] நகரில் [[மஸ்ஜிதுல் ஹராம்|பெரிய பள்ளிவாசல்]] நடுவில் அமைந்துள்ள [[காபா]] எனும் கட்டடத்தின் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கல் ஆகும். இது இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி [[ஆதம் (இசுலாம்)|ஆதம்]], ஹவ்வா ஆகியோரின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும்.<ref>{{cite book|title=[[Ar-Raheeq Al-Makhtum]] (The Sealed Nectar): Biography of the Prophet|author=Sheikh Safi-ur-Rehman al-Mubarkpuri|isbn=1-59144-071-8|year=2002|publisher=Dar-us-Salam Publications}}</ref>
'''கறுப்புக் கல்''' (''Black Stone'', ''Hajarul Aswad'', {{lang-ar|الحجر الأسود}}) என்பது [[சவூதி அரேபியா]]வின் [[மக்கா]] நகரில் [[மஸ்ஜிதுல் ஹராம்|பெரிய பள்ளிவாசல்]] நடுவில் அமைந்துள்ள [[காபா]] எனும் கட்டடத்தின் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கல் ஆகும். இது இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி [[ஆதம் (இசுலாம்)|ஆதம்]], ஹவ்வா ஆகியோரின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும்.<ref>{{cite book|title=[[Ar-Raheeq Al-Makhtum]] (The Sealed Nectar): Biography of the Prophet|author=Sheikh Safi-ur-Rehman al-Mubarkpuri|isbn=1-59144-071-8|year=2002|publisher=Dar-us-Salam Publications}}</ref>


இந்தக் கல் [[முகம்மது நபி|முஹம்மது நபியின்)]] பிறப்புக்கு முன்னே, [[இசுலாம்|இஸ்லாத்தின்]] ஆரம்பக் காலம் முதல் போற்றப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி கறுப்புக் கல் என்பது முஹம்மது நபிவினால் கிபி 605 ஆம் ஆண்டு காபாவின் சுவருடன் இணைத்து அமைக்கப்பட்டது. கிபி 605 இற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்ட இந்தக் கல் தற்போது காபாவின் ஓரத்தில் ஒரு வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது.<ref name="Burke" />
இந்தக் கல் [[முகம்மது நபி|முஹம்மது நபியின்)]] பிறப்புக்கு முன்னே, [[இசுலாம்|இஸ்லாத்தின்]] ஆரம்ப காலம் முதல் போற்றப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி கறுப்புக் கல் என்பது முஹம்மது நபிவினால் கிபி 605 ஆம் ஆண்டு காபாவின் சுவருடன் இணைத்து அமைக்கப்பட்டது. கிபி 605 இற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்ட இந்தக் கல் தற்போது காபாவின் ஓரத்தில் ஒரு வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது.<ref name="Burke" />


முஹம்மது நபி வழிமுறையைப் பின்பற்றி இன்றும் முஸ்லிம் யாத்திரிகர்கள் [[ஹஜ்|ஹஜ் கடமையில்]] காபாவைச் சுற்றி வந்து [[தவாப்]] செய்யும் போது இக்கல்லை போட்டியிட்டு ஆர்வத்துடன் முத்தமிடுவார்கள்.<ref>{{cite book|title=Your Door to Arabia|last=Elliott|first=Jeri|year=1992|isbn= 0-473-01546-3|publisher=R. Eberhardt|location=Lower Hutt, N.Z.}}</ref><ref name=AtoZ>{{cite book|title=Hajj to Umrah: From A to Z|last=Mohamed|first=Mamdouh N.|year= 1996|publisher=Amana Publications|isbn=0-915957-54-X}}</ref>
முஹம்மது நபி வழிமுறையைப் பின்பற்றி இன்றும் முஸ்லிம் யாத்திரிகர்கள் [[ஹஜ்|ஹஜ் கடமையில்]] காபாவைச் சுற்றி வந்து [[தவாப்]] செய்யும் போது இக்கல்லை போட்டியிட்டு ஆர்வத்துடன் முத்தமிடுவார்கள்.<ref>{{cite book|title=Your Door to Arabia|last=Elliott|first=Jeri|year=1992|isbn= 0-473-01546-3|publisher=R. Eberhardt|location=Lower Hutt, N.Z.}}</ref><ref name=AtoZ>{{cite book|title=Hajj to Umrah: From A to Z|last=Mohamed|first=Mamdouh N.|year= 1996|publisher=Amana Publications|isbn=0-915957-54-X}}</ref>

18:09, 19 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

யாத்திரிகர்கள் முத்தமிட வாய்ப்பு பெற முட்டித் தள்ளுகின்றனர். அவர்களால் கல்லை முத்தம் முடியவில்லை என்றால், அவர்கள் தங்கள் வலது கையில் ஒவ்வொரு சுற்றிலும் கல் நோக்கி சுட்டிக்காட்ட முடியும்.

கறுப்புக் கல் (Black Stone, Hajarul Aswad, அரபு மொழி: الحجر الأسود‎) என்பது சவூதி அரேபியாவின் மக்கா நகரில் பெரிய பள்ளிவாசல் நடுவில் அமைந்துள்ள காபா எனும் கட்டடத்தின் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கல் ஆகும். இது இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி ஆதம், ஹவ்வா ஆகியோரின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும்.[1]

இந்தக் கல் முஹம்மது நபியின்) பிறப்புக்கு முன்னே, இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதல் போற்றப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி கறுப்புக் கல் என்பது முஹம்மது நபிவினால் கிபி 605 ஆம் ஆண்டு காபாவின் சுவருடன் இணைத்து அமைக்கப்பட்டது. கிபி 605 இற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்ட இந்தக் கல் தற்போது காபாவின் ஓரத்தில் ஒரு வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது.[2]

முஹம்மது நபி வழிமுறையைப் பின்பற்றி இன்றும் முஸ்லிம் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில் காபாவைச் சுற்றி வந்து தவாப் செய்யும் போது இக்கல்லை போட்டியிட்டு ஆர்வத்துடன் முத்தமிடுவார்கள்.[3][4]

அமைப்பு விளக்கம்

கல்லின் நெருக்கமான காட்சி
கல்லின் துண்டுதுண்டான முன்பக்க எடுத்துக்காட்டு

கறுப்புக் கல் என்பது வெள்ளிச் சட்டம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சிறு பாகங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளதால் இன்று 7 அல்லது 8 பாகங்கள் ஒன்றாக்கப்பட்ட நிலையில் காணப்படக்கூடியதாக இது உள்ளது. கல்லின் முழு வெளித்தோற்ற அளவு 20 சென்டிமீட்டர் (7.9 அங்குலம்), 16 சென்டிமீட்டர் (6.3 அங்குலம்) ஆகும். இந்தக்கல் பல முறை புதுப்பித்துக் கட்டப்பட்டதால் இதன் மூல அளவு பற்றிய தெளிவு இல்லை.[2]

"இக்கல் ஒரு முழம் (1.4 அடி அதாவது 0.46 மீட்டர்) நீளம் கொண்டது" என 10ஆம் நூற்றாண்டில் இதைக் கண்டவர்கள் கூறியதாக அறிய முடிகிறது.

18 ஆம் நூற்றாண்டில் 'அலி பே' என்ற அறிஞரின் கூற்றுப்படி 42 அங்குலம் (1.10 மீட்டர்) உயரம் உடையது. முஹம்மது அலி பாஷர் என்ற அறிஞரின் கூற்றுப்படி 2.5 அடி (0.76 மீட்டர்) நீளமும் 1.5 அடி (0.46 மீட்டர்) அகலமும் கொண்டது.[2]

19 ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1814 ஆம் ஆண்டு) சுவிஸர்லாந்தில் இருந்து யாத்திரிகராக காபாவுக்கு வந்த 'ஜோஹன் லட்விக் பர்கர்ட்' என்பவர் முதன் முதலாக மேற்கத்திய நூல்களில் கறுப்புக்கல்லைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவரின் 'அரேபியாவில் ஒரு பயணம்' என்ற புத்தகத்தில் பின்வருமாறு ஒரு விரிவான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார்.

"1853 இல் காபாவுக்குச் சென்ற ரிச்சர்ட் பிரான்சிஸ் பர்டன் மேலும் குறிப்பிட்டது:

"ரிட்டர் வொன் லஹோரின், எகிப்தில் ஆஸ்திரிய தூதர் 1817 இல் முஹம்மது அலி என்பவரால் அகற்றப்பட்ட கல்லின் ஒரு பகுதியை ஆய்வு செய்து அக்கல்லின் வெளிப்புறம் சாம்பல் போன்ற வெள்ளி நிறமும் உள்ளே தூளாக்கப்பட்ட வெள்ளி மற்றும் பச்சை நிறப் பொருட்கள் பதிக்கப்பட்டும் உள்ளது. கல்லின் முகப்புப் பகுதியில் வெள்ளை அல்லது மஞ்சள் புள்ளிகளும் உள்ளன என அறிவித்தார்.

"கருப்புக் கல்லைச் சுற்றி உள்ள சட்டம், கருப்பு கிஷ்வாஹ்[தெளிவுபடுத்துக] அல்லது காபாவைச் சுற்றி உள்ள கருப்புத் துணியானது பல நூற்றாண்டுகளாக பள்ளிவாசலின் பொறுப்பாளரான 'ஒத்தமான் சுல்தான்' மூலமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அச்சட்டமானது யாத்திரிகர்களால் அவ்வப்போது மாற்றப்பட்டும் காலப்போக்கில் நிலையானதாகவும் அணிவிக்கப்படும். சில நேரங்களில் நீக்கப்படும். அச்சட்டமானது துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குக் கொண்டுச் செல்லப்படும். அவர்கள் இன்னும் அதனை புனித பீடத்தில் ஒரு பகுதியாக கருதி துருக்கியின் 'டொப்காபி' மாளிகையில் பராமரித்து வருகின்றனர்.

வரலாறு மற்றும் பாரம்பரியம்

thumb கிபி 1315. ஈரானிய ஓவியம். ஜாமி அல்-தவாரிக் விளக்கம். முஹம்மது சீரா (நபி வரலாறு), மக்காவின் குலத் தலைவர்கள் கல்லைத் தூக்கும் காட்சி

முஹம்மது இஸ்லாம் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கு முன்னதாகவே காபாவில் கறுப்புக்கல் அமைக்கப்பட்டதுடன் அங்கு அது பெரும் மதிப்புடையதாகவும் இருந்தது. முஹம்மது காலத்தில் அது ஏற்கனவே காபாவுடன் தொடர்புடையதாக இருந்தது. அக்காலத்தில் மக்கள் ஆண்டுக்கு ஒரு முறை அங்கு சென்று வழிபட்டு வந்தனர். மக்காவில் அமைந்து இருக்கும் காபா ஆலயத்தில் 360 விக்கிரகங்களை வைத்து அவற்றைக் கடவுள்களாக வழிபடும் ஒரு தலமாக அதை மதித்தனர். மத்திய கிழக்கில் கற்களை வழிபடுகின்ற வழக்கம் இருந்து வந்தது.

கருப்புக் கல்லைப் போல ஒரு 'சிவப்புக்கல்' தென் அரேபியாவில் கைமன் எனும் நகரிலும் மற்றொன்று காபாவின் அல் அபலத் (தென் மக்காவின் தபலா) நகரிலும் அறியாமைக் காலத்தில் 'தெய்வீகத்தன்மை உடையதாக' கருதப்பட்டது. அந்தக் காலத்தில் வணக்க வழிபாடு என்பது பெரும்பாலும் பயபக்தியான கற்கள், மலைகள், சிறப்பான பாறை அமைப்புகள் அல்லது தனித்துவமான, அபூர்வமான மரங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு உடையதாக இருந்தது.

காபாவில் பொருத்தப்பட்டுள்ள கறுப்புக் கல் "உலகத்தையும் சுவர்க்கத்தையும் இணைக்கும் ஒரு பொருளின் சின்னமாகவும்" கருதப்படுகிறது.

தற்போதைய கருப்புக்கல்லை காபாவின் சுவரில் முஹம்மது நபி(ஸல்) பொருத்தினார் என அறிய முடிகிறது. இப்னு இஷாக் தொகுத்து எழுதிய 'சீரா ரசூலுல்லாஹ்' என்ற நூலில் ஒரு நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பெரும் தீ விபத்தில் காபாவின் ஒரு பகுதி அளிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் மீண்டும் காபாவை கட்டியெழுப்பும் வேலையின் போது தற்காலிகமாக அந்தக் கருப்புக் கல் அதன் இடத்தை விட்டு அகற்றப்பட்டது. மீண்டும் அதை அதே இடத்தில் பொருத்துவதற்குத் தகுதியான மரியாதைக்குரிய ஒரு பெரிய மனிதர் தமக்குள் இல்லை என அவர்கள் வாதிட்டனர். அப்போது அவர்கள் அந்த வாசல் வழியாக அடுத்து யாராவது ஒருவர் வரும் வரை காத்திருந்து அவரிடமே இது பற்றி முடிவு செய்யச் சொல்லலாம் எனக் கூறினர். இந்நிகழ்வு முஹம்மதிற்கு நபித்துவம் கிடைப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது முஹம்மது நபியின் 35 ஆம் வயதில் நடைபெற்றது. இதற்கு முடிவு கூறும் விதமாக முஹம்மது, ஒரு துணியைக் கொண்டு வர செய்து மக்கா நகரத்து முக்கியப் பிரமுகர்களின் வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகளின் மூத்தவர்கள் அத்துணியின் நடுவில் அந்தக் கல்லைத் தூக்கி வைக்குமாறு கூறி அத்துணியின் மூலைகளை குலத் தலைவர்கள் ஒவ்வொருவரும் பிடித்துத் தூக்கிச் சென்று சரியான இடத்தில் வைக்கலாம் என்று கூறினார்கள்.

இவ்வாறாக முஹம்மது அக்கல்லை சரியான இடத்தில் பொருத்தினார். இந்நிகழ்வு அனைத்து மக்கா வாசிகளுக்கும் திருப்தியை அளித்தது.

இக்கல்லின் 'தெய்வீக தன்மை' இழப்பு

கிபி 683 இல் மக்காவில் உமையா காலத்தில் கவன் ஒன்றினால் நெருப்புத் துண்டுகள் எறியப்பட்டு கல்லின் ஒரு பகுதி முறிக்கப்பட்டது. கல்லின் துண்டுகளை அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் என்பவர் மீண்டும் வெள்ளி தசை நார் கொண்டு இணைத்தார். கிபி 930 இல் இந்தக் கல் திருடப்பட்டு ஹஜர் (நவீன பஹ்ரைன்) கொண்டு செல்லப்பட்டது. 1857 இல் ஒத்தமான் வரலாற்று ஆசிரியர் குத்புத்தீன் என்பவரின் கூற்றுப்படி அபு தாகிர் அல் கர்மாதி என்பவர் தனது மஸ்ஜித் அல் திரார் பள்ளிவாசலின் உச்சியில் அக்கல்லை நிறுவினார். ஹஜ் செய்ய செல்லும் யாத்திரிகர்களை திசை திருப்புவதற்காக அவரின் இந்தத் திட்டம் தோல்வியுற்றது. ஆனால் யாத்திரிகர்களும் கருப்புக்கல் இருந்த முந்தைய இடத்தையே வணக்கத் தலமாக தொடர்ந்தனர்.

வரலாற்றாசிரியர் அல் ஜுவைனி கருத்துப்படி 23 ஆண்டுகளுக்குப் பின்னர் 952 இல் அது மீண்டும் காபாவுக்குக் கொண்டு வரப்பட்டது. "கட்டளை மூலம் அதை எடுத்துச் சென்றோம். மீண்டும் கட்டளை மூலம் கொண்டு வந்தோம்" என அறிவிக்கப்பட்டது. கடத்தல் மற்றும் அகற்றுதல் ஆகிய செயல்கள் மேலும் சேதத்தை ஏற்படுத்தியதால் கல் ஏழு துண்டுகளாக உடைக்கப்பட்டது. அதைக் கடத்திச் சென்ற அபு தாகிர் ஒரு கொடூரமான விதியை சந்தித்தாகக் கூறப்பட்டது. "அபு தாஹிருக்கு ஒரு புண் நோய் ஏற்பட்டது. உடலில் புழுக்கள் ஏற்பட்டு மிகவும் கொடூரமான மரணத்தை அவர் அடைந்தார்" என குத்புத்தீன் கூறுகிறார்.

சடங்குப் பங்களிப்பு

மக்காவிலுள்ள காபா. கறுப்புக் கல் காபாவின் கிழக்கு மூலையில் உள்ளது.

ஹஜ் கடமையின் போது யாத்திரிகர்கள் ஏழு தடவை காபாவைச் சுற்றி வரும்போது கறுப்புக்கல் முக்கிய பங்கு வகிக்கின்றது. யாத்திரிகர்கள் ஒவ்வொரு முறையும் சுற்றி வரும் போது கருப்புக் கல்லை முத்தமிட முயற்சி செய்கின்றனர். ஆனால் இன்றைய காலத்தில் பெரும் கூட்டம் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதால் அனைவரும் அக்கல்லை முத்தமிடுவது சாத்தியமற்றது. ஆகவே ஒவ்வொரு சுற்றின் போதும் அந்தக் கல்லின் திசையைக் கையால் சுட்டிக் காட்டுவது ஏற்கத்தக்கது எனக் கருதப்படுகிறது.

சிலர் காபாவைச் சுற்றி வலம் (தவாப்) வரும் போது வெறுமனே சுற்று எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான ஒரு சிறந்த அடையாளக் கல்லாக இதைக் கருதினர்.

இஸ்லாமிய கருத்து மற்றும் அடையாளங்கள்

இஸ்லாமியப் பாரம்பரியத்தில் கருப்புக்கல் சுவனத்தில் இருந்து பூமியில் விழுந்ததாக நம்பப்படுகிறது. இது பூமியில் அமைக்கப்பட்ட மஸ்ஜித்களில் முதன்மையானதாகும். முஸ்லிம்கள் அந்தக்கல்லை முதலில் தூய மற்றும் திகைப்பூட்டும் வெள்ளை கல்லாக கண்டனர். பின்னர் தொடர்ந்து தொடப்பட்டதால் அந்தக் கல் கருப்பாக மாறிவிட்டது.

இரண்டாவது கலீஃபாவான உமர் இப்னு அல் கத்தாப் (கிபி 580–644) 'ஹஜருல் அஸ்வத்' எனும் இந்தக் கருப்புக் கல்லின் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு "நீ யாருக்கும் தீமையோ நன்மையோ அளிக்க முடியாத வெறும் ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன். முஹம்மது நபி அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் கண்டிருக்கவில்லை என்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்" என்றார்.

அறிவியற் தோற்றம்

கறுப்புக்கல்லின் தன்மை என்பது கடும் விவாதத்திற்கு உரிய ஒன்றாகும். இது எரிமலைப் பாறை எனவும் இரத்தினக்கற்களில் ஒன்று எனவும் இயற்கையான கண்ணாடி துண்டு எனவும் கல்லுக்குள் புதைந்த விண்கல் எனவும் பல வகைகளில் கூறப்படுகிறது.

1857இல் ஆஸ்திரிய-ஹங்கேரிய கனிமங்கள் தொகுப்பிற்கு பொறுப்பான ஒரு ஆய்வாளர் தன்னுடைய முதல் அறிக்கையில் "காபாவில் உள்ள கறுப்புக் கல் என்பது ஒரு விண்கல்" என குறிப்பிட்டுள்ளார்.[சான்று தேவை] 1974 இல் கருப்புக் கல்லைப் பற்றி ஆய்வு[எவ்வாறு?] செய்த ராபர்ட்ஸ் டைட்ஸ் மற்றும் ஜோன் மேக்ஹோன் ஆகியோர் இது ஒரு இரத்தினக் கல் வகையைச் சேர்ந்தது எனக் கூறினர்.[சான்று தேவை] அரேபிய புவியியலாளர் ஒருவரின் அறிக்கைப் படி இதன் உடற்கூறு பண்புகளின் அடிப்படையில் இதில் தெளிவாக கவனிக்கதத் தக்க வகையில் இரத்தினக் கல்லின் பரவல்பினைப்பு காணப்படுகிறது என்கிறார்.[சான்று தேவை]

வரலாற்றுப் பதிவாளர் ஒருவரின் கருத்துப்படி இக்கல் நீரில் மிதக்கக்கூடிய திறன் கொண்டது இக்கணக்கு துல்லியமாக இருந்தால் இக்கல் இரத்தினக்கல்லாகவோ எரிமலைக் கருங்கல்லாகவோ விண்கல்லாகவோ இருக்க முடியாது. எனினும் கண்ணாடி அல்லது படிக் கல்லாக இருக்க வாய்ப்புள்ளது.[சான்று தேவை]

கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எல்சபத் தாம்சன் என்பவரின் கருத்துப்படி இந்தக் கருப்புக் கல் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு வானிலிருந்து பூமியில் விழுந்தததாகும்.[சான்று தேவை] விண்கல்லின் தாக்கத்தினால் துண்டு துண்டாக ஆக்கப்பட்ட கண்ணாடித் துண்டாக இது இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மக்காவின் அல்காலி பாலைவனத்தில் மக்காவிலிருந்து 1100 கிலோமீட்டர் கிழக்கில் சிலிக்கா கண்ணாடித் தொகுதிகள் முன்னிலையில் வெப்பத்தின் தாக்கத்தால் விண்கல்லில் இருந்து நிக்கல்-இரும்பு கலவை மணிகள் வந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.[சான்று தேவை] கண்ணாடி தொகுதிகள் நீரில் தேங்கி மஞ்சள் அல்லது வெள்ளை உள்துறை மற்றும் எரிவாயு நிரப்பபட்ட்ட ஹொல்லாவ் என்பவற்றால் பளபளப்பான கருபுக் கண்ணாடி உருவாக்கப்படுகிறது. ஆனாலும் 1932 வரை விஞ்ஞானிகள் வாபர் பள்ளம் பற்றி அறிந்து இருக்கவில்லை இது ஒமானிலிருந்து ஒரு சாத்து வழி அருகே அமைந்துள்ள பாலைவனத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதியாகும். இது நிச்சயமாக நன்கு அறியப்பட்ட பரந்த பகுதியில் இருந்தது.

இது ஒரு போலி விண்கல் எனவும் இன்னும் ஒரு வார்த்தையில் பூமிக்குரிய கல் தவறுதலாக ஒரு விண்கல்லின் பண்புகளை கொண்டுள்ளது எனவும் பிரித்தானிய சேர்ந்த இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பரிந்துரைக்கிறது.[5]

இதுவரை இக்கல் ஆய்வு செய்யப்படவில்லை, அதனால் இதன் தோற்றம் ஊகத்திற்கு உட்பட்டது.[6]

குறிப்புகள்

  1. Sheikh Safi-ur-Rehman al-Mubarkpuri (2002). Ar-Raheeq Al-Makhtum (The Sealed Nectar): Biography of the Prophet. Dar-us-Salam Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59144-071-8. 
  2. 2.0 2.1 2.2 Burke, John G. (1991). Cosmic Debris: Meteorites in History. University of California Press. பக். 221–223. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-07396-8. 
  3. Elliott, Jeri (1992). Your Door to Arabia. Lower Hutt, N.Z.: R. Eberhardt. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-473-01546-3. 
  4. Mohamed, Mamdouh N. (1996). Hajj to Umrah: From A to Z. Amana Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-915957-54-X. 
  5. Grady, Monica M.; Graham, A.L. (2000). Grady, Monica M.. ed. Catalogue of meteorites: with special reference to those represented in the collection of the Natural History Museum, London. 1. Cambridge University Press. பக். 263. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-66303-8. 
  6. Golia, Maria (2015-10-15) (in en). Meteorite: Nature and Culture. Reaktion Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781780235479. https://books.google.nl/books?id=oiTNCgAAQBAJ&pg=PT68&dq=Wabar+meteorite+craters+black+stone&hl=en&sa=X&ved=0ahUKEwiDxMmB4r_cAhUCIVAKHaVgC3AQ6AEINzAC#v=onepage&q=Wabar%20meteorite%20craters%20black%20stone&f=false. 

சான்றாதாரங்கள்

  • Grunebaum, G. E. von (1970). Classical Islam: A History 600 A.D.–1258 A.D.. Aldine Publishing Company. ISBN 978-0-202-15016-1
  • Sheikh Safi-ur-Rahman al-Mubarkpuri (2002). Ar-Raheeq Al-Makhtum (The Sealed Nectar): Biography of the Prophet. Dar-us-Salam Publications. ISBN 1-59144-071-8.
  • Elliott, Jeri (1992). Your Door to Arabia. ISBN 0-473-01546-3.
  • Mohamed, Mamdouh N. (1996). Hajj to Umrah: From A to Z. Amana Publications. ISBN 0-915957-54-X.
  • Time-Life Books (1988). Time Frame AD 600–800: The March of Islam, ISBN 0-8094-6420-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுப்புக்_கல்&oldid=2761989" இலிருந்து மீள்விக்கப்பட்டது