"லாக்டிக் அமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
}}
}}
 
 
'''லாக்டிக் அமிலம்''' ''(Lactic Acid)'' என்பது CH3CH(OH)COOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய திண்ம நிலையில் இது வெண்மை நிறத்துடனும் நீரில் கரையக்கூடியதாகவும் உள்ளது. நீர்ம நிலையில் இது நிறமற்றதாக உள்ளது. இயற்கை முறையிலும் செயற்கையாகவும் லாக்டிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. ஒரு ஐதராக்சில் குழுவும் அதற்குப் பக்கத்தில் கார்பாக்சில் குழுவும் இடம்பெற்றிருப்பதால் லாக்டிக் அமிலத்தை ஆல்பா ஐதராக்சி அமிலம் என வகைப்படுத்துகிறார்கள். இதனுடைய இணை காரமாகக் கருதப்படும் லாக்டேட்டு பல்வேறு உயிர்வேதியியல் செயல்முறைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கரைசலில் கார்பாக்சில் குழுவிலிருந்து ஒரு புரோட்டானை இது அயனியாக்கி லாக்டேட்டு அயனியை CH3CH(OH)CO−2 உருவாக்குகிறது. அசிட்டிக் அமிலத்துடன் ஒப்பிடுகையில் லாக்டிக் அமிலத்தின் pKa மதிப்பு ஓர் அலகு குறைவாகும். இதன் பொருள் அசிட்டிக் அமிலத்தைக் காட்டிலும் லாக்டிக் அமிலம் பத்து முறை அதிகமாக புரோட்டான் நீக்கம் செய்கிறது. α- ஐதராக்சில் மற்றும் கார்பாக்சிலேட்டு குழுக்களுக்கு இடையிலான மூலக்கூற்றிடை ஐதரசன் பிணைப்பு காரணமாக உயர் அமிலத்தன்மை உண்டாகிறது.
 
லாக்டிக் அமிலம் சமச்சீர்மையுடன் காணப்படுகிறது. இரண்டு ஒளியியல் மாற்றியங்க்களைக் கொண்டுள்ளது. L-(+)-லாக்டிக் அமிலம் அல்லது (S)-லாக்டிக் அமிலம் மற்றும் இதனுடைய ஆடி மாற்றியன்களான D-(−)-லாக்டிக் அமிலம் அல்லது (R)-லாக்டிக் அமிலம் என்பன அவ்விரண்டுமாகும். இவ்விரண்டு மாற்றியங்களின் சம அளவு கலவை DL-லாக்டிக் அமிலம், அல்லது சுழிமாய் லாக்டிக் அமிலம் எனப்படுகிறது.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2743874" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி