தந்துவிட்டேன் என்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: பராமரிப்பு using AWB
வரிசை 64: வரிசை 64:
* {{IMDb title|tt0320608}}
* {{IMDb title|tt0320608}}
{{ஸ்ரீதர்}}
{{ஸ்ரீதர்}}

[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1991 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1991 தமிழ்த் திரைப்படங்கள்]]

06:15, 25 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

தந்துவிட்டேன் என்னை
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஸ்ரீதர்
கதைஸ்ரீதர்
இசைஇளையராஜா
நடிப்புவிக்ரம்
ரோகிணி
மனோரமா
பாரதிராஜா
ஒளிப்பதிவுசிவா
படத்தொகுப்புசந்திரன்
கலையகம்சித்ராலயா
விநியோகம்சித்ராலயா
வெளியீடு21 சூன் 1991
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தந்துவிட்டேன் என்னை (Thanthu Vitten Ennai) என்பது 1991 ஆண்டைய தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தில் விக்ரம் , ரோகிணி ஆகியோர் முதன்மை பாத்திரங்களை ஏற்று நடித்தனர். இப்படமே இயக்குநர் ஸ்ரீதரின் கடைசி படமாகும்.[1][2]

கதைச்சுருக்கம்

ஒரு பணக்காரப் பெண்ணும் ஒரு சதாரணக் குடும்பதுதைச் சேர்ந்த கதாநாயகனும் காதலிக்கின்றனர். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் தனது சொத்து சுகத்தையெல்லாம் விட்டுவிட்டு நாயகன் வீட்டுக்கு வந்துவிடுகிறாள். ஆனால் நாயகன், தனக்கு வேலை இல்லாத காரணத்தால், அவளைப் பத்திரமாக அவளது தந்தையிடம் ஒப்படைத்துவிடுகிறார். நாயகனின் இந்த நேர்மையால் கவரப்பட்ட அவர், நாயகனுக்கு வேலை தேடிக்கொள்ள ஒரு ஆண்டு அவகாசம் தருகிறார். இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தனரா, இல்லையா என்பதே முடிவு.

இசை

இப்படத்துக்காக இளையராஜா ஆறு பாடல்களுக்கு இசையமைத்தார். பாடல்வரிகளை இளையராஜா, புலமைப்பித்தன், கங்கை அமரன் மு. மேத்தா ஆகியோர் எழுதினர்.[3]

பாடல் பாடகர் நீளம்

(நி:வி)
"கண்களுக்குள்" எஸ். ஜானகி 4:37
"மன்னவனே" எஸ் ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:36
"முத்தமா" அருண்மொழி, உமா ரமணன் 4:47
"தென்றல் நீ" எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:26
"மனசுலோனி" எஸ். ஜானகி 5:50
"ஆத்தாடி அள்ளிக்கோடி" 4:34

வரவேற்பு

இப்படம் குறித்து சித்ராலயா கோபு குறிப்பிடும்போது, இது ஒரு தோல்விப்படம் என்றும், ஒரு வாரம்கூட திரையரங்குகளில் ஓடவில்லை என குறிப்பிட்டார். இதற்காண காரணத்தை அவர் ஆராய்ந்தபோது. தன்னை நம்பிவந்த நாயகியை கதாநாயகன் திருமணம் செய்துகொண்டு அவளை எப்பாடுபட்டாவது வைத்துக் காப்பாறாறாமல் அவளது தந்தையிடம் கொண்டுவந்து ஒப்படைத்ததை இரசிகர்கள் ஏற்கவில்லை என்று குறிப்பிட்டார்.[4]

மேற்கோள்கள்

  1. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. Oxford University Press. பக். 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:019-563579-5. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 
  2. Rangan, Baradwaj. Man of Steel – How suffering turned a college lad into a Tamil superstar. http://www.caravanmagazine.in/arts/man-steel. 
  3. http://play.raaga.com/tamil/album/Thanthu-Vitten-Ennai-songs-T0000774
  4. டி.ஏ.நரசிம்மன் (2019 சனவரி 11). "தன்னையே தந்துவிட்ட ஸ்ரீதர்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2019. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்துவிட்டேன்_என்னை&oldid=2705482" இலிருந்து மீள்விக்கப்பட்டது