"இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
(Replacing Gandhi_and_Nehru_1942.jpg with File:Gandhi_and_Nehru_in_1946.jpg (by CommonsDelinker because: File renamed: Criterion 3 (obvious error)).)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
| date =
| accessdate = 2009-11-24
}}</ref> பிரித்தானிய ஆட்சியின்போது [[ஆங்கிலம்]] மட்டுமே அரசுமொழியாக விளங்கி வந்தது. [[இந்திய சுதந்திர இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தினர்]] இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளிலேயே இந்தியாவின் பல்வேறு மொழியினரையும் பிரித்தானியருக்கு எதிராக ஒன்றிணைக்க, உள்நாட்டு மொழி ஒன்றினைப் பொதுமொழியாக ஆக்கிட விருப்பம் கொண்டு [[இந்தி]]யும் [[உருது]]வும் கலந்த ''[[இந்துஸ்தானி]]'' என்ற மொழியை ஆதரித்தனர். இந்த அடிப்படையிலேயே 1918ஆம் ஆண்டு [[மகாத்மா காந்தி]] ''தட்சிண பாரத் இந்திப் பிரச்சார சபா'' என்ற அமைப்பை உருவாக்கினார். [[இந்திய தேசிய காங்கிரசு]] 1925ஆம் ஆண்டு முதல் தனது நிகழ்வுகளை இந்துஸ்தானியில் மேற்கொள்ளத் துவங்கியது.<ref name="ramaswamy421">{{Harvnb|Ramaswamy|1997| loc=ch. 4.21 (Battling the Demoness Hindi)}}</ref> [[காந்தி]] மற்றும் [[நேரு]] இருவருமே இந்துஸ்தானியை [[இந்தி]] பேசாத மாநிலங்களில் பரப்புவதில் விருப்பமுடையவர்களாக இருந்தனர்.<ref name="nehru1">{{cite book | first=Jawaharlal| last=Nehru| first2=Mohandas| last2=Gandhi| authorlink=ஜவஹர்லால் நேரு | coauthors= | origyear=| year=1937| title= The question of language: Issue 6 of Congress political and economic studies|edition= | publisher=K. M. Ashraf| location= | id= | pages= | url =http://books.google.com/books?id=R5upQgAACAAJ}}</ref><ref name="guha1">{{Harvnb|Guha|2008|pp=128-131}}</ref><ref name="ghose">{{cite book | first=Sankar| last=Ghose| authorlink= | coauthors= | origyear=| year= 1993| title= Jawaharlal Nehru, a biography |edition= | publisher=Allied Publishers| location= | id= {{ISBN |8170233690}}, {{ISBN |9788170233695}}| pages=216| url =http://books.google.com/books?id=MUeyUhVGIDMC&pg=PA216}}</ref> இம்முயற்சி தமிழரை வட இந்தியர்களுக்கு அடிமையாக்குவதாகக் கருதிய [[பெரியார்|பெரியார் ஈ.வெ.ராவிற்கு]], இந்தி அல்லது இந்துஸ்தானியைப் பொதுமொழியாக்குவதில் உடன்பாடில்லை.<ref name="saraswathi">{{cite book | first=Srinivasan| last=Saraswathi| authorlink= | coauthors= | origyear=| year= 1994| title= Towards self-respect: Periyar EVR on a new world |edition= | publisher=Institute of South Indian Studies| location= | id= | pages=88–89| url =http://books.google.com/books?id=KRgLNgAACAAJ}}</ref>
 
==1937ல் முதலாம் எதிர்ப்பு போராட்டங்கள்==
===போராட்டத்திற்கு பேராதரவு===
[[File:Periyar with Jinnah and Ambedkar.JPG|thumb|300px|right|alt=ஓர் சிறிய மேசையைச் சுற்றி ஐவர் அமர்ந்துள்ளனர். நால்வர் மேற்கத்திய உடைகளில், ஒருவர் மட்டும் நீண்ட தாடியுடன் வேட்டி, துண்டு அணிந்துள்ளார்.|'''போராட்டத்திற்கு ஆதரவு வேண்டல்''' : மும்பையில் ஜின்னாவின் இல்லத்தில் பெரியார் [[முகமது அலி ஜின்னா]] மற்றும் [[அம்பேத்கர்|பி.ஆர்.அம்பேத்கருடன்]] (8 சனவரி 1940)<ref name="more2">{{Harvnb|More|1997| p=172}}</ref>]]
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பெரியாரின் [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கமும்]] நீதிக்கட்சியினரும் துணை நின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். போராட்டத்திற்குத் தமிழ் அறிஞர்கள் [[மறைமலையடிகள்]], [[சோமசுந்தர பாரதியார்]], [[கா. அப்பாதுரை]], [[முடியரசன்]], [[சி. இலக்குவனார்|இலக்குவனார்]] போன்றோர் ஆதரவளித்தனர். இப்போராட்டத்தில் பெண்களும் பெரும்பான்மையாகப் பங்கேற்றனர். [[மூவலூர் ராமாமிருதம்]], நாராயணி, வ. ப. தாமரைக்கனி, முன்னகர் அழகியார், டாக்டர். தர்மாம்பாள், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீதாம்மாள் ஆகியோர் சிறை சென்ற சில மகளிராவர்.<ref name="sarkar">{{cite book | first=Tanika| last=Sarkar| authorlink=| coauthors= | origyear=| year=2008| title=Women and social reform in modern India: a reader |edition= | publisher=Indiana University Press| location= | id= {{ISBN |0253220491}}, {{ISBN |9780253220493}}| pages=396| url=http://books.google.com/books?id=JLGBUEs74n4C}}</ref> 13 நவம்பர் 1938ல், தமிழக மகளிர் மாநாடு இதற்கான ஆதரவைக் காட்டும் வகையில் கூட்டப்பட்டது.<ref name="ramaswamy522">{{Harvnb|Ramaswamy|1997| loc=ch. 5.22 (The Woman Devotee)}}</ref><ref name="srilata">{{cite book | first=K.| last=Srilata| authorlink=| coauthors= | origyear=| year=2003| title=The other half of the coconut: women writing self-respect history : an anthology of self-respect literature (1928-1936) |edition= | publisher=Zubaan| location= | id= {{ISBN |818670650X}} {{ISBN |9788186706503}}| pages=11–12| url=http://books.google.com/books?id=4AOnhw_0UREC&pg=PA11}}</ref> போராட்டக்காரர்களின் பிராமணர் எதிர்ப்பு உணர்வுகளுக்கிடையிலும் [[காஞ்சிபுரம்|காஞ்சி]] ராஜகோபாலாச்சாரியார் போன்ற சில பிராமணர்களும் போராட்டத்திற்குத் துணை நின்றனர்.<ref name="ramaswamy530">{{Harvnb|Ramaswamy|1997| loc=ch. 5.30 (The Devotee as Martyr)}}</ref>
 
[[தமிழ்]] பேசும் [[இசுலாமியர்]] இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்; ஆயினும் [[உருது]] பேசிய [[இசுலாமியர்]] அரசிற்கு ஆதரவளித்தனர். திருச்சியைச் சேர்ந்த [[பி. கலிஃபுல்லா]] என்ற [[முசுலீம் லீக்]] சட்டமன்ற உறுப்பினர் "நான் ஓர் [[இராவுத்தர்]]. எனது தாய்மொழி [[தமிழ்]] என்பதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை; பெருமையே கொள்கிறேன். இந்தியை ஏன் இந்தியாவின் பொதுமொழியாகக் கொள்ளவேண்டும் என்று எவரும் எங்களுக்கு விளக்கவில்லை" என்று கூறினார்.<ref name="more"/> போராட்டத்திற்கான மக்களாதரவைக் கண்ட மாநில ஆளுநர் சூலை 2, 1938 அன்று அரசப்பிரதிநிதி (வைஸ்ராய்)க்கு இவ்வாறு எழுதினார் : "கட்டாய இந்தி இம்மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது மற்றும் அது பெரும்பான்மையான பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறானது".<ref name="more"/>
===நடராசனும் தாளமுத்துவும்===
[[File:Kudiyarasu.jpg|thumb|left|225px|நவம்பர் 20, 1938 தேதியிட்ட ''குடியரசு'' இதழ். முதல் பக்கத்தில் இந்தியை எதிர்க்கக் கூட்டப்பட்ட தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு பற்றிய செய்தி காணப்படுகிறது.]]
போராட்டக் காலத்தில் மரணமடைந்த இருவர் மொழிப்போர் தியாகிகள் என போராட்டக்காரர்களால் போற்றப்பட்டனர். அவர்களது மரணம் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்த்தது. [[நடராசன் (இந்தி எதிர்ப்பு போராளி)|நடராசன்]] என்ற இளைஞர் திசம்பர் 5, 1938 அன்று கைது செய்யப்பட்டார். அவர் 30 திசம்பர், 1938 அன்று [[மருத்துவமனை]]யில் சேர்க்கப்பட்டு 15 [[சனவரி]] 1939 அன்று மரணமடைந்தார். 13 [[பிப்ரவரி]] 1939 அன்று [[தாலமுத்து|தாளமுத்து]] நாடார் என்பவர் இந்து தியோசாபிகல் உயர்நிலைப்பள்ளியருகே மறியல் செய்ததாகப் பிறருடன் கைது செய்யப்பட்டார். அவரும் காவலில் இருக்கும்போது நோய்வாய்ப்பட்டு 6 மார்ச் அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 மார்ச் அன்று மரணமடைந்தார். அவரது இறப்பிற்கு அவரது உடல்நிலைக்குறைவும் கடும் [[வயிற்றுப்போக்கு|வயிற்றுப்போக்குமே]] காரணம் என்று அரசு கூறியது. சட்டமன்றத்தில் இவ்விறப்புக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] அவற்றை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு மறுத்தார். இத்தகைய அரசின் போக்கு போராட்டக்காரர்களை மேலும் கோபமுறச் செய்தது. [[சென்னை]]யில் நடந்த அவர்களது இறுதிச்சடங்குகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்; அரசுக்கெதிரான ஆவேசப்பேச்சுகள் நடந்தேறின. இவ்விருவரையும் விடுவிக்க முன்னரே அரசு இணங்கியபோதும் இந்தித் திணிப்பு எதிர்ப்பைக் கைவிட்டுவிடவேண்டுமென்ற அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட மறுத்ததால் சிறையில் அடைபட்டிருந்தனர்.<ref name="ramaswamy530">{{cite book | first=Sumathy| last=Ramaswamy| authorlink=| coauthors= | origyear=| year=1997| title= Passions of the tongue: language devotion in Tamil India, 1891-1970 |edition= | publisher=University of California Press| location= | id= {{ISBN |0520208056}} {{ISBN |9780520208056}}| pages=Chapter 5.30| url=http://www.escholarship.org/editions/view?docId=ft5199n9v7&chunk.id=s1.5.30&toc.depth=1&toc.id=ch5&brand=ucpress}}</ref><ref name="geetha">{{cite book | first=V| last=Geetha|first2=S. V.| last2=Rajadurai| authorlink=| coauthors= | origyear=| year=1998| title=Towards a non-Brahmin millennium: from Iyothee Thass to Periyar |edition= | publisher=Samya| location= | id= {{ISBN |8185604371}} {{ISBN |9788185604374}}| pages=499| url=http://books.google.com/books?id=-bh6AAAAMAAJ}}</ref><ref name="bhattacharya">{{cite book | first=Sabyasachi | last=Bhattacharya| first2=Brahma | last2=Nand| first3=Inukonda | last3=Thirumali|authorlink=| coauthors= | origyear=| year=2004| title=Repressed discourses: essays in honour of Prof. Sabyasachi Bhattacharya |edition= | publisher=Bibliomatrix| location= | id= {{ISBN |8190196413}} {{ISBN |9788190196413}}| pages=259| url=http://books.google.com/books?id=mavvAAAAIAAJ}}</ref>
 
===பிராமண எதிர்ப்பு===
இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தினர், [[தமிழ்]] மீது [[இந்தி]] மற்றும் [[சமசுகிருதம்|சமசுகிருத]] திணிப்பை மேற்கொள்ள [[பிராமணர்]]கள் செய்த முயற்சியாக கட்டாய இந்திக் கல்வி சட்டத்தைக் கருதினர்.<ref name="phadnis">{{cite book | first=Urmila | last=Phadnis|first2=Rajat| last2=Ganguly| authorlink=| coauthors= | origyear=| year=2001| title=Ethnicity and nation-building in South Asia |edition= | publisher=SAGE| location= | id= {{ISBN |0761994394}} {{ISBN |9780761994398}}| pages=221| url=http://books.google.com/books?id=wbf2wzyuWkUC&pg=PA221}}</ref> இராசாசி முன்னர் [[இயற்பியல்]] பாடப்புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்கையில் அதிகமான சமசுகிருத மொழிச்சொற்களைப் பயன்படுத்தியதை அவரது சமசுகிருதச் சாய்வுக்குச் சான்றாகக் காட்டினர். போராட்டக்காரர்கள், [[பிராமணர்]] நிரம்பிய [[தமிழ்நாடு]] காங்கிரசு கட்சியை வடநாட்டு ''இந்தி ஆதிக்கவாதி''களின் கைக்கூலிகள் என்றனர். தமிழிலிருந்து சமசுகிருதச் சொற்களை விலக்க பிராமண தமிழ் அறிஞர்களின் தயக்கம் தமிழ் மொழியைச் சிதைக்கப் பிராமணர்களின் சதி என்பதற்குக் காட்டாக அமைந்தது.<ref name="venkatachalapathy">{{cite book | title=andha kalathil kaapi illai| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā |authorlink=A.R. Venkatachalapathy| date=2000| publisher=Kalachuvadu|pages=144–161|id={{ISBN |8187477059}}| language= Tamil | authorlink=A R Venkatachalapathy}}</ref> [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] தமிழரின் எதிரியாகப் பார்க்கப்பட்டார். திராவிட [[தமிழ்]] [[நாளிதழ்]]கள் தங்கள் நகைச்சித்திரங்களில் [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] தமிழ்த்தாய் மீது [[கத்தி]] வீசுவது போன்றும் அவளது [[சேலை|சீலை]]யைப் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்துவது போன்றும் காட்டின. தங்களது பேரணிகளிலும் அத்தகைய படங்களைச் சுமந்து சென்றனர். ஆகத்து 1938ஆம் ஆண்டு நடந்த ஓர் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்ட கூட்டமொன்றில் பாவலர் பாலசுந்தரம் பிராமணர்களைத் தமிழ்த்தாயின் கொலைகாரர்கள் என்று வர்ணித்தார். நடராசனைக் குறித்த சட்டமன்ற உரையாடலில் இராசாசியின் அசட்டையான எதிர்வினை ''தமிழர்கள் தங்கள் வீரனுக்காக கண்ணீர் சிந்தும்போது ஆரியர்களின் சிரிப்பு'' என்று கண்டிக்கப் பட்டது. [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] பதிலுக்குப் போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பாளர்களைச் சாதிக் குறியீடுகளைக் கொண்டு வசைபாடுவதாகக் குற்றஞ்சாட்டினார். [[நவம்பர்]] 1938ல் [[சென்னை]]யில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பேரணியொன்றில் வன்முறை வெடித்துப் [[பிராமணர்]]கள் தாக்கப்பட்டனர்.<ref name="ramaswamy421"/><ref name="ramaswamy524">{{Harvnb|Ramaswamy|1997| loc=ch. 5.24 (The Brahman Devotee)}}</ref>
 
===அரசின் எதிர் நடவடிக்கை===
[[File:Rajaji1939.jpg|right|thumb|260px|1939ல் ராஜாஜி]]
இந்திப் பிரச்சினையில் ஆளும் காங்கிரசு கட்சியிலும் பிளவு இருந்தது. இராசாசியும் அவரது ஆதரவாளர்களும் இதில் உறுதியாக இருந்தபோதும் [[சத்தியமூர்த்தி]]யும் [[சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்|சர்வபள்ளி இராதாகிருஷ்ணனும்]] இதற்கு எதிராக இருந்தனர். அவர்கள் [[இந்தி]]யை விருப்பப்பாடமாகவோ அல்லது பெற்றோர்கள் தம் சிறுவர்களை இந்திப் பாடத்திலிருந்து விலக்கிக்கொள்ள அனுமதி கோரும் விதிகளைக் கொண்டதாகவோ திருத்தக் கோரினர். [[சத்தியமூர்த்தி]] போராட்டக்காரர்களுக்கு எதிராக குற்றவியல் சட்ட திருத்தம்,1932 படி நடவடிக்கை எடுப்பதையும் எதிர்த்தார்.<ref name="ramanathan"/> அவர் [[காந்தி]]க்கு சூலை 7,1938 அன்று எழுதிய கடிதத்தில்:
<blockquote>எவரது பெற்றோரோ காப்பாளரோ ஓர் [[நீதிபதி]]யின் முன்னிலையில் தன்னுடைய மகனோ மகளோ கட்டாயமாக [[இந்துஸ்தானி]] கற்பது தனது மனசாட்சிக்குப் புறம்பானது என்று காரணம் கூறி உறுதிமொழி வழங்குவாரேயானால் அச்சிறுவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். இத்தகைய விலக்கை வெகு சில பெற்றோர்கள் அல்லது காப்பாளர்களே விரும்புவர் என நான் நம்புகிறேன். இது எதிர்ப்பில் உள்ள பலவீனத்தை வெளிப்படுத்தி அதனை முறியடிக்கும். இதனை அறிவுரையாக [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|திரு.சி. இராஜகோபாலாச்சாரிக்கு]] நீங்கள் எழுதவேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும் மறியல் செய்வோர்மீது மதராஸ் அரசு குற்றச் சட்டம் திருத்த ஆணையைப் பயன்படுத்துவது மகிழ்ச்சி தரவில்லை <ref name="ramanathan">{{cite book | first=K.V.| last=Ramanathan| authorlink=| coauthors= | origyear=| year=2008| title=The Satyamurti Letters, Volume II |edition= | publisher=Pearson Education India| location= | id= {{ISBN |8131716848}} {{ISBN |9788131716847}}| pages=3,34| url=http://books.google.com/books?id=glA6t2p7arwC}}</ref></blockquote> எனக் குறிப்பிட்டிருந்தார்.
 
[[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] தமது செய்கைகளை 14 சூன் 1938 அரசாணையில் இவ்வாறு விளக்கியிருந்தார்:
 
==1940-1950 காலகட்டங்களில்==
1940-46 ஆண்டுகளில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு உணர்வைத் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகமும்]] [[பெரியார்|பெரியாரும்]] உயிரூட்டி வந்தனர். அரசு இந்திக்கல்வியைக் கட்டாயப் பாடமாக்கத் துணியும்போதெல்லாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தி அதனைத் தடுப்பதில் வெற்றி கண்டனர்.<ref name="williams">{{cite book | first=Rohit | last=Wanchoo| first2=Mukesh | last2=Williams| authorlink=| coauthors= | origyear=| year=2007| title= Representing India: literatures, politics, and identities |edition= | publisher=Oxford University Press| location= | id={{ISBN |0195692268}}, {{ISBN |9780195692266}}| pages=73| url=http://books.google.com/books?id=3uYTAQAAIAAJ}}</ref> இந்த காலகட்டத்தில் மிகத்தீவிரமான போராட்டம் 1948-49 ஆம் ஆண்டுகளில் நடந்தது. [[இந்தியா]] [[அரசியல் விடுதலை|விடுதலை]] பெற்ற பின்னர் காங்கிரசு தலமையிலான புதிய இந்திய அரசு, [[இந்தி]]யைப் பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது. அதன்படி [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] [[ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்]] தலைமையிலான காங்கிரசு அரசு 1948ஆம் ஆண்டு கட்டாயமாக்கியது. [[பெரியார்|பெரியாரின்]] இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்கு இம்முறை காங்கிரசில் இருந்த [[ம. பொ. சிவஞானம்]] மற்றும் [[திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு.வி.க]] தங்கள் முந்தைய இந்தி ஆதரவுநிலைக்கு மாறாக ஆதரவளித்தனர்.<ref name="ramaswamy421"/><ref name="ramaswamy522"/><ref name="vasantha">{{Harvnb|Kandasamy|Smarandache|2005| pp=108-110}}</ref>
 
ஜூலை 17, 1948ல் [[திராவிடர் கழகம்]] (தி.க) ஒரு அனைத்துக் கட்சி இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டி இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 1937-40ல் நடந்தது போலவே பேரணிகள், [[கருப்புக் கொடி]] போராட்டங்கள்]], அடைப்புகள் ஆகியவை நடத்தப்பட்டன. அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] ஆகஸ்ட் 23ம் தேதி சென்னை வந்த போது திராவிடர் கழகத்தினர் அவருக்கு கறுப்புக்கொடி காட்டினர். இதற்காக [[அண்ணாதுரை]], [[பெரியார்]] உட்பட பல தி.க.வினர் ஆகஸ்ட் 27 அன்று கைது செய்யப்பட்டனர். பின் அவர்கள் [[அரசியல் விடுதலை|விடுதலை]] செய்யப்பட்டாலும், போராட்டம் தொடர்ந்தது. [[டிசம்பர்]] 18 ஆம் தேதி [[பெரியார்]] மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் விரைவில் அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் சமரச உடன்பாடு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்; அரசும் அவர்கள் மீது தொடுத்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. பின்னர் [[இந்தி]]ப் பாடத்தை 1950-51 கல்வியாண்டிலிருந்து விருப்பப்பாடமாக மாற்றி விட்டது. இந்தி கற்கவிரும்பாத மாணவர்கள் [[இந்தி]] வகுப்புகளின் போது பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.<ref>{{cite book|last=Ravichandran|first=R|coauthors=C. A. Perumal|title=Dravidar Kazhagam - A political study|location=Madras|chapter=5|url=http://dspace.vidyanidhi.org.in:8080/dspace/bitstream/2009/4724/6/MAU-1982-082-5.pdf|accessdate=17 February 2010|publisher=[[சென்னைப் பல்கலைக்கழகம்]]| year=1982|pages=177-180}}</ref>
| date = 2004-01-18
| accessdate = 2009-11-26
}}</ref> ஒரு பக்கம் [[இந்தி]] பேசும் மாநிலங்களின் உறுப்பினர்களான அல்கு ராய் சாஸ்திரி, ஆர்.வி. துலேகர், பாலகிருஷ்ண சர்மா, [[புருசோத்தம் தாஸ் டாண்டன்]] (ஐக்கிய மாகாணம்), பாபுநாத் குகா (பீகார்), அரி வினாயக் படஸ்கர் (மும்பை), சேத் கோவிந்த் தாஸ் (மத்திய மாகாணம்) ஆகியோர் பல [[இந்தி]] ஆதரவு மசோதாக்களைக் கொண்டுவந்து [[இந்தி]]யை மட்டுமே தேசிய மொழியாகத் தேர்வு செய்ய வாதாடினர்.<ref name="austin">{{cite book | first=Granville| last=Austin| | authorlink= | coauthors= | origyear=| year= 1966| title= The Indian constitution: cornerstone of a nation|edition= | publisher=Clarendon| location= | id= {{ISBN |0195649591}}, {{ISBN |9780195649598}}| pages=277 | url =http://books.google.com/books?id=0y6OAAAAMAAJ}}</ref><ref name="prasad1">{{cite book | first=Rajendra| last=Prasad| | authorlink=Rajendra Prasad | coauthors= | origyear=| year= 1984| title= Dr. Rajendra Prasad, correspondence and select documents, Volume 4| publisher=Allied Publishers| location= | id= {{ISBN |8170230020}}, {{ISBN |9788170230021}}| pages=110 | url =http://books.google.com/books?id=EcSoIAAACAAJ}}</ref> 10 [[திசம்பர்]] 1946 அன்று துலேகர் "[[இந்துஸ்தானி]] அறியாதவர்கள் [[இந்தியா]]வில் இருக்க உரிமையற்றவர்கள். [[இந்தியா]]வின் [[அரசியலமைப்பு|அரசியலமைப்பை]] முடிவு செய்கின்ற இந்த மன்றத்தில் இருந்துகொண்டு [[இந்துஸ்தானி]] அறியாதவர்கள் உறுப்பினராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளலாம்" என்று முழங்கினார்.<ref name="hindu2"/><ref>Constitution Assembly Debates-Official Report (New Delhi: Lok Sabha Secretariat, 1988)'', Volume 1, p 26-27</ref>
 
[[இந்தி]] ஆதரவாளர்களிடையே இரு பிரிவினர் இருந்தனர்: 1) தூய இந்தி ஆதரவாளர்கள்:- டாண்டன், கோவிந்த் தாஸ், சம்பூர்ணானந்த், ரவிசங்கர் சுக்லா மற்றும் [[கே. எம். முன்ஷி]] ஆகியோர் 2) [[உருது]] கலந்த [[இந்துஸ்தானி]] ஆதரவாளர்கள்:- [[ஜவஹர்லால் நேரு]] மற்றும் [[அபுல் கலாம் ஆசாத்]] ஆகியோர்<ref name="annamalai1">{{cite book | first=E| last=Annamalai| | coauthors= | origyear=| year= 1979| title= Language movements in India | publisher=Central Institute of Indian Languages| location= | id= | pages=85| url =http://www.ciil-ebooks.net/html/langMove/hinoff.html}}</ref> [[இந்தி]] தேசியமொழியாவதைத் [[தென்னிந்தியா]]வைச் சேர்ந்த [[தி. த. கிருஷ்ணமாச்சாரி|டி.டி.கே]], ஜி. துர்காபாய், [[தி. அ. இராமலிங்கம் செட்டியார்|டி. ஏ. ராமலிங்கம் செட்டியார்]], என். ஜி. ரங்கா, [[என். கோபாலசாமி ஐயங்கார்]] (அனைவரும் [[சென்னை மாகாணம்]]), எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் (மைசூர்) ஆகியோர் எதிர்த்தனர். இவர்கள் ஆங்கிலமே அரசு மொழியாக நீடிக்க வாதிட்டனர்.<ref name="annamalai1"/><ref name="hindu3"/> அவர்களது வாதத்தின் சாரமாக [[தி. த. கிருஷ்ணமாச்சாரி|டி.டி.கே]]வின் பின்வரும் பேச்சினைக் குறிப்பிடலாம்:
<blockquote>நாங்கள் ஆங்கிலத்தை முற்காலத்தில் வெறுத்தோம். எனக்கு எந்த பிடித்தமும் இல்லாத [[வில்லியம் சேக்சுபியர்|சேக்சுபியரையும்]] [[ஜான் மில்டன்|மில்டனையும்]] படிப்பது கட்டாயமானதால் நான் வெறுத்தேன். எங்களை [[இந்தி]] படிக்கக் கட்டாயப்படுத்தினால், எனது வயதின் காரணமாக இப்போது என்னால் படிக்க முடியாதிருக்கலாம், என்மீது திணிக்கப்படும் கூடுதல் சுமையால் படிக்க விரும்பாமலும் இருப்பேன். இத்தகைய சகியாமை, நாம் வேண்டுகின்ற பலமான மைய அரசு, மிகத் தேவையான பலமிக்க மைய அரசு, அவ்வரசு பேசும் மொழி அறியாத மக்களை அடிமைப்படுத்துவதாகவும் மாறுமோ என்று எங்களை அச்சமடையச் செய்கிறது. ஐயா அவர்களே, தென்னிந்தியாவில் ஏற்கெனவே பிரிவினை நாடும் சில சக்திகள் உள்ளன, அவர்களை எதிர்கொள்ள எனது மதிப்பிற்குரிய [[உத்திரப் பிரதேசம்|உத்திரப் பிரதேச]] நண்பர்கள் தங்களது கூடுதலான "[[இந்தி]] ஏகாதிபத்திய" நடவடிக்கைகளால் எந்த உதவியும் ஆற்றவில்லை என்பதை நான், தெற்கு வாழ் மக்களின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன். ஆகவே எனது [[உத்திரப் பிரதேசம்|உத்திரப் பிரதேச]] நண்பர்கள் ஒன்றுபட்ட [[இந்தியா]] வேண்டுமா, [[இந்தி]]-[[இந்தியா]] வேண்டுமா என தீர்மானித்துக் கொள்ளட்டும்; தேர்வு அவர்களுடையது.<ref name="hindu2"/><ref>Constitution Assembly Debates-Official Report (New Delhi: Lok Sabha Secretariat, 1988)'', Volume 7, p235</ref></blockquote>
 
மூன்று ஆண்டுகள் தீவிரமான வாதங்களுக்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு மன்றம் ஓர் இணக்கமான முடிவுக்கு வந்தது.<ref name="guha1"/><ref name="brass1">{{cite book | first=Paul R.| last=Brass| | authorlink= | coauthors= | origyear=| year= 1994| title= The politics of India since independence|edition= | publisher=Cambridge University Press| location= | id= {{ISBN |0521459702}}, {{ISBN |9780521459709}}| pages=164 | url =http://books.google.com/books?id=dtKe6XV8z7wC}}</ref> அது [[முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு]] ([[கே. எம். முன்ஷி]] மற்றும் கோபாலசாமி ஐயங்கார் ஆகியோரால் உருவாக்கப்பட்டது) என்று அழைக்கப்பட்ட அத்தீர்வில் அனைத்து குழுக்களின் தேவைகளும் சமநிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.<ref>{{cite web
| url = http://164.100.47.132/LssNew/constituent/vol9p33c.html
| title = Constituent Assembly Debate Proceeding (Volume IX) -Tuesday, the 13th September 1949
| publisher = Ministry of Parliamentary Affairs, Government of India
| accessdate = 2009-11-26
}}</ref><ref name="rai1">{{cite book | first=Alok| last=Rai| | authorlink= | coauthors= | origyear=| year= 2001| title= Hindi nationalism|edition= | publisher=Orient Blackswan| location= | id= {{ISBN |8125019790}}, {{ISBN |9788125019794}}| pages=110| url =http://books.google.com/books?id=fmnpssOM_3kC}}</ref> [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பின்]] [[s:en:Constitution of India/Part XVII|பகுதி XVII]] இத்தீர்வின் அடிப்படையில் இயற்றப்பட்டது. அப்பகுதியில் எங்கும் '''தேசிய மொழி''' என்பதே வரையறுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக ஒன்றியத்தின் ''அலுவலக மொழிகள்'' மட்டுமே வரையறுக்கப்பட்டன.<ref name="hindu3">{{cite news
| url = http://beta.thehindu.com/opinion/Readers-Editor/article61129.ece
| title = Language issue again: the need for a clear-headed policy
 
==மொழி ஆணையம்==
[[இந்தி]]யுடன் [[ஆங்கிலம்|ஆங்கிலமும்]] இணை அலுவலக மொழியாக விளங்கியதை [[இந்தி]] ஆதரவாளர்கள் குறை கூறி வந்தனர்; [[பாரதிய ஜனசங்கம்|பாரதிய ஜனசங்கத்தின்]] நிறுவனர் 'சியாமா பிரசாத் முகர்ஜி' இந்தி மட்டுமே தேசியமொழியாக வேண்டும் என்று கோரினார்.<ref name="prasad1">{{cite book | first=Christophe | last=Jaffrelot| | authorlink= | coauthors= | origyear=| year= 1996| title= The Hindu nationalist movement and Indian politics: 1925 to the 1990s | publisher=C. Hurst & Co Publishers| location= | id= {{ISBN |1850653011}}, {{ISBN |9781850653011}}| pages=160 | url =http://books.google.com/books?id=uywnx2IHH8cC}}</ref> [[இந்தியக் குடியரசு]] 1950, [[சனவரி]] 26-இல் நிறுவப்பட்டப்பின்னர், இந்தியை அலுவலக மொழியாகப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1952 ஆம் ஆண்டு மத்திய கல்வித்துறை, விருப்பமாக இந்தி பயிலும் திட்டத்தைத் துவக்கியது. 27 மே, 1952ல் நீதிமன்ற பிடியாணைகளில் [[இந்தி]] அறிமுகப்படுத்தப்பட்டது. 1955ஆம் ஆண்டு அனைத்து மத்திய அரசுத்துறைகளிலும் [[இந்தி]] பயிலும் உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. 3 [[திசம்பர்]] 1955 முதல் அரசு ''ஒன்றியத்தின் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு'' இந்தியை (ஆங்கிலத்துடன்) பயன்படுத்தத் துவங்கியது."<ref name="timeline1">{{cite web
| url =http://rajbhasha.nic.in/eventseng.htm
| title =Sequence of Events with respect to the Official Language of the Union
}}</ref>
 
அரசியலமைப்பின் 343வது உட்பிரிவில் வரையறுக்கப்பட்டவாறு, முதல் அலுவலக மொழி ஆணையத்தை பி. ஜி. கேர் என்பவர் தலைமையில் 7 சூன், 1955ல் நேரு அமைத்தார். ஆணையம் தனது அறிக்கையை 31 சூலை, 1956 அன்று அளித்தது. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைக் கொணர ஆணையம் பல வழிகளைக் குறிப்பிட்டிருந்தது (ஆணையத்தின் இரு இந்தி பேசாத உறுப்பினர்கள், தமிழ்நாட்டிலிருந்து [[பி. சுப்பராயன்]], [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்திலிருந்து]] சுனிதி குமார் சாட்டர்ஜி, ஒப்புமை இல்லா குறிப்புக்கள் அளித்திருந்தனர்.<ref name="simpson"/>).<ref name="kumar">{{cite book | first=Virendra| last=Kumar| authorlink=| coauthors= | origyear=| year=1993| title= Committees and commissions in India |edition= | publisher=Concept Publishing Company| location= | id= {{ISBN |8175963123}} {{ISBN |9788175963122}}| pages=53–66| url=http://books.google.com/books?id=AXa6g_lJOWAC&pg=PA53&lpg=PA53}}</ref> கேர் ஆணைய அறிக்கையை ஆய்வு செய்ய [[கோவிந்த் வல்லப் பந்த்]] தலைமையிலான அரசுமொழிக்கான நாடாளுமன்றக் குழு செப்டம்பர் 1957ல் அமைக்கப்பட்டது. அக்குழு இரு ஆண்டுகள் விவாதித்து 8 பிப்ரவரி 1959ஆம் ஆண்டு தனது அறிக்கையை வெளியிட்டது. அது இந்தியை முதன்மையான அலுவல் மொழியாகவும் ஆங்கிலத்தை துணைமொழியாகவும் பரிந்துரைத்தது. கேர் மற்றும் பந்த் அறிக்கைகள் இரண்டுமே சுனிதி சாட்டர்ஜி, சுப்பராயன், பிராங்க் அந்தோணி போன்ற [[இந்தி]] பேசாத அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1956ஆம் ஆண்டு நடந்த ஓர் மாநாட்டில் '[[தெலுங்கு]] அகாதெமி' இந்தி மட்டும் அலுவலக மொழியாவதை எதிர்த்தது. முன்பு தீவிரமாக இந்தியை ஆதரித்த [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]] இவ்வமயம் ஆங்கில மாற்றாக இந்தி அமைவதற்கு எதிராக, [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[அசாமிய மொழி|அசாமி]], [[ஒரியா]], மராத்தி, கன்னட மற்றும் வங்காள மொழியினரைக் கொண்ட அனைத்திந்திய மாநாடு ஒன்றை 1958ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று நடத்தினார். அப்போது "''இந்தி ஆதரவாளர்களுக்கு எவ்வாறு [[ஆங்கிலம்]] அந்நிய மொழியோ அதேயளவில் இந்தி பேசாதவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழியே ''என முழங்கினார்."<ref name="annamalai1"/><ref name="simpson">{{cite book | first=Andrew| last=Simpson | authorlink=| coauthors= | origyear=| year=2007| title=Language and national identity in Asia |edition= | publisher=Oxford University Press| location= | id={{ISBN |0199267480}}, {{ISBN |9780199267484}}| pages=71| url=http://books.google.com/books?id=F3XvBbdWCKYC}}</ref><ref name="fishman">{{cite book | first=Joshua A. | last=Fishman| first2=Andrew W.| last2=Conrad|first3=Alma| last3=Rubal-Lopez|authorlink=| coauthors= | origyear=| year=1996| title= Post-imperial English: status change in former British and American colonies, 1940-1990 |edition= | publisher=Walter de Gruyter| location= | id= {{ISBN |3110147548}} {{ISBN |9783110147544}}| pages=564| url=http://books.google.com/books?id=SIu244rlVu8C&pg=PA564}}</ref>
 
இந்தித் திணிப்பு எதிர்ப்பு வலுத்து வந்த நேரத்தில் பிரதமர் [[ஜவஹர்லால் நேரு]], [[இந்தி]] பேசாதவர்களின் கவலையைப் போக்குவதற்கு முயன்றார். 'பந்த் குழு அறிக்கை' மேலான நாடாளுமன்ற விவாதத்தில், செப்டம்பர் 1959இல் கீழ்வரும் உறுதிமொழியைக் கொடுத்தார்.<ref name="timeline1"/>:
 
<blockquote>ஆங்கிலம் தரும் வசதிகள் போன்றவற்றிற்காக அல்லாது இந்தி பேசா மக்கள் அரசுடன் இந்தி மொழியில் தொடர்பு கொள்ள கட்டாயப்படுத்தப்படுவதால் தங்கள் முன்னேறும் வழிகள் அடைபட்டுள்ளதாகக் கருதுவதை நான் விரும்பாததால் காலவரையின்றி - எத்தனை காலம் என்று நானறியேன் - ஆங்கிலம் இணை, கூடுதல் மொழியாக இருக்க வேண்டும்; இருக்கும். அவர்கள் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளலாம். ஆகவே மக்கள் விரும்பும்வரை அதனை மாற்று மொழியாக வைத்திருப்பேன்; இதற்கான முடிவு எடுப்பதை இந்தி பேசும் மக்களிடம் அல்லாது இந்தி பேசாத மக்களிடமே நான் விடுவேன்.<ref name="annamalai1"/><ref name="krishnaswamy">{{cite book | first=Lalitha| last=Krishnaswamy| authorlink=| coauthors= | origyear=| year=2006| title= The story of English in India|edition= | publisher=Foundation Books| location= | id= {{ISBN |8175963123}} {{ISBN |9788175963122}}| pages=113| url=http://books.google.com/books?id=mBpFLdcEG7IC}}</ref></blockquote>
இந்த உறுதிமொழி தென்னிந்தியர்களுக்கு சற்றுகாலம் ஆறுதல் அளித்தது.<ref name="Hardgrave">{{Cite journal| first = Robert L.|last=Hardgrave| title =The Riots in Tamilnad: Problems and Prospects of India's Language Crisis| journal = Asian Survey| volume = 5| issue = 8| pages = 399–407| publisher = University of California Press| date = August, 1965| url = http://www.jstor.org/pss/2642412| accessdate = 23 November 2009}}</ref>
 
==தி.மு.க வின் இந்தித் திணிப்பு எதிர்ப்புக் கொள்கை==
திராவிடர் கழகத்திலிருந்து 1949ஆம் ஆண்டு பிரிந்து வந்த [[திராவிட முன்னேற்றக் கழகம்]] இந்தித் திணிப்பு எதிர்ப்புக் கொள்கையையும் வரித்துக் கொண்டது. அதன் நிறுவனர் [[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரை]] 1938-40களில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றவர். திமுகவினர் சூலை 1953ஆம் ஆண்டு '''டால்மியாபுரம்''' என்ற ஊரின் பெயரைத் தமிழில் '''கல்லக்குடி''' என்று மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். டால்மியாபுரம் என்னும் பெயர் தென்னாட்டின் மீது வட இந்தியா செலுத்தும் ஆதிக்கத்தை நினைவு படுத்துவதாக அவர்கள் கூறினர்.<ref name="mills">{{cite book | first=James H.| last=Mills| first2=Satadru| last2=Sen| authorlink=| coauthors= | origyear=| year=2004| title=Confronting the body: the politics of physicality in colonial and post-colonial India|edition= | publisher=Anthem Press| location= | id= {{ISBN |1843310333}} {{ISBN |9781843310334}}| pages=151| url=http://books.google.com/books?id=2hIUBioZHHQC&pg=PT151}}</ref><ref name="sangam">{{cite web
| url =http://www.sangam.org/2009/09/Anna_Centennial_3.php?print=true
| title = Anna in the dock (1953)
| date = 2009-05-16
| accessdate = 2009-11-24
}}</ref><ref name="swaminathan">{{cite book | first= S. | last=Swaminathan| authorlink=| coauthors= | origyear=| year=1974| title= Karunanidhi: man of destiny|edition= | publisher=Affiliated East-West Press| location= | id= | pages=8| url=http://books.google.com/books?id=Q-uYmpYmXuMC}}</ref> 31 சூலை 1960 அன்று மற்றொரு திறந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை [[சென்னை]] [[கோடம்பாக்கம்|கோடம்பாக்கத்தில்]] நடத்தியது.<ref name="venu">{{cite book | first= E.Es. | last=Venu| authorlink=| coauthors= | origyear=| year=1979| title= Why South opposes Hindi|edition= | publisher=Justice Publications| location= | id= | pages=76| url=http://books.google.com/books?id=83xIAAAAMAAJ}}</ref> நவம்பர் 1963ஆம் ஆண்டு இந்திய சீனப் போர் மற்றும் அரசியலமைப்பின் 16வது திருத்தமாக இயற்றப்பட்ட பிரிவினை தடுப்புச்சட்டத்தின் பின்னணியில் திமுக பிரிவினை கோரிக்கையை விட்டது. ஆயினும் தனது இந்தித் திணிப்பு எதிர்ப்பு நிலையைத் தொடர்ந்தது. 1963ஆம் ஆண்டு ''அலுவல்மொழிச் சட்டம், 1963'' நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த எதிர்ப்பு மேலும் வலுவடைந்தது.<ref name="rajagopalan">{{cite book | first= Swarna | last=Rajagopalan| authorlink=| coauthors= | origyear=| year=2001| title= State and nation in south Asia| publisher=Lynne Rienner Publishers| location= | id= {{ISBN |1555879675}}, {{ISBN |9781555879679}}| pages=153–156| url=http://books.google.com/books?id=q7Yz5aGeoTsC&pg}}</ref> இந்தி பெரும்பான்மையினரால் பேசப்படுகிறது என்ற கூற்றுக்கு [[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரை]] பதிலுரை: <blockquote>"எண்ணிக்கைகளால் முடிவுகள் எடுக்கப்படுமானால் இந்தியாவின் தேசியப் பறவை [[மயில்|மயிலாக]] இருக்காது; [[காக்கை|காகமாகத்தான்]] இருக்கும்"<ref name="guha2">{{Harvnb|Guha|2008|pp=393}}</ref><ref name="indiatoday">{{cite news|title=Tongue tied|url=http://indiatoday.intoday.in/site/Story/2692/COVER%20STORY/Tongue+tied.html|author=[[ஆ. இரா. வேங்கடாசலபதி]]|work=[[இந்தியா டுடே]]|date=2007-12-20|publisher =[[Living Media]]| accessdate = 2009-12-08}}</ref></blockquote>
 
== அலுவல்மொழி சட்டம் 1963 ==
[[Image:Mathialagan VPRaman Anna Rajaji Karunanidhi.jpg|thumb|300px|right|alt= five men and a boy sitting in chairs. Four of the men are middle aged and one is in his seventies. One of the middle aged men is leaning toward and speaking to the old man. | திமுக தலைவர்கள்[[கே. ஏ. மதியழகன்]], வி. பி. ராமன், [[கா. ந. அண்ணாதுரை]], [[மு. கருணாநிதி]] இவர்களுடன் [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]]]]
===சனவரி 26க்கு முந்தைய நிகழ்வுகள்===
இந்தி தன் அலுவல் மொழியாக மாறும் நாளான [[சனவரி]] 26 நெருங்க நெருங்க [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] இந்தித் திணிப்பு அச்சங்கள் மேலோங்கி எதிர்ப்பாளர்கள் எண்ணிக்கைப் பெருகி போராட்டச் சூழல் உருவானது. சனவரி மாதம் அனைத்து இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் குழுக்களையும் ஒருங்கிணைக்க ''தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புச் சங்கம்'' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.<ref name="annamalai1"/><ref name="widmalm">{{cite book | first= Sten | last=Widmalm| authorlink=| coauthors= | origyear=| year=2002| title=Kashmir in comparative perspective: democracy and violent separatism in India| publisher=Routledge| location= | id= {{ISBN |0700715789}} {{ISBN |9780700715787}} | pages=107| url=http://books.google.com/books?id=eOnwrHsyXDQC}}</ref> அதன் உறுப்பினர்களாகத் தமிழகமெங்கிலும் உள்ள கல்லூரிகளின் மாணவர் சங்க தலைவர்கள் 18 பேர் இருந்தனர். அவர்களில் சிலர், [[பெ. சீனிவாசன்]], [[கா. காளிமுத்து]], [[நா. காமராசன்]], [[பா. செயப்பிரகாசம்]], ரவிசந்திரன், [[திருப்பூர் சு. துரைசாமி]], [[சேடப்பட்டி ஆர். முத்தையா]], [[துரை முருகன்]] (சென்னை பச்சையப்பன் கல்லூரி சார்பில்), கே. ராஜா முகமது, நாவளவன், எம். நடராஜன், [[எல்.கணேசன்]], [[உலோ. செந்தமிழ்க்கோதை]], சி. ப. வேந்தன் (கிண்டிப் பொறியியல் கல்லூரி சார்பில்) ஆகியோர் ஆவார்.<ref name="kalachuvadu">{{cite web
| url =http://www.kalachuvadu.com/issue-106/page32.asp
| title = Interview with Pa. Seyaprakasam
 
===இரண்டு வார கலவரங்கள்===
கலவரங்கள் பரவிட, காவல்துறை மாணவர் ஊர்வலங்கள் மீது தடியடி மற்றும் [[துப்பாக்கி]]ச் சூடு நடத்தியது.இது நிலமையை மேலும் மோசமாக்கியது. தீவைப்பு, கொள்ளை மற்றும் பொதுச்சொத்து அழிவு என பெருகியது. [[தொடர்வண்டி]] நிலையங்களில் தொடர்வண்டிப் பெட்டிகள், இந்திப் பெயர்பலகைகள் கொளுத்தப்பட்டன. முதல்வர் இதனைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதி கட்டுக்குள் கொண்டுவர துணைராணுவத்தினரை அழைத்தார். காவலர்களின் கடும் நடவடிக்கைகளால் மேலும் ஆத்திரமடைந்த வன்முறைக் கும்பல் இரு காவலர்களைத் தீயிட்டு கொன்றது. ஐந்து போராட்டக்காரர்கள் ([[கோடம்பாக்கம் சிவலிங்கம்|சிவலிங்கம்]], [[விருகம்பாக்கம் அரங்கநாதன்|அரங்கநாதன்]], [[ஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன்|வீரப்பன்]], [[கீரனூர் முத்து|முத்து]], [[மாயவரம் சாரங்கபாணி|சாரங்கபாணி]]) தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். மேலும் மூவர் ([[பீளமேடு தண்டாயுதபாணி|தண்டாயுதபாணி]], [[சத்தியமங்கலம் முத்து|முத்து]], [[விராலிமலை சண்முகம்|சண்முகம்]]) விசமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இரு வார கலவரங்களில் 70 பேர் இறந்தனர் (அதிகாரபூர்வ தகவலில்). ஆனால் 500க்கும் கூடுதலானவர் இறந்திருக்கலாம் என்று அதிகாரமற்ற தகவல்கள் கூறுகின்றன. பல்லாயிரம் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சொத்துக்களுக்கான இழப்பு ஒரு கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது.<ref name="ramaswamy530"/><ref name="Hardgrave"/><ref name="hindu1"/><ref name="mitra"/><ref name="kalachuvadu"/><ref name="thirumavalavan">{{cite book | first= Thol. | last=Thirumavalavan| authorlink=| coauthors= | origyear=| year=2004| title=Uproot Hindutva: the fiery voice of the liberation panthers| publisher=Popular Prakashan| location= | id= {{ISBN |8185604797}} {{ISBN |9788185604794}} | pages=125| url=http://books.google.com/books?id=HfNRO-LtsN4C}}</ref><ref name="time1">{{cite web
| url = http://www.time.com/time/magazine/article/0,9171,940936,00.html
| title = India: The Force of Words
}}</ref><ref name="guha3">{{Harvnb|Guha|2008|pp=394}}</ref>
 
28 சனவரி முதல் [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்திலும்]] [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும்]] வகுப்புகள் காலவரையன்றி மூடப்பட்டன. காங்கிரசிற்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உருவாயின. 31 சனவரி 1965 அன்று [[மைசூர்|மைசூரில்]] கருநாடக முதல்வர் [[எஸ். நிஜலிங்கப்பா]], வங்காள காங்கிரசு தலைவர் அதுல்ய கோஷ், மத்திய அமைச்சர் [[நீலம் சஞ்சீவ ரெட்டி]], காங்கிரசு கட்சித்தலைவர் [[காமராஜர்]] ஆகியோர் ஒன்றுகூடி இந்தி பேசாத மக்களிடம் இந்தியைத் திணித்தால் அது நாட்டுப் பிரிவினைக்கு அடிகோலும்; எனவே இந்தித் திணிப்பை விலக்கிக் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். [[மொரார்ஜி தேசாய்]] இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முன்னரே அலுவல்மொழியாக அறிவிக்கப்படாத நிலையில் இதனை நிராகரித்தார். மொரார்ஜி தமிழக காங்கிரசார் மக்களிடையே நிலையை விளக்கி பிராந்திய உணர்வுகளுக்கு இடம் கொடுக்காது நாட்டு ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்றார்.<ref name="hindu1"/> மத்திய உள்துறை அமைச்சர் [[குல்சாரிலால் நந்தா]]. தமிழக முதல்வர் [[பக்தவத்சலம்]] சிறப்பாக நிலமையைக் கையாள்வதாக அவரது ''கல் போன்ற உறுதிக்கு'' பாராட்டும் தெரிவித்தார்.<ref name="akbar">{{cite book | first=M.J.| last=Akbar| | authorlink= | coauthors= | origyear=| year=1985| title=India: the siege within|edition= | publisher=Penguin Books| location= | id=| pages=91 | url =http://books.google.com/books?id=rgduAAAAMAAJ}}</ref><ref name="ganesan">{{cite book | first=Pi. Ci| last=Kaṇēcan| | authorlink= | coauthors= | origyear=| year=2003| title=C.N. Annadurai: Builders of Modern India|edition= | publisher=Ministry of Information and Broadcasting, Govt. of India| location= | id={{ISBN |8123011016}}, {{ISBN |9788123011011}}| pages=62 | url =http://books.google.com/books?id=5oduAAAAMAAJ}}</ref>
 
கலவரங்கள் [[பிப்ரவரி]] முதல் வாரம் முழுவதும் தொடர்ந்தன. பிப்ரவரி 6 அன்று மாணவர் தலைவர்கள் தீர்வு காண முதல்வரைச் சந்தித்தனர். ஆனால் பேச்சுக்கள் முறிந்து வன்முறை தொடர்ந்தது. ஊர்வலங்கள், உண்ணாநோன்புகள், பொது வேலைநிறுத்தங்கள், இந்திப் புத்தகங்கள் எரிப்பு, இந்திப் பலகைகள் அழிப்பு, அஞ்சலகங்கள் முன் ஆர்பாட்டங்கள் என்பன வழமையாயிற்று. 11 பிப்ரவரி அன்று மத்திய ஆய அமைச்சர்கள் கூட்டத்தில் உணவு அமைச்சராக இருந்த [[சிதம்பரம் சுப்பிரமணியன்|சி.சுப்பிரமணியன்]] ஆங்கிலம் அலுவல்மொழியாக விளங்க சட்டப் பாதுக்காப்பு கோரினார். அவரது தீர்வு ஏற்றுக்கொள்ளப்படாததால் தன்னுடைய உடன் அமைச்சர் [[ஓ. வி. அழகேசன்|அழகேசனுடன்]] பதவி விலகினார்.<ref name="annamalai1"/><ref name="mitra"/><ref name="time1"/>
===1967 தேர்தலில் தாக்கம்===
{{main|சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967}}
மார்ச் மாதம் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டாலும் தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்ட சங்கம் தொடர்ந்து மும்மொழித் திட்டத்தைக் கைவிடவும் அரசியலமைப்பு பகுதி பதினேழை நீக்கிட திருத்தம் கொண்டுவரவும் போராடி வந்தது. 11 மே அன்று இக்கோரிக்கைகளை வலியுறுத்த மூன்று பேர் கொண்ட மாணவர்குழு பிரதமரைச் சந்தித்தது.<ref name="indianreview">{{cite book | first=| last=| | authorlink= | coauthors= | origyear=| year= 1965| title= The Indian review, Volume 64|edition= | publisher=G.A. Natesan & Co| location= | id= | pages=329 | url =http://books.google.com/books?id=S5IPAQAAIAAJ}}</ref> மெதுவாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் பொதுவான காங்கிரசு எதிர்ப்பு இயக்கமாக, 1967ஆம் ஆண்டு பொதுதேர்தலில் அதனைத் தோல்வியடையச் செய்யும் நோக்கத்தோடு மாறியது.<ref name="kalachuvadu"/> 20 பிப்ரவரி 1966இல் சங்கத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற இராஜாஜி மாணவர்களைக் காங்கிரசின் தோல்விக்காக உழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.<ref name="ahluwalia">{{cite book | first=Sagar | last=Ahluwalia| | authorlink= | coauthors= | origyear=| year= 1969| title= Anna: the tempest and the sea|edition= | publisher=Young Asia Publications| location= | id= | pages=52| url =http://books.google.com/books?id=L5aIeOaGDhIC}}</ref> 1967 தேர்தலில் மாணவர் தலைவர் பெ. சீனிவாசன் காமராஜருக்கு எதிராக [[விருதுநகர் (சட்டமன்றத் தொகுதி)|விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில்]] போட்டியிட்டார். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் விருதுநகர் வந்து சீனிவாசனுக்காகப் பிரசாரம் செய்து பெரும் வெற்றியைத் தேடித் தந்தனர். மாநில அளவில் [[திமுக]] பெரும் வெற்றி பெற்று [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது.<ref name="hindu3"/><ref name="kandaswamy">{{cite book | first=P.| last=Kandaswamy| | authorlink= | coauthors= | origyear=| year= 1965| title= The Political Career of K. Kamaraj |edition= | publisher=Concept Publishing Company| location= | id= {{ISBN |8171228018}}| pages=117 | url =http://books.google.com/books?id=bOjT3qffnMkC}}</ref><ref name="rudolf">{{Cite journal| first =Lloyd I.|last=Rudolph|first2 =Susanne|last2=Hoeber Rudolph| title =New Era for India:The Fourth General Election| journal =The Bulletin of the Atomic Scientists| volume = 24| issue = 2| pages = 35–40| publisher =Educational Foundation for Nuclear Science| date = February, 1968| url =http://books.google.com/books?id=KQcAAAAAMBAJ&pg=PA35| accessdate = 9 December 2009}}</ref>
 
==அலுவல்மொழிகள் (திருத்தம்) சட்டம் 1967==
 
===1967 ஆண்டு திருத்த மசோதா===
[[லால் பகதூர் சாஸ்திரி]] [[சனவரி]] 1966ல் [[உருசியா]]வில் நடந்த அமைதிப் பேச்சுகளின்போது மரணமடைந்தார். அவரை அடுத்து [[இந்திரா காந்தி]] பிரதமராகப் பதவியேற்றார். 1967ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரசிற்கு குறைந்த பெரும்பான்மையே கிடைத்தது. தமிழ்நாட்டில் காங்கிரசு தோற்கடிக்கப்பட்டு [[திமுக]] ஆட்சிக்கு வந்தது. நவம்பர் 1967இல் புதியதாக சட்டத்திருத்தம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 27 நவம்பரில் <ref name="mitra">{{cite book | first=Subrata Kumar| last=Mitra| | authorlink= | coauthors= | origyear=| year= 2006| title=The puzzle of India's governance: culture, context and comparative theory|edition= | publisher=Routledge| location= | id= {{ISBN |0415348617}}, {{ISBN |9780415348614}}| pages=118–20 | url =http://books.google.com/books?id=dnoW56MhJZMC&pg=P118}}</ref> நாடாளுமன்றத்தில் வரைவுச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; 16 திசம்பர் அன்று நிறைவேற்றப்பட்டது. (ஆதரவு-205, எதிர்ப்பு - 41)<ref name="chandra">{{cite book | first=Bipan| last=Chandra| authorlink= | coauthors= | origyear=| year= 1989| title=India after independence |edition= | publisher=Penguin Books| location= | id=| pages=96 | url =http://books.google.com/books?id=iAZuAAAAMAAJ}}</ref> குடியரசுத்தலைவரின் ஒப்புதலை 8 சனவரி 1968ல் பெற்று நடைமுறைக்கு வந்தது.<ref name="Mohammada">{{cite book | first=Malika | last=Mohammada | authorlink= | coauthors= | origyear=| year= 2005| title=Culture of Hindi |edition= | publisher=Kalinga Publications| location= | id= {{ISBN |8187644737}}, {{ISBN |9788187644736}}| pages=184 | url =http://books.google.com/books?id=ZMZjAAAAMAAJ}}</ref> இந்த சட்டத்திருத்தம்<ref name="rajbasha">{{cite web
| url =http://www.rajbhasha.gov.in/dolacteng.htm
| title = The Official Languages Act 1963 (As amended on 1967)
| date =
| accessdate = 2009-11-24
}}</ref> 1963ஆம் ஆண்டு சட்டத்தின் பகுதி மூன்றை மாற்றி அனைத்து அலுவல் நடவடிக்கைகளிலும் ''காலவரையன்றி மெய்நிகர் இருமொழிக் கொள்கையை'' (ஆங்கிலம் மற்றும் இந்தி)<ref name="chandra"/> கடைபிடிக்க உறுதி செய்தது.<ref name="ammon">{{cite book | first=Ulrich| last=Ammon | first2=Marlis | last2=Hellinger|authorlink= | coauthors= | origyear=| year= 1992| title=Status change of languages |edition= | publisher=Walter de Gruyter| location= | id= {{ISBN |3110126680}}, {{ISBN |9783110126686}}| pages=188 | url =http://books.google.com/books?id=uyY6HJYcEKYC}}</ref>
 
==1968 ஆண்டு போராட்டம்==
வார்த்தைகளில்:
 
<blockquote> இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் முரணான கொள்கைகளைக் கொண்டிருந்த பல்வேறு தரப்பு மனிதர்களை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்தன. இந்தி எதிர்ப்பு நிலையால், [[மறைமலை அடிகள்|மறைமலையடிகளைப்]] போன்ற சமய மீட்டுருவாக்கிகள் [[ஈ. வே. ராமசாமி]], [[பாரதிதாசன்]] போன்ற இறைமறுப்பாளர்களோடு ஒன்றாகப் பாடுபட்டனர்; [[திரு. வி. க.|திரு. வி. கல்யாணசுந்தரம்]], [[ம. பொ. சிவஞானம்]] போன்ற இந்திய தேசியவாதிகள் [[கா. ந. அண்ணாதுரை]], [[மு. கருணாநிதி]] போன்ற திராவிடப் பிரிவினைவாதிகளுடன் கைகோர்த்தனர். [[சோமசுந்தர பாரதியார்]], [[மு. சி. பூரணலிங்கம் பிள்ளை]] போன்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் படிப்பறிவற்ற வீதிக்கவிஞர்கள், துண்டுப் பிரச்சாரகர்கள், கல்லூரி மாணவர்கள் போன்றோருடன் ஓரணியில் நின்றனர்.<ref name="simpson">{{cite book | first=Andrew| last=Simpson | authorlink=| coauthors= | origyear=| year=2007| title=Language and national identity in Asia |edition= | publisher=Oxford University Press| location= | isbn=0199267480, {{ISBN |978-0-19-926748-4}}| pages=71| url=http://books.google.com/?id=F3XvBbdWCKYC}}</ref><ref name="ramaswamy2">{{cite journal |last=Ramaswamy|first=Sumathy |title=The demoness, the maid, the whore, and the good mother: contesting the national language in India|journal=International Journal of the Sociology of Language | publisher =[[Walter de Gruyter]]|volume=140 |issue=1 | pages =1–28 |year=1999 |url=http://www.reference-global.com/doi/abs/10.1515/ijsl.1999.140.1 |doi=10.1515/ijsl.1999.140.1}}</ref></blockquote>
 
இறுதியாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களால் தான் இந்திய அலுவல் மொழிகள் சட்டம் 1963ம் அதன் 1967ம் ஆண்டு சட்ட திருத்தமும் நிறைவேற்றப்பட்டன. இந்தியக் குடியரசின் தற்போதைய ''காலவரையற்ற மெய்நிகர் இருமொழிக் கொள்கை'' (இந்தி மற்றும் ஆங்கிலம்) இப்போராட்டங்களால் தான் உருவானது.
{{refbegin}}
* {{cite book |first=Sumathy|last=Ramaswamy|year=1997|date=1997|title= Passions of the tongue: language devotion in Tamil India, 1891-1970|publisher=University of Chicago Press|ISBN=9780520208056|oclc=36084635|url=http://www.escholarship.org/editions/view?docId=ft5199n9v7;brand=ucpress | ref=harv}}
* {{cite book | first=J.B.P| last=More| authorlink=| coauthors= | origyear=| year=1997| title=Political Evolution of Muslims in Tamilnadu and Madras 1930–1947 |edition= | publisher=Orient Longman|Orient Blackswan| location= | id= {{ISBN |8125011927}} {{ISBN |9788125011927}}| url=http://books.google.com/books?id=QDht7OyOjXMC}}| ref=harv |OCLC=37770527}}
* {{cite book | first=Ramachandra| last=Guha|coauthors= | origyear=| year= 2008| title= India after Gandhi: the history of the world's largest democracy|edition= | publisher=Harper Perennial| location= | id= {{ISBN |0060958588}}, {{ISBN |9780060958589}}| url =http://books.google.com/books?id=EcSoIAAACAAJ| ref=harv|oclc=76961156}}
* {{cite book | first=W. B. Vasantha| last=Kandasamy | first2=Florentin| last2=Smarandache| coauthors= | origyear=| year=2005| title=Fuzzy and Neutrosophic Analysis of Periyar's Views on Untouchability |edition= | publisher=American Research Press| location= | id={{ISBN |1931233004}}, {{ISBN |9781931233002}}| url=http://books.google.com/books?id=hgb-MKcsSR0C| ref=harv|oclc=125408444}}
{{refend}}
 
1,07,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2695946" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி