மகேந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Use dmy dates|date=June 2013}}
{{Use dmy dates|date=June 2013}}
{{Infobox person
{{Infobox person
| name = J. Mahendran
| name = ஜே. மகேந்திரன்
| image = J Mahendran at Veena S Balachander Felicitation.jpg
| image = J Mahendran at Veena S Balachander Felicitation.jpg
| caption = 2016 ஆம் ஆண்டு மகேந்திரன்
| caption = Mahendran in 2016
| birth_date = {{birth date|1939|07|25|df=yes}}
| birth_date = {{birth date|1939|07|25|df=yes}}
| birth_place = [[Ilaiyangudi]], [[Madras Presidency]], [[British India]]
| birth_place = [[Ilaiyangudi]], [[Madras Presidency]], [[British India]]
| death_date = {{death date and age|df=yes|2019|04|02|1939|07|25}}
| death_date = {{death date and age|df=yes|2019|04|02|1939|07|25}}
| residence =
| residence =
| occupation = [[Film director]], screenwriter, actor, [[literary editor]]
| occupation = [[திரைப்பட இயக்குநர்]], திரைக்கதையாளர், வசனகர்த்தா, நடிகர், [[literary editor]]
| years_active = 1966 – 2006, 2016 - 2019
| years_active = 1966 – 2006, 2016 - 2019
| religion =
| religion =
| children = [[John Mahendran]]
| children = [[ஜான் மகேந்திரன்]]
| awards =
| awards =
| imagesize =
| imagesize =
| birthname = J. Alexander
| birthname = ஜே. அலெக்சாண்டர்
| othername =
| othername =
| spouse =
| spouse =

04:40, 2 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

ஜே. மகேந்திரன்
2016 ஆம் ஆண்டு மகேந்திரன்
பிறப்புஜே. அலெக்சாண்டர்
(1939-07-25)25 சூலை 1939
Ilaiyangudi, Madras Presidency, British India
இறப்பு2 ஏப்ரல் 2019(2019-04-02) (அகவை 79)
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதையாளர், வசனகர்த்தா, நடிகர், literary editor
செயற்பாட்டுக்
காலம்
1966 – 2006, 2016 - 2019
பிள்ளைகள்ஜான் மகேந்திரன்

மகேந்திரன் (பிறப்பு: சூலை 25, 1939 இறப்பு: ஏப்ரல் 2, 2019)[1] புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ. அலெக்சாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.

மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க திரைகதை, வசனம் போன்றவற்றை எழுதிவைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனை திரைப்படமாக்க முடியாமல் போனது.[2]

திரைப் படைப்புகள்

  1. 1978: முள்ளும் மலரும்
  2. 1979: உதிரிப்பூக்கள்
  3. 1980: பூட்டாத பூட்டுகள்
  4. 1980: ஜானி
  5. 1980: நெஞ்சத்தை கிள்ளாதே
  6. 1981: நண்டு
  7. 1982: மெட்டி
  8. 1982: அழகிய கண்ணே
  9. 1984: கை கொடுக்கும் கை
  10. 1986: கண்ணுக்கு மை எழுது
  11. 1992: ஊர்ப் பஞ்சாயத்து
  12. 2006: சாசனம்

இதர படைப்புகள்

  1. அர்த்தம் (தொலைக்காட்சி நாடகம்)
  2. காட்டுப்பூக்கள் (தொலைக்காட்சி நாடகம்

கதை/வசனம்/திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்

  1. தங்கப்பதக்கம் - கதைவசனம்
  2. நாம் மூவர் - கதை
  3. சபாஷ் தம்பி - கதை
  4. பணக்காரப் பிள்ளை - கதை
  5. நிறைகுடம் - கதை
  6. திருடி - கதை
  7. மோகம் முப்பது வருஷம் - திரைக்கதை வசனம்
  8. ஆடு புலி ஆட்டம் - கதை வசனம்
  9. வாழ்ந்து காட்டுகிறேன் - கதை வசனம்
  10. வாழ்வு என் பக்கம் - கதை வசனம்
  11. ரிஷிமூலம் - கதை வசனம்
  12. தையல்காரன் - கதை வசனம்
  13. காளி - கதை வசனம்
  14. பருவமழை -வசனம்
  15. பகலில் ஒரு இரவு -வசனம்
  16. அவளுக்கு ஆயிரம் கண்கள் - கதை வசனம்
  17. கள்ளழகர் -வசனம்
  18. சக்கரவர்த்தி - கதை வசனம்
  19. கங்கா - கதை
  20. ஹிட்லர் உமாநாத் - கதை
  21. நாங்கள் - திரைக்கதை வசனம்
  22. challenge ramudu (தெலுங்கு) - கதை
  23. தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) -கதை
  24. சொந்தமடி நீ எனக்கு -கதை வசனம்
  25. அழகிய பூவே - திரைக்கதை வசனம்
  26. நம்பிக்கை நட்சத்திரம் -கதை வசனம்

சுவையான தகவல்கள்

  • திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார்.
  • இனமுழக்கம், துக்ளக் போன்ற இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
  • மகேந்திரன் சினிமாவும் நானும் என்னும் நூலினை எழுதியுள்ளார். இது 2004ஆம் ஆண்டு வெளியானது.
  • திரையுலகில் ஒரு இடம் பெற முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். தமக்கு மாதச் சம்பளம் அளித்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதைத் தாம் பூர்த்தி செய்யவில்லை எனினும், எம்.ஜி.ஆர். அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். எனினும், எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திற்கும் இவர் வசனமோ திரைக்கதையோ எழுதியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ரஜினியை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். இவரது படங்களில் அதிகம் நடித்த நட்சத்திரம் அவரே.
  • மகேந்திரனின் முதல் படம் துவங்கி, அநேகமாக அவரது பல படங்களில் சரத்பாபு இடம் பெற்றார்.
  • கன்னட நடிகை அஸ்வினியை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் மகேந்திரன். படம்: உதிரிப் பூக்கள். பேபி அஞ்சுவும் மகேந்திரனின் அறிமுகமே.
  • கமலஹாசனின் தமையன் சாருஹாசனை திரைக்கு உதிரிப் பூக்கள் படத்தின் வாயிலாக அறிமுகம் செய்தவர் மகேந்திரன். மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய சாருஹாசன், பின்னர் ஒருகன்னடப் படத்திற்காக மிகச் சிறந்த நடிகருக்கான அனைத்திந்திய விருதினைப் பெற்றார்.
  • விஜயனை அறிமுகம் செய்தது இயக்குனர் பாரதிராஜா எனினும், அவருக்கு மறக்க இயலாத ஒரு வேடத்தை உதிரிப் பூக்களில் அளித்து, திரையுலகில் அவரைக் கதாநாயகனாக உயர்த்தியவர் மகேந்திரன். இதைத் தொடர்ந்து, பல படங்களில் விஜயன் கதாநாயகனாக நடித்தார்.
  • மகேந்திரனின் மிகச் சிறப்பான அறிமுகம் சுஹாசினி. நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலுக்காக எதிர்பார்க்கப்பட்ட தேசிய விருதை சுஹாசினி இழந்தார். (பின்னர் சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிந்து பைரவி திரைப்படத்திற்காக இவ்விருதினை அவர் பெற்றார்.)
  • தாம் முதலில் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படத்தில் தாம் நடிக்கவில்லை என்றாலும், அதில் ஒளிப்பதிவாளராக பாலு மகேந்திரா பணி புரிய மிகவும் உதவியவர் கமலஹாசன் என்றும் மகேந்திரன் குறிப்பிட்டதுண்டு. ஆயினும், மகேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்ததில்லை.

இவர் சமீபத்தில் தெறி படத்தில் வில்லனாக நடித்துள்ளார்

ஆதாரங்கள்

  1. "மக்களிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும்! - மகேந்திரன் நேர்காணல்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2016.
  2. தினமலர் சினிமா
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திரன்&oldid=2686225" இலிருந்து மீள்விக்கப்பட்டது