விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 78: வரிசை 78:


: நினைவூட்டலுக்கு நன்றி. நாம் ஏற்கனவே பெற்ற நல்கைத் தொகைக்கு ஒரு புதுப்பயனர் போட்டி நடாத்த வேண்டியுள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் விக்கி கலந்துரையாடலை அடுத்த வாரம் ஆரம்பிக்கிறேன். செப்டெம்பர் மாதத்தில் இரு விக்கி அறிமுக நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடாத்த ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வுகளிலும் புதுப்பயனர் போட்டி பற்றிக் குறிப்பிட எண்ணியுள்ளேன். அக்டோபர் 1 முதல் 2019 மார்ச் 31 வரையான ஆறு மாத காலத்திற்குப் புதுப்பயனர் போட்டி நடாத்தலாம். எனது தனிப்பட்ட காரணங்களால் 2019 ஆகத்து வரை விக்கி ஒன்றுகூடலுக்கான பணிகளைச் செய்யப் போதுமான நேரமின்மையாலும், ஏனைய உள்ளூர்ப் பயனர்களின் பரீட்சையைக் கவனத்தில் கொண்டும், 2019 செப்டெம்பரில் - 16ஆவது ஆண்டு நிறைவாக - இந்த ஒன்றுகூடலை நடாத்தத் திட்டமிட எண்ணுகிறேன். வேறு பயனர்கள் யாராவது ஒருங்கிணைக்க முன்வந்தால் 2019 ஆரம்பத்திலேயே நடாத்தலாம். --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 16:12, 21 ஆகத்து 2018 (UTC)
: நினைவூட்டலுக்கு நன்றி. நாம் ஏற்கனவே பெற்ற நல்கைத் தொகைக்கு ஒரு புதுப்பயனர் போட்டி நடாத்த வேண்டியுள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் விக்கி கலந்துரையாடலை அடுத்த வாரம் ஆரம்பிக்கிறேன். செப்டெம்பர் மாதத்தில் இரு விக்கி அறிமுக நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடாத்த ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வுகளிலும் புதுப்பயனர் போட்டி பற்றிக் குறிப்பிட எண்ணியுள்ளேன். அக்டோபர் 1 முதல் 2019 மார்ச் 31 வரையான ஆறு மாத காலத்திற்குப் புதுப்பயனர் போட்டி நடாத்தலாம். எனது தனிப்பட்ட காரணங்களால் 2019 ஆகத்து வரை விக்கி ஒன்றுகூடலுக்கான பணிகளைச் செய்யப் போதுமான நேரமின்மையாலும், ஏனைய உள்ளூர்ப் பயனர்களின் பரீட்சையைக் கவனத்தில் கொண்டும், 2019 செப்டெம்பரில் - 16ஆவது ஆண்டு நிறைவாக - இந்த ஒன்றுகூடலை நடாத்தத் திட்டமிட எண்ணுகிறேன். வேறு பயனர்கள் யாராவது ஒருங்கிணைக்க முன்வந்தால் 2019 ஆரம்பத்திலேயே நடாத்தலாம். --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 16:12, 21 ஆகத்து 2018 (UTC)

== கருத்துக்கணிப்பு ==


வணக்கம் {{Ping|Sivakosaran}}, நீங்கள் கருத்துக்கணிப்பில் கொடுத்துள்ள இணைப்பை சொடுக்கினால் 'Sorry, unable to open the file at this time.' எனும் செய்தி வருகிறது. நன்றி --[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]]) 10:46, 20 சனவரி 2019 (UTC)
வணக்கம் {{Ping|Sivakosaran}}, நீங்கள் கருத்துக்கணிப்பில் கொடுத்துள்ள இணைப்பை சொடுக்கினால் 'Sorry, unable to open the file at this time.' எனும் செய்தி வருகிறது. நன்றி --[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]]) 10:46, 20 சனவரி 2019 (UTC)
:{{Ping|Sivakosaran|Nandhinikandhasamy}} இணைப்பினைச் சரி செய்துள்ளேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 11:54, 20 சனவரி 2019 (UTC)

11:54, 20 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

யாழ்ப்பாணத்தில் விக்கி 15 கொண்டாட்டங்கள்

தமிழ் விக்கிப்பீடியா 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்ட நிகழ்வை ஏனைய பயனர்களின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்தில் இவ்வாண்டு செப்டெம்பர் 28-30 அளவில் நடாத்துவதற்கு என்னாலான முயற்சிகளைச் செய்ய முடியும். அதிகளவான பயனர்கள் இந்தியாவில் இருப்பதால், கொண்டாட்ட நிகழ்வை இந்தியாவில் நடாத்துவதன் மூலம் பல பயனர்கள் பங்கேற்க முடியும். யாராவது இந்தியாவில் முன்னின்று ஒருங்கிணைக்க முன்வந்தால் இந்தியாவில் நடாத்தலாம். இலங்கையில் என்றால் ஏறத்தாழ 20 இந்தியப் பயனர்களுக்கு உதவித்தொகை வழங்க நலகை விண்ணப்பத்தில் கோரலாம். ஏனைய செலவுகளைப் பொறுத்து இது அமையும். அனைத்துப் பயனர்களையும் தங்கள் கருத்துகளை இங்கு தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 15:14, 11 சனவரி 2018 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்ட நிகழ்வை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதே சிறப்பாக அமையும். இலங்கைப் பயனர்கள் இந்திய பயனர்கள் ஆகியோருக்கு இடையில் நல்ல பிணைப்பை உண்டாக்க இது ஏதுவாக அமையும். ஏனைய செலவுகளை முடிந்த அளவு சிக்கனமாக நடத்தி இயன்றவரை கூடுதலான இந்தியப் பயனர்களுக்கு உதவித்தொகை வழங்க நலகை அளிக்க முயற்சித்தல் நலம்.--அருளரசன் (பேச்சு) 04:47, 16 சனவரி 2018 (UTC)[பதிலளி]

யாழ்ப்பாணத்தில் நடத்துவது சிறப்பாய் இருக்கும். இயன்ற பங்களிப்பை வழங்குவேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:43, 17 சனவரி 2018 (UTC)[பதிலளி]

உங்கள் கருத்துக்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். நான் 2017 ஏப்ரல் மாதம் தொடங்கி என் பங்களிப்புகளைச் செய்து வருகிறேன். இலங்கைப் பயனர்கள் விக்கிப்பீடியாவிற்கு அளித்த பங்களிப்புகள் மிகவும் மதிப்பு மிக்கவை. என்னைப் போன்ற இந்தியப் பயனர்களுக்கு இந்தியாவில் தமிழகத்தில் கொண்டாடுவதே வசதியாக இருக்கக்கூடும் எனக் கருதுகிறேன். இது என்னுடைய கருத்து மட்டுமே. மற்ற பயனர்கள் கருத்துக்களை அறிந்த பின் தகுந்த முடிவெடுக்கவும்.--மகாலிங்கம் (பேச்சு) 16:18, 17 சனவரி 2018 (UTC)[பதிலளி]

இந்த நிகழ்வை இலங்கையில் நடத்த வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை கருத்திட்டுள்ளேன். மீண்டும் வலியுறுதுக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியா குறித்து இயக்க அளவில் நன்மதிப்பு உள்ளது. எனவே, இந்தியப் பயணர்கள் எவ்வளவு பேர் என்றாலும் இலங்கை வருவதற்கான பயணச் செலவு குறித்து கவலைப்பட வேண்டாம். உலகெங்கும் உள்ள பயனர்களும் இலங்கை வரவும் முயற்சிகள் எடுப்போம். எத்தனையோ இலங்கைப் பயனர்கள் சிறப்பான பங்களிப்பை நல்குகிறார்கள். ஆனால், தமிழகப் பயனர்கள் ஒரு முறையேனும் இலங்கையை வந்து பார்த்தால், இரு நாட்டுப் பயனர் பிணைப்பு இன்னும் கூடும். பத்தாண்டு கொண்டாட்டத்தின் பாடங்களின் அடிப்படையில் நிறைய பணிகளை இழுத்துப் போட்டுக் கொள்ளாமல் திட்டமிட்டு எளிமையாக நடத்தலாம். --இரவி (பேச்சு) 01:14, 3 பெப்ரவரி 2018 (UTC)

இரவி மற்றும் அருளரசன் ஆகியோரின் கருத்தோடு உடன்படுகிறேன். பத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சென்னையில் ஏற்கனவே நடைபெற்றதால் இம்முறை இலங்கையில் நடத்தலாம். --இரா. பாலாபேச்சு 17:17, 3 பெப்ரவரி 2018 (UTC)

பயனர் மகாலிங்கம் தவிர ஏனையோர் இலங்கையில் நடாத்த விருப்பம் தெரிவித்திருப்பதால், நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடாத்தத் தேவையான ஆரம்ப கட்ட வேலைகளை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 16:08, 16 பெப்ரவரி 2018 (UTC)

👍 விருப்பம்--Kanags (பேச்சு) 21:52, 16 பெப்ரவரி 2018 (UTC)
👍 விருப்பம்--இரா. பாலாபேச்சு 03:59, 17 பெப்ரவரி 2018 (UTC)
👍 விருப்பம்--Arulghsr (பேச்சு) 04:16, 17 பெப்ரவரி 2018 (UTC)
👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:24, 17 பெப்ரவரி 2018 (UTC)
👍 விருப்பம்--கலை (பேச்சு) 09:54, 18 பெப்ரவரி 2018 (UTC)
👍 விருப்பம்--ஹிபாயத்துல்லா16:10, 21 பெப்ரவரி 2018 (UTC)
--உழவன் (உரை) 16:10, 21 பெப்ரவரி 2018 (UTC)
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:41, 21 பெப்ரவரி 2018 (UTC)
👍 விருப்பம் --நீச்சல்காரன் (பேச்சு) 15:10, 22 பெப்ரவரி 2018 (UTC)
👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 16:24, 23 பெப்ரவரி 2018 (UTC)
👍 விருப்பம் --தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:32, 24 பெப்ரவரி 2018 (UTC)
👍 விருப்பம் - யாழ்ப்பாணத்தில் நடத்துதல் சிறப்பு. நல்வாழ்த்துகள். --செல்வா (பேச்சு) 14:38, 27 பெப்ரவரி 2018 (UTC)
👍 விருப்பம் - மயூரநாதன் (பேச்சு) 11:42, 3 மார்ச் 2018 (UTC)
👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:22, 16 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

நல்கை விண்ணப்பம்

இந்தப் பக்கத்தை இன்று தான் பார்த்தேன். இன்னும் இரு வாரங்களுக்குள் எமது நல்கை விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும். இங்கு நல்கை விண்ணப்பத்தை ஆரம்பித்துள்ளேன். உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் இட்டு இதனைச் செம்மையாக்க வேண்டுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 09:12, 18 பெப்ரவரி 2018 (UTC)

கலந்து கொள்வோர்

இந்தியாவிலிருந்து பங்கேற்க விரும்புவோர்

இந்தக் கூடலில் எத்தனைப் பேர் கலந்து கொள்ள விரும்புகிறார்கள், எங்கிருந்து வர இருக்கிறார்கள், எத்தனை நாட்கள் தங்கப் போகிறார்கள், இருப்பிடம் / பயணச் செலவுக்கான தேவை என்ன என்பதை உடனடியாக அறிந்தால் தான் திட்டத்தை இறுதி செய்து முன்னெடுக்க முடியும். உங்கள் தேவைகளைக் கீழே தெரிவியுங்கள்.

  1. //எத்தனை நாட்கள் தங்கப் போகிறார்கள்,// இலங்கை அரசு எத்தனை நாட்கள் அனுமதிக்கும் என்று தெரியாது. எனினும், கூடலுக்கு முன் பின் ஒரு நாள்=3நாட்கள், இலங்கையின் தமிழர் சார் வரலாற்று இடங்களுக்கு 3 நாட்கள், தமிழ்நாடு திரும்ப 1 நாள் என 7 நாட்கள் தங்க விருப்பம். இரவிக்கு ஏற்கனவே இதுபற்றி அனுபவம் இருக்குமென்றே எண்ணுகிறேன். எனவே, அவரின் முன்மொழிவினை எதிர்நோக்குகிறேன். அது அனைவருக்கும் பொருத்தமானதாகவே இருக்கும் என்பது எனது நம்பிக்கை. சென்னையில், இலங்கை நண்பர்களை சந்தித்த போது மனிதல் ஏற்பட்ட மட்டற்ற மகிழச்சிக்கு அளவே இல்லை. அதுபோல இந்நிகழ்வும் நடைபெற ஏங்குகிறேன். --உழவன் (உரை) 16:19, 21 பெப்ரவரி 2018 (UTC)
  2. நான கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன் சென்னை/பெங்களூரில் இருந்து வருவேன் மேலே தகவல் உழவன் கூற்றை ஒட்டுய கருத்தே என்னுடையது.--அருளரசன்
  3. நான் பங்கு பெற விரும்புகிறேன். சென்னையில் இருந்து வருவேன். தகவல் உழவன் கூறியது போல முடிந்தால் ஆறு நாட்கள் தங்க விருப்பம். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:53, 23 பெப்ரவரி 2018 (UTC)
  4. 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டத்தில் பங்குபெற விழைகிறேன். அதிகபட்சம் நான்கு நாட்கள் தங்க இயலும். திருவனந்தபுரத்திலிருந்து வருவேன்.--இரா. பாலாபேச்சு 12:06, 23 பெப்ரவரி 2018 (UTC)
  5. இலங்கையில் நடைபெற இருக்கும் 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டத்தில் பங்குபெற ஆர்வமாக உள்ளேன். சென்னையில் இருந்து வருவேன். --கி.மூர்த்தி (பேச்சு) 16:23, 23 பெப்ரவரி 2018 (UTC)
  6. இலங்கையில் நடைபெற இருக்கும் 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டத்தில் பங்குபெற ஆர்வமாக உள்ளேன். சென்னை அல்லது திருச்சியில் இருந்து வருவேன். --ஹிபாயத்துல்லா 16:47, 23 பெப்ரவரி 2018 (UTC)
  7. பங்கு பெற விருப்பம். சென்னை/பெங்களூரில் இருந்து வருவேன். வர முடியாவிட்டாலும் இணைய வழியிலோ, ஏற்பாட்டுக் குழுவுக்கோ உதவ விரும்புகிறேன் --தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:36, 24 பெப்ரவரி 2018 (UTC)
ஒருங்கிணைக்க முன்வந்தமைக்கு நன்றி. இணையவழி ஒருங்கிணைப்பில் நிச்சயம் உதவி தேவை. --சிவகோசரன் (பேச்சு) 16:06, 24 பெப்ரவரி 2018 (UTC)
  1. பங்கு பெற விருப்பம். --இரவி (பேச்சு) 20:34, 25 பெப்ரவரி 2018 (UTC)
  2. மிகத் தாமதமாகவே இப்பக்கத்தினை இன்று பார்க்க நேர்ந்தது. நானும் பங்குபெற விழைகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:19, 16 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

இலங்கையிலிருந்து பங்கேற்க விரும்புவோர்

  1. --சிவகோசரன் (பேச்சு) 14:26, 27 பெப்ரவரி 2018 (UTC)
  2. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:06, 28 பெப்ரவரி 2018 (UTC)
  3. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:17, 1 மார்ச் 2018 (UTC)
  4. --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:28, 2 மார்ச் 2018 (UTC)
  5. --மயூரநாதன் (பேச்சு) 11:45, 3 மார்ச் 2018 (UTC)
  6. --Maathavan Talk 08:29, 5 மார்ச் 2018 (UTC)
  7. --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀

கருத்துகள்

கூடல் இரு நாட்களுக்கே ஏற்பாடு செய்யப்படுகிறது. மாநாட்டு நல்கைகள் தொடர்பான வழிகாட்டல் பக்கத்தில் உணவுகள் கூட மாநாட்டு நாட்களின் மதிய உணவுக்கும் சிற்றுண்டிகளுக்கும் மட்டுமே உள்ளடக்கப்படப் பரிந்துரைக்கப்படுகிறது. எவ்வளவு செலவில் தங்குமிடம் ஒழுங்கு செய்ய முடியும் என்று தெரியவில்லை. பத்தாமாண்டு கூடலில் செய்தது போலப் பல்கலைக்கழக விடுதி ஒழுங்கு செய்வது இங்கு சாத்தியமில்லை. எனவே 2, 3 நாட்கள் தங்க நல்கை பெற முடியும். மேலதிக நாட்கள் இலங்கையில் தங்க விரும்புவோர் அதற்கான செலவுகளைப் பொறுப்பேற்க வேண்டும். இலங்கைக்கான நுழைவிசைவை இந்தியாவிலேயே பெற்று வருவதே சிறந்தது. 1 மாதம் முதல் 3 மாதங்கள் வரையான நுழைவிசைவை இலகுவாகப் பெறலாம். --சிவகோசரன் (பேச்சு) 16:06, 24 பெப்ரவரி 2018 (UTC)

ஆம், கூடல் நடைபெறும் இரு நாட்கள், ஆக அதிகம் அதற்கு முன்பு ஒரு நாள் யாழ்ப்பாணத்தில் தங்குவது மற்றும் உணவுக்கான செலவை நல்கை வழங்கலாம். அதற்குக் கூடுதலான நாட்கள் தங்க விரும்புவோர் போக்குவரத்து, உணவு, தங்குமிடத்துக்குத் தாங்களே பொறுப்பேற்க வேண்டும். பல்கலையில் தான் தங்கும் இடம் வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அதற்கு பல்கலை பொறுப்பாளர்களிடம் அனுமதி வாங்குவதும் இழுபறியான வேலையாக இருக்கக் கூடும். பொதுவாக, விக்கிமேனியா, விக்கிமீடியா மாநாடு போன்றவற்றுக்கு நான்கு நட்சத்திர விடுதிகளில் இடம் ஏற்பாடு செய்கிறார்கள். அதிகபட்சமாக, அத்தகைய வசதியைக் கோரலாம். நிகழ்வினை எங்கு நடத்தத் திட்டமிட்டு உள்ளீர்கள்? தங்குமிடம், நிகழ்வு நடத்தும் அரங்கும் ஆகியவை ஒருங்கே அமைந்த விடுதி இருந்தால் அங்கு நடத்துவது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க உதவும். யாழ்ப்பாணத்தில் உள்ள வசதிகள், செலவை முன்வைத்து நீங்கள் முடிவெடுக்கலாம். --இரவி (பேச்சு)

👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:29, 26 பெப்ரவரி 2018 (UTC)

வணக்கம், பள்ளிக்கல்வியில் முனைப்புக்காட்டி வருவதினால் பல நாட்கள் விக்கிக்கு வர முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்ட்டம் இடம்பெறுவது மகிழ்ச்சி, என்னாலான உதவிகளை செய்ய முடியும். சிவகோசரன் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:20, 1 மார்ச் 2018 (UTC)

நல்கை தாமதம் - கூடல் பிற்போடல்

தற்போதைய விக்கி நடைமுறைகளின்படி ஒன்றுகூடல்களுக்கான நல்கை விண்ணப்பங்கள் விக்கி சமூகத்தின் கருத்துக்கணிப்புடனேயே விண்ணப்பிக்கப்பட வேண்டும். கருத்துக்கணிப்பை நடாத்தாததாலும் 2018 ஆகத்து முதல் 2019 பெப்ரவரி வரையான காலப்பகுதிக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாலும் எமக்கு நல்கை கிடைப்பது கடினம் என நல்கை மேற்பார்வையாளர் கூறியுள்ளார். கருத்துக்கணிப்பை நடாத்தி, நல்கை விண்ணப்பத்தைத் திருத்தி அடுத்த காலப்பகுதியான 2019 பெப்ரவரி முதல் 2019 ஆகத்து வரையான காலத்தில் ஒன்றுகூடலை ஒழுங்குசெய்யப் பரிந்துரைத்துள்ளார். எனவே அடுத்த சில மாதங்களில் கருத்துக்கணிப்பை நடாத்தி, மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். 2019 பெப்ரவரியில் ஒன்றுகூடலை நடாத்த முயற்சி செய்வோம். இது குறித்த உரையாடல் பக்கம் இங்குள்ளது. --சிவகோசரன் (பேச்சு) 15:12, 9 ஏப்ரல் 2018 (UTC)

துவண்டுவிடாமல் அனுபவமாகக் கொண்டு மீண்டும் முயல்வோம்.-நீச்சல்காரன் (பேச்சு) 13:59, 10 ஏப்ரல் 2018 (UTC)
👍 விருப்பம்--அருளரசன் (பேச்சு) 15:21, 10 ஏப்ரல் 2018 (UTC)
👍 விருப்பம்--கலை (பேச்சு) 10:11, 11 ஏப்ரல் 2018 (UTC)
சிவகோசரன் ஒரு நினைவூட்டல். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:06, 13 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --அருளரசன் (பேச்சு) 08:30, 14 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
நினைவூட்டலுக்கு நன்றி. நாம் ஏற்கனவே பெற்ற நல்கைத் தொகைக்கு ஒரு புதுப்பயனர் போட்டி நடாத்த வேண்டியுள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் விக்கி கலந்துரையாடலை அடுத்த வாரம் ஆரம்பிக்கிறேன். செப்டெம்பர் மாதத்தில் இரு விக்கி அறிமுக நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடாத்த ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வுகளிலும் புதுப்பயனர் போட்டி பற்றிக் குறிப்பிட எண்ணியுள்ளேன். அக்டோபர் 1 முதல் 2019 மார்ச் 31 வரையான ஆறு மாத காலத்திற்குப் புதுப்பயனர் போட்டி நடாத்தலாம். எனது தனிப்பட்ட காரணங்களால் 2019 ஆகத்து வரை விக்கி ஒன்றுகூடலுக்கான பணிகளைச் செய்யப் போதுமான நேரமின்மையாலும், ஏனைய உள்ளூர்ப் பயனர்களின் பரீட்சையைக் கவனத்தில் கொண்டும், 2019 செப்டெம்பரில் - 16ஆவது ஆண்டு நிறைவாக - இந்த ஒன்றுகூடலை நடாத்தத் திட்டமிட எண்ணுகிறேன். வேறு பயனர்கள் யாராவது ஒருங்கிணைக்க முன்வந்தால் 2019 ஆரம்பத்திலேயே நடாத்தலாம். --சிவகோசரன் (பேச்சு) 16:12, 21 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

கருத்துக்கணிப்பு

வணக்கம் @Sivakosaran:, நீங்கள் கருத்துக்கணிப்பில் கொடுத்துள்ள இணைப்பை சொடுக்கினால் 'Sorry, unable to open the file at this time.' எனும் செய்தி வருகிறது. நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:46, 20 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Sivakosaran and Nandhinikandhasamy: இணைப்பினைச் சரி செய்துள்ளேன். --இரவி (பேச்சு) 11:54, 20 சனவரி 2019 (UTC)[பதிலளி]