பாம்பன் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 9°16′56.70″N 79°11′20.1212″E / 9.2824167°N 79.188922556°E / 9.2824167; 79.188922556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31: வரிசை 31:
=== வலிமை ===
=== வலிமை ===
பாம்பன் பாலம் உலகின் மிகவும் அதிக அளலில் துருப்பிடிக்கத் தக்க பகுதியில் ([[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மயாமி]]க்கு அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே நடைபெற்றன. அத்துடன் இப்பகுதி [[ஆழிப்பேரலை|கடல் கொந்தளிப்பு]] (Tsunami) ஏற்படும் பகுதியுமாகும்<ref name="Hindu"/> [[1964]]இல் நிகழ்ந்த [[தனுஷ்கோடி புயல், 1964|தனுஷ்கோடி புயலில்]] இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
பாம்பன் பாலம் உலகின் மிகவும் அதிக அளலில் துருப்பிடிக்கத் தக்க பகுதியில் ([[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மயாமி]]க்கு அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே நடைபெற்றன. அத்துடன் இப்பகுதி [[ஆழிப்பேரலை|கடல் கொந்தளிப்பு]] (Tsunami) ஏற்படும் பகுதியுமாகும்<ref name="Hindu"/> [[1964]]இல் நிகழ்ந்த [[தனுஷ்கோடி புயல், 1964|தனுஷ்கோடி புயலில்]] இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
[[File:Pamban Rail Bridge.jpg|thumb|right|300px|கப்பல்கள் செல்வதற்காகத் திறக்கும் 'லீவர்' பகுதி.
[[File:Pamban Rail Bridge.jpg|thumb|right|300px|இதுவே இந்திய முதன்மைப் பகுதியில் இருந்து [[இராமேசுவரம்]] தீவை இணைக்கும் ரயில் பாலம்]] ஆகும்.


==அமைவு ==
==அமைவு ==

05:29, 19 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

பாம்பன் பாலம்
பாம்பன் சாலை மற்றும் ரயில் பாலம்
அதிகாரப் பூர்வ பெயர் அன்னை இந்திரா காந்தி பாலம்
போக்குவரத்து 2 வழி சாலை போக்குவரத்து
தாண்டுவது பாக் நீரிணை
இடம் ராமேஸ்வரம், தமிழ்நாடு, இந்தியா
அமைவு 9°16′56.70″N 79°11′20.1212″E / 9.2824167°N 79.188922556°E / 9.2824167; 79.188922556

பாம்பன் பாலம் (Pamban Bridge) பாக் நீரிணையில் (Palk Strait) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் (Mainland) இராமேசுவரத்தையும் தீவையும் இணைக்கும் ஒரு 'நடுவில் திறக்கும்' பாலமாகும். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும் (முதலிடத்தில் பாந்திரா-வொர்லி கடற்பாலம்). இப்போது பாம்பன் தொடருந்துப் பாலம், பாம்பன் பேருந்துப் பாலம் என இரண்டாக அழைக்கப்பட்டாலும் பொதுவாக தொடருந்துப் பாலத்தையே பாம்பன் பாலம் எனக் குறிப்பிடுவர்.

தொடருந்து பாலம்

இப்பாலமே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் தொடருந்து பாலமாகும். இதன் நீளம் 2.3 கி.மீ. பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதை 1914ஆம் ஆண்டு திறந்தனர். இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதைத் தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே ஆகஸ்ட் 12, 2007ஆம் ஆண்டு புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் நடுவில் திறக்கும் வாசல் வழியாகச் செல்கின்றன.

பேருந்து பாலம்

ராமேஸ்வரத்திற்கு பேருந்து பாலம் முதன் முதலாக 2 அக்டோபர் 1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பாலத்திற்கு இந்திரா காந்தி பேருந்து மேம்பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இம் மேம்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும் பாலத்திற்குக் கீழே செல்லும் தொடருந்துப் பாலத்தையும் காண முடியும்.

கட்டுமானம்

பாம்பன் பாலம்

பாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது[1]. இதன் கட்டுமானம் 1913ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு பிப்ரவரி 24ஆம் தேதி 1914ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் (இராட்டணப் பாலம்). இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும்.

கட்டுமானப் பொருட்கள்

  • பாலம் கட்ட தேவையான 18,000 டன் சல்லிக் கற்கள் 270 கி.மீ. தொலைவிலிருத்தும் மணல் 110 கி.மீ. தொலைவிலிருத்தும் எடுத்து வரப்பட்டது.
  • இதனைக் கட்ட சிமெண்ட் 5000 டன், எஃகு இரும்பு 18,000 டன் உபயோகப்படுத்தப்பட்டது.

புதுப்பித்தல்

தொடக்கத்தில் குறுகிய அகலத் தொடருந்துகள் (Meter Guage)செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதைத் தொடருந்துகள் (Broad Gauge) செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே 2007 ஆகஸ்ட் 12இல் புதுப்பித்தது[1]. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன. இப்பாலம் வாரம் ஒரு முறை திறக்கப்படுகிறது. இதன் நூற்றாண்டு விழா 2014ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது[2].

வலிமை

பாம்பன் பாலம் உலகின் மிகவும் அதிக அளலில் துருப்பிடிக்கத் தக்க பகுதியில் (ஐக்கிய அமெரிக்காவின் மயாமிக்கு அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே நடைபெற்றன. அத்துடன் இப்பகுதி கடல் கொந்தளிப்பு (Tsunami) ஏற்படும் பகுதியுமாகும்[1] 1964இல் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலில் இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. [[File:Pamban Rail Bridge.jpg|thumb|right|300px|கப்பல்கள் செல்வதற்காகத் திறக்கும் 'லீவர்' பகுதி.

அமைவு

நீரிணையின் இரண்டு கி.மீ தொலைவுக்குப் பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப் பெருநிலப்பரப்பையும், இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரேயொரு தரைவழிப் பாலமாகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Annai Indira Gandhi Road Bridge
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pamban Bridge
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பன்_பாலம்&oldid=2602485" இலிருந்து மீள்விக்கப்பட்டது