கண்ணதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 114: வரிசை 114:


=== புதினங்கள் ===
=== புதினங்கள் ===
* [[அவளுக்காக ஒரு பாடல் (நூல்)|அவளுக்காக ஒரு பாடல்]]
# [[அவளுக்காக ஒரு பாடல் (நூல்)|அவளுக்காக ஒரு பாடல்]]
* அவள் ஒரு இந்துப் பெண்
# அவள் ஒரு இந்துப் பெண்
* அரங்கமும் அந்தரங்கமும்
# அரங்கமும் அந்தரங்கமும்
* அதைவிட ரகசியம்
# அதைவிட ரகசியம்
* ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
# ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
* ஆயிரங்கால் மண்டபம்
# ஆயிரங்கால் மண்டபம்
* ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
# ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
* ஒரு கவிஞனின் கதை
# ஒரு கவிஞனின் கதை
* காமினி காஞ்சனா
# காமினி காஞ்சனா
* காதல் கொண்ட தென்னாடு
# கடல் கொண்ட தென்னாடு
* சிவப்புக்கல் மூக்குத்தி
# சிவப்புக்கல் மூக்குத்தி
* சிங்காரி பார்த்த சென்னை
# சிங்காரி பார்த்த சென்னை
* சுருதி சேராத ராகங்கள்
# சுருதி சேராத ராகங்கள்
* சுவர்ணா சரஸ்வதி
# சுவர்ணா சரஸ்வதி
# சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)
* ரத்த புஷ்பங்கள்
# தெய்வத் திருமணங்கள்
* நடந்த கதை
# நடந்த கதை
* மிசா
# பிருந்தாவனம்
* முப்பது நாளும் பவுர்ணமி
# மிசா
* தெய்வத் திருமணங்கள்
# முப்பது நாளும் பவுர்ணமி
* வேலங்குடித் திருவிழா
# ரத்த புஷ்பங்கள்
* விளக்கு மட்டுமா சிவப்பு
# விளக்கு மட்டுமா சிவப்பு
* பிருந்தாவனம்
# வேலங்குடித் திருவிழா


=== சிறுகதைகள் ===
=== சிறுகதைகள் ===

06:11, 13 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

கண்ணதாசன்
படிமம்:Kannadasan.gif
பிறப்புமுத்தையா
(1927-06-24)சூன் 24, 1927
சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு, இந்தியா
இறப்புஅக்டோபர் 17, 1981(1981-10-17) (அகவை 54)
சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா
புனைபெயர்காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
தொழில்கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்
தேசியம் இந்தியா
குடியுரிமைஇந்தியர்
காலம்1944-1981
குறிப்பிடத்தக்க விருதுகள்சிறந்த வசனத்திற்கான தேசிய விருது
1961 குழந்தைக்காக

சாகித்திய அகதமி விருது
1980 சேரமான் காதலி
துணைவர்பொன்னழகி
பார்வதி
வள்ளியம்மை
பிள்ளைகள்15

கண்ணதாசன் ((ஒலிப்பு) (ஜூன் 24 1927அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்ப செட்டியார் (மறைவு 4-2-1955[1] ). இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன்[2]

குடும்பம்

கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.[3] இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்[4],[5]. கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள் [6] இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.[7] ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.[8]

கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

அரசியல் ஈடுபாடு

அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.[9]

மறைவு

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[10] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

திரைத்துறைக்கான பங்களிப்புகள்

திரையிசைப் பாடல்கள்

கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள்

கதை எழுதிய திரைப்படங்கள்

வசனம் எழுதிய திரைப்படங்கள்


கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்


இலக்கியப் படைப்புகள்

கவிதை நூல்கள்

காப்பியங்கள்

  1. மாங்கனி
  2. பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
  3. ஆட்டனத்தி ஆதிமந்தி
  4. பாண்டிமாதேவி
  5. இயேசு காவியம்
  6. முற்றுப்பெறாத காவியங்கள்

தொகுப்புகள்

  1. கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
  2. கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, (1960) காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
  3. கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
  4. கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி (1968) வானதி பதிப்பகம், சென்னை.
  5. கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி (1971), வானதி பதிப்பகம், சென்னை.
  6. கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி (1972), வானதி பதிப்பகம், சென்னை.
  7. கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி (1976), வானதி பதிப்பகம், சென்னை.
  8. கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி (1986) , வானதி பதிப்பகம், சென்னை.
  9. பாடிக்கொடுத்த மங்களங்கள்

சிற்றிலக்கியங்கள்

  1. அம்பிகை அழகுதரிசனம்
  2. தைப்பாவை
  3. ஸ்ரீகிருஷ்ண கவசம்
  4. கிருஷ்ண அந்தாதி
  5. கிருஷ்ண கானம்

கவிதை நாடகம்

  1. கவிதாஞ்சலி

மொழிபெயர்ப்பு

  1. பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
  2. பஜகோவிந்தம்

புதினங்கள்

  1. அவளுக்காக ஒரு பாடல்
  2. அவள் ஒரு இந்துப் பெண்
  3. அரங்கமும் அந்தரங்கமும்
  4. அதைவிட ரகசியம்
  5. ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
  6. ஆயிரங்கால் மண்டபம்
  7. ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
  8. ஒரு கவிஞனின் கதை
  9. காமினி காஞ்சனா
  10. கடல் கொண்ட தென்னாடு
  11. சிவப்புக்கல் மூக்குத்தி
  12. சிங்காரி பார்த்த சென்னை
  13. சுருதி சேராத ராகங்கள்
  14. சுவர்ணா சரஸ்வதி
  15. சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)
  16. தெய்வத் திருமணங்கள்
  17. நடந்த கதை
  18. பிருந்தாவனம்
  19. மிசா
  20. முப்பது நாளும் பவுர்ணமி
  21. ரத்த புஷ்பங்கள்
  22. விளக்கு மட்டுமா சிவப்பு
  23. வேலங்குடித் திருவிழா

சிறுகதைகள்

  1. குட்டிக்கதைகள்
  2. மனசுக்குத் தூக்கமில்லை, (வானதி பதிப்பகம், சென்னை)
  3. செண்பகத்தம்மன் கதை

வாழ்க்கைச்சரிதம்

  • எனது வசந்த காலங்கள்
  • வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
  • எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
  • மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)

கட்டுரைகள்

  • கடைசிப்பக்கம்
  • போய் வருகிறேன்
  • அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
  • நான் பார்த்த அரசியல்
  • எண்ணங்கள்
  • வாழ்க்கை என்னும் சோலையிலே
  • குடும்பசுகம்
  • ஞானாம்பிகா
  • ராகமாலிகா
  • இலக்கியத்தில் காதல்
  • தோட்டத்து மலர்கள்
  • இலக்கிய யுத்தங்கள்
  • மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை)
  • நம்பிக்கை மலர்கள் (வானதி பதிப்பகம், சென்னை)

சமயம்

  1. அர்த்தமுள்ள இத்து மதம் (10 பாகங்கள்)
  2. ஞானம் பிறந்த கதை
  3. நெஞ்சுக்கு நிம்மதி
  4. போகம் ரோகம் யோகம்
  5. உன்னையே நீ அறிவாய்

நாடகங்கள்

  • அனார்கலி
  • சிவகங்கைச்சீமை
  • ராஜ தண்டனை

உரை நூல்கள்

கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:

  1. பகவத் கீதை
  2. அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
  3. திருக்குறள் காமத்துப்பால்
  4. சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
  5. சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது

பேட்டிகள்

  1. கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
  2. சந்தித்தேன் சிந்தித்தேன்

வினா-விடை

  1. ஐயம் அகற்று
  2. கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்

விருதுகள்

  • சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)

மேற்கோள்கள்

  1. திராவிடநாடு (இதழ்) நாள்:13-2-1955, பக்கம் 6
  2. "சிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா - 2009". பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2018.
  3. கைக்கு வந்த கண்ணதாசன் கல்யாணப்பரிசு
  4. கண்ணதாசன் மனைவி பொன்னம்மா ஆச்சி காலமானார், தினகரன், மே 31, 2012
  5. [1], மாலைமலர், மே 31, 2012
  6. கண்ணதாசன் பார்வதி மகன் அண்ணாதுரையின் கூற்று
  7. [2], மாலைமலர், மே 31, 2012
  8. [3], மாலைமலர், மே 31, 2012
  9. ஈ.வே.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்
  10. கண்ணதாசன் மணிமண்டபம்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணதாசன்&oldid=2600270" இலிருந்து மீள்விக்கப்பட்டது