தளிர்த்திறன் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15: வரிசை 15:
}}
}}


'''தளிர்த்திறன் திட்டம்'''(Thalir Thiran Thittam) என்பது குழந்தைகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் வாழ்க்கைத்திறன் கல்வியை வழங்கும் திட்டம் ஆகும். விழிப்புணர்வின் வழியாக நிலைமாற்றம் என்னும் நோக்கத்தோடு 2008 ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தை மதுரையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் அபராஜிதா குழுமத்தின் அபராஜிதா அறக்கட்டளை செயற்படுத்துகிறது. <ref> Transformation Through Awareness : An organized approach in soft skills training, Aruna Raghuram, Parent Circle, April 2013, Page 24 </ref> இத்திட்டம் தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 39498 பள்ளிகளில் அந்தந்த மாநிலக் கல்வித்துறையின் வழியாக 53,05,250 மாணவர்களுக்கு வாழ்க்கைத்திறன் கல்வியை வழங்குகிறது. . <ref> வெற்றியின் விதைகள், தளிர்த்திறன் திட்டச் செய்திமடல், அபராஜிதா அறக்கட்டளை, மதுரை, அக்டோபர்-திசம்பர் 2018 இதழ், பக். 1 </ref> வழக்கமான பாடத்திட்டத்தில் இல்லாத, ஆனால் இன்றைய நெருக்கடியான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான திறன்களை வளர்ப்பதுதான் இந்தப் பாடத்திட்டத்தின் அடிப்படை ஆகும். மாணவர்கள் தங்களது முழுத்திறனை உணர்ந்துகொள்ளவும் முழுமையான அணுகுமுறையை மேற்கொள்ளவும் இந்தக் கல்வி உதவும். <ref> தளவாய் சுந்தரம், பசங்க மாறிட்டாங்க!, குமுதம், சென்னை, 8-12-2010, பக்கம் 126 </ref>
'''தளிர்த்திறன் திட்டம்'''(Thalir Thiran Thittam) என்பது குழந்தைகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் வாழ்க்கைத்திறன் கல்வியை வழங்கும் திட்டம் ஆகும். விழிப்புணர்வின் வழியாக நிலைமாற்றம் என்னும் நோக்கத்தோடு 2008 ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தை மதுரையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் அபராஜிதா குழுமத்தின் அபராஜிதா அறக்கட்டளை செயற்படுத்துகிறது. <ref> Transformation Through Awareness : An organized approach in soft skills training, Aruna Raghuram, Parent Circle, April 2013, Page 24 </ref> இத்திட்டம் தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 39498 பள்ளிகளில் அந்தந்த மாநிலக் கல்வித்துறையின் வழியாக 53,05,250 மாணவர்களுக்கு வாழ்க்கைத்திறன் கல்வியை வழங்குகிறது. . <ref> வெற்றியின் விதைகள், தளிர்த்திறன் திட்டச் செய்திமடல், அபராஜிதா அறக்கட்டளை, மதுரை, அக்டோபர்-திசம்பர் 2018 இதழ், பக். 1 </ref> வழக்கமான பாடத்திட்டத்தில் இல்லாத, ஆனால் இன்றைய நெருக்கடியான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான திறன்களை வளர்ப்பதுதான் இந்தப் பாடத்திட்டத்தின் அடிப்படை ஆகும். மாணவர்கள் தங்களது முழுத்திறனை உணர்ந்துகொள்ளவும் முழுமையான அணுகுமுறையை மேற்கொள்ளவும் இந்தக் கல்வி உதவும். <ref> [[தளவாய் சுந்தரம் (எழுத்தாளர்) | தளவாய் சுந்தரம்]], பசங்க மாறிட்டாங்க!, குமுதம், சென்னை, 8-12-2010, பக்கம் 126 </ref>


==பின்புலம்==
==பின்புலம்==

13:34, 1 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

தளிர்த்திறன் திட்டம்
குறிக்கோளுரைவிழிப்புணர்வின் வழியாக நிலைமாற்றம்
வகைவாழ்க்கைத்திறன் கல்வித் திட்டம்
அறங்காவலர்பரத் கிருஷ்ண சங்கர்
வலைத்தளம்www.aparajitha.org

தளிர்த்திறன் திட்டம்(Thalir Thiran Thittam) என்பது குழந்தைகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் வாழ்க்கைத்திறன் கல்வியை வழங்கும் திட்டம் ஆகும். விழிப்புணர்வின் வழியாக நிலைமாற்றம் என்னும் நோக்கத்தோடு 2008 ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தை மதுரையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் அபராஜிதா குழுமத்தின் அபராஜிதா அறக்கட்டளை செயற்படுத்துகிறது. [1] இத்திட்டம் தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 39498 பள்ளிகளில் அந்தந்த மாநிலக் கல்வித்துறையின் வழியாக 53,05,250 மாணவர்களுக்கு வாழ்க்கைத்திறன் கல்வியை வழங்குகிறது. . [2] வழக்கமான பாடத்திட்டத்தில் இல்லாத, ஆனால் இன்றைய நெருக்கடியான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான திறன்களை வளர்ப்பதுதான் இந்தப் பாடத்திட்டத்தின் அடிப்படை ஆகும். மாணவர்கள் தங்களது முழுத்திறனை உணர்ந்துகொள்ளவும் முழுமையான அணுகுமுறையை மேற்கொள்ளவும் இந்தக் கல்வி உதவும். [3]

பின்புலம்

உலக நலவாழ்வு அமைப்பு (World Health Organization), “அன்றாட வாழ்வின் தேவைகளையும் வெல்விளிகளையும் திறம்படக் கையாள்வதற்கு ஒருவரைத் தகுதிப்படுத்துகின்ற ஏற்றிசைதல், உடன்பாட்டு நடத்தை ஆகிய திறன்களே வாழ்க்கைத்திறன்கள் ஆகும்” [4]என வாழ்க்கைத்திறன்களை வரையறுக்கிறது.

ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள குழந்தைகள் உரிமைக்கான உடன்படிக்கை 1989 (United Nations Organization’s Convention of Child Rights 1989) குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய கல்வியின் நோக்கம் எத்தகையனவாக இருக்க வேண்டும் என்பதனை அதன் பிரிவு 29அ முதல் உ வரையுள்ள பகுதியில் வரையறுத்திருக்கிறது. [5]

இவ்வரையறைகளின் அடிப்படையில், தளிர்த்திறன் திட்டம் அபராஜிதா அறக்கட்டளையால் 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. [6]

நோக்கம்

இத்திட்டம் பின்வரும் நோக்கங்களைக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது: [7]

  1. மாணவர்கள் தமது வாழ்க்கையோடு தொடர்புடைய சிக்கல்களுக்கு ஈடுகொடுக்க அவர்களுக்குத் தேவையான திறன்களை வழங்குவதன் மூலமாக, மாணவர்கள் தமக்கான வாய்ப்புகளை அறிந்து தேர்ந்தெடுக்க ஆற்றலூட்டல்.
  2. மாண்வர்களை தன்னுயர்மதிப்பும் (Self-esteem) தன்மதிப்பும் (Self-worth) கொண்டவர்களாக உருவாக்கி, அவர்களை பொறுப்பும் தன்னம்பிக்கையும் உடையவர்களாகத் திகழச்செய்தல்.
  3. மாணவர்கள் தாம் வாழும் எதார்த்த உலகிலோடு பொருந்தி, பொறுப்புள்ள குடிமக்களாக வாழ்ந்து தமக்கும் தமது குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் தமது பங்களிப்பை வழங்கும் வகையில் அவர்களை உருவாக்குவது.

கட்டமைப்பு

வாழ்க்கைத்திறன் கலைத்திட்ட வடிவமைப்பு (Curriculum Development), கலைத்திட்டங்களை வழங்கல் (Curriculum Delivery), திட்டச் செயலாக்கம் (Program Implementation), திட்ட மீள்வலுவூட்டம் (Program Reinforcement), விளைவைப் பகுப்பாய்தல் (Impact Analysis), செயலாய்வு (Action Research) என்னும் ஆறு படிநிலைகளைக்கொண்டதாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. [8]

கலைத்திட்டம்

தளிர்த் திறன் திட்டம் பின்வரும் 10 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

01. உலக நலவாழ்வு அமைப்பு பட்டியலிட்டுள்ள பத்து வாழ்க்கைத்திறன்கள்

(1. தன்னையறிதல், 2. ஒத்துணர்வு, 3. பிறருடன் பழகுதல், 4. தகவல்தொடர்பு, 5. ஆக்கச்சிந்தனை, 6. ஆய்வுச்சிந்தனை, 7. முடிவெடுத்தல், 8. சிக்கலைத் தீர்த்தல், 9. உணர்வெழுச்சிகளுக்கு ஈடுகொடுத்தல், 10. மனவழுத்தத்திற்கு ஈடுகொடுத்தல்)

02. கொள்கை விளக்கம்
03. நன்னடத்தை
04. காலமேலாண்மை
05. இலக்கு அமைத்தல்
06. நலவாழ்வு நடத்தைகள்
07. பாலின நிகர்நிலை
08. நாட்டின் சட்டங்கள்
09. ஊடகத்தைப் புரிந்துகொள்ளல்
10. சூழலியல்

கலைத்திட்டம் வழங்கல்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தொடக்கப்பள்ளி மாணவர்கள் எனப்படுகின்றனர். அவர்களுக்கு வாழ்க்கைத்திறன் கல்வியைக் கற்றுதருவதற்காக அபராஜிதா அறக்கட்டளை உருவாக்கியுள்ள தளிர்த்திறன் திட்டம் பாடத்திட்டத்தை வகுத்திருக்கிறது. அது, ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு வாழ்க்கைத்திறனுக்கும் இரண்டு பாடங்கள் வீதம் ஐந்து வகுப்பிற்கு நூறு பாடங்களைக் கொண்டிருக்கிறது. விளையாட்டு, செயல்பாடுகள், பாடல்கள் ஆகியவற்றைக்கொண்டவையாக இப்பாடங்கள் இருக்கின்றன. [9]

உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு

ஆறாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வாழ்க்கைத் திறன் கல்வி பாடத்திட்டம் வகுப்பிற்கு 20 பாடங்கள் வீதம் 120 பாடங்களைக் கொண்டிருக்கறது. அந்த 120 பாடங்களும் காணொளி வடிவில் இருக்கின்றன. < ref> வெற்றியின் விதைகள், தளிர்த்திறன் திட்டச் செய்திமடல், அபராஜிதா அறக்கட்டளை, மதுரை, சனவரி 2012 இதழ், பக். 7 & 8 </ ref> அவற்றை வகுப்பறையில் கற்பிப்பதற்கு ஏதுவாக “காணொளிப்பாட நிறுத்தற்குறிப்புகள்” என்னும் கையேடும் வழங்கப்பட்டுள்ளது. [10]

திட்டச் செயலாக்கம்

வெள்ளோட்டம்

இத்திட்டம் 2008-2009 ஆம் கல்வியாண்டில் ஐந்து மேல்நிலைப்பள்ளிகளில் (மதுரை மாநகராட்சிப்பள்ளிகள் இரண்டு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் இரண்டு, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி) வெள்ளோட்டமாகக் கற்பிக்கப்பட்டது. [11] இந்த வெள்ளோட்டம் 2008 சூலை 29ஆம் நாள் மல்லாங்கிணற்றிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது . [12]

தமிழ்நாட்டுப் பள்ளிகளில்

வெள்ளாட்டத்திட்டம் சிறப்பாக நிறைவேறியதால், இத்திட்டம் தமிழ்நாட்டரசால் நடத்தப்படும் 2141 அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கும் 2018 அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கும் 1-10-2009ஆம் நாள் விரிவுபடுத்தப்பட்டது. [13] 2013ஆம் ஆண்டில் இத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. [14] அதனைத் தொடர்ந்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான தளிர்த்திறன் திட்டம் மதுரை மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளிலும் நடுநிலைப்பள்ளிகளிலும் 2015ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படுகிறது. . [15]

குஜராத் மாநிலப் பள்ளிகளில்

தளிர்த்திறன் திட்டத்தின் குஜராத்தி வடிவமான “டிம் டிம் தாரா” 2011-12ஆம் கல்வியாண்டில் அம்மாநிலத்திலுள்ள 489 அரசு பள்ளிகளிலும் 6769 அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயற்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. < ref> வெற்றியின் விதைகள், தளிர்த்திறன் திட்டச் செய்திமடல், அபராஜிதா அறக்கட்டளை, மதுரை, சனவரி 2012 இதழ், பக்.2 </ ref> 2018-19ஆம் கல்வியாண்டு முதல் இத்திட்டத்தின் பாடங்கள் கல்விச் செயற்கைக்கோளின் ( EDUSAT) வழியாக ஒளிபரப்பப்படுகின்றன. [16]

இராஜஸ்தான் மாநிலப் பள்ளிகளில்

தளிர்த்திறன் திட்டத்தின் இந்தி வடிவமான “டிம் டிம் தாரே” 2016-17ஆம் கல்வியாண்டில் அம்மாநிலத்திலுள்ள 71 அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் 1340 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் செயற்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2016 பிப்ரவரியில் கையொப்பமிடப்பட்டது. [17] 2018-19ஆம் கல்வியாண்டு முதல் இத்திட்டத்தின் பாடங்கள் கல்விச் செயற்கைக்கோளின் (EDUSAT) வழியாக ஒளிபரப்பப்படுகின்றன. [18]

மத்தியப்பிரதேச மாநிலப் பள்ளிகளில்

தளிர்த்திறன் திட்டத்தின் இந்தி வடிவமான “டிம் டிம் தாரே”, 2016-17ஆம் கல்வியாண்டில் மத்தியப் பிரதேசம் இந்தூர் மண்டலத்தின் 8 மாவட்டங்களில் 270 பள்ளிகளில் வெள்ளோட்டத் திட்டமாகச் செயற்படுத்தப்பட்டது. [19] 2017-18ஆம் கல்வியாண்டில் அம்மண்டலத்திலுள்ள பிற பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

ஹரியானா மாநிலப் பள்ளிகளில்

தளிர்த்திறன் திட்டத்தின் இந்தி வடிவமான “டிம் டிம் தாரே” 2017-18ஆம் கல்வியாண்டில் அம்மாநிலத்திலுள்ள 14000 பள்ளிகளில் செயற்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2017 செப்டம்பரில் கையொப்பமிடப்பட்டது. [20] இதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. 2018-19ஆம் கல்வியாண்டு முதல் இத்திட்டத்தின் பாடங்கள் கல்விச் செயற்கைக்கோளின் (EDUSAT) வழியாக ஒளிபரப்பப்படுகின்றன. [21]

விளைவைப் பகுப்பாய்தல்

திட்டத்தால் மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி பின்வரும் மூன்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன:

  1. விளிம்புநிலைப்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு மென்திறன் பயிற்சிகள்: சிக்கல்களும் வெல்விளிகளும் என்னும் ஆய்வை ஓசின் திரிபாதி என்பவர் புதுதில்லியில் உள்ள இரக்சக் நிறுவனத்திற்காக 2013ஆம் ஆன்டில் மேற்கொண்டார்.
  2. இளைஞர்களுக்கான வாழ்க்கைத்திறன் திட்டம் (தளிர்த்திறன் திட்டம்) என்னும் ஆய்வை மதுரையிலுள்ள தியாகராசர் மேலாண்மைப் பள்ளியில் பணியாற்றும் பேராசிரியர் செல்வலட்சுமியும் மாணவர்கள் சுவேதா, திரிசினா ஆகியோரும் 2014 ஆம் ஆண்டில் மேற்கொண்டனர்.
  3. தளிர்த்திறன் திட்டம் மதிப்பீடு பற்றிய ஆய்வு என்னும் ஆய்வை முனைவர் பிரிதா தனது முனைவர் பட்டத்திற்காக கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகத்தில் 2014ஆம் ஆண்டில் மேற்கொண்டார்.

செயலாய்வு

அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள மிசிகன் பல்கலைக் கழகத்தின் ஓர் உறுப்பான ராஸ் வணிகப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து இத்திட்டம் பற்றி ஆய்வுசெய்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. Transformation Through Awareness : An organized approach in soft skills training, Aruna Raghuram, Parent Circle, April 2013, Page 24
  2. வெற்றியின் விதைகள், தளிர்த்திறன் திட்டச் செய்திமடல், அபராஜிதா அறக்கட்டளை, மதுரை, அக்டோபர்-திசம்பர் 2018 இதழ், பக். 1
  3. தளவாய் சுந்தரம், பசங்க மாறிட்டாங்க!, குமுதம், சென்னை, 8-12-2010, பக்கம் 126
  4. Rhona Birrell Weisen and others, Life Skills Education in Schools, World Health Organization, Geneva, 1994 (Life skills are abilities for adaptive and positive behaviour that enable individuals to deal effectively with the demands and challenges of everyday life.) page 1
  5. Convention on the Rights of the Child : Adopted and opened for signature, ratification and accession by General Assembly resolution 44/25 of 20 November 1989 entry into force 2 September 1990, in accordance with article 49
  6. Thalir Thiran Thittam (A Transformational Change Through Awareness)
  7. Dr.S. Preetha, A Study on Evaluation of Thalir Thiran Thittam-A CSR initiative of Aparajitha Corporate Services in selected schools of Madurai district, Tamilnadu, Bharathiyar University, Coimbatore, 2014 October, Page 36
  8. Selvalakshmi and others, LIFE SKILLS PROGRAM FOR THE YOUNG (THALIR THIRAN THITTAM) , Thiagarajar School of Management, Madurai, 2012
  9. பரத் கிருஷ்ண சங்கரும் பிறரும், தளிர்த்திறன் திட்டம் வாழ்க்கைத்திறன் கல்வி: ஆசிரியர் கையேடு – தொடக்கநிலை, அபராஜிதா அறக்கட்டளை, மதுரை, முதற்பதிப்பு: 2017.
  10. ஆசிரியர் குழு, காணொளிப்பாட நிறுத்தற்குறிப்புகள்: ஏழாம் வகுப்பு –முதலாவது பகுதி, அபராஜிதா அறக்கட்டளை, மதுரை, முதற் பதிப்பு 2010
  11. Selvalakshmi and others, LIFE SKILLS PROGRAM FOR THE YOUNG (THALIR THIRAN THITTAM) , Thiagarajar School of Management, Madurai, 2012, Page 6
  12. [http://www.thehindu.com/2008/07/30/stories/2008073054220500.htm Launches life skills education scheme, The Hindu, 30th July 2008, Madurai Edition,
  13. School Education (E2) Department, G.O.Ms.No.255, Dated 01.10.2009
  14. Life Skills Development Programme at Government Aided Schools, The Hindu, Madurai, 13.7.2013,
  15. மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் நடைமுறைகள், ந.க.எண்.அ3/014652/15 நாள். 25.06.2015
  16. வெற்றியின் விதைகள், தளிர்த்திறன் திட்டச் செய்திமடல், அபராஜிதா அறக்கட்டளை, மதுரை, அக்டோபர்-திசம்பர் 2018 இதழ், பக். 7
  17. இராஜ்தான் மாநில இடைநிலைக் கல்வித்துறை, எண். 221/510, நாள் 5.2.2016
  18. இராஜஸ்தான் மாநில இடைநிலைக் கல்வித்துறை, எண்.7457, நாள் 12.10.2018
  19. வெற்றியின் விதைகள், தளிர்த்திறன் திட்டச் செய்திமடல், அபராஜிதா அறக்கட்டளை, மதுரை, அக்டோபர் 2016 இதழ், பக்.7
  20. வெற்றியின் விதைகள், தளிர்த்திறன் திட்டச் செய்திமடல், அபராஜிதா அறக்கட்டளை, மதுரை, அக்டோபர் 2017 இதழ், பக்.6
  21. வெற்றியின் விதைகள், தளிர்த்திறன் திட்டச் செய்திமடல், அபராஜிதா அறக்கட்டளை, மதுரை, ஏப்ரல் 2018 இதழ், பக்.3

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தளிர்த்திறன்_திட்டம்&oldid=2594161" இலிருந்து மீள்விக்கப்பட்டது