"ரிச்சார்ட் பிலிப்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
68 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
cat
(எழுத்துப்பிழை திருத்தம்)
சி (cat)
 
 
==ஆரம்ப வாழ்க்கை==
கப்டன் ரிச்சாட் பிலிப்ஸ் ஐக்கிய அமெரிக்காவில் வின்செஸ்டர், மச்சுசுசேட்ஸ் இல் பிறந்தார். அத்துடன் வின்செஸ்டர் உயர் பள்ளியில் 1973இல் தனது படிப்பை முடித்துக்கொண்டார். முதலில் சர்வதேசச் சட்டங்கள் பற்றிய பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பினாலும் இறுதியில் மசசுசெட்ஸ் மாரிடைம் அக்டமியில் தனது பட்டப்படிப்பை 1979இல் முடித்துக்கொணாடார். தனது பாடசாலைக் காலத்தில் தானுந்தி ஓட்டுனராகப் பணியாற்றினார். அத்துடன் 1987 இல் அன்ரியா கொக்கியோ எனும் தாதியினை மணம் முடித்ததுடன் டானியல் மற்றும் மரியா போன்ற குழந்தைகளில் தந்தையுமாவார்.
 
== மேயர்ஸ்க் அலபாமா கடற்கொள்ளை நிகழ்வு ==
ஏப்ரல் 8 2009 இல் மேயர்ஸ்க் அலபாமா கப்பலினுள் [[சோமாலியா|சோமாலியக்]] கடற்கொள்ளையர்கள் ஏறிக்கொண்டனர். இந்த நிகழ்வு நடக்கும் போது சோமாலியக் கடற்கரையில் இருந்து சுமார் 440 கி.மீ தொலைவில் மேயர்ஸ்க் அலபாமா பயனித்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. [[கென்யா|கென்னியாவின்]] மொம்பாஸா துறைமுகத்தை நோக்கிப் பயனித்துக்கொண்டிருந்த இந்தக் கப்பலில் சுமார் 20 மாலுமிகள் இருந்ததுடன் 17000 மெட்ரிக்தொன் எடையுடைய பொருட்கள் இருந்தன. இதில் [[கென்யா]], [[உகண்டா]], [[சோமாலியா]] ஆகிய நாடுகளுக்கான உதவிப் பண்டங்கள் சுமார் 5000 மெட்ரிக்தொன் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது<ref>[http://edition.cnn.com/2009/WORLD/africa/04/08/ship.hijacked/index.html கடத்தல் பற்றிய சிஎன்என் செய்தி]</ref>.
 
கடற்கொள்ளையர்கள் கப்பலில் ஏறியதும் பெரும்பாலான மாலுமிகள் இயந்திர அறையில் அடைக்கலம் தேடிக்கொண்டனர். இவர்களைத் தேடிச் சென்ற ஒரு கடற்கொள்ளையனை மாலுமிகள் மடக்கிப் பிடித்துக்கொண்டனர். இவ்வாறு பிடித்து 12 மணிநேரம் பிணையக் கைதியாக மாலுமிகள் வைத்திருந்த இந்தக் கடற்கொள்ளையனை ஏற்றிக்கொண்டு கப்பலில் இருந்த உயிர்காப்புப் படகில் கடற்கொள்ளையர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆயினும் கடற்கொள்ளையர்கள் இதற்கு உடன் பட்டாலும் தங்களுடன் கப்டன் ரிச்சார்ட் பிலிப்ஸையும் ஏற்றிக்கொண்டதுடன் அவரை விடுவிக்க மறுத்து சோமாலியா நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். அத்துடன் கப்டன் ரிச்சார்ட் பிலிப்ஸ் விடுவிக்கப்படவேண்டுமானால் கப்பத்தொகை வேண்டும் என்றும் வேண்டினர்.
 
[[பகுப்பு:கடல் போக்குவரத்து]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மாலுமிகள்]]
[[பகுப்பு:1955 பிறப்புகள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2578301" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி